முகில் மறைத்த நிலவு -35

35 "அரவிந்த்..." "என்ன அனு..." "ராதிகா ஏன் அழுது கொண்டே ஓடிட்டா.. ? சம்திங் இஸ் ராங்.. போய் விசாரித்து வ...


35

"அரவிந்த்..."
"என்ன அனு..."
"ராதிகா ஏன் அழுது கொண்டே ஓடிட்டா..? சம்திங் இஸ் ராங்.. போய் விசாரித்து விட்டு வா..."
"நீயும் கூட வா..."
"ஏய்ய்.. போடா.. எதற்கு துணையோடு போகணும்.. எதற்குத் தனியாகப் போகணும்ங்ற விவஸ்தை இல்லையா.. அவள் உன் காதலி.. அவளைச் சமாதானப் படுத்த நீ போற.. இதுக்கு துணை எதுக்கு..?"
"ஓகே அனு.. நீ உள்ளே உட்கார்.. நான் போய்விட்டு வந்து விடுகிறேன்.."
ராதிகா அழுதபடி ஓடியதுமே மனம் துடித்துப் போய் அவளுக்குப் பின்னால் ஓட இருந்தவன்.. அனுபமாவிற்காக தயங்கி நின்றான்.. இப்போது அவளே அனுமதி கொடுக்கவும்.. அவசரமாய் வீட்டை நோக்கிக் சென்றான்..
வீட்டின் உள்ளே எதிர்பட்ட செண்பகத்திடம்...
"ராதிகா எங்கே..?" என்று விசாரித்தான்..
"மாடியில் இருக்காங்க..." முறைப்புடன் பதில் சொன்னால் அவள்..
அவள் ஏன் இப்படி விநோதமாகப் பார்க்கிறாள் என்று யோசித்தபடி மாடிப் படியில் ஏறி.. ராதிகாவின் அறையை அடைந்தவன்.. கதவில் ஒரு விரலால் தட்டினான்...
அவன் இதுவரை ராதிகாவின் அறைக்குள் சென்றதில்லை.. ஆனால் இப்போது நிலைமையே வேறு.. அத்தோடு.. ராதிகா அவனுடையவள்.. அவளுடைய அறைக்குள் செல்ல அவனுக்கு உரிமை இல்லையா.. என்ன..?
ராதிகா கதவைத் திறந்ததும்.. சுவாதீனமாக அறைக்குள் சென்றவன் கதவை மூடித் தாழிட்டான்..
அதைப் பார்த்த ராதிகாவின் உடல் தகித்தது..
'எவ்வளவு தைரியம் இருந்தால்.. இவ்வளவு நேரமும் இன்னொருத்தியிடம் கொஞ்சிக் குழாவி விட்டு இப்போது என்னைத் தேடி வருவான்.. வந்ததுமில்லாமல் கதவைமூடி தாழ்ப்பாள் வேறு போடுவான்...' முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ராதிகா..
"ஏன்.. அப்படி ஓடி வந்தாய் ராதிகா...?"
"......"
"உன்னைத்தான் கேட்கிறேன் ஏன் அப்படி ஓடிவந்தாய்..?"
ராதிகா அதற்கும் பதில் சொல்லாமல் நிற்கவும்.. அரவிந்தன் அவளை நெருங்கி.. அவள் முகத்தை முரட்டுத் தனமாய் தன் பக்கம் திருப்பினான்.. அவள் அவனுடைய கையை தட்டி விட்டாள்...
"ச்சீ.. என்னைத் தொடாதீங்க..."
"ச்சியா.. என்னைப் பார்த்தா... அப்படிச் சொல்கிற..?" வெகுண்டான் அரவிந்தன்...
"ஆமாம்.. உங்களைப் பார்த்துத்தான் அப்படிச் சொல்கிறேன்.. உங்களைப் போன்ற பெண் பித்தனைப் பார்த்துத்தான் அப்படிச் சொல்கிறேன்.. கடைசியில் நீங்களும் மற்ற ஆண்களைப் போலதான் என்று நிரூபித்து விட்டீங்களே.. ஆசைக்கு ஒருத்தி.. ஆஸ்திக்கு ஒருத்தின்னு விளையாடிப் பார்த்து விட்டீங்களே.. பசுத்தோல் போர்த்திய புலின்னு தெரியாமல் உங்களிடம் பழகி விட்டேனே... நம்பி ஏமாந்து விட்டேனே.." ராதிகா பொரிந்தாள்..
ராதிகா பொரியப் பொரிய.. அரவிந்தனின் முகம் கடினமானது.. அவன் முகம் கருத்தது...
"என்னடி சொல்கிற..? யாரைப் பார்த்து என்ன பேசுகிற..?"
"இந்த 'டீ' போடுகிற வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம்.. எந்த உரிமையில் என்னைப் பார்த்து 'டீ' போடுகிறீங்க.."
அரவிந்தன் அவளை மீண்டும் நெருங்கினான்.. இந்த முறை அவனுடைய பிடி இரும்புப் பிடியாக இருந்து.. ராதிகாவால் விலக முடியவில்லை...
"உரிமை இல்லையா..? எனக்கு உன்னிடம் உரிமை இல்லையா..? எனக்கு இல்லையென்றால் வேறு யாருக்கு அந்த உரிமையைக் கொடுக்கப் போகிறாய்..?"
"உங்களைப் போல் என்னை நினைக்காதீங்க.."
"ஏன்.. எனக்கென்ன...?"
"அதை என் வாயால் சொல்ல வேண்டுமா..?"
"இந்த வாயால்தான் தானே என்னுடன் பேசினாய்.. என்னிடம் காதல் சொன்னாய்.. என்னை முத்தமிட்டாய்.. அதே வாயால் சொல்லு.. ஒன்றும் குறைந்து விடாது..."
"ஆமாம்.. இந்த வாயால் தான் நீங்கள் சொல்லிய எல்லாவற்றையும் செய்தேன்.. ஆனால்.. உங்கள் இடத்திற்கு வேறொரு ஆண் மகனை நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.. ஆனால் நீங்கள்..?"
"ஏன்.. நான் என்ன செய்தேன்...?"
"செய்வதையும் செய்துவிட்டு நான் என்ன செய்தேன்னு நிமிர்வுடன் கேட்க உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்...?"
"விளக்கம் கேட்பதற்கு துணிவு தேவையில்லை..."
"தவறு செய்வதற்கு துணிவு இருக்கிறதே.. அது போதாதா..? கடைசியில் நான் உங்கள் கவனத்தை கவர வில்லை... என்னிடம் இருக்கும் பணம்தான் உங்கள் கவனத்தை கவர்ந்திருக்கிறது..."
அரவிந்தனின் பிடி விலகியது.. அவனது விலகலும் ராதிகாவிற்கு துன்பத்தையே கொடுத்தது...
'விலகிச் செல்கிறானே.. இவனில்லாத வாழ்வு... இனிச் சாத்தியமா..'
"உன் பணத்திற்காகத்தான் நான் உன்னைக் காதலிக்கிறேன்னு சொல்கிறாயா...?"
"ஒரு திருத்தம்.. காதலிக்கவில்லை.. காதலிப்பது போல் நடித்தீங்க..."
"ஓ.. என்னைப் பற்றி எவ்வளவு உயர்ந்த அபிப்ராயம்.."
"உங்களுக்கு என் சொத்துத்தானே வேணும்..? தாராளமாய் எடுத்துக் கொள்ளுங்கள்.. என்னை மட்டும் விட்டு விடுங்கள்..."
"ச்சீ...."
அவள் சொன்ன வார்த்தைகளை இப்போது அவன் சொன்னான்.. கதவைத் திறந்து கொண்டு புயல்போல் சென்று விட்டான்.. ராதிகா அவசரமாய் ஜன்னலருகே ஓடினாள்.. நவநீதனின் கார் வந்து நிற்பது தெரிந்தது...
நவநீதன் காரைவிட்டு இறங்கி.. அரவிந்தனிடம் பேசினான்.. பின் இருவரும்.. அவுட்ஹவுஸை நோக்கி நடந்தார்கள்.. அவுட்ஹவுஸின் வாசலில் இருந்த பெண்ணிடம் நவநீதன் பேசுவதையும் அவர்கள் மூவரும் அவுட் ஹவுஸிற்கு உள்ளே செல்வதையும் பார்த்த ராதிகாவிற்கு துக்கம் தாங்கவில்லை...
'என்ன சொல்லியிருப்பான்..? இவள்தான் என் காதலி.. இவளைத்தான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறேன்னு சொல்லியிருப்பான்.. என் அண்ணனும், நண்பனைப் பார்த்து நீ நீடுழி வாழ்கன்னு வாழ்த்தியிருப்பான்...'
கட்டிலில் குப்புறப் படுத்து வெகுநேரம் அழுது கொண்டிருந்தாள் அவள்.. கதவு தட்டப்பட்டது... எழுந்து திறந்தாள்.. நவநீதன் நின்றிருந்தான்..
"கீழே வா ராதும்மா.. உனக்கு ஒரு வி.ஐ.பியை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்..."
இந்த நிலையில் அண்ணன் தொந்தரவு செய்கிறானே என்ற முகம் சுளித்தபடி.. அவன் பின்னால் சென்றாள் ராதிகா.. கீழே ஹாலில் அரவிந்தனின் வீட்டிற்கு வந்திருந்த பெண் உட்கார்ந்திருந்தாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,35,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,119,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,15,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சிறுகதைகள்,4,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,34,நிலாச் சோறு,19,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,24,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு -35
முகில் மறைத்த நிலவு -35
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-35.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-35.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy