முகில் மறைத்த நிலவு. -20

20 செண்பகம் திறந்த வாயை மூடாமல் அதிசயமாய் பார்த்துக் கொண்டு நின்றிருப்பதை விசித்திரமாய் பார்த்தபடி ராமையா அங்கு வந்தார்... "என...


20

செண்பகம் திறந்த வாயை மூடாமல் அதிசயமாய் பார்த்துக் கொண்டு நின்றிருப்பதை விசித்திரமாய் பார்த்தபடி ராமையா அங்கு வந்தார்...
"என்ன செண்பகம்... வேலை இல்லையா...? இங்கே என்ன பராக்கு பார்த்துக்கிட்டு நிற்கிற...?"
"நம்ம அம்மா... தனக்குத்தானே பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கிறாங்கய்யா... இந்தம்மா இப்படி சந்தோசமா பாட்டுப் பாடி எவ்வளவு நாளாச்சு...? அதான்.. பார்த்துக்கிட்டு நிற்கிறேன்.."
ராமையாவின் காதுகளிலும் ராதிகாவின் மெல்லிய குரலில் பாடிய பாடல் ஒலி விழுந்தது.. அவரது முகம் மென்மையானது.. நவநீதனின் மனம் போட்ட கணக்கு அவருக்குப் புரிந்து போனது...
'சின்னய்யா... புத்திசாலி...' தனக்குள் சிலாகித்துக் கொண்டார்...
அதற்குள்... அறையை விட்டு வெளியே வந்த ராதிகா இருவரையும் பார்த்து விட்டு புருவம் உயர்த்தினாள்...
"என்ன.. இரண்டு பேரும் ஒன்றாக வந்திருக்கீங்க.. என்ன விசயம்...?"
"செண்பகம் காபி கொண்டு வந்திருக்கு... நான் உங்க கிட்ட பேச வந்திருக்கிறேன்..."
செண்பகம் குடுத்து விட்டுப் போன காபியை வாங்கி அருந்தியபடி ராமையாவைப் பார்த்தாள் ராதிகா... அவளது பார்வைக்குப் பதிலைச் சொன்னார் அவர்...
"அவுட் ஹவுஸில் இருந்த சின்னச் சின்ன ரிப்பேர் வேலையெல்லாம் பார்த்தாகிவிட்டது சின்னம்மா... இன்றைக்கு பெயிண்ட் அடிக்கச் சொல்லி விடவா...?"
'இன்றைக்கு பெயிண்ட் அடித்தால்... அவன் நாளைக்கே அவுட் ஹவுஸிற்கு போய் விடுவானே...'
ராதிகாவின் மனதில் மெலிதான ஏக்கம் சூழ்ந்தது... அவன் தங்கியிருக்கப் போகும் அவுட்ஹவுஸ் சிறப்பாக இருக்க வேண்டுமென்ற எண்ணமும் அவள் மனதில் உதித்தது...
"ம்... எல்லா ரிப்பேர் வேலைகளும் முடிந்து விட்டதா...?"
"ஏறக்குறைய முடிந்து விட்டது..."
"இந்த ஏறக்குறைங்கிற பேச்செல்லாம் வேண்டாம் ராமையா.. நான் வந்து பார்க்கிறேன்.. எல்லாம் சரியாக திருப்தியாக.. எனக்கு இருக்க வேண்டும்... புரிந்ததா...?"
"புரிந்தது..."
ராமையாவிற்கு புரிந்தது... அவுட் ஹவுஸ் எப்படி யிருந்தால் என்ன என்ற மனப்பான்மையில் இருந்தவள்... அதைச் செப்பணிட பணம் கொடுக்க மறுத்தவள்..
இன்று சிறப்பாக இருக்க வேண்டும் என்று சொல்கிறாள் என்றாள் அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று அவருக்குப் புரியாதா என்ன...?
ராதிகா.. தோட்டத்தில் இறங்கி அவுட்ஹவுஸை நோக்கிச் சென்றாள்.. அவுட்ஹவுஸிற்கு போகும் பாதை சீரில்லாமல் கரடு முரடாக இருந்தது...
"ராமையா... நம் வீட்டிலிருந்து அவுட்ஹவுஸ் வரை நீண்ட சிமிண்ட் பாதையைப் போடுங்கள்.. தரை வழுவழுப்பாக இருக்க வேண்டும்..."
"ஆகட்டும்மா..."
"பாதையின் இரு பக்கமும்.. பூச்செடிகளை நட்டு வைக்கச் சொல்லுங்க.. அழகான பூச்செடிகளாய் இருக்க வேண்டும்.."
"ஆகட்டும்மா..."
அவுட்ஹவுஸின் கதவைத் திறந்து உள்ளே போன ராதிகா அதைச் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.. பூட்டிக் கிடந்த வீட்டிற்கே உள்ள ஒரு நெடி... மூக்கைத் துளைத்தது.. முகத்தைச் சுளித்தாள்...
"என்ன ராமையா... நேற்று பூராவும் இங்கே வேலை நடந்தது தானே... அப்புறம் ஏன் இப்படி ஒரு வாசனை வருகிறது..."
"எல்லா ஜன்னல் கதவுகளையும் இன்றைக்கு திறந்து வைக்கச் சொல்கிறேன்ம்மா... பெயிண்ட் அடித்துக் கழுவி.. சாம்பிராணிப் புகை காட்டினால் சரியாகப் போகும்..."
"ம்ம்..."
அழகான சிறு வராண்டா.. அதைத் தாண்டி கதவைத் திறந்தால் பெரிய ஹால்.. ஹாலின் ஒரு பக்கமாய் கதவைத் திறந்தால்.. அட்டாச்சுடு பாத்ரூமுடன் கூடிய படுக்கையறை.. இன்னொரு பக்கம் சமையலறை... அந்த அவுட்ஹவுஸின் மொத்த சுற்றளவும்.. தன் படுக்கையறையின் சுற்றளவிற்குள் அடங்கிவிடும் என்று நினைத்துக் கொண்டாள் ராதிகா...
ஜன்னல்களின் கண்ணாடிக் கதவுகளில் ஒன்று விரிசல் விட்டிருந்தது.. ஹால் சுவரில் இருந்த ஷோகேஸ் அலமாரி கண்ணாடித் தடுப்பில்லாமல் இருந்தது.. சமையலறையின் சுவர்களின் டைல்ஸ் பதிக்கப்படாமல் இருந்தது.. படுக்கையறையில் பாத்ரூம் சுவர்களிலும் டைல்ஸ் பதிக்கப்பட்டிருக்கவில்லை...
"ராமையா.."
"அம்மா..."
"ரிப்பேர் பார்த்ததாகச் சொன்னீர்களே... என்ன ரிப்பேர் பார்த்தீங்க...?"
"குழாய் உடைந்திருந்தது.. வீடு தூசும்... தும்புமாக இருந்தது..."
"இதுதான் ரிப்பேர் பார்க்கும் லட்சணமா...?"
"அம்மா.."
"பாத்ரூமில் ஷவர்.. ஹீட்டர் எல்லாம் இல்லையா..?"
"இல்லைம்மா..."
"பெட்ரூமில் ஏஸி வசதியும் இல்லை..."
"இது அவுட்ஹவுஸ் தானேம்மா... கெஸ்ட் ஹவுஸில் நீங்கள் சொல்லும் வசதிகள் எல்லாம் இருக்கும்..."
"இது இனிமேல் அவுட்ஹவுஸ் இல்லை ராமையா.. நம் வீட்டு விருந்தாளி தங்கப்போகும் கெஸ்ட் ஹவுஸ்... இதில் எல்லா வசதிகளும் இருக்கனும்..."
"ஆகட்டும்மா..."
"ஜன்னல் கண்ணாடிக் கதவை மாற்றுங்க... ஹாலில் இருக்கும் ஷோகேஷிற்கு கண்ணாடித் தடுப்புக்கள் போடுங்க.. சமையலறை.. பாத்ரூம் சுவர்களில் டைல்ஸ் ஒட்டுங்க.. பாத்ரூமில் குழாயை மாற்றி.. ஷவர் இணைப்புடன் இருக்கும் குழாயை வாங்கி மாட்டுங்க.. பெட்ரூமில் ஏஸியும்.. பாத்ரூமில் ஹீட்டரும் வாங்கிப் பொருத்துங்க... இதையெல்லாம் செய்தபின்.. நான் வந்து பார்த்துவிட்டு... என்ன கலரில் பெயிண்ட் அடிக்கலாம்ன்னு சொல்கிறேன்.. புரிந்ததா..?"
அவருக்குத்தான் எப்போதோ புரிந்து விட்டதே... அவர் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினார்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,31,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,115,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,12,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,30,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,21,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு. -20
முகில் மறைத்த நிலவு. -20
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-20.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-20.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy