முகில் மறைத்த நிலவு. -32

32 ஓங்கி எழுந்த ஓர் பேரலையில் ராதிகா அடித்துச் செல்லப்பட்டாள்.. அவள் எதிர்பாராத இந்தக் தொடுகை.. அவள் உணராத பலவற்றை அவளுக்கு உணர்த்திய...


32

ஓங்கி எழுந்த ஓர் பேரலையில் ராதிகா அடித்துச் செல்லப்பட்டாள்.. அவள் எதிர்பாராத இந்தக் தொடுகை.. அவள் உணராத பலவற்றை அவளுக்கு உணர்த்தியது.. அரவிந்தன் இப்போது உன்மத்தம் கொண்டவனாகி அவளை இறுக்கித் தழுவினான்.. அதிலிருந்து விடுபட விரும்பாதவளாய் அவள் புயலில் சிக்கிய பூங்கொடியாய் அவனது அணைப்பிற்கு ஆட்பட்டாள்...
'பளீர்..' என்ற ஒளியுடன் மின்சாரம் வந்து விட அறையினுள் வெளிச்சம் வந்தது.. இருவரும் பதறி விலகி னார்கள்.. ராதிகா அவசரமாய் வாசலைப் பார்த்தாள்.. மழை நிற்காமல் வலுக்கப் பெய்து கொண்டிருந்தது.. மோனிகா வரவில்லை...
அரவிந்தனின் முகம் பார்க்கக் கூசியவளாய்.. சோபா வில் அமர்ந்து கொண்டாள்.. தடைபட்ட உணர்வுகளின் தவிப்பிற்கு ஆட்பட்டிருந்த அரவிந்தன்.. அவளுக்கு எதிரில் அமர்ந்தான்..
"ராதிகா..."
"ம்ம்..."
"என்னைப் பார்..."
உரிமையோடு வந்த ஒருமையான அழைப்பு.. சற்றுமுன் நடந்த நிகழ்வு தந்த நெருக்கத்தின் விளைவாய் தோன்றியிருந்த சொந்தத்தை அவனது குரல் உணர்த்த.. அவள் தயக்கமாய் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்..
"நான் வசதியானவன் இல்லை..."
"நான் இதைக் கேட்டேனா...?"
"நீ கேட்காவிட்டாலும் நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.."
"நீங்கள் சொல்வதை நான் நினைத்தும் பார்த்த தில்லை..."
"நான் நினைத்துப் பார்த்து விட்டேன்.. நீ கோடிஸ்வரி யென்ற ஒரே காரணத்தினால் தான்.. இதுவரை என் மனதில் உன்மேல் எனக்கு இருந்த காதலை.. வாய்விட்டு உன்னிடம் சொல்லாமல் மறைத்து வந்தேன்.."
"அரவிந்த்..."
"நீ அற்புதமானவள் ராதிகா.. முதல் நாள் உன்னைப் பார்த்த போது நீ பூஜைக்காக மலர்களைப் பறித்துக் கொண்டு தெய்வங்களைப் பற்றிப் பாடிக் கொண்டி ருந்தாய்.. அப்போது.. நீ தேவதையோன்னு ஒரு கணம் பிரமித்து விட்டேன்.."
"அரவிந்த்...."
"நிலவை மேகம் மூடுவது போல.. உன் கருணையை கடுமையான சுபாவம் போன்ற பாவனை காட்டிய முகமூடியால் மறைத்துக் கொண்டிருந்தாய்.. இதை நான் எப்போதோ கண்டு கொண்டேன்.. நீ உன்னையும் காத்து.. உன் அண்ணனின் சொத்துக்களையும் காத்து.. உன் தங்கையை யும் வளர்த்துக் காக்கும் கடமையில் இருந்தாய்.. உன் வயதிற்கு ஏற்ற சிரிப்பு உன் முகத்தில் இல்லை.. அதைத் திரும்பக் கொண்டு வரவே உன்னை பலமுறை சீண்டிப் பேசினேன்.."
"அரவிந்த்..."
"நான் இவ்வளவு சொல்கிறேன்.. நீ எதுவும் பேச மாட்டேன் என்கிறாயே.. என் பெயரைச் தவிர வேறு எதையும் நீ சொல்ல மாட்டாயா..?"
"உங்கள் பெயரைச் சொல்வதே.. என் மனதைச் சொல்லி விட்டது போன்ற ஓர் நிறைவைத் தந்து விட்டது அரவிந்த்..."
அரவிந்தன் கண்களால் அவளை அருகே அழைத்தான்.. ராதிகா தயங்கி வெளியே பார்த்தாள்.. இப்போது மழை விட்டிருந்தது.. லேசான தூறல் மட்டும் விழுந்து கொண்டிருந்தது..
"மோனிகா வந்து விடுவாளே..."
"அவள் வருவதற்குள் நீ என் அருகில் வா.."
"ச்ச்.. அவள் வந்து விடுவாள்.."
"உன்னை..! என்னை பயந்தாங்குளின்னு கிண்டல் செய்துவிட்டு.. நீ சரியான பயந்தாங்குளியாய் இருக்கிறாயே.."
அரவிந்தன் மின்னல் வேகத்தில் எழுந்து அவள் அருகில் வந்து குனிந்து அவளது கன்னத்தில் முத்த மிட்டான்..
"அக்கா..." வாசல் புறமிருந்து மோனிகாவின் குரல் கேட்கவும்.. அதே வேகத்தில் அவனுடைய இடத்தில் போய் அமர்ந்து விட்டான்..
"ஏண்டி லேட்...?"
"என்னவோ ஸ்கூலில் இருந்து லேட்டாக வந்தது போல் கேட்கிறாயே இப்போது கரெண்ட் போய் விட்டது.. தெரியுமில்லை..."
"கரெண்ட் போனால் அவுட் ஹவுஸ்லதான் கஷ்டம்.. இருட்டாக இருக்கும்.. நம் வீட்டில் தான் யு பி எஸ் ஸின் எமர்ஜென்ஸி பல்ப் இருக்குதில்லையா.. அப்புறமும் ஏன் லேட் பண்ணினாய்...?"
"அங்கே வெளிச்சமாக இருந்தால் போதுமா..? இங்கே இருட்டாக இல்ல இருக்கும்.. உனக்கே தெரியும்.. எனக்கு இருட்டென்றால் ரொம்ப பயம்ன்னு.. அது தான்.. கரெண்ட் வரும் வரைக்கும் நம் வீட்டில் இருந்து விட்டு வந்தேன்.."
"ரொம்ப புத்திசாலி.." என்றான் அரவிந்தன் மெச்சு தலாய்...
"ஏன்.. என் புத்திக்கு என்ன குறை..?" மோனிகா சண்டைக்கு வந்தாள்..
"ஒரு குறையும் இல்லை.. இங்கே உன் அக்கா தனியாக இருப்பாள்ங்கிற பொறுப்பு உனக்கு வேண்டாமா..?" அரவிந்தன் கேட்டான்..
"அக்கா ஒன்றும் தனியாக இல்லையே.. துணைக் குத்தான் நீங்கள் இருக்கிறீர்களே.." மோனிகா இயல்பாய் கூறினாள்..
'துணை' என்ற வார்த்தையைக் கேட்டதும் ராதிகா வின் விழிகளும்.. அரவிந்தனின் விழிகளும் சந்தித்துக் கொண்டன..
அன்று இரவு என்றுமில்லாத அமைதியோடு ராதிகா உறங்கினாள் அவளது மனதுக்குப் பிடித்தவன்.. அவளைக் காதலிப்பதாய் சொல்லி விட்ட நிம்மதியும்.. நிறைவும்.. அவளது முகத்தில் தெரிந்தன..
மோனிகா பாடம் படித்துக் கொண்டிருக்கும் போது.. இவள் அரவிந்தனின் படுக்கையறைக்குள் நுழைந்து கலைந்திருக்கும் படுக்கை விரிப்பை சரி செய்வாள்.. புத்தகங்களை சீராக அடுக்கி வைப்பாள்.. அவனது துணிகளை மடித்து வைப்பாள்..
"இதையெல்லாம் ஏன் செய்கிற..?" என்று அவன் கேட்டால்..
"எனக்கு செய்யப் பிடித்திருக்கிறதே.." என்று பதில் சொல்வாள்..
அந்த மழைக்கால இரவின் தனிமையை அடிக்கடி அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.. உரிமையுடன் அவளைக் கட்டித் தழுவினாலும் எல்லை மீறாமல் கண்ணியம் காத்தான் அரவிந்தன்.. மெல்ல.. மெல்ல.. தன் மனம் பூராவும் அவனை நிரப்பி மனதளவில் அவனது மனைவியாகவே வாழ அரம்பித்தாள் ராதிகா...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு. -32
முகில் மறைத்த நிலவு. -32
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-32.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-32.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy