முகில் மறைத்த நிலவு -38

38 அன்று இரவு ராதிகா.. தூங்கவில்லை.. இரவு முழுவதும் அரவிந்தனின் வீட்டில் விளக்கு எரிகிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தாள்.. அனுபமாவை ...


38

அன்று இரவு ராதிகா.. தூங்கவில்லை.. இரவு முழுவதும் அரவிந்தனின் வீட்டில் விளக்கு எரிகிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தாள்.. அனுபமாவை திண்டுக்கல் சென்று டிரெயினில் ஏற்றி விட்டுவிட்டு நவநீதன் திரும்பி வந்து விட்டான்...
"அவர் வரவில்லையா அண்ணா..."
"யார் அரவிந்தனைக் கேட்கிறாயா ராதும்மா.. வழியில் வேலை இருக்கிறதுன்னு சொல்லி இறங்கிக் கொண்டான்.. வந்து விடுவான்..."
ஆனால் அவன் வரவில்லை... விடிகிற வரை அவன் வரவில்லை.. எதிர்பார்த்து... எதிர்பார்த்து ஏமாந்து போன ராதிகா.. தன்னையறியாமல் கட்டிலில் சுருண்டு அயர்ந்து தூங்கிப் போனாள்...
அறைக்கதவு படபடவென்று தட்டப்பட... அவசரமாய் எழுந்து கதவைத் திறந்தாள்.. நவநீதன் நின்றிருந்தான்..
"என்ன அண்ணா...?"
"இப்போது மணி என்ன தெரியுமா..?"
"என்ன...?"
"எட்டு.. இவ்வளவு நேரம் நீ தூங்க மாட்டாயே... உடம்பு சரியில்லையா...?"
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை..."
"உனக்கும்.. அரவிந்தனுக்கு ஏதும் மனஸ்தாபமா...?"
"ஏன் அண்ணா.. இப்படியெல்லாம் கேட்கிறாய்..?"
"அரவிந்தன் அவுட்ஹவுஸை காலி பண்ணிவிட்டுப் போய் விட்டான்..."
"என்ன..."
ராதிகா அதிர்ந்து போய் கேட்டான்.. அவளுடைய உடல் நடுங்கியது.. கால்களுக்கு கீழ் தரை பெயர்வது போல் தோன்றியது.. விழுந்து விடாமலிருக்கும் பொருட்டு... சுவரைப் பிடித்துக் கொண்டாள்... அப்படியே தொய்ந்து மயங்கி விழுந்தாள்..
"ராது... ராதும்மா..."
நவநீதன் பதறிப் போய் தரையில் விழுந்து கிடந்த தங்கையைத் தூக்கி.. தன் மடியில் கிடத்திக் கொண்டு...
"மோனிகா... மோனிகா..." என்று அழைத்தான்...
"என்ன அண்ணா..." என்றபடி வந்த மோனிகா...
"அக்கா.. அக்காவுக்கு என்ன ஆச்சு..." என்று பதறினாள்...
"தண்ணீரை எடு..."
மோனிகா எடுத்துக் கொடுத்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை ராதிகாவின் முகத்தில் தெளித்தான் நவநீதன்...
ராதிகாவின் உடலில் அசைவு வந்தது.. மெல்ல கண் விழித்தாள்...
"ராதும்மா..."
"போய் விட்டாரா அண்ணா...?"
"என்னம்மா நடந்தது...?"
"நிஜமாகவே போய் விட்டாரா...?"
"என்னிடம் சொல் ராதிகா..."
"என்னிடம் சொல்லாமல் போய் விட்டாரே..."
"ராது..."
ராதிகா அப்படியே சுவரில் சரிந்து அமர்ந்து விட்டாள்.. கண்கள் நிலைகுத்தியிருக்க.. வாய் மட்டும் முணு முணுத்துக் கொண்டே இருந்தது...
"போய்விட்டாரா... நிஜமாகவே போய்விட்டாரா... என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாரா.. திரும்பி வரவே மாட்டாரா..."
மோனிகா கவலையுடன் அழ ஆரம்பித்தாள்.. கொஞ்ச நேரத்தில் ராதிகாவின் உடல் அனலாகக் கொதிக்க ஆரம்பித்தது.. செய்தியைக் கேட்டு மாடிக்கு காபியுடன் ஓடி வந்த செண்பகம் நவநீதனிடம் புலம்பினாள்...
"நேத்து மதியம் சாப்பிட்டதுதான்.. அதற்கு மேல் சின்னம்மா பல்லில் பச்சைத்தண்ணி கூடப் படவில்லை..."
"ஏன்... என்ன ஆச்சு...?"
"என்னத்தை சொல்லய்யா...? சாயங்காலமா.. எப்பவும்போல காபியும்.. பலகாரமும் எடுத்துக்கிட்டு அவுட் ஹவுஸிற்கு சின்னம்மா போனாங்க.. போன வேகத்தில் திரும்பி வந்திட்டாங்க.. என்ன நடந்துச்சோ.. ஏது நடந்துச்சோ... அப்ப இருந்தே அம்மா பேயறைஞ்சாப்புல இருந்தாங்கய்யா.. ராத்திரியும் சாப்பிடலை..."
"இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை..."
நவநீதன் இப்படிப் கேட்டதும்.. அழுது கொண்டிருந்த மோனிகா.. ஆத்திரத்துடன் வெடித்தாள்...
"நீ எங்கே வீட்டிலிருந்தாய்...? உன் வருங்கால வொய்பை வண்டியேற்றிவிடப் போய்விட்டு ஜாமத்தில் தானே வந்தாய்..? உனக்கு உன் வாழ்க்கைத்தானே பெரிது.. அக்காவைப் பற்றி நீ எங்கே கவலைப்படப் போகிறாய்..?"
"என்ன மோனிக்குட்டி இப்படிச் சொல்கிறாய்..."
"போ அண்ணா... என்னிடம் பேசாதே... நீ சொன்னதால் தான் நான் அக்காவை உன் நண்பன்னு சொல்லிக் கொண்ட அந்த ஆளிடம் பழகவிட்டேன்.. இப்போது என்னவாயிற்று பார்.. அந்த ஆள் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைக் காலி பண்ணிவிட்டுப் போயிருக் கிறான்.. இதற்கு யார் பொறுப்பு..? நீதான் பொறுப்பு..."
"குட்டியம்மா.. இவர்களுக்குள் என்ன சண்டைன்னே  எனக்குத் தெரியவில்லையே...?"
"என்ன சண்டையாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. அதற்காக இப்படிப் போய் விடலாமா... இப்போது அக்காவின் நிலையைப் பார்.. எனக்கு என் அக்கா வேண்டும்..."
"எனக்கு மட்டும் ராதிகா வேண்டாமா...?"
"உனக்குத்தான் உன் வருங்கால மனைவி இருக் காங்களே.. நீ அவங்க பின்னால் போ.. அக்கா.. அக்கா..."
நவநீதன் செய்வதறியாது தவித்தான்.. ராதிகாவின் வாயில் புகட்டிய காப்பி.. வாந்தியாக வெளியேறியது... மதியத்திற்கு மேல்... அவள் உடல் தூக்கிப் போட ஆரம்பித்தது...
அதற்கு மேல் தாமதிக்கக் கூடாது என்று ஒட்டன் சத்திரத்திலேயே இருந்த பெரிய மருத்துவமனையில் அவளை உடனடியாகச் சேர்த்தான்...
மருத்துமனைப் படுக்கையில் கண்மூடிக் கிடந்த தங்கையைப் பார்க்கையில் நவநீதனின் அடிவயிறு பிசைந்தது.. இதற்கு தானே பொறுப்பு என்ற குற்ற உணர்ச்சி அவனை வாட்டியது...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,35,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,119,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,15,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சிறுகதைகள்,4,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,34,நிலாச் சோறு,19,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,24,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு -38
முகில் மறைத்த நிலவு -38
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-38.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-38.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy