முகில் மறைத்த நிலவு -33

33 "இதற்குப் பெயர் அணைக்கட்டா.." அரவிந்தன் சிரித்தான்.. "இந்தப் பக்கம் இது தான் அணைக்கட்டு.." நவநீதன் காரை நிறு...


33

"இதற்குப் பெயர் அணைக்கட்டா.." அரவிந்தன் சிரித்தான்..
"இந்தப் பக்கம் இது தான் அணைக்கட்டு.." நவநீதன் காரை நிறுத்தி விட்டு இறங்கினான்...
அவர்களின் கண்ணுக்கு முன்னால் அடர்ந்து.. விரிந்த.. மாந்தோப்புத் தெரிந்தது.. அது ஒரு சிறிய அணைக்கட்டு.. மனம் விட்டுப் பேச வேண்டுமென்று அரவிந்தன் கூறியதால் நவநீதன்.. அங்கே அவனை அழைத்து வந்திருந்தான்...
மாந்தோப்பில் இருவரும் காலார நடந்தனர்..
"சொல்லுடா.. என்ன பேசணும்..?" என்று நவநீதன் வினவினான்..
"அதை எப்படிச் சொல்வதுன்னு தான் தெரிய வில்லை.." அரவிந்தனின் முகத்தில் லேசான படபடப்பு தெரிந்தது...
"ஏன்.. வாயால் தான் சொல்லணும்..." நவநீதன் சிரித்தான்..
"நவநீதா..."
"சொல்லேண்டா.."
"உனக்கு என்னைப் பற்றி ஓரளவிற்குத் தெரியும்.."
"நன்றாகவே தெரியும்.."
"நான் மிடில்கிளாஸ் பேமிலியைச் சேர்ந்தவன்.."
"அதை ஏன் இப்போது சொல்கிற...?"
"நவநீதா.. நான் அரவிந்தன்.. என்ஜீனியரிங் முடித்து விட்டு சதர்ன் மில்லில் ஜி.எம்.மாக இருக்கிறேன்.. என் சொத்து என் படிப்பும்.. வேலையும்.. என் அம்மா அப்பாவும்.. திண்டிவனத்தில் இருக்கும் சொந்த வீடும் தான்.. நான் உன் தங்கை ராதிகாவை காதலிக்கிறேன்.. அவளை அவளுக்காகவே நான் விரும்புகிறேன்.. எனக்கு உன் தங்கையை கல்யாணம் செய்து கொடுப்பாயா...?"
அரவிந்தன் பேசப்பேச.. நவநீதனின் மனதில் குதூகலம் கொப்பளித்தது... ஆனால் முகத்தில் கடுமையைக் காட்டிக் கொண்டு அசையாமல் நின்றான்..
"என்னடா.. பதில் சொல்ல மாட்டேன் என்கிற.."
"நீ என் தங்கையை காதலிப்பது இருக்கட்டும்.. அவள் உன்னைக் காதலிக்கிறாளா...?"
"ஆமாம்டா..."
"நிஜமாகத்தான் சொல்கிறாயா...?"
"இதில் போய் யாராவது பொய் சொல்வார்களா...?"
"எனக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லை.. நான் ராதிகாவை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்.. என் தங்கையை மறந்து விட்டு வேறு ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து கல்யாணம் செய்து கொண்டு உருப்படியாய் வாழப்பார்..."
"எனக்கு உன் தங்கையை விட நல்ல பெண்ணாக எவளையும் தெரியவில்லை.. கல்யாணம்ங்கிற ஒன்னைப் பண்ணிக்கிறதா இருந்தா அவளைத்தான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன்.. இல்லாவிட்டால் காலம் முழுவதும் இப்படியே இருந்து விடுவேன்.."
"அப்போது இப்படியே இரு.. காலம் முழுவதும் பிரம்மச்சாரியாய் வாழ வேண்டுமென்பது உன் தலை யெழுத்தாக இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்..?"
"ஹலோ.. மைடியர் பிரண்ட்.. உன் தங்கை என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டேன் என்றால் தானே.. நான் காலம் முழுவதும் பிரம்மச்சரியாய் வாழ வேண்டும்..? அவள் தான் நான் 'நீட்டு கழுத்தை...' என்று சொன்னால்.. 'கட்டுடா தாலியை'ன்னு கழுத்தை நீட்டி விடுவாளே..."
"ஸோ...?"
"இதோ பார்.. நீ என் நண்பன்.. நான் காதலிக்கும் பெண்ணின் அண்ணன்.. என் வருங்கால மைத்துனன்.. முறைப்படி உன்னிடம் பெண் கேட்க வேண்டும்.. கேட்டு விட்டேன்..."
"நானும் மறுத்து விட்டேன்..."
"அதனால் ஒன்றும் என் கல்யாணம் நின்று விடாது.. நீ சம்மதித்தால்  உன் முன்னால் கல்யாணம் நடக்கும்.. நீ சம்மதிக்கா விட்டால் என் அப்பா அம்மாவின் முன்னால் மட்டும் கல்யாணம் நடக்கும்.."
"நான் அவளை வீட்டுக்குள் அடைப்பேன்.."
"நான் சுவரேறிக் குதித்து.. அவளைத் தூக்கிக் கொண்டு போய் தாலியைக் கட்டுவேன்.."
"பார்க்கலாமா...?"
"பார்க்கலாம்..."
நவநீதன்.. தன் சட்டையின் கையை மடித்து விட்டுக் கொண்டு அரவிந்தனை முறைத்தவாறு நெருங்கி னான்.. அரவிந்தன் அசையாமல் நின்றான்.. கடைசி வினாடியில் நண்பனைக் கட்டித் தழுவிக் கொண்டு கடகடவென்று சிரித்தான் நவநீதன்..
"வெற்றி.. வெற்றி..."
"என்னடா.. பழைய சினிமாவில் வரும் முதல் காட்சியின் வசனம் போலப் பேசுகிறாய்..?"
"நான் நினைத்தது நடந்து விட்டது..."
"என்ன நினைத்தாய்...?"
"உன்னை திண்டிவனத்தில் பார்த்த போதே.. நீதான் ராதிகாவிற்கு ஏற்ற கணவர்னு முடிவு பண்ணினேன்.. நீயும் எங்கள் ஜாதிதான்.. அதனால் ஜாதி பற்றிய பிரச்னை இல்லை.. உனக்கு ராதிகாவைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கும் திட்டத்தோடுதான் உன்னை என் வீட்டுக் காம்பவுண்டிற்குள் நுழைய விட்டேன்..."
"அடப்பாவி.. உன்னை அப்பாவின்னு நினைத்தேனே.."
"வயது வந்த தங்கைகளைப் பாதுகாத்து கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவன்.. அப்பாவியாக இருக்க முடியுமா..?"
"உன் சொந்தத்தில் பணக்கார மாப்பிள்ளைகள் இருப்பார்களே..."
"அவர்களுக்கு ராதிகாவின் அருமை தெரியுமா..? நீ சொன்னாயே அவளை.. அவளுக்காக விரும்புகிறேன்னு.. அப்படி யாராவது ஒருவன் வருவானா..? மாட்டான்.. எல்லோருக்கும்... ராதிகாவின் பெயரில் இருக்கும் சொத்துத்தான் தெரியும்.. ராதிகா தெரிய மாட்டாள்.. தாய்.. தகப்பன் இல்லாத பெண்.. அரவிந்தா... அவளை பெற்ற மகள் போல் பார்த்துக் கொள்ளும் மாமனார்.. மாமியார் தான் எனக்கு வேண்டும்.. உன் பேரண்ட்ஸ் சொக்கத் தங்கம்டா.."
"நவநீதா ஏன் இப்படிப் பேசுகிற..? ராதிகா எங்கள் குல விளக்கு..! அவளை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.."
"எனக்கு இது தான் வேண்டும்.."
"சரி.. என் அம்மா.. அப்பாவை எப்போது வரச் சொல்ல...?"
"எதற்குடா..?"
"முறைப்படி பெண் கேட்கத்தான்..."
"பொறுடா..."
"பொறுப்பதா... போடாங்க.. உனக்கெங்கே என் பிரச்னை புரியப் போகிறது.. கண்ணுக்கு முன்னால் அவளை வைத்துக் கொண்டு விலகி இருக்க நான் படும்பாடு இருக்கிறதே.. அப்பப்பா.. எனக்கு அடுத்த முகூர்த்தத்திலேயே எங்கள் கல்யாணம் நடக்க வேண்டும்..."
"அடப் பொறுடா.. எங்களுக்கும் எல்லாம் தெரியும்.. நான் சொல்வதை காது கொடுத்துக் கேள்.."
நவநீதன் சொல்வதை காது கொடுத்து அரவிந்தன் கேட்டான்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,35,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,119,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,15,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சிறுகதைகள்,4,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,34,நிலாச் சோறு,19,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,24,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு -33
முகில் மறைத்த நிலவு -33
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-33.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-33.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy