முகில் மறைத்த நிலவு. -25

25 ' பறக்கும்.... பந்து பறக்கும்....      அது பறந்தோடி வரும் தூது.... ' பழைய பாடல் ஒன்று அந்த நேரத்தில் மிகச் சரியாக நவ...


25
'பறக்கும்.... பந்து பறக்கும்....
     அது பறந்தோடி வரும் தூது....'


பழைய பாடல் ஒன்று அந்த நேரத்தில் மிகச் சரியாக நவநீதனுக்கு நினைவில் வந்து நின்றது..
புடவையை இழுத்துச் சொறுகியபடி... பின்னலாட ராதிகா ஆட்டத்தில் கவனமாக ஆடிக்கொண்டிருந்தாள்.. அவளை விளையாட்டிற்கு அழைத்து வெற்றி கண்டு விட்ட அரவிந்தன்.. இயல்பாக அவளது பந்தை எதிர் கொண்டான்..
மின்வெட்டும் பார்வைகள் சந்தித்து விலகின.. ராதிகா தனது பள்ளிப் பருவத்திற்கு மீண்டு விட்டதை உணர்ந்தாள்.. மனதில் துள்ளலும்.. உற்சாகமும் போட்டி போட்டுக் கொண்டு சுரந்து கொண்டிருந்தன...
மோனிகா ராதிகாவின் பக்கம் நின்று கொண்டு தமக்கையை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தாள்... நவநீதன் அரவிந்தனுக்கு... ஆதரவாக உற்சாகமாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தான்..
"ஹேய்... சூப்பர் பால் அக்கா..."
"ஹீய்... டக்கர் பால் அரவிந்தா..."
"அக்கா விடாதே... அடி..."
"அரவிந்தா... அப்படித்தான்... அடி..."
இருவரின் குரல்களும் காற்றில் கலக்க.. எதிரெதிரே நின்று ஆடிக் கொண்டிருந்த இருவருமே... அதை உணரா தவர்களாய்.. தங்களை மட்டுமே உணர்ந்து கொண்டிருந் தார்கள்...
'இது போன்ற ஒரு நாள்.. முன்னெப்போதும் வந்ததில்லை...'
இந்த நினைவே இருவர் நெஞ்சிலும் நிறைந்து நின்றது.. இருவருமே ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுத்து ஆட ஆரம்பிக்க.. போட்டி டிராவில் முடிந்தது..
"ஜெயித்தது அக்காதான்..."
"இல்லை... ஜெயித்தது என் நண்பன் தான்..."
நவநீதனும்.. மோனிகாவும் வழக்கடித்துக் கொண்டே வீட்டுக்குள் செல்ல... மெல்ல பின்தங்கிய அரவிந்தன் ராதிகாவைப் பார்த்து மென்மையாகக் கேட்டான்..
"ஏன் விட்டுக் கொடுத்தீங்க...?"
"நீங்கள் ஏன் விட்டுக் கொடுத்தீங்க..?"
'கண்டு பிடித்து விட்டாள்...' என்ற உணர்வில் அரவிந்தன் புன்னகைத்தான்.. ராதிகாவும் பதிலுக்குப் புன்னகைத்து விட்டு... வீட்டுக்குள் சென்று விட்டாள்..
இரவு உணவு உண்ண வந்த நவநீதனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது...
"என்ன ராது... பிரைட் ரைஸும்.. சிக்கன் ஸிக்ஸ்டி பையும் இருக்கு.. இது நம்வீடா..? இல்லை ஸ்டார் ஹோட்டலா...?"
"நம் வீடு தான்.. சந்தேகப்படாமல் சாப்பிடு..."
"நான் காண்பது கனவா.. இல்லை நனவா..?" என்று தொடர்ந்து நவநீதன் புகழ்ந்து கொண்டிருக்கையில் மோனிகா வாயைத் திறந்தாள்...
"அடுத்து என்ன அண்ணா சொல்லப் போகிறாய்..? என் கண்முன் நிற்பது மண்ணுலக மங்கையா... இல்லை விண்ணுலக நங்கையான்னுதானே சொல்லப் போகிறாய்..?"
"எப்படி மோனி.. கரெக்டாகக் கண்டுபிடித்த...?"
"இதைக் கண்டுபிடிப்பது பெரிய கஷ்டமான வேலையா..?"
ராதிகா அவர்களது வாக்குவாதத்தைக் கவனிக்காத வளாய்... அரவிந்தன் ருசித்து சாப்பிடுகிறானா என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.. சாப்பாட்டுக்கு ஊடே லேசாக தலை நிமிர்ந்த அரவிந்தன் அவளது பார்வையை கண்டு கொள்ள.. அவசரமாய் குனிந்து சாப்பிட ஆரம்பித்தாள்..
சாப்பிட்டு முடித்தவுடன் மாடி ஹாலில் அவர்கள் நால்வரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்...
"எங்கள் ஸ்கூலில் ஆண்டு விழா நடக்கப் போகிறது.." என்ற பேச்சை ஆரம்பித்தாள் மோனிகா...
"நீ என்ன செய்யப் போகிறாய்..?" என்று அரவிந்தன் வினவினான்..
"தெரியவில்லை.. யோசித்துக் கொண்டிருக்கிறேன்.."
"ஏன்.. பாட வேண்டியதுதானே...?"
"எனக்குப் பாடத்தெரியாதே..."
"என்னது... உனக்குப் பாடத் தெரியாதா..? ஆச்சரியமாய் இருக்கே..."
"இதில் ஆச்சரியப் பட என்ன இருக்கிறது...?"
"ஒரு பாடகியின் தங்கை இப்படிச் சொல்லலாமா...?"
அரவிந்தனின் விழிகள் ராதிகாவின் முகத்தை மொய்க்க.. அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது... முதல் நாள் அவன் வரும் போது தோட்டத்தில் அவள் பாடிக் கொண்டிருந்ததைக் குறிப்பிடுகிறான் என்பதை புரிந்து கொண்டாள் ராதிகா...
"அக்கா பாடகியில்லை.. ஆக்சுவலாய் அக்கா பரத நாட்டியம் தான் நன்றாக ஆடும்.. பாடுவது சும்மா... ஜஸ்ட் லைக் தட் தான்.."
"நிஜமாகவா.. உன் அக்காவிற்கு நாட்டியமும் தெரியுமா...?"
"நாட்டியம்தான் தெரியும்..."
"ம்ம்.. பெண்டாஸ்டிக்.. நிறைகுடம் தளும்பாது என்பது உன் அக்காவின் விசயத்தில் உண்மை தான் போல.. ஏன் மோனிகா நீ ஏன்.. உன் அக்காவிடம் ஒரு பாடலையும்... நடனத்தையும் கற்றுக் கொண்டு உன் ஆண்டுவிழாவில் பாடியும்.. ஆடியும் காட்டக்கூடாது?"
"என்னால் முடியுமா..?"
"உன் டீச்சரால் உன்னைப் பாட வைக்கவும் முடியும்.. ஆட வைக்கவும் முடியும்.. அவங்களால் முடியாதது என்பது எதுவுமே இல்லை..."
"அக்கா..."
"ம்ம்.. எல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்.. அண்ணா.. உன் பிரண்ட் என்னை டீச்சர்ன்னு பட்டம் கட்டி விட்டாரே..."
"விளையாட்டுக்கு சொல்கிறான் ராதும்மா.. நீ சீரியஸாய் எடுத்துக் கொள்ளாதே..."
"ஓகோ.. மோனிகா.. உனக்காக... நான் பாட்டும்.. டான்ஸும் சொல்லிக் கொடுக்கிறேன்.. போதுமா..."
ராதிகா... 'உனக்காக' என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது அரவிந்தனைப் பார்த்துக் கொண்டே உச்சரித்தாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு. -25
முகில் மறைத்த நிலவு. -25
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-25.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-25.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy