முகில் மறைத்த நிலவு. -31

31 ' பூ வேலி... ' முன்னொரு தரம் ராதிகாவின் வார்த்தைக்கு கட்டுப் பட்டு நின்ற போது நவநீதனிடம் அரவிந்தன் சொன்ன வார்த்தை இது......


31

'பூ வேலி...'
முன்னொரு தரம் ராதிகாவின் வார்த்தைக்கு கட்டுப் பட்டு நின்ற போது நவநீதனிடம் அரவிந்தன் சொன்ன வார்த்தை இது...
இன்று உண்மையிலேயே பூவால் தன்னைச் சுற்றி ஒரு பூவேலியை ராதிகா அமைத்து விட்டதை அவனால் உணர முடிந்தது...
அவளின் பார்வை சொல்லிய செய்தியை அறியாமல் போக அவன் முட்டாள் அல்ல.. அவளது பார்வைக்கு பதில் பார்வையைக் கொடுக்காமல் இருக்கவும் அவனால் முடியவில்லை..
அவள் அவனிடம் மயங்கியிருப்பதை அவன் அறிவான்.. அதே சமயம் அவனும் அவளிடம் மயங்கிப் போய் கிடந்தான்.. அவளது அருகாமையில் செயல் இழந்தான்..
எத்தனையோ தருணங்களில்.. வெட்கத்துடன் விழி உயர்த்தி அவள் பார்க்கும் சமயங்களில்.. அவளை கட்டியணைத்து அவளது இமை மீது இதழ் பதிக்க ஆசை அவனுள் காட்டாற்று வெள்ளம் போல் தோன்றியிருக்கிறது..
ஆர்ப்பரிக்கும் உணர்வுகளுக்கு அவனால் அணை போட முடியாமல்.. அவளுக்குப் பின்னால் செல்லும் தன் மனதை இழுத்து நிறுத்தவும் முடியாமல் அவன் தடுமாறிப் போயிருக்கிறான்..
'ராதிகா...'
அவளது பெயரை மனதிற்குள் சொல்லும் போதே அவனது முகத்தில் ஒரு மந்தகாசம் உண்டானது...
வாசல் கதவு தட்டப்படும் ஒலி கேட்டு எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.. செண்பகா நின்றிருந்தாள்..
"அம்மா.. டிபன் கொடுத்து விட்டாங்க..."
"இங்கே கொடு.. காலிங் பெல் இருக்க.. ஏன் கதவைப் போட்டு உடைக்கிற...?"
"கையில் பாத்திரம் இருந்தது..."
"அப்படியா...? போய் வா..."
கதவை மூடு முன்னர்.. அவனது பார்வை அந்த வீட்டின் சாளரங்களில் படிந்து ராதிகாவின் முகத்தை தேடியது.. அவள் அவனை ஏமாற்றவில்லை...
ஒரு ஜன்னலின் அருகாமையில் கம்பியில் முகம் பதித்து ஓவியமாய் நின்றாள்..
'ஓவியம்தான்.. இவள் காணக் கிடைக்காத ஓவியம்.. இவள் மனதில் என் மேல் காதல் இருப்பதை உணர்ந்தும்.. எனக்குள் இவள் மேல் காதல் பொங்கித் ததும்பியும்.. என்னால் அவளிடம் காதல் சொல்ல ஏன் முடியவில்லை..'
அரவிந்தன் தலையைப் பிடித்துக் கொண்டாள்.. காரணம் அவன் அறியாதது அல்ல.. அது.. ராதிகாவிடம் இருக்கும் சொத்துக்களும்.. பணமும் தான்..
ராதிகா கோடிஸ்வரி.. பரம்பரைப் பணக்காரர் ஒருவரின் மகள்.. அவள் மேல் காதல் கொண்டால்.. இந்த ஊர் உலகம் என்ன சொல்லும்..? அவளுடைய சொத்திற்காக அவளைக் காதலிப்பதாக பழி சொல்லாதா..? ஏன்.. அவளே கூட ஏதேனும் ஒரு கணத்தில் அப்படி நினைத்து விட வாய்ப்பிருக்கிறது.. அதனால் தான் அரவிந்தன் தயங்கி நின்றான்...
ராதிகா மட்டும்.. பணக்காரி என்ற அடையாளம் இல்லாத சாதாரண பாமரப் பெண்ணாக இருந்திருந்தால்... எப்போதோ அவளை அவனுடையவளாக்கிக் கொண்டிருப்பான்..
அரவிந்தன் விட்ட பெருமூச்சு கற்றோடு கலந்தது...
மோனிகா தினமும் படிக்க வந்தாள்.. ராதிகா அவளுடன் துணைக்கு வந்தாள்..  ஒரு நாள் மாலை.. அவ்வாறு படிக்க வந்த போது.. மோனிகா தன் கணக்கு நோட்டை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விட்டாள்.. அன்று மழை நாள் வேறு.. மழை பெய்து கொண்டிருந்தது.. அவர்கள் குடை பிடித்துக் கொண்டு வந்தார்கள்...
"எங்கே.. உன் நோட்டைக் காண்பி.. நேற்று நான் சொன்ன கணக்கையெல்லாம் ஒழுங்காக போட்டுப் பார்த்தாயா..?"
அரவிந்தன் கேட்டதும்..
"அச்சச்சோ.." என்று கைகளை உதறினாள்..
"என்ன ஆச்சு.. தேள் கொட்டி விட்டதா..?"
"நோட்டை வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன் சார்..."
"பரவாயில்லை விடு.. வேறு படிக்கலாம்.."
"இல்லை.. ஒரு நொடியில் எடுத்து வந்து விடுகிறேன்.."
"மழை பெய்கிறதும்மா..."
"குடை இருக்கிறதே.. இதோ நாலே எட்டில் வீடு வந்து விடும்.. போய் எடுத்து வருகிறேன்.."
மோனிகா குடையுடன் ஓடி விட... அவர்கள் இருவரும் தர்ம சங்கடம் அடைந்தார்கள்.. ராதிகா எழுந்து ஜன்னலோரம் சென்று நின்று மழையைப் பார்த்தாள்.. அரவிந்தன் எழுந்து ஷெல்பில் இருந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் புரட்டினான்...
இருவரும்.. அந்த மழை நேர இரவின் தனிமையில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கக் கூடப் பயந்தார்கள்...
அவர்களது பயத்தை பொருட்படுத்தாத மின்சாரம் நின்று விட அறையில் இருள் சூழ்ந்தது.. அதே நேரம் பலத்த இடிச்சத்தம் கேட்க.. ராதிகா நடுங்கிப் போய்
"அம்மா..." என்று அலறி விட்டாள்...
"ராதிகா... ராதிகா..."
நான்கே எட்டில் அவள் அருகில் வந்த அரவிந்தனின் கரம் அவளை ஆதரவாய் அணைத்துக் கொண்டது..
ராதிகாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.. அவள் பயத்துடன் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்..
அரவிந்தனின் உணர்வுகள் அணை உடைத்துக் கொண்டன.. அவன் விரும்புகின்ற பெண்.. அவனை விரும்புகின்ற பெண் அவன் கரத்தினில் புகுந்து.. உடலோடு ஒன்றி நிற்கும் போது உணர்வுகளை வெல்ல அவனால் முடியவில்லை...
அரவிந்தன்.. சுற்றுப்புறத்தை மறந்தான்.. மோனிகாவை மறந்தான்.. தன் கைகளுக்குள் இருப்பவள் கோடிஸ்வரி என்பதையும் மறந்தான்...
அவன் நினைவில் நின்றதெல்லாம்.. அவள்.. அவனுடையவள் என்பது மட்டும் தான்..
அரவிந்தனின் கரங்கள் அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டன.. அவளது உடல் நடுங்கினாலும்.. அவள் விலக முயவில்லை.. அவளது கூந்தலில் அரவிந்தனின் சூடான இதழ்கள் பதிவதை உணர்ந்தாள் ராதிகா.. அவளது பயம் போய்.. இப்போது இனம் புரியாத உணர்வுகள் அவளை ஆக்ரமித்திருந்தன.. அரவிந்தனின் இதழ்கள் இறங்கி.. அவளது கழுத்து வளைவில் பதிந்தன.. மெல்ல அவளது முகத்தை நிமிர்த்தி அவளது நெற்றியில் முத்தமிட்டவன்.. அவளது இதழோடு இதழ் பதித்தான்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு. -31
முகில் மறைத்த நிலவு. -31
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-31.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-31.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy