முகில் மறைத்த நிலவு -28

28                              தவறு செய்து விட்டவள் போல தலை குனிந்து சங்கடத்துடன் அமர்ந்திருந் து  தன் சின்னத் தங்கையின் தலையை ஆதாரத...


28                            

தவறு செய்து விட்டவள் போல தலை குனிந்து சங்கடத்துடன் அமர்ந்திருந்து தன் சின்னத் தங்கையின் தலையை ஆதாரத்துடன் கோதி விட்ட நவநீதன் மென்மை யான குரலில் பேச ஆரம்பித்தான்..
"மோனிகா.. உனக்குக் காய்ச்சல் வந்திருந்தால்... காய்ச்சல் வந்திருக்கிறது என்று தானே சொல்வ..?"
"ஆமாம்..."
"அது போல்தான் இதுவும்.. ராதிகாவுக்கு காதல் வந்திருக்கிறது.. அதை நீ சொல்லியிருக்கிற... இதில் சங்கடப்பட என்ன இருக்கிறது...?"
"இருந்தாலும் அண்ணா..."
"குழப்பிக் கொள்ளாதே.. விட்டுவிடு.. உன் சந்தேகம் சரியானதுதான்.. ராதிகாவின் மனதில் அரவிந்தனின் மேல் காதல் வந்திருக்கிறது.. இது எனக்கும் தெரியும்..."
"அண்ணா.. என்ன இப்படி எளிதாகப் பேசுகிற..?"
"கூல் டவுன் மோனிகா.. எனக்கு அரவிந்தனை நன்றாகத் தெரியும்.. என்னை விட ஒரு வயது தான் இளையவன்.. நடுத்தரக் குடும்பம் தான்.. ஆனால் தாய் தகப்பனுக்கு ஒரே மகன்.. படிப்பில் கெட்டிக்காரன்.. குணத்தில் தங்கக் கம்பி.. வெற்றிலை பாக்குக்கூடப் போட மாட்டான்.. இப்படியொரு மாப்பிள்ளை... நம் ராதிகாவிற்கு.. நாம் எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டான்..."
"ஆனால் அண்ணா.. நாம் வசதியானவர்கள் இல்லையா..?"
"நாம் வசதியில் பெரியவர்கள்.. அவன் தகுதியில் பெரியவன்.. இன்ஞ்சினியர்.. சதர்ன் மில்லின் ஜெனரல் மேனேஜர்..."
"நம் சொந்தத்தில் நிறைய மாப்பிள்ளைகள் அக்காவைப் பெண் கேட்கிறாங்களே..."
"அவர்களில் ஒருவனிடமாவது ராதிகா மயங்கினாளா..? இல்லையே.. அது ஏன்னு யோசித்துப் பார்த்தாயா...?"
"என் மேல் உள்ள பாசத்தால்ன்னு நான் நினைக்கிறேன்.."
"இப்போது மட்டும் உன்மேல் ராதிகா வைத்திருக்கும் பாசம் குறைந்து போய் விட்டதா..? அது அப்படியில்லைடா தங்கம்.. நம் சொந்தத்தில் ராதிகாவை.. ராதிகாவிற்காக பெண் கேட்டு யாரும் வரவில்லை.. அவள் பெயரில் இருக்கும் சொத்துக்களின் மதிப்பும்.. அவளுடைய நகைகளின் மதிப்பும் கோடிக்கணக்கானவை.. ஒரு கோடிஸ்வரியை கல்யாணம் பண்ணிக்கொண்டு அவளுடைய சொத்தை அடைய அவர்கள் துடிக்கிறார்கள்.."
"இதே எண்ணம் அரவிந்தனுக்கு இருக்காதா..?"
"அவனைப் பற்றி உனக்குத் தெரியாது.. அவன் படித்துக் கொண்டிருக்கும்போதே.. சொந்தத் தகப்பனின் பணத்தில் படிக்கக் கூடாதுன்னு பார்ட்டைம் வேலை பார்த்து சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான்.. இப்போது அவன் வைத்திருக்கும் டூ வீலர்.. அவனுடைய சுய சம்பாத்தியத்தில் வாங்கியது தான்.."
"நிஜமாகவா...?"
"பின்னே.. நீ அவனைப் பற்றி என்ன நினைத்து விட்டாய்..? வந்த முதல் நாளே.. ராதிகா அவன் இங்கே தங்குவதை ஆட்சேபித்த போது.. அவன் ராதிகா சொல்வது சரியென்று தான் என்னிடம் சொன்னான்.. அவனுக்கு நம் அவுட் ஹவுஸில் தங்கக்கூட விருப்பமில்லை..."
"அப்படியா...?"
"ம்ம்.. நான் தான் ராதிகாவிற்கு.. பொறுப்புகள் அதிகம்.. அதிலிருந்து விடுபட்டு.. தனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறதுன்னு அவள் நினைக்க வேண்டும்.. அதற்காக நான் அவளிடம் சண்டை போட வேண்டும்.. அது.. இதென்று சொல்லி இங்கே தங்க வைத்தேன்..."
"எனக்கும்.. அவர் தான் அக்காவிற்கு ரைட் சாய்ஸ்ன்னு தோன்றுகிறது.. ஆனால் இது நடக்குமா..?"
"ஏன் இப்படியொரு சந்தேகம் உனக்கு வருகிறது..?"
"இல்லை.. இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்வையால் விழுங்கிக் கொள்கிறார்கள்.. ஆனால் மற்ற காதலர்கள் போல் வாய் விட்டுக் காதலை சொல்லிக் கொள்ள மாட்டேன் என்கிறார்களே..."
"பண்பானவர்களின் காதல் இப்படித்தான் இருக்கும்.. நாம் தான் இருவரையும் கோர்த்து விட வேண்டும்..."
"கோர்த்து விடுவதா..? அப்படியென்றால்...?"
"இப்போது முத்துக்கள் தனித்தனியாக தரையில் சிதறிக் கிடக்கின்றனன்னு வைத்துக்கொள்..."
"முத்துக்களை ஏன் இப்போது சொல்கிறாய்..?"
"எல்லாம் காரணமாகத்தான்.. அதை முத்து மாலை யாக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்...?"
"தங்கக் கம்பியில் அதைக் கோர்க்க வேண்டும்.. ஓ.. இப்போது புரிகிறது..."
"நீ தான் ஜீனியஸ் ஆச்சே.. ராதிகாவும்.. அரவிந்தனும் இப்போது தனித்தனியாக நிற்கும் முத்துக்கள்.. அவர்களை ஒன்று சேர்த்து முத்து மாலையாக்க வேண்டுமென்றால்.. இருவரையும் கோர்க்க வேண்டும்..."
"அது தான் எப்படி...?"
"அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ள வேண்டும்.. அவர்கள் தனிமையில் பேசிப் பழக சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.. இன்னும்..."
"போதும்... போதும்..."
"இதையெல்லாம் நான் செய்ய முடியாது..."
"ஆமாமாம்.. நீ அண்ணன்.. இது முடியாது தான்.."
"ஆனால் நீ தங்கையாயிற்றே.. உன்னால் இது முடியும்.."
"சொல்லி விட்டாயல்லவா.. நாளையிலிருந்து இது தான் எனக்கு முக்கியமான வேலை..."
"நம் வீட்டில் அரவிந்தன் இருக்கும் போது இருவரும் இயல்பாய் பேசிப் பழகலாம்.. ஆனால் அவன் அவுட் ஹவுஸிற்கு போய் விட்டானே.. இப்போது அது முடியாமல் போய் விட்டது..."
"முடியாது என்பது முட்டாள்களின் அகராதி அண்ணா.."
"நீ முட்டாள் இல்லை... புத்திசாலி..."
"தெரிகிறது இல்லையா.. போய் நிம்மதியாக தூங்கு.."
மோனிகா வீர நடைபோட்டு தனது அறைக்குள் சென்று விட்டாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு -28
முகில் மறைத்த நிலவு -28
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-28.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-28.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy