எண்ணியிருந்தது ஈடேற -222

222 ரவிவர்மனின் பாசம் வியப்பிற்குரியது.. அவருக்கும் மனைவி , பிள்ளைகள் என்று சேர்ந்து வெளியில் செல்ல ஆசை இருந்திருக்கும்.. அப்படி அவர்...


222

ரவிவர்மனின் பாசம் வியப்பிற்குரியது.. அவருக்கும் மனைவி, பிள்ளைகள் என்று சேர்ந்து வெளியில் செல்ல ஆசை இருந்திருக்கும்.. அப்படி அவர் கிளம்ப நினைத்த சில சந்தர்ப்பங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளை விவரித்தாள் ரம்யமாலினி..
"அப்பாவும் எங்களுடன் வருகிறார்ன்னு தெரிஞ்ச அடுத்த நிமிசமே தாத்தா, பாட்டி, அத்தையின் குடும்பத்தார்ன்னு எல்லோரும் கிளம்பிட்டாங்க.. நாங்க மட்டும் போகிறோம்ன்னு சொல்ல முடியாம அப்பா தவித்தார்.. அண்ணன் வெளிப்படையா சொல்லி விட்டது.. பாட்டி நெஞ்சைப் பிடித்துக்கிட்டு உட்கார்ந்துட்டாங்க.. டாக்டருக்கு போன் போட்டு வீடே ஹாஸ்பிடலா மாறி யாருமே வெளியில் கிளம்ப முடியாம ஆகிப் போயிருச்சு.. அம்மாதான் அழுதுகிட்டே வருவாங்க.. அண்ணன் கோபப்படும்.. ஹார்ட் அட்டாக் வந்தா ஹாஸ்பிடலுக்குப் போன்னு சொல்லிட்டு கிளம்பி வந்துக்கிட்டே இருக்கனும்.. ஒரு தடவை அப்படிச் செய்து காட்டட்டும்.. அதற்கப்புறம் பாட்டி இதுபோல டிராமா பண்ண மாட்டாங்கன்னு சத்தம் போடும்.."
"அஜந்தாவோட ஃபேமிலிக்கு பிரச்னை இல்லை போல.. எங்கே கிளம்பறதா இருந்தாலும் ஜாலியா கிளம்பிப் போயிட்டு வர்றாங்களே.."
"அது அப்படித்தான்.. அத்தை ஃபேமிலி மட்டும் தனியே ஊர் சுத்தப் போவாங்க.. அவங்ககூட தாத்தாவும் பாட்டியும் ஜாயின் அடிக்க மாட்டாங்க.. அவந்திகா குடும்பம்ன்னு பிரிச்சுப் பேசுவாங்க.. அதுவே எங்க குடும்பம்ன்னு வந்தா தாத்தா, பாட்டி ஜாயின் அடிச்சு அத்தையின் குடும்பத்தையும் கூட்டுச் சேர்த்துக்குவாங்க.. எல்லோரும் ஓர் குடும்பம்ன்னு சொல்லுவாங்க.. இந்தக் கதையே வேண்டாம்ன்னு அண்ணன் சொல்லிரும்.."
"ஹா.. ஹா.. பாஸ் இருக்கிறாரே.."
ரவிச்சந்திரனின் மனோதிடத்தை சிலாகித்து மகிழ்ந்து போனாள் நந்தினி.. அதை கண்டு பிடித்து விட்டதைப் போல அவளைக் கூர்ந்து பார்த்த ரம்யமாலினி..
"அண்ணனைப் பற்றிய பேச்சுன்னா உங்களுக்கு ஸ்வீட் சாப்பிடறதைப் போல இனிப்பாய் இருக்குது போல.." என்று கண் சிமிட்டினாள்..
'அண்ணனுக்கும்.. தங்கைக்கும் ஒரே மேனரிசம்தான்..' கன்னம் சிவந்த நந்தினி..
"இல்லையே.." என்று மறுத்தாள்..
"இல்லைன்னு வாய்தான் சொல்லுது.. கண்ணிலே கள்ளத்தனம் தெரியுது.. ஆக்சுவலா நந்தினி.. அண்ணன் அடங்கி ஒரு இடத்தில இருக்காது.. ஓடிக்கிட்டே இருக்கும்.. அதை இழுத்துப் பிடித்து நிறுத்தி வைக்கிறது கஷ்டம்.."
'இதையே எல்லோரும் சொல்கிறாங்க.. அப்படியொரு ஊர்சுத்தியா அவன் இருந்திருக்கான்..'
"ஆனாப் பாருங்க.. நீங்க வந்ததில இருந்து உங்களை விட்டு இந்தப் பக்கம், அந்தப் பக்கம் நகரலை.. எங்கே போனாலும் உங்களையும் கூப்பிட்டுக்கிட்டுத்தான் போகுது.."
'அகப்பட்டுக்கிட்டேனா..' நந்தினிக்கு லஜ்ஜையாக இருந்தது..
"அது வந்து ரம்யா.. நான் பாஸோட பெர்சனல் செக்கரட்டரியா.. அதனாலே அவர்கூடவே ஜர்ன் பண்ண வேண்டியதா இருக்கு.." ரம்யமாலினியின் முகத்தைப் பார்க்காமல் சொன்னாள்..
"ஈஸிட்..? ஐ கான்ட் பிலிவ் திஸ்.. எங்கே என் முகத்தைப் பார்த்துச் சொல்லுங்க.." என்று சொன்ன ரம்ய மாலினி,
நந்தினி ரம்யமாலினியின் முகத்தைப் பார்க்க முடியாமல் தட்டுத் தடுமாறியதில்..
"ரொம்பத்தான் தடுமாறாதீங்க.. இது வயநாட்டு மலைப்பாதை.. உருண்டா கிடுகிடுப் பள்ளத்தாக்குதான்.. என் முகத்தைப் பார்க்கப் பயந்துக்கிட்டு பள்ளத்தாக்கில் உருண்டு விடப் போறிங்க.." என்று கேலி செய்தாள்..
"அப்படியே உன் அண்ணன்தான்.." வியந்தாள் நந்தினி..
"எதுக்காக இப்ப அண்ணனை இழுக்கறிங்க..?"
"உங்க அண்ணனை இழுத்துட்டாலும்.."
முகம் சிவந்த நந்தினி 'களுக்' கென்று சிரித்து வைத்தாள்.. ரம்யமாலினி அவளுடைய முகத்தை உற்றுப் பார்த்ததில் முகச்சிகப்பு அதிகரிக்க..
"ஐய்யே..!! எதுக்காக இப்படிப் பார்க்கறிங்க.." என்று சிணுங்கினாள்..
"ஹைய்யோ..! செம்ம அழகா இருக்கு.. இப்படித்தான் அண்ணனிடம் சிணுங்குவீங்களா..?" ரம்யமாலினி விழி விரித்தாள்..
"எங்கே சுற்றினாலும் உங்க அண்ணனிடம்தான் வந்து நிற்பீங்களா..?"
"ஊஹீம்.. நான் நிற்கலைங்க.. அண்ணன்தான் உலகத்தையே சுற்றிக்கிட்டு இருந்தது.. இப்ப உங்களை விட்டு நகராமல் நிற்குது.."
'அப்படியா..?'
நந்தினிக்கு கிறுகிறுத்தது.. ரவிச்சந்திரன் ஆணழகன்.. அதிலும் பேரழகன்.. வீரத்திலும், தீரத்திலும் அவனுக்கு நிகர் எவருமில்லை.. உலகம் சுற்றும் வாலிபன்..
அவன் நந்தினிக்காக எங்கேயும் நகராமல் நங்கூர மிட்டது போல அவளருகில் தேங்கி நின்றிருக்கிறானா..?
'அவனுக்கு நான் பொருத்தமா இருப்பேனா..?' நந்தினியின் முகம் வாடியது..
"ஹேய்.. என்னாச்சு..?" ரம்ய மாலினி விசாரித்தாள்..
"ஒன்றுமில்லை.. ச்சும்மா.. வீட்டு நினைவு.." நந்தினி சமாளித்து விட்டாள்..
"வீட்டு நினைவு வரத்தானே செய்யும்.. பிடிக்காத மேரேஜ்.. நீங்க என்ன பண்ண முடியும்..? கவலைப்படாதீங்க.. எல்லாம் சரியாகி விடும்.."  ரம்யமாலினி ஆறுதல் சொன்னாள்..
"சரியாகனும் ரம்யா.. அப்பத்தான் என் மனசில இருக்கிற பாரம் இறங்கும்.." என்ற நந்தினி.. ஏதோ நினைத்துக் கொண்டவளாக..
"அத்தையும், மாமாவும் என்னைத் தப்பா நினைச்சிருப்பாங்க இல்ல.." என்று முகம் கன்றக் கேட்டாள்..
"உங்க அத்தையாவது, உங்களைத் தப்பா நினைக்கிறதாவது.. அவங்க எப்பவுமே உங்களைத் தப்பா நினைக்கவே மாட்டாங்க.. அப்பா வேற கேட்டகிரி.. அம்மா மேல அப்பாவுக்கு லவ்வுன்னா லவ், அவ்வ்வ்..வளவு லவ்.. அம்மாவுடைய நியாயத்தை கேள்வி கேட்காமல் அப்பா ஏற்றுக்குவார்.. ஸோ.. அப்பாவும் உங்களைத் தப்பா நினைக்க மாட்டார்.. நீங்க ஸேஃப் ஜோனில்தான் இருக்கறீங்க.. தைரியமா இருங்க.."
"ஸேஃப் ஜோனில் இருக்கிறேனா..?"
ரம்யமாலினி சொன்ன விதத்தில் நந்தினி வாய் விட்டுச் சிரித்தாள்.. பூ ஒன்று மலர்ந்து இதழ் விரிப்பதைப் போன்ற அவளது சிரிப்பை ரசித்த ரம்யமாலினி..
"நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க.." என்றாள்..
'இவளோட அண்ணனும் இதைத்தான் சொல்றான்..'
நந்தினிக்கு கண்ணாடி பார்க்க வேண்டும் போல இருந்தது.. பேரழகு அண்ணனும், பேரழகித் தங்கையும் 'வாவ்' என்று சொல்லும் அளவிற்கா அவளது மூஞ்சி இருக்கிறது..?
'சும்மாக்காச்சும் சொல்லுதுகளோ..'
ரம்யமாலினியின் முகத்தைப் பார்த்தால் பொய் சொல்கிறவளைப் போலத் தெரியவில்லை.. அவளுடைய அண்ணன் வேண்டுமானால் பொய் சொல்லலாம்.. ரம்யா பொய் சொல்ல மாட்டாள்..
'அவன் கடைந்தெடுத்த கள்ளனல்லோ..'
நந்தினியின் மனதில் ஓடிக் கொண்டிருந்த சந்தேக மேகங்களைப் பற்றி அறியாதவளாக ரம்யமாலினி ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தவளாக கைகளை முன்புறம் கட்டி நின்று மலை முகடுகளில் படிந்திருந்த பனி மேகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவள் முகத்தில் சன்னமான துயரத்தின் சாயல் தெரிந்தது.. நந்தினிக்கு மனம் தாங்கவில்லை.. தேவதை துயரம் கொள்வதா..? ரம்யமாலினி வரம் கொடுக்கும் தேவதையல்லவா..?
"என்னைத் திங்க் பண்ணக் கூடாதுன்னு கலாட்டா பண்ணிட்டு இப்ப நீங்க இந்த ரேன்ஜீக்குத் திங்க் பண்ணலாமா..? உங்களுக்கு மட்டும் இது ஷீட் ஆகுதுன்னா நினைக்கறிங்க..? விட்டா மேற்குத் தொடர்ச்சி மலைகளிலே தவம் பண்ணக் கிளம்பிப் போய் விடுவீங்க போல இருக்கே.."
நந்தினி விளையாட்டாய் பேசி ரம்ய மாலினியின் சோகமான மனநிலையை மாற்ற முயன்றாள்.. சோகையாய் சிரித்த ரம்யமாலினி..
"மனம் விட்டுச் சிரிக்கறதுக்கும் ஒரு கொடுப்பினை இருக்கனும் நந்தினி.. உங்களுக்கு அது இருக்கிறது.." என்றாள்..
நந்தினியின் மனம் வலித்தது.. ராஜ பாரம்பர்யத்தில், கோடிஸ்வரக் குடும்பத்தில் செல்ல மகளாக பிறந்த பெண் மனம் விட்டுச் சிரிக்கும் சிரிப்பிற்காக ஏங்குகிறாளா..?
"உங்களுக்குத் தெரியாது நந்தினி.. நான் பிறந்ததிலிருந்தே அத்தையின் குடும்பம் இங்குதான் இருக்கிறது.. எனக்கென்று அப்பா எதை வாங்கிக் கொடுத்தாலும் அஜந்தாவுக்கும் அது போல வாங்கிக் கொடுத்தாக வேண்டும்.. இது எங்கள் தாத்தா பாட்டி போட்டு வைத்திருக்கும் சட்டம்.. அஜந்தாவுக்கு மட்டும் தனியே வாங்கிக் கொடுப்பார்கள்.. எனக்கும் அது போல வேண்டுமென்று கேட்க முடியாது.. அவள் அத்தையின் மகன்.. அத்தைக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் நாங்கள் செய்யக் கடமைப்பட்டவர்கள் என்பார்கள்.."
இப்படியொரு அழிச்சாட்டியமான நியாயத்தை யாழினியால்தான் கூற முடியும் என்று நினைத்துக் கொண்டாள் நந்தினி.. யாழினியின் அழகான முகத்திற்குப் பின்னாலிருக்கும் பாரபட்சமும், சுயநலமும், நியாயமற்ற குணமும் அவளுடைய அழகை அடியோடு மறக்கடித்து வெறுக்க வைத்து விடுகிறது என்பதை அவளறிவாளா என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்..
"இதெல்லாம் மேட்டரே இல்லை நந்தினி.. அப்பா அஜந்தாவுக்கும் வாங்கித் தருகிறாரேன்னு நானும் நினைக்க மாட்டேன்.. அம்மாவும் நினைக்க மாட்டாங்க.."
"நிறைகுடங்கள் தளும்பாது ரம்யா.."
"பட்.. நாங்க அப்படி நினைக்கிறோம்ன்னு அத்தை பாட்டியிடம் பொய்யாக கோள் மூட்டிப் போட்டுக் கொடுப்பாங்க.. பாட்டி அம்மாவையும் என்னையும் கண்டிப்பாங்க.."
'எப்படியாப்பட்ட மனுசங்க..' நந்தினிக்கு வெறுப்பாக இருந்தது..
"குறைகுடங்கள் கூத்தாடத்தான் செய்யும் ரம்யா.. பொடித்தனமானவங்களுக்கு அப்படித்தான் தோணும்.."
"அம்மாவும் அண்ணனும் எனக்கு வாங்கிக் கொடுக்கிறதில அஜந்தா பங்குக்கு வர முடியலை.. மத்ததில் பெருந்தன்மையா விட்டுக் கொடுத்துப் போகும் அம்மா பிள்ளைகள் விசயத்தில மட்டும் படு ஸ்டிரிக்ட்டா இருப்பாங்க.. என் பிள்ளைகள்தான் எனக்கு முதலில்ன்னு சொல்லிருவாங்க.. நாத்தனார் பிள்ளைகளை என் பிள்ளைகளா நினைக்க முடியாதுன்னு பாட்டியிடம் நேரடியாகவே சொல்லி விட்டதில் பாட்டி அம்மாவிடம் வம்புக்கு வர மாட்டாங்க.. யு நோ நந்தினி.. அம்மா அப்ஜெக்ட் பண்ணி ஸ்ட்ராங்கா ஒரு விசயத்தில நின்னுட்டாங்கன்னா பாட்டி அம்மாவிடம் மோதாம ஜகா வாங்கிருவாங்க.."
"கெட்டிக்கார பாட்டி.."
"அண்ணனிடம் தாத்தா பாட்டியின் பாச்சா பலிக்காது.."
"யாரோட பாச்சாவும் பலிக்காது ரம்யா.."
'யாரு அவன்..!' மனதின் உணர்வுகளை ரம்யமாலினி அறியாமல் மறைக்க வெகுவாக சிரமப்பட்டாள் நந்தினி..
"அம்மா எனக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுத்தாங்க நந்தினி.. அண்ணன் தன்னை ப்ரூவ் பண்ணி ஷெல்பா எஸ்டாஸிலிஷ் ஆனதும் நான் இன்னும் அதிகமா ஷேஃப் ஆகிட்டேன் நந்தினி.. அது அஜந்தாவை கோபப் படுத்துது.."
"அவளுக்கு யார் நன்றாக இருந்தாலும் பொறுக்காது ரம்யா.. மட்டமான ஜென்மம்.."
"அவளுக்கு நான் சிரித்தால் பிடிக்காது நந்தினி.."
ரம்யமாலினி மெதுவான குரலில் சொன்னாள்.. உன்னிப்பாக கவனித்த நந்தினிக்குத் தூக்கி வாரிப் போட்டது..
"என்னங்க சொல்கிறீங்க..? நீங்க சிரித்தால் அவளுக்கென்ன..?" நம்பமுடியாமல் கேட்டாள்..
"அவளுக்கு என்ன ஆகிறது என்று தெரியாது நந்தினி.. நான் லேசாக சிரித்தால்கூட அவள் பொருமித் தள்ளி விடுவாள்.. உனக்கென்ன.. உன் அண்ணன் கோடிக் கணக்கில் சம்பாதித்துத் தள்ளறான்.. உன் அப்பா ஊதாரித்தனமா குடும்பப் பொறுப்பில்லாம ஊர் சுற்றாம பொறுப்பாய் வொய்ப், பிள்ளைகள்ன்னு தாங்கறார்.. எனக்கு அப்படியான்னு ஏதேதோ பேசி சண்டை போடுவாள்.. இதில் கொடுமை என்னன்னா பாட்டியும் அவ பேச்சுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க.. அஜந்தாவோட மனசில வருத்தம் இருக்கிறப்ப அதை அதிகப் படுத்தறதைப் போல நான் சந்தோசம் கொண்டாடக் கூடாதுன்னு எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்க.. அவங்களுக்குப் பயந்து பயந்து எனக்கு சிரிப்பே மறந்து போயிருந்தது நந்தினி.. நீங்க வந்த பின்னால்தான் பயமில்லாம சிரிக்கிறேன்.. தேங்க்ஸ் நந்தினி.."
நெகிழ்ச்சியுடன் ரம்யமாலினியின் கைகளைப் பிடித்து அழுத்தி மூக்கைச் சுருக்கித் தனது ஆட்சேபத்தைத் தெரியப் படுத்தினாள் நந்தினி..
நந்தினியின் கரங்களை பதிலுக்குப் பிடித்து அழுத்திக் கையோடு கை கோர்த்து தனது நட்பை வெளிப்படுத்தினாள் ரம்யமாலினி.. காலம் காலமாய் பழகிக் கொண்டிருப்பதைப் போன்றதொரு தோழமை உணர்வை இருவரும் உணர்ந்தார்கள்..
மலைப்பாதையின் இறக்கத்தில் சரிந்து இறங்கிய போது..
"ஓடலாமா..?" என்று கேட்டாள் நந்தினி..
"ஓ.." குதூகலமாக தலையை ஆட்டினாள் ரம்ய மாலினி..
சரிந்து இறங்கிய பாதையில் இருவரும் ஓடி ஊடே குறுக்கிட்ட பாலத்தின் கைபிடி சுவரில் சாய்ந்து நின்று மூச்சு வாங்கினார்கள்.. பாலத்தின் அடியே சலசலத்து ஓடிய ஆற்று நீர் ஸ்படிகம் போல தெளிவாக இருந்தது.. அடியில் கூழாங்கற்களையும் மீன்களின் கூட்டத்தையும் ரசித்த நந்தினி..
"கேரளாவில் ஆறுகளுக்கு பஞ்சமில்லை.." என்றாள்.
"ம்ம்ம்.." பெருமையாக தலையை ஆட்டினாள் ரம்யமாலினி..
"இப்பேற்பட்ட அழகான ஊரிலே பிறந்திட்டு இதை ரசித்து அனுபவிக்காம வீட்டில அடைந்து இருக்க உனக்கு எப்படித்தான் மனது வந்ததோ..?"
"எனக்கும் ஊரைச் சுற்றிப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கும்.. மேரேஜ்ன்னு ஒன்று நடந்தால் அஜந்தாவின் கண் பார்வையில் இருந்து தப்பித்து வேறு ஒரு வீட்டிற்குப் போய் விடலாம்தானே.. அப்படியொரு காலம் வரும்போது ஆசை தீரச் சுற்றிப் பார்த்துக்கலாம்ன்னு பேசாமல் இருந்து விடுவேன்.."
"சரியாப் போச்சு போ.. அது உன் அரண்மனை ரம்யா.. அந்த அஜந்தா ஒண்ட வந்தவள்.."
"நீ வேற.. அது அவளோட அரண்மனை போல இல்ல அவ நடந்துக்கிறா.. நீ சொன்னது மட்டும் அவ காதில விழுந்ததுன்னு வை.. உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிட்டுத்தான் வேற வேலையைப் பார்ப்பா.."
"அப்படியா சொல்கிற..? வந்து பார் சண்டைக்குன்னு கூப்பிட்டு விடவா..?"
தலையைச் சரித்துக் கேட்ட நந்தினி அப்போதுதான் அதை உணர்ந்தாள்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -222
எண்ணியிருந்தது ஈடேற -222
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera222.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera222.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy