எண்ணியிருந்தது ஈடேற -236

236 எப்படி இவனால் எதுவுமே நடக்காததைப் போல ' ஈ ' யென்று பல்லைக் காட்ட முடிகிறது என்ற ஆச்சரியம்தான் நந்தினிக்கு முதலில் வந்த...


236


எப்படி இவனால் எதுவுமே நடக்காததைப் போல ''யென்று பல்லைக் காட்ட முடிகிறது என்ற ஆச்சரியம்தான் நந்தினிக்கு முதலில் வந்தது.. அவள் முன்னாடிதான் ரவிச்சந்திரன் அபராஜிதனை அடித்துத் துரத்தினான்.. இனி கேரளாப்பக்கம் கால் வைக்கக்
கூடாது என்று எச்சரித்தான்.. வயநாட்டை விட்டு ஓடி இரண்டு மாதம்கூட ஆகவில்லை.. திருவனந்தபுரத்துக்கு அபராஜிதன் வந்து நின்று விட்டான் என்றால் அவனை நினைத்து ரம்யமாலினி பயப்படுவதில் ஓர் அர்த்தமுள்ளது என்பது நந்தினிக்குப் புரிந்தது.. அது ரவிச்சந்திரனுக்கும் புரிய வேண்டுமே.. அத்தைமகன் என்பதால் அவன் காட்டும் சிறிதளவு கருணையே அபராஜிதனுக்கு அசாத்திய  தைரியத்தைக் கொடுக்கிறதே..
நந்தினி சுற்று முற்றும் பார்த்தாள்.. ஆள் நடமாட்டம் அதிகமில்லாத 'சமுத்ரா' பீச்சின் தனிமை அவளைக் கலவரப் படுத்தியது.. அபராஜிதனைப் போன்ற கயவன் எதற்கும் அஞ்ச மாட்டானே..
அவசரமாக எழுந்து கொள்ள முனைந்த நந்தினியின் பக்கத்தில் உட்கார்ந்த அபராஜிதன் மன்றாடும் குரலில்..
"பயப்பட வேண்டாம் நந்தினி.. எனக்கு உங்களிடம் பேச வேண்டும் அவ்வளவுதான்.. பேசி முடித்ததும் போய் விடுவேன்.. இப்படி சிங்கம், புலி, கரடியைக் கண்டதைப் போல ஓட நினைக்காதீங்க.. மனது வலிக்கிறது.." என்றான்.
'என்னடா இது.. பெருச்சாளி ஜீன்ஸ் பேண்டும், டிசர்ட்டுமா டிஸ்கோ ஆடுது.. எப்பவுமே இது டிரஸ்ஸில்லாமத்தான ஓடும்..' நந்தினிக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம் வந்தது..
'இவனிடம் நான் பயப்படுகிறேனாம்.. என்ன கழுதைக்காம்.. துஷ்டனைக் கண்டாத் தூர விலகனும் பாங்க.. அதைச் செய்ய நினைத்தால் இவனென்ன சிங்கம் புலி கரடியான்னு கேட்டு வைக்கிறான்.. சிங்கம் புலி கரடி சண்டைக்கு வந்திராதா..? நினைப்புத்தான் இவனுக்கு..'
நந்தினி பதில் பேசாமல் கிளம்ப முனைந்தாள்..
"நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன் நந்தினி.. உங்க பிரண்டிடம் நான் பேசிய விதம் தவறானதுதான்.."
'அதில் இவனுக்குச் சந்தேகம் வேற இருக்கா..'
"உங்க பிரண்டுக்கும் உங்களுக்கும் இடையில் சண்டை மூட்டிவிட டிரை பண்ணியிருக்கக் கூடாதுதான்."
'டிரை பண்ணினயா.. பாவி..! கேவலமா ஐடியா பண்ணினேடா.. நீயெல்லாம் எதில் சேர்த்தி..?'
"உங்களுக்குத் தெரியாது நந்தினி.. நான் உங்களை உயிருக்குயிராக காதலிக்கிறேன்.."
"என்னது..?"
தூக்கிவாரிப் போட அபராஜிதனை திகைப்புடன் பார்த்தாள் நந்தினி.. இதை நாடக வசனம் போல இல்லாமல் ஆத்மார்த்தமாக அடிமனதிலிருந்து சொல்வதைப் போல அவன் சொன்ன விதத்தில் கடலில் அவனைத் தளளி விட்டால்தான் என்ன என்ற ஆத்திரம் வந்தது..
"யெஸ் நந்தினி.. ஐ லவ் யு.."
இதே போல ரம்யமாலினியிடம் சொல்லி மாத்து வாங்கி மும்பைக்கு துரத்தப்பட்டவன் அபராஜிதன்.. அந்தக் கதையெல்லாம் நந்தினிக்குத் தெரியாது என்று அவன் நினைத்து விட்டானா என்ன என்ற பல்லைக் கடித்தாள் நந்தினி..
"செஞ்சிக்கு நான் வந்தது உங்களைப் பார்க்கத்தான்  நந்தினி.. மத்தபடி ஹிஸ்டரி மேல எனக்கு எந்தவிதமான இண்ட்ரெஸ்ட்டும் கிடையாது.. ஒரு இடத்துக்குப் போகிறதா இருந்தால் அந்த இடத்தைப் பற்றின அத்தனை இன்பர்மேசனையும் கேதர் பண்ணி வைச்சுக்குவேன்.. செஞ்சிக் கோட்டையைப் பற்றி நான் தெரிந்து வைத்துக் கிட்டதும் அப்படித்தான்.."
'அதுதான் தெரியுமே..'
அபராஜிதனின் இந்தக் குணாதிசியத்தைப் பற்றி ரவிச்சந்திரன் நந்தினியிடம் சொல்லியிருந்தான்.. இந்தத் திறமையை நேர் வழியில் அபராஜிதன் பயன் படுத்தியிருந்தால் வாழ்க்கையில் உயர்ந்திருப்பான் என்றும் சொன்னான்..
"கிரிமினல்ஸ் எல்லாருமே அதி புத்திசாலியாத்தான் இருப்பாங்க நந்தினி.. அதற்கான பெஸ்ட் எக்ஸாம்பிள் அபராஜிதனும், அஜந்தாவும்தான்.. இரண்டு பேருக்குமே தலை முழுவதும் மூளைதான்.. இவங்க யோகிக்கிற லெவலைக் கேட்டா அசந்து போவ.. அந்த அளவுக்கு ஸ்கெட்ச் போட்டுப் பிளான் பண்றதில கில்லாடிக.. இந்த நாலெட்ஜை பாஸிட்டிவ்வா யூஸ் பண்ணினா நல்ல லெவலுக்கு வந்து விடலாம்.. நெகட்டிவ் வேலைகளுக்குத்தான் யூஸ் பண்ணுவாங்க.. சொல்லித் திருந்துகிற ஜென்மங்களா இருந்தா சொல்லித் திருத்தலாம்.. இவர்கள் சொல் பேச்சுக் கேட்கா ஜென்மங்கள்.. எத்தனைதான் மெனக்கெட்டாலும் திருத்த முடியாது.. நடக்காத வேலைக்கு நம்ம எனர்ஜியைச் செலவளிக்க முடியாதில்லையா..? ஸோ.. நான் இவங்களைப் பத்தி யோசிக்கக் கூட மாட்டேன்.."
அபராஜிதன் அத்துடனும் நிற்கவில்லை.. ரவிச்சந்திரனின் நடையுடை பாவனைகள் முதற் கொண்டு காப்பியடித்தான்.. ரவிச்சந்திரனைப் போலவே தோரணையாக பேசி வைத்தான்.. பல இடங்களில் தானே ரவிச்சந்திரன் என்பதைப் போல நடித்துவிட்டு ரவிச்சந்திரனிடம் வாங்கிக் கட்டிக் கொள்வான் என்றும் ரவிச்சந்திரன் சொல்லியிருந்தான்..
'மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில இவன்தான் ஒர்ஜினல் ரவிச்சந்திரன்னு என்னிடம் கப்ஸா விட்டவன்தானே இவன்.'
"செஞ்சிக்கு உங்களைத் தேடித்தான் வந்தேன்.. என்னடா.. நம்மை இவனுக்கு எப்படித் தெரியும்ன்னு நினைக்கறீங்களா..? உங்களைச் சுற்றி என்ன நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியாது நந்தினி.. பட்ஷே.. எனிக்கு அதி நல்லாவே தெரியும்.."
நந்தினி திக்பிரமையில் உறைந்து போனாள்.. அபராஜிதன் அவளைச் சந்தித்த நிகழ்வு தற்செயலானதாக இருக்க முடியாது என்று ஏன் அவளுக்குத் தோன்ற வில்லை..? செஞ்சியில் சந்தித்ததினால் ரோமியோ போல நினைத்துக் கொண்டு அவளை சென்னையின் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன் வரைக்கும் பின் தொடர்ந்தான் என்று தானே நினைத்திருந்தாள்.. அதற்கும் முன்னால் செஞ்சிக்கு வந்ததே நந்தினியைப் பார்க்கத்தான் என்று அபராஜிதன் சொல்கிறானே..
"உங்க போட்டோவைப் பார்த்ததிலிருந்தே ஞான் உங்கமேல பிரேமம் கொண்டு.. பிரேமம் எண்டால் வல்லிய பிரேமம் நந்தினி.. காவியக் காதல்.."
'போடா..' தலையைப் பிடித்துக் கொண்டாள் நந்தினி..
'என் போட்டோ இவன் கைக்கு எப்படிப் போனது..?'
"ரவியத்தான் ஃபாரின் போயிருந்த சமயத்தில ஞான் வயநாட்டுக்குப் போயி.."
'அவன் இருந்தா உன்னை மொத்து மொத்துன்னு மொத்தி விரட்டியிருப்பான்.. அதனால அவன் இல்லாத சமயத்தில வந்து போயிருப்ப..'
ரவிச்சந்திரன் வயநாட்டு அரண்மனையில் இல்லாத தருணங்களை அஜந்தாவும், அபராஜிதனும் எப்படி யெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றிருந்தது அவளுக்கு.. அதனால்தான் வீணா, மகன் அரண்மனையில் இல்லாத தருணங்களில் மகளை அழைத்துக் கொண்டு கோவில், குளம்ன்னு கிளம்பிப் போய் விடுகிறாளோ..
'படுபாவி.. சொந்த அரண்மனையிலே நிம்மதியா இருக்க விடாம அத்தையையும், ரம்யாவையும் சித்திரவதை பண்ணிக்கிட்டு இருக்கான்..'
"ஆ சமயத்தில அத்தையும், ரம்யாவும் தமிழ்நாட்டுக் கோவில்களுக்குப் போய் விட்டுத் திரும்பி வந்திருந்தாங்க..  ரவியத்தானும் ஃபாரின்லேயிருந்து வயநாட்டுக்கு வந்திருந்தார்.. தஞ்சாவூரில் உனக்குப் பெண் பார்த்திருக்கேன்னு ரவியத்தானிடம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.."
'ஒட்டுக் கேட்டிருக்கான்.. ராஸ்கல்..'
"போட்டோ கொண்டு வந்திருக்கிறதா அவங்க சொன்னதும் நைஸா அவங்க ரூமுக்குப் போய் போட்டோவைத் தேடினேன்.."
'திருட்டு வேலை செய்ததை வீர சாகசம் போல பெருமையா சொல்லிக்கிறான்.. திருட்டு நாய்..!'
"உங்க போட்டோவைப் பார்த்து விட்டேன் நந்தினி.. சொன்னால் நம்ப மாட்டிங்க.."
'நீ என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன்னு உனக்கே தெரிந்திருக்கே.. அப்புறமும் ஏண்டா தொண்டைத் தண்ணியை வற்ற வைச்சுக்கிட்டுக் கதை சொல்கிற..?'
"கண்டதும் காதல்ங்கிறது இதுதான் போல.."
'நீயெல்லாம் காதல்ங்கிற வார்த்தையைச் சொல்லவே கூடாது..'
"உங்க போட்டோவைப் பார்த்த அந்த செகண்டில மயங்கிப் போனவன்தான்.. இன்னும் எழுந்திருக்கலை.."
'மயக்கம் போட்டு விழுந்ததில உன் மண்டை உடைந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்.. ரம்யாவும் உன்னை நினைச்சு பயந்து தரங்கிணியின் அண்ணனிடம் மாட்ட நினைத்திருக்க மாட்டா.. எங்கே.. அப்படியாப்பட்ட நல்ல விசயங்களெல்லாம் நடக்கவே மாட்டேங்குதே..'
நந்தினிக்கு அவன் சொன்ன காவியக் காதல் கதையில் துளியும் நம்பிக்கை ஏற்படவில்லை.. ரவிச்சந்திரன் மணக்கப் போகும் பெண் யார் என்று பார்க்க அஜந்தா அவனை அனுப்பி வைத்திருப்பாள் என்றுதான் நினைத்தாள்..
'இதுக டிசைன் அப்படித்தான்..'
"உண்மையைச் சொல்லனும்னா ரவியத்தானுக்கு பிக்ஸ் பண்ணியிருக்கிற பெண் யார்ன்னு பார்த்து அந்த மேரேஜை கலைத்து விடனும் என்கிறதுதான் எங்க பிளான்.."
'என்னடா இது.. இவன்கூட உண்மையை ஒப்புக்கிறான்..'
"பட்ஷே.. உங்க போட்டோவைப் பார்த்ததும் ஏற்பட்ட அட்ராக்சன் இருக்கே.. ஹௌ ஸ்வீட்.. இவனுக்கு இப்பேற்பட்ட பெண் கிடைக்கப் போகிறாளான்னு ரவியத்தான் மேல ஜெலஸ் வந்திருச்சு.. அஜந்தாவைத் தான் ரவியத்தான் மேரேஜ் பண்ணிக்கனும்னு நாங்க நினைத்தோம்.."
'இதைச் சொல்லு.. இதுவல்லவோ உண்மை..'
"ஒரே கல்லில் இரண்டு மாங்காய்ன்னு நான் பிளான் பண்ணினேன்.. தஞ்சைக்கு வந்து உங்களைப் பார்த்து நான்தான் ரவியத்தான்னு சொல்லிப் பேசிப் பழகி உங்க மனதில காதலை வர வைக்கனும்.."
'மின்னலே பட ஃபார்முலாவை யூஸ் பண்ண பிளான் பண்ணியிருக்கான்.. மாஸ்டர் பிளான்தான் போ..'
"மேரேஜ் நெருங்கி வர சமயத்தில எப்படியும் உங்களுக்கு உண்மை தெரிந்து விடும்.. ரவியத்தான் வேண்டாம்ன்னு சொல்லி அவரை ரிஜக்ட் பண்ணிட்டு என்னைக் கை காட்டிருவீங்க.."
'கொன்னுருவேண்டா.. அந்த அளவுக்கு நான் தத்தியில்லை..'
"மேரேஜ் டயத்தில அது நின்று போனா குடும்ப கௌரவம் அபெக்ட் ஆகும்ன்னு வேறு வழியில்லாம அஜந்தாவை ரவியத்தான் மேரேஜ் பண்ணிக்குவார்.. ரவியத்தானுக்கு பிக்ஸ் ஆன உங்களை நான் மேரேஜ் பண்ணி அவரைப் பழிவாங்கி விடுவேன்.."
'இதை என்னிடமே சொல்கிற பார்த்தியா.. ரவி பெல்ட் மன்னன்னா, நீ தில் மன்னன்டா..'
"தஞ்சாவூருக்கு உங்களைத் தேடிப் போனேன்.. நீங்க பிரண்ட்டோட மேரேஜ் எங்கேஜ்மெண்ட்டில கலந்துக்கிறதுக்காக செஞ்சிக்குப் போயிருக்கிறதா இன்பர்மேசன் கிடைச்சது.. செஞ்சியில் உங்க பிரண்டோட வீட்டைச் சுற்றிக் கண்காணித்துக்கிட்டு இருந்தேன்.. நீங்க இரண்டு பேரும் செஞ்சிக் கோட்டைக்குக் கிளம்பி வந்தீங்க.. நானும் ஃபாலோ பண்ணினேன்.. செஞ்சிக் கோட்டையில் தற்செயலாய் இன்ட்ரொடுயூஸ் ஆவதைப் போல இண்ட்ரொடுயூஸ் ஆகி செஞ்சிக் கோட்டை மேலே எனக்கு இண்ட்ரெஸ்ட் இருக்கிறதைப் போலக் காட்டிக்கிட்டேன்.. செஞ்சிக் கோட்டையைப் பற்றி நான் கேதர் பண்ணி வைத்திருந்த விவரங்களை அள்ளி விட்டேன்.. உங்களுக்குப் பதில் உத்ரா இம்ப்ரெஸ் ஆகிட்டாங்க.. பட்ஷே.. உங்களுக்கு ரவியத்தானைப் பிடிக்கவில்லை.. மேரேஜை நிறுத்த சூசைட் அட்டெம்ட் பண்ணுகிற லெவலுக்குப் போவீங்கன்னு எனக்குத் தெரியாது.."
'தெரிஞ்சதும் ஓடித் தொலைக்க வேண்டியது தானேடா..'
"அஜந்தாவிடம் அதைப் பற்றிப் போனில் சொன்ன போது சந்தோசப்பட்டுப் போனாள்.. என்னை மும்பைக்குத் திரும்பி விடச் சொன்னாள்.. தானாய் நின்று போகப் போகிற மேரேஜீக்கு நாம் ஸ்டெப் எடுத்து டயத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம் என்றாள்.. என்னால் உங்களை விட்டு விலக முடியலை.. சென்னை வரைக்கும் ஃபாலோ பண்ணினேன்.. நீங்க மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் எங்கோ போகிறீங்கன்னுதான் நினைத்தேன்.. வயநாட்டுக்கு வரச் போறிங்கன்னோ..
எந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று சூசைட் அட்டெம்ட் பண்ணிக்கப் போனீங்களோ, அந்த ரவிச்சந்திரனிடமே வேலை பார்க்கப் போறிங்கன்னோ தெரியாது.. ரயில்வே ஸ்டேசனில் அத்தானைப் பார்த்ததும் ஓடிட்டேன்.."
அசைவற்று அமர்ந்திருந்தாள் நந்தினி.. இதோ அவளைச் சுற்றி நடந்த வலைப் பின்னல்களை எவனோ ஒருவன் பிட்டுப் பிட்டு வைத்துக் கொண்டிருக்கிறான்.. அதில் சம்பந்தப்பட்ட அவளுக்கு எதுவுமே தெரியாது.. தானாக தேடி வந்து வலையில் சிக்கிக் கொள்கிறாள் என்றால் அவள் தத்திதானே..
"ரவியத்தான் எதற்காக உங்களிடம் உண்மையை மறைக்கிறார்ன்னும் எனக்குத் தெரியலை.. அவர் ரொம்பவும் கோபப்படுவார் நந்தினி.. எஸ்டேட்டில் ஒருத்தனை பெல்ட்டால விளாசின விளாசலில் அவன் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி சாவைத் தொட்டு விட்டுத் திரும்பி வந்தான்.. இன்னொருத்தனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டார்.. பணம் இருந்தா யாரும் எதையும் செய்யலாம் போல... செத்தவனுக்கு யாருமில்லையாம்.. கேள்வி கேட்கவும் யாருமில்லை.. பட்ஷே.. நீங்க அப்படியில்லையே நந்தினி.. உங்களுக்கு குடும்பம், சொந்தம்ன்னு இருக்காங்களே.."
விண் விண் என்று தெரிந்த நெற்றிப் பொட்டை அழுத்தி விட்டுக் கொண்டாள் நந்தினி.. எங்காவது ஓடிவிட வேண்டும் போல இருந்தது.. தோல்வியைத் தழுவி பிடிக்காத வாழ்வை பிடித்தமானதாக்கி வாழ்வதை விட ஓடி ஒளிவது மேல்.
"ரவியத்தானுக்கு விரும்பியது கிடைத்தாகனும்.. அதுக்காக எந்த எல்லைக்கம் போவார்.. பட்ஷே.. உங்க மேல அவருக்கு விருப்பம் இருக்கிறதைப் போல எனக்குத் தோணலை நந்தினி.. உலகமே வியந்து அப்ரிஷியேட் பண்ணும் ஸ்டார் இமேஜ் கொண்ட பிஸினெஸ் மேன் ரவியத்தான்.. அவருக்குப் பெண் கொடுக்க மல்ட்டி மில்லினியர்ஸ் போட்டி போட்டுக்கிட்டு இருக்காங்க.. அவரை மேரேஜ் பண்ணிக்கனும்னு அஜந்தா, தரங்கிணி உட்பட உலகப் பேரழகிகள் ஏங்கிக்கிட்டு இருக்காங்க.. பட்ஷே.. தஞ்சாவூரில பிறந்து வளர்ந்த பெண்ணொருத்தி அவரை வேண்டாம்ன்னு சொல்லி தற்கொலை வரைக்கும் போகிறான்னா அது அவரோட சுயமரியாதையைப் பாதிக்காதா..? அவரை வேண்டாம்ன்னு சொன்ன பெண்ணை அவர்தான் வேண்டும்ன்னு சொல்ல வைக்க நினைத்திருக்கிறார்.. தட்ஸ் ஆல்.. அதுக்கும் மேலே எதுவுமே இல்லை.. பை.."


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -236
எண்ணியிருந்தது ஈடேற -236
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ennniyirunthathueedera-236.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ennniyirunthathueedera-236.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy