முகில் மறைத்த நிலவு. -40

40 அரவிந்தனின் அறைக் கதவைத் திறந்து அவனது செகரட்டரி எட்டிப் பார்த்தாள்.. அரவிந்தன் ஒன்றுமில்லையென்பதாய் சைகை செய்து அவளை வெளியே அனுப்...


40

அரவிந்தனின் அறைக் கதவைத் திறந்து அவனது செகரட்டரி எட்டிப் பார்த்தாள்.. அரவிந்தன் ஒன்றுமில்லையென்பதாய் சைகை செய்து அவளை வெளியே அனுப்பினான்..
"நவநீதா.. வெளியே போ.. அப்புறம் பேசிக் கொள்ளலாம்..."
"எப்போதுடா.. என் தங்கை செத்த பின்னாலா...?"
"நவநீதா..."
"ராதிகா சாகக்கிடக்கிறாள்டா பாவி.. உன்னால் என் தங்கை சாகக்கிடக்கிறாள்.. இப்போதோ.. அப்போதோன்னு ஹாஸ்பிடலில் கிடக்கிறாள்..."
நவநீதன் கதறலைக் கண்ட அரவிந்தன் அவசரமாய் இருக்கையை விட்டு எழுந்தான்... அவனது முகம் மாறியிருந்தது..
"என்னடா சொல்கிற..."
"நீ போய் விட்டாய்ன்னு சொன்னதும் மயங்கி விழுந்தாள்.. கொஞ்ச நேரத்தில் காய்ச்சல் வந்து ஜன்னி அதிகமாகி விட்டது.. ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறோம்.. டாக்டர் எதுவும் சொல்ல முடியாதுன்னு சொல்லி விட்டார்.."
"இதை ஏண்டா.. வந்தவுடனேயே நீ சொல்ல வில்லை.."
"டேய் அரவிந்தா.. ராதிகாவின் மனது பூப்போன்றதுடா.. கடுமையாக இருப்பது போல் நடித்துக் கொண்டிருப்பவள் அவள்.. உன்னைத் தவிர.. யாரையும் அவள் ஏறெடுத்தும் பார்த்ததில்லை.. அவள், அப்பாவின் சொத்துக்களை நாங்கள் அழித்து விட்டோமென்ற பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக சொத்துக்களை பாதுகாக்கிறாளே தவிர.. நீ நினைப்பது போல் சொத்தின் மேலிருக்கும் ஆசையினால் இல்லை..."
"அதே போல்.. எனக்கும் உன் தங்கையின் மீதுதான் ஆசை.. அவளுடைய சொத்தின் மேல் இல்லை.. என்பதை அவள் புரிந்து கொள்ளவில்லையே.. என்னைப் போய் என்னவெல்லாம் பேசி விட்டாள்...?"
"அதற்காக அவளுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு.. பிரிவை மட்டும் கொடுத்து விடாதே.. பாவம்.. தாய் தகப்பனில்லாதவள்டா.. அண்ணன்னு நான் இருந்தும்.. என் நிழலில் அவள் வாழவில்லை.. அவள் நிழலில் நான் இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன்.. மோனிhகவிற்கு அவள் வளர்ப்புத்தாய்டா.. அரவிந்தா.. உன்னைக் கை எடுத்துக் கும்பிடுகிறேன்... என் தங்கையை மீட்டுக் கொடு..."
உணர்ச்சி மயமாக நின்ற நண்பனின் தோளைத் தழுவிய அரவிந்தன்.. உதட்டைக் கடித்து தன் உணர்வு களை அடக்கிக் கொண்டான்...
"வாடா போகலாம்..."
ராதிகா இருந்த அறைக்குள் நுழைந்த அரவிந்தன் திகைத்து நின்று விட்டான்.. வாடிப்போன பூங்கொடியாய்.. வேரறுந்த மரமாய்.. கட்டிலில் கிடப்பது அவனுடைய ராதிகா தானா..? ஒரே நாளில் இப்படி உருமாறிப்போய் விட்டாளே...
'எப்படி இருந்தவள்..
அரவிந்தனின் கண்களில் நீர் தளும்பியது...
'ஏன் ராதிகா அவ்வாறு என்னைக் கேட்டாய்..? எனக்கு உன்னைத்தானே தெரியும்..? உன் நாணத்தைத் தானே தெரியும்..? உன் பணத்தைப் பற்றி நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே.. அப்புறம் ஏன் என்னைப் பார்த்து அப்படியொரு கேள்வியைக் கேட்டாய்..? சொத்திற்காக உன்னை மயக்க நினைத்த நீசன் என்றல்லவா என்னை நீ நினைத்து விட்டாய்.. அப்படியொரு கேள்வியைக் கேட்டபின்.. உன் முகம் பார்ப்பது என்னால் சாத்தியமாகாத விசயம் என்று தானே விலகி வந்தேன்.. அதற்காக.. ஒரேயடியாய் உன்னை மாய்த்துக் கொள்ளப் பார்க்கிறாயே.. ஏன் ராதிகா.. ஏன்..?'
அசையாமல் நின்ற அரவிந்தனின் தோளைப் பற்றிக் குலுக்கினான் நவநீதன்..
"பேசுடா.. பேசு.. அவளிடம் வாய் திறந்து பேசு... பேசு அரவிந்தா..."
'அரவிந்தா...' என்ற நவநீதனது அழைப்பில் கண் திறந்தாள் ராதிகா..
"அண்ணா.. அவர் போய் விட்டாரா.." ஈனஸ்வரத்தில் அவளது குரல் வெளி வந்தது...
"இல்லை ராதும்மா.. அவன் உன்னை விட்டுப் போகவில்லை.. போகவும் மாட்டான்.. உன்னை விட்டு எப்படிடா அவன் போவான்...?"
"இல்லை அண்ணா.. அவர் போய் விடுவார்.. அவர் ரோஷக்காரர்.. நான் அவருடைய சுய மரியாதையை சீண்டி  விட்டேன்.. தெரிந்து நான் பேசவில்லை அண்ணா.. தெரியாமல் பேசிவிட்டேன்.. அவர் என்னை மன்னிக்க மாட்டேன்னு சொல்லாமல் சொல்லி விட்டுப் போய் விட்டார்.. அண்ணா.. இனி என்னிடம் வரமாட்டார்..."
ராதிகா அரற்றினாள்.. மனதில் வேதனை.. தலையில் பாரமாய் ஏற... தலையணையில் தலையை இங்கும் அங்கும் உருட்டினாள்.. அதற்கு மேல் தாங்கமாட்டாத அரவிந்தன்.. அவளருகில் பாய்ந்து.. அவளது தலையைப் பிடித்து நிறுத்தினான்... அவனது இருகைகளாலும்.. அவளது முகத்தை தாங்கிப் பிடித்து ஏந்தினான்.. அவளது முகத்தை உற்று நோக்கினான்.. ராதிகாவின் விழிகள் நம்பாத தன்மையுடன் அவனை நோக்கின..
"நீங்களா.. வந்து வீட்டீர்களா...?"
அவளின் கண்களில் இருந்து வழிந்த நீர்த்துளிகள் அவனது கையை நனைத்தன...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு. -40
முகில் மறைத்த நிலவு. -40
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-40.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-40.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy