முகில் மறைத்த நிலவு -36

36 ' இவள் ஏன் இங்கே வந்திருக்கிறாள்.. அவளுடைய வெற்றியை பறைசாற்ற என்னைத் தேடி வந்திருக்கிறாளா.. ?'  ராதிகாவின் உள்ளம் எரிந்த...


36

'இவள் ஏன் இங்கே வந்திருக்கிறாள்.. அவளுடைய வெற்றியை பறைசாற்ற என்னைத் தேடி வந்திருக்கிறாளா..?' 
ராதிகாவின் உள்ளம் எரிந்தது.. பார்வையால் அவளை எடைபோட்டபடி எதிரே அமர்ந்தாள் ராதிகா...
"ராதும்மா... இவங்க பெயர் அனுபமா..."
நவநீதன் அறிமுகப்படுத்திய அனுபமா அழகாக இருந்தாள்.. அவளது முகத்தில் கனிவு இருந்தது.. பிரகாசம் தெரிந்தது..
"ஹாய்..." என்றாள்...
"ம்ம்..." என்று தலை அசைத்தாள் ராதிகா...
அடுத்து நவநீதன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் அவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது..
"இவள்.. அரவிந்தனின் பெரியப்பா பெண்..."
"என்ன அண்ணா சொல்கிற...?"
"ஏன் பதறுகிற.. அனுபமா அரவிந்தனின் பெரியப்பா மகள்தான்.. இன்ஜினியரிங் காலேஜில் அரவிந்தனுடன் ஒன்றாய் படித்தவள்.. அரவிந்தனின் கிளாஸ் மேட்.. பேட்ச் மேட்.. இவளுடைய ஊரும் திண்டிவனம்தான்..."
"இதை ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை...?"
"ஸாரி ராதும்மா.. நான் அடிக்கடி திண்டிவனம் போனதற்கு காரணம்.. அனுபமாவின் மேல் எனக்கிருந்த காதல்தான்..."
"என்னது காதலா...?"
"ஆமாம்.. கோபித்துக் கொள்ளாதே ராதும்மா.. விவேக்கிடம் ஒரு புராபர்ட்டி விசயமாய் பேசத்தான் திண்டிவனம் போனேன்.. அவனுடைய காலேஜிற்கு போனபோது அனுபமாவைப் பார்த்தேன்.. சொன்னால் நம்ப மாட்டாய்.. இவளைப் பார்த்த முதல் விநாடியிலேயே என் மனைவின்னு முடிவு பண்ணிவிட்டேன்..."
அனுபமாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நவநீதன் பேசிக் கொண்டிருந்தான்.. அனுபமா லேசான வெட்கத்துடன்.. நிறையப் பெருமிதத்துடன்.. ராதிகாவைப் பார்த்துச் சிரித்தாள்...
"அப்புறம் அடிக்கடி திண்டிவனம் போனேன்.. அனுபமா விவேக்கின் நண்பன் அரவிந்தனின் பெரியப்பா மகள்ன்னு தெரிந்ததும் அவனை என் நண்பனாக்கிக் கொண்டேன்.. அனுபமாவிடம் நான் பேச முயற்சி செய்த போதெல்லாம் அவள் பிடி கொடுக்கவே இல்லை.. இப்போது அரவிந்தன் உன்னைப் பெண் கேட்கவும்.. அவனிடம் என் நிபந்தனையாக.. என் காதலைச் சொன்னேன்.."
"என்ன அண்ணா சொல்கிற.. அவர் உன்னிடம் வந்து என்னைப் பெண் கேட்டாரா..?"
"ஆமாம்.. உன் தங்கையை அவளுக்காகவே விரும்புகிறேன்.. அவள் சொத்தை நீயே வைத்துக் கொள்.. அவளை மட்டும் எனக்கு கொடுத்து விடுன்னு கேட்டான்.. நான் விளையாட்டுக்கு பெண் கொடுக்க முடியாதுன்னு சொன்னேன்.. அதற்கு அவன் சுவரேறிக்குதித்து உன்னைத் தூக்கிக் கொண்டு போய் தாலி கட்டி விடுவேன்னு என்னை மிரட்டினான்... ஹா.. ஹா..."
"அண்ணா..."
"ஏன் ராதும்மா பயப்படுகிற..? அரவிந்தன் நல்லவன்ம்மா.. உன்னைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்வான்.. ராதிகா எங்கள் குலவிளக்குடா.. அவளை எங்கள் வீட்டுக்கு அனுப்பி வை.. என் அம்மாவும்.. அப்பாவும் அவளை பெற்ற மகள்போல் பார்த்துக் கொள்வார்கள்ன்னு சொன்னான்..."
"அண்ணா..."
"அவன் என்ன சொல்கிறான் தெரியுமா..? அடுத்த முகூர்த்தத்திலேயே உங்கள் கல்யாணத்தை நடத்திக் கொடுக்க வேண்டுமாம்.. அதற்கு மேல் அவனால் தாங்காதாம்..."
"அண்ணா.."
"நான்தான் அவனுக்கு ஸ்பீடு பிரேக் போட்டேன்.. அட மடையா.. ராதிகாவின் கல்யாணத்தை.. நான் என் பெண்டாட்டியோடு நடத்த வேண்டாமா..? முதலில் உன் பெரியப்பா மகளை எனக்குக் கல்யாணம் பண்ணி வை.. அதன் பின்னால் நானும் என் மனைவியும் ராதிகாவை கல்யாண மேடையில் பெற்றவர்களாக நின்று தாரை வார்த்து உனக்குக் கல்யாணம் பண்ணித் தருகிறோம்ன்னு சொன்னேன்..."
"அண்ணா..."
"நானிருக்கேன்டான்னு அவன் எனக்கு வாக்குக் கொடுத்தான்.. சொன்னபடியே அனுபமாவிடம் போனில் பேசி புறப்பட்டு வரச் சொல்லி விட்டானாம்.. அனுபமா அவன் வார்த்தையை தட்ட மாட்டாளாம்.. அவள் கிளம்பி வந்து விட்டாள்.. எனக்காக நிறையப் பேசியிருக்கிறான்.. அனுபமாவும்.. அரவிந்தனும் ஒரே வயசுதான்.. நானும்.. நீயும்.. ஒரே வீட்டில் திருமணம் செய்து கொண்டால்.. நம் உறவு நீடிக்கும்.. பெண் கொடுத்து பெண் எடுப்பது போல இந்தத் திருமணத்திற்கு நான் வாக்குக் கொடுத்து விட்டேன்னு சொன்னானாம்.. நான்கு வருடங்களுக்கு மேல் அவள் பின்னால் அலைந்தேன்.. என் காதலி என்னைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்னு சொல்லி விட்டாள்.. இன்றைக்கு அவளுடைய அண்ணன் சொல்லவும்தான் என் காதலின் அருமை பெருமைகளே.. அவளுக்குத் தெரிய வந்திருக்கிறது.. என் நிலைமையைப் பார்த்தாயா...?"
"அண்ணா..."
பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் திணறினாள் ராதிகா..
'கடைசியில் சகோதரி முறையில் இருப்பவளைப் போய் சந்தேகப்பட்டு விட்டேனே.. எனது கீழ்மையான குணத்தைப் பார்த்து அவன் 'ச்சீ' என்று சொல்லி என்னை உதறிவிட்டுப் போய் விட்டானே.. அண்ணியாக வர இருப்பவங்களை எனக்குப் போட்டியாக நினைத்து விட்டேனே..' மனதிற்குள் மறுகிக் கொண்டிருந்தாள் ராதிகா...
அதை உணராமல் நவநீதன் தன் போக்கில் உற்சாக மாய் பேசிக் கொண்டிருந்தான்..
"அரவிந்தன் கிரேட்ம்மா..."
'ஆமாம்.. அவர் கிரேட்தான்.. நான்தான் அவருக்கு ஏற்றவள் இல்லை.. அவருடைய குணத்தை சந்தேகப் பட்டு விட்டேன்...'
"உன் மேல் உயிரையே வைத்திருக்கிறான்..."
'நானும் அப்படித்தான்.. ஆனால்.. இனி என் மனதை அவன் புரிந்து கொள்வானா.. என்னை மன்னிப்பானா...?'
"நம் சொந்தங்களில் என்றால் உன் பணத்தைத்தான் பார்ப்பார்கள்.. அரவிந்தனுக்குத்தான் உன் குணம் தெரியும்..."
'ஆனால் அவனை பணத்துக்காக வந்தவன் என்று நானே வார்த்தைகளால் குதறி அனுப்பி விட்டேனே...'
ராதிகா பயந்தாள்... இனி அரவிந்தனின் காதல் தனக்குப் பழையபடி கிடைக்காது என்று அஞ்சினாள்.. அவள் பயந்தது போலவே நடந்தது.. மறுநாள் காலையில் அரவிந்தன் அவுட்ஹவுஸை காலி பண்ணிவிட்டு சென்று விட்டான்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு -36
முகில் மறைத்த நிலவு -36
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-36.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-36.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy