முகங்கள் -part -II

                 ஃபார்மா டிஸ்ட்ரிபியூட்டர் மெடிக்கல் ரெப் உத்தியோகத்தில் குப்பை கொட்டிய காலத்தை மறக்கவே முடியாது. மருந்துகள் குறித்த...

              ஃபார்மா டிஸ்ட்ரிபியூட்டர்

மெடிக்கல் ரெப் உத்தியோகத்தில் குப்பை கொட்டிய காலத்தை மறக்கவே முடியாது. மருந்துகள் குறித்து நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. ஓரளவு பல டெரிவேடிவ்கள், ஆன்டி பயாடிக்ஸ், வலிக் கொல்லி மருந்துகள், டயபடிக், கார்டியாக், டெர்மடாலாஜி, ஆர்த்தோ, நியூரோ, யூரினரி ட்ராக் மற்றும் டிபி நோய் சம்பந்தப்பட்ட மருந்துகள் குறித்து நல்ல பரிச்சயம் கிட்டியது.

மருந்து கடைக்கு சென்று பிராண்ட் பெயரை சொல்லாமல் மாலிக்யூல் பெயரை சொல்லி மருந்து வாங்குவது பழக்கமானது. இந்த பழக்கத்தால் செல்லும் மருந்து கடைக்காரர்களின் அறிமுகம் சட்டென கிடைத்தது. கூடுதல் போனஸாக பெருமிதத்தை உண்டாக்ககூடிய வகையில் செல்லும் மருந்தகங்களில் பணிபுரியும் பெண்களின் ஆச்சரிய முகபாவமும் கிட்டியது.

சமீபத்தில் நண்பர் ஒருவர் சிறுநீரக தொற்று நோய் காரணமாக தெரிந்த  யூராலஜிஸ்ட் ஒருவரை சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். மருத்துவரும் சில மருந்துகளை பரிந்துரைத்து சீட்டு எழுதித் தந்தார். என்னிடம் அது பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

நான் உடனே, “டாக்டர் கண்டிப்பா quinolone derivative antibiotic ஒன்னு எழுதி இருப்பார்” என்றேன்.

மருந்துகள் வாங்க இருவரும் ஜன் ஒளஷதி சென்றோம். அதில் ஒரு anti biotic மருந்து molecule ன் பெயர் Levofloxacin (quinolone derivative)

2002 ஆம் வருடம் துவங்கி சுமார் இரண்டு வருடங்கள் தஞ்சையில் மேன்ஷனில் தங்கி வேலை பார்த்த நாட்களை மறக்கவே முடியாது. மெடிக்கல் காலேஜ் ரோடு, தெற்கலங்கம், கின்னஸ் சாதனை (அப்போது) படைத்த அத்தெருவில் அதிகளவில் டாக்டர்கள் இருந்தார்கள்,

இரு சைவ மெஸ்கள், சாந்தி பரோட்டா, சதயத் திருவிழா, தஞ்சபுரீஸ்வரர் ஆலயம்... மெடிக்கல் காலேஜ் பழைய கேட் எதிரே விடிய விடிய திறந்திருக்கும் டீக்கடை, தினமணி பேப்பரரை படிக்கத்தரும் கபில் தேவ் ரசிகர் டீக்கடை... நினைத்து நினைத்து அசைபோடும் விஷயங்கள் ஏராளமாக தாரளமாக உண்டு.  

நான் பணி புரிந்தது ஓரளவு பெரிய நிறுவனத்தில் தான்! Orofer, Normet, Emsulide – P, C Tri, Zucox (Anti TB Drug) போன்ற பிராண்டுகள் பிரசித்தமானதே! இருப்பினும் புதிதாக அறிமுகமாகும் மருந்துகள், மாத டார்கெட், குறிப்பிட்ட மருந்துகளுக்கான டார்கெட் என்ற மாதம் தோறும் மெடிக்கல் ரெப் சந்திக்கும் இம்சைகள் எனக்கும் உண்டு. நாளடைவில் நெளிவு சுளிவு கொஞ்சம் பழகிய பின்பு பணியில் ஒரு ஈடுபாடு வந்துவிடும்.

என் கம்பெனி டிஸ்ட்ரிபியூட்டரின் அலுவலகம் மேல வீதியில் இருந்தது. அவரின் பூர்வீகம் காரைக்குடி பக்கம். நான் வேலைக்கு சேர்ந்த இரண்டாவது மாதமே ராசியாகி விட்டார். என் திருச்சி வீடு, தஞ்சையில் தங்கி இருந்த மேன்ஷன், எந்த சனிக்கிழமை திருச்சிக்குப் போவேன்... என சகலமும் அறிந்தவர். வீட்டை விட்டு வெளியே தங்கி, உண்டு வேலை பார்க்கிறான் என்பதால் ஒரு பரிவு தோன்றி... ஒரு மென்மையான மூலை என் மீது அவருக்கு உண்டு.

சனிக்கிழமை மாலை வீக்லி ஸ்டேட்மெண்ட் வாங்க அவர் அலுவலகம் சென்றால் என்னை அதிக நேரம் காக்க வைக்காமல் பிரிண்ட் அவுட் எடுத்து தருமாறு பணியாளரிடம் சொல்வார். சனிக்கிழமை ஊருக்கு போனால் சீக்கிரம் வீடு போய் சேர வேண்டும் என்ற அக்கறை.

தன்மையான மனிதர். சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர். சகஜமாக கலகலவென பேசக்கூடியவர் ஆனால் இவையெல்லாம் மாதம் இரண்டாம் தேதி முதல் இருபத்தைந்து தேதி வரை மட்டுமே! இருபத்தைந்து தேதிக்கு மேலே அவரின் “அந்நியன்” வெளிப்படும். முகத்தில் சிரிப்பு இருக்காது. கை குலுக்க கரம் நீட்டினால் இரு கைகளால் பற்றி அழுத்தமாக கை குலுக்குபவர் இருபத்தைந்து தேதிக்கு மேல் யார் கையை நீட்டினாலும் தன்னுடைய சில விரல்களை மட்டும் பதிலுக்குத் தருவார். நாம் ஒரு வார்த்தை பேசினால் மூன்று வார்த்தைகள் உதிர்க்கும் சுபாவம் கொண்டவர் மாதக் கடைசியில் வார்த்தைகளுக்கு அணை கட்டுவார். என்ன கேட்டாலும் பல முறை சொன்ன பிறகு ஒரு வரி அல்லது இரு வரியில் பதில் சொல்வார். காரணம் – மாதக் கடைசியில் சிரித்து பேசினால் மெடிக்கல் ரெப், ஏஎஸ்எம், ஆர்எஸ்எம் கோஷ்டிகள் அதிக வேல்யூவுக்கு ஆர்டர் எடுத்து பணத்தை காலி செய்துவிடுவார்கள் என்ற ஜாக்கிரதை உணர்வு.

நான் அதிகம் ப்ரெஷர் போட மாட்டேன் அவர் குணம் அறிந்து முதல் இரு வாரங்களில் சின்ன சின்னதாக ப்ரைமரி ஆர்டர் எடுப்பேன். பொதுவாக அனைவருக்கும் தெரிந்தது தான் என்றாலும் தெரியாதவர்களுக்காக : மெடிக்கல் ரெப்பைப் பொறுத்தவரை ப்ரைமரி ஆர்டர் என்பது டிஸ்ட்ரிபியூட்டரிடமிருந்து கம்பெனி தயாரிக்கும் மருந்துகளை இருப்பு வைக்க எடுக்கும் ஆர்டர். ஆர்டர் என்ன மதிப்போ அதற்கான காசோலையை ஆர்டருடன் டிஸ்ட்ரிபியூட்டர் தருவார். செகன்டரி ஆர்டர் என்பது மெடிக்கல்களில் இருந்து தன் கம்பெனி மருந்தை இருப்பு வைக்க ரெப் எடுப்பது. இந்த ஆர்டர் காபியை டிஸ்ட்ரிபியூட்டரிடம் தந்தால் அவர் மருந்துகளை மருந்தகங்களுக்கு சப்ளை செய்வார். மெடிக்கல் ரெப் டிஸ்ட்ரிபியூட்டரிடம் எடுக்கும் ப்ரைமரி என்பது அவர் ஆர்டருடன் மருந்து கம்பெனிகளுக்கு காசோலை தந்து முடிவது. ரெப் மருந்தகங்களில் எடுக்கும் செகன்டரி ஆர்டர் என்பது அவர் அந்த மருந்தகங்களுக்கு ஆர்டர் வேல்யூ தொகைக்கு அறுபது நாள் தொண்ணூறு நாள் கடன் என தொடர்வது.

எங்கள் நிறுவனம் தரும் மாதந்திர டார்கெட்டை தொகை அடிப்படையில் நான் வெற்றிகரமாக கடந்தாலும் சில குறிப்பிட்ட மருந்துகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் நிர்ணயம் செய்யும் டார்கெட்டை அசீவ் செய்ய பகீரத முயற்சிகளை மேற்கொள்வேன்.

பள்ளியக்ரஹாரம், அம்மாபேட்டை, மெடிக்கல் காலேஜ் ரோடிலிருந்து வல்லம் செல்லும் சாலை, வினோதகன் மருத்துவமனையில் உள்ள மருந்தகம் என நான்கு மருந்தகங்களை ஆபத்பாந்தவர்களாக வைத்திருந்தேன். மாதக் கடைசியில் ப்ரைமரி எடுக்க ஸ்டாக்கிஸ்ட் (டிஸ்ட்ரிபியூட்டர்) அலுவலகம் செல்லும் நாளில் என் “கடின உழைப்பின்” காரணமாக மேற் குறிப்பிட்ட மருந்தகங்களிலிருந்து சிலர் போன் செய்து சில குறிப்பிட்ட மருந்துகளை பெரிய அளவில் கேட்டு ஆர்டர் செய்வார்கள். நான் ப்ரைமரி ஆர்டர் எடுக்கும் போது அவருக்கு எந்தெந்த மருந்து ரகங்கள் வேண்டுமோ அவற்றின் அளவைக் குறிப்பிட்டு ஆர்டர் தரும் போது, அந்த நான்கு ஆபத்பாந்தவர்கள் ஏதேனும் கேட்டு ஆர்டர் செய்திருந்தால் அது பற்றி அவர் ஆட்கள் எழுதி வைத்திருக்கும் குறிப்புகள் பார்த்து ஆர்டர் செய்வார். முடிவு? எனக்கு சுபம்.

இது தவிர மாதக் கடைசி தினங்களில் அவர் அலுவலகம் செல்லும் போது (25 தேதிக்கு முன்பு அல்லது என் ப்ரைமரி ஆர்டர் முடிந்த பின்பு) கோர்வையாகப் பேசாது திணறி பேசும் வாய்ஸ் மாடுலேஷன் மற்றும் பரிதாபமானதொரு உடல் மொழியை வெளிப்படுத்தினால் சடாரென அவர் “என்ன சிக்கல் என்ன சங்கடம் சகஜமா சொல்லுங்க” என்பார்.

“மாசக் கடைசி சம்பளம் வந்தப்றம் தான் வீட்டுக்கு போவேன் சம்பளம் வர வரைக்கும் நாளை ஓட்டனும் முன்னூறு ரூபாய் இருந்தா செளகரியமா இருக்கும் அதான் சார் என்ன செய்யறதுன்னு...”   

“உடனே அவர் கணக்கு வழக்குகளை கவனிப்பவரிடம், சாமி, நம்ம ஆளுக்கு ஐநூறு ரூபாய் கொடுங்க, வவுச்சர்ல கையெழுத்து வாங்கிக்குங்க, அதை என்கிட்ட தாங்க” என்பார். அடுத்த மாதம் பிறந்து சம்பளம் வந்த பின் பணத்தை திருப்பித் தருவேன்.  

இது ஆரம்ப கட்ட நடைமுறை. நாளடைவில் மாதக் கடைசி தினங்களில் அவர் அலுவலகம் நான் சென்றாலே, “முதல்ல சாமி கிட்ட ஆயிரம் ருபாய் வாங்கிக்குங்க, அப்புறம் பேசலாம்” என்பார்.

எல்லாம் 2004 ஆம் வருடத்துடன் முடிந்து போய்விட்டது. சுமார் 11 ஆண்டுகள் கழித்து, அதாவது 2015 ஆம் ஆண்டு தஞ்சாவூருக்கு ஒரு பணி நிமித்தமாக சென்றேன். நேரம் வாய்க்கும்போதெல்லாம் தெரிந்த மருத்துவர்கள், மருந்தகங்கள் என தேடித் தேடிப் போய் பார்த்தேன். பேசினேன். ஸ்டாக்கிஸ்ட் சாரைப் பார்க்க அவர் அலுவலகம் சென்றேன். அவர் இல்லை அவர் மகன் இருந்தார். பரஸ்பர அறிமுகம், பேச்சு என்று முடிந்த பின் “அப்பா இப்போ ஆபீஸ் வரதில்லை, மாசத்துக்கு ஒரு வாட்டி வந்து பார்ப்பார், நான் தான் இப்போ” என்றார். சாரின் அலைபேசி எண்ணைத் தந்து பேச சொன்னார். மகனிடம், “நீங்க பேச வேண்டாம் நானே நேரடியா பேசறேன்” என்று சொல்லி அவருக்கு செல் அழைத்தேன். சார் தான் “ஹலோ” என்றார். அவர் குரல் காதில் ஒலிக்கும் போதே நினைவுகள் யாவும் பதினோரு வருடங்கள் பின்னோக்கி நகர்ந்தன. இருவரும் ஒப்புக்கு 2015 ஐ விசாரித்துவிட்டு 2004 ல் ஐக்கியமானோம். அரை மணித்தியாலம் பேசி முடித்த பின் மீண்டும் சார் 2015 தொடர்பாக விசாரித்தார்.

“எப்போ கிளம்புறீங்க?”

“நாளைக்கு நைட் சார்”

“எங்க தங்கி இருக்கீங்க”

“தெற்கலங்கத்துல...”

“நாளைக்கு மதியம் ஒன்றரை மணிக்கு ரூம்ல இருங்க, வண்டி அனுப்பறேன், மதிய சாப்பாடு நம்ம வீட்ல”

“சரிங்க சார், வீட்டு சாப்பாடு”

“பிரயாணம், ரூம் ஸ்டேன்னு நிறைய செலவு ஓடிருக்குமே, ஊருக்குப் போக டிக்கெட் போட்டாச்சா? எஸ்ஆர்எம்ல ரிட்டர்னுக்கு டிக்கெட் சொல்லவா?”

“வேண்டாம் சார் பிரச்னை இல்லை”

“பணம் செலவுக்கு இருக்கா, சாமி கிட்ட சொல்லி விடறேன், செலவுக்கு ஐயாயிரம் வாங்கிக்குங்க, அந்தப் பணம் போதுமா?”

திணறினேன். சடாரென பதில் சொல்ல முடியாது தவித்தேன். என்னையறியாமல் கண்கள் நீர்க்கோர்த்துக் கொண்டன.

“வேண்டாம் சார், பணம் இருக்கு”

2015 யும் சார் 2004 ஆக மாற்றிவிட்டார்!  
********************

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகங்கள் -part -II
முகங்கள் -part -II
https://1.bp.blogspot.com/-AlpKPh5zyt8/Xn4V1BDwShI/AAAAAAAAAzo/xzdFkdTQoNAAqzMVBRNXnAkOFFzpm6DDQCEwYBhgLKs4DAMBZVoDXXA9c8xYv9qQs-KcGYjaeXuQ-sBkEVxMwlg59vnmLKCsHvguCKgz1x0wGxFAnJsOiJRBMT53wPFOxQGPxvCIh1yCs7BQdUziGj0DpPmIehOlUbFtvFaNsc0ROKdx02dUrQ4dr7wLpQCqEiJnxtwVX6K_BKWUrSrGYEkOAHtCdd3FqXMRObLxBKnSoR0BerO87x_FwU71bLeL9ASwUo1LolREdmr4X8jJus08LUKH8kr9r2148jEDlBwgZ-380hH3tP53nd9jTah0lXALjA2UoLoOwKVmIkzti_41_Xs_hNXBXtA950xX3g2JZXBbXPEFuwQRPYlWdhJoXh_g76ZgTN-m1HFB1bMLH4zOAuThvy2XOtDwe5zMaRFuUBXXZkCEr2tp2dNZJlq8bh6ypfuG2tuyn2PQhglK5hhHdR6v1MBHGC6vrW9ZtbChKHoUDmkAaEyWF5ZydzHJquQqxhtW-BGuGREIvANvZ4oZR2Co-886SVXURt7rolTlTJRmsGcO-fn1AJkA_B8VCRnpLdBCfXXi-cOF_ANt5cyQcBK0hS91_lptGMKue6COT6CcUQzDfkhcIah3_WiDKWelMMvRiAepLbSFDmxf0MPmw-PMF/s320/M2.JPG
https://1.bp.blogspot.com/-AlpKPh5zyt8/Xn4V1BDwShI/AAAAAAAAAzo/xzdFkdTQoNAAqzMVBRNXnAkOFFzpm6DDQCEwYBhgLKs4DAMBZVoDXXA9c8xYv9qQs-KcGYjaeXuQ-sBkEVxMwlg59vnmLKCsHvguCKgz1x0wGxFAnJsOiJRBMT53wPFOxQGPxvCIh1yCs7BQdUziGj0DpPmIehOlUbFtvFaNsc0ROKdx02dUrQ4dr7wLpQCqEiJnxtwVX6K_BKWUrSrGYEkOAHtCdd3FqXMRObLxBKnSoR0BerO87x_FwU71bLeL9ASwUo1LolREdmr4X8jJus08LUKH8kr9r2148jEDlBwgZ-380hH3tP53nd9jTah0lXALjA2UoLoOwKVmIkzti_41_Xs_hNXBXtA950xX3g2JZXBbXPEFuwQRPYlWdhJoXh_g76ZgTN-m1HFB1bMLH4zOAuThvy2XOtDwe5zMaRFuUBXXZkCEr2tp2dNZJlq8bh6ypfuG2tuyn2PQhglK5hhHdR6v1MBHGC6vrW9ZtbChKHoUDmkAaEyWF5ZydzHJquQqxhtW-BGuGREIvANvZ4oZR2Co-886SVXURt7rolTlTJRmsGcO-fn1AJkA_B8VCRnpLdBCfXXi-cOF_ANt5cyQcBK0hS91_lptGMKue6COT6CcUQzDfkhcIah3_WiDKWelMMvRiAepLbSFDmxf0MPmw-PMF/s72-c/M2.JPG
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mugangal-II.html
https://www.muthulakshmiraghavannovels.com/

true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy