முகில் மறைத்த நிலவு -22

22 "இன்றைக்கு சாப்பாடு அருமை ராதும்மா..." நவநீதனுக்கு மறு மொழி கூறாமல் சிரித்து விட்டுச் சென்று விட்டாள் ராதிகா.. நவந...


22

"இன்றைக்கு சாப்பாடு அருமை ராதும்மா..."
நவநீதனுக்கு மறு மொழி கூறாமல் சிரித்து விட்டுச் சென்று விட்டாள் ராதிகா..
நவநீதன் எழுந்து வாசலுக்கு வந்தான்.. ராமையா வந்தார்...
"என்ன ராமையா... அவுட் ஹவுஸிற்கு இன்றைக்கு பெயிண்ட் அடித்து விடலாமா..?"
"இன்றைக்கு முடியாது போல இருக்கு ஐயா..."
"ஏன்...?"
"காலையில் ராதிகாம்மா வந்து பார்த்தாங்க... நிறைய மாறுதல் செய்யச் சொல்லி இருக்காங்க.. அதைச் செய்து முடிக்க இரண்டு நாள்கள் ஆகும்..."
"ராதிகா வந்து அவுட் ஹவுஸைப் பார்த்தாளா...?"
"ஆமாங்கய்யா..."
"இது என்ன ராமையா... உலகில் இல்லாத அதிசயமாக இருக்கு...?"
"அது மட்டுமில்லைங்கய்யா.. அவங்க செய்யச் சொல்லியிருக்கும் மாறுதல்களைக் கேட்டால் நீங்க அசந்து விடுவீங்க..."
"என்ன அது...?"
ராமையா சொன்னார்... நவநீதனின் ஆச்சரியம் இன்னும் பல மடங்கு கூடியது...
"இதற்கெல்லாம் பணம் நிறைய செலவாகுமே ராமையா...?"
"எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்னு சொல்லிட்டாங்க..."
"இதைப் பாருடா... ஏன் ராமையா.. இது என்ன அவுட்ஹவுஸா...? இல்லை.. வசந்த மாளிகையா...?"
நவநீதன் சொன்னதை ரசித்துச் சிரித்தார் ராமையா..
"ம்ம்.. நம் வீட்டிலிருந்து... அவுட்ஹவுஸிற்கு பாதை போடப்படுகிறதா..? பாதைக்கு இரு பக்கமும் பூச்செடிகளா..? கேட்கவே நன்றாக இருக்கிறதே..."
"பார்க்கவும் நன்றாகத்தான் இருக்கும்..."
"அவன் எப்படி.. பார்க்க நன்றாக இருக்கிறானா..?"
நவநீதன் கண் சிமிட்டிச் சிரித்தான்.. ராமையாவிற்கு விளங்கவில்லை...
"யாரைச் சொல்கிறீங்கய்யா...?"
"அவன்தான்... அரவிந்தன்..."
"ஓ... நீங்க அப்படி வருகிறீங்களா...?"
"ஆமாம் ராமையா...?"
"ஆள் பார்க்க ராஜா மாதிரிதான் இருக்கிறார்..."
"குணம் எப்படி...?"
"அது போகப் போகத்தானே தெரியும்..."
"பார்க்கலாம்... இது எது வரை போகிறது என்பதை நாமும் பொறுத்திருந்து பார்க்கலாம்..."
"நீங்க சொல்வது சரிதானுங்கய்யா..."
நவநீதன் மனதில் அந்த மதிய வெயிலிலும் புத்துணர்வு உற்பத்தி ஆனது...
அரவிந்தனைப் போன்ற ஓர் பண்பாளன் ராதிகாவிற்கு வாழ்க்கைத் துணைவன் ஆகிவிட்டால்... அதை விடப் பெரிய சந்தோசம் தனக்கு இருக்க முடியாது என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் அவன்...
ஆனால்.. திருமணம் என்பது இருமணமும் ஒன்று படும் விசயம்.. ராதிகாவின் மனம் விரும்பாத எதையும் திணிக்கக்கூடாது என்பதில் அவன் தெளிவாகவும்... உறுதியாகவும் இருந்தான்...
அன்று மாலை அரவிந்தனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த நவநீதன்.. வீட்டிலிருந்து அவுட்ஹஸிற்கு பாதை போடப் பட்டிருந்ததைக் கண்டு வியந்து விட்டான்..
"என்ன ராமையா.. என்னவோ... கம்பராமாயணத்தில் ராமன் வில்லை ஒடித்ததை... 'எடுத்ததைக் கண்டனர்... இற்றதைக் கேட்டனர்ன்னு' கம்பர் எழுதியிருப்பார்.. அதைப் போல இல்லை உங்கள் வேலையும் இருக்கிறது... மதியம்தான் பாதை போடணும்னு சொன்னீங்க... உடனே பாதையைப் போட்டு முடித்து விட்டிங்களே... நான்கு மணி நேரத்தில் இது எப்படி சாத்தியமாச்சு...?"
"மனமிருந்தால் மார்க்கம் இருக்கும்ய்யா..."
இருவரும் சிரித்துக் கொண்டே அரவிந்தனைப் பார்க்க... அவனோ புரியாதவனாய் பாதையைப் பார்த்தான்..
"அழகா இருக்கே.. இது யார் ஐடியா..?" என்று வேறு கேட்டான்...
அவனது கேள்வி ராதிகாவின் காதுகளில் விழுந்ததும் அவளது  மனம் மலர்ந்தது...
அவளுடைய யோசனையை ரசிக்கிறான்... இது அவளது மனதிற்கு எல்லையில்லாத உவகையை அளித்தது..
நவநீதனுடன்... வந்து கொண்டிருந்த அரவிந்தனை வெகு நாள்கள் கழித்துப் பார்ப்பது போல் ஆர்வமாய் பார்த்தாள் அவள்..
கழுத்திலிருந்த டையின் முடிச்சை தளர்த்திய வண்ணம் மாடிப் படியேறிக் கொண்டிருந்த அரவிந்தனின் பார்வையும் அவளைத் தேடி... அலைந்து.. அவள் மேல் படர்ந்தது...
ராதிகாவின் கன்னம் சூடேறியது... உதட்டைக் கடித்துக் கொண்டு பார்வையை அவள் விலக்கிக் கொண்டாள்... அவளது தடுமாற்றத்தை நிதானமாய் பார்த்தபடி அவன் போய் விட்டான்...
நேற்றிலிருந்து ஏன் இந்த உலகம் இத்தனை அழகாய் மாறியது என்பது ராதிகாவிற்கு விளங்கவில்லை... நேற்றுத் தான் புதிதாய் பிறந்தது போன்ற ஓர் உற்சாகம் அவளுக்குள் குமிழ் விட்டது... அரவிந்தன் வருவதற்குள்.. தன்னை கண்ணாடியில் ஓர் முறை பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வம் அவளுக்குள் கிளர்ந்தது... அவசரமாய் மாடியேறிப் போனவளை பள்ளியிலிருந்து திரும்பி வந்திருந்த மோனிகாவின் குரல் தடுத்து நிறுத்தியது..
"அக்கா.. எனக்குப் பசிக்கிறது..."
"வா.. காபி டிபன் சாப்பிடலாம்.. செண்பகா... மோனிகாவிற்கு காபி டிபன் கொண்டு வா..."
தங்கையின் முன்னால் காபி டிபனை வைத்துவிட்டு நழுவ முயன்றவள்.. மாடிப்படியில் கலகலப்பான பேச்சுக் குரல்களைக் கேட்டதும் நின்று விட்டாள்...
'அவன் வந்து விட்டானே... முகத்தில் எண்ணை வடிகிறதோ... தலை கலைந்திருக்கிறதோ...
மனதிற்குள் அலை பாய்ந்தாள்.. வெளியே முகத்தை சலனமில்லாமல் வைத்துக் கொண்டாள்...
"மோனிக்குட்டி..." என்றபடி நவநீதன் வந்து அமர்ந்தான்..
தமையனை கீழ் கண்ணால் பார்த்தபடி.. முகத்தை கறாராய் வைத்துக் கொண்டாள் ராதிகா...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு -22
முகில் மறைத்த நிலவு -22
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-22.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-22.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy