எண்ணியிருந்தது ஈடேற -238

238 "தடக்.. தடக்.. தடக்.." சீரான தாள லயத்துடன் அவளைச் சீராட்டுவதைப் போன்ற மெலிதான ஆட்டத்துடன் விரைந்து கொண்டிருந்தது ரய...



238

"தடக்.. தடக்.. தடக்.."
சீரான தாள லயத்துடன் அவளைச் சீராட்டுவதைப் போன்ற மெலிதான ஆட்டத்துடன் விரைந்து கொண்டிருந்தது ரயில்.. கடந்து சென்ற பிளாட்பாரத்தில் குதித்து விட மனம் துடித்தது.. அடக்கிக் கொண்டாள்.. புள்ளியாக ரயில்வே ஸ்டேசன் மறைய ஏஸி கம்பார்ட்மெண்டின் உள்ளே செல்ல மனமில்லாமல் கம்பியின் மீது சாய்ந்து நின்று கடந்து செல்லும் மின் கம்பங்களை வெறித்துப் பார்த்தாள்.. மனது கட்டுக்கடங்காமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது.. அவளுக்குத் தெரியும்.. அவளது மனதை அடக்கும் மாயக் கயிறும், அங்குசமும் அந்தக் கம்மாண்டரிடம் மட்டுமே இருக்கிறது என்பது.. அவனைக் கண்டு விட்டால் போதும்.. அலைபாயும் அவளது மனது சமனப் பட்டு விடும்..
சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறாள்.. தோற்றுப் போன மனநிலையுடன் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறாள் என்பதைப் பற்றிய கணக்கீடு எதுவும் இல்லாமல் இலக்கில்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறாள்.
'தஞ்சாவூருக்குப் போகக் கூடாது..'
அதில் மட்டும் அவள் உறுதியாக இருந்தாள்.. மகள் தற்கொலைக்கு முயன்றாலும் பரவாயில்லை.. தான் நிச்சயம் செய்த பெல்ட் மன்னனுக்குத்தான் அவள் கழுத்தை நீட்ட வேண்டும் என்ற பிடிவாதம்தானே அவளது தந்தைக்கு.. மகளுக்காக ஒர்நொடிகூட அவர் யோசிக்க வில்லையே.. பிடிக்காத ஒருவனைப் பிடிக்க வைத்துத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பதுதானே அவரது எண்ணம்.. என் மகளுக்குப் பிடிக்கவில்லை.. நீ ராஜாதி ராஜனாக இருந்தாலும் உனக்குப் பெண் கொடுக்க மாட்டேன் என்று அவர் சொல்லியிருந்தால், ஆஹா.. என் அப்பாவுக்குத்தான் என்மீது எத்தனை பாசம் என்று மகிழ்ந்து போயிருப்பாள்..
'கடைசி வரை என் அப்பா எனக்கு அந்த சந்தோசத்தைக் கொடுக்கலையே..'
கேரளத்தின் குளிர்காற்று எதிர்காற்றாய் மாறி உடலைத் துளைத்ததில் உள்ளே வந்தாள்.. ஏஸியின் இதமான குளிர் மிதமான வெப்பத்துடன் இருந்தது.. சீட்டில் கால் மடக்கிச் சரிந்து ஜன்னல் கண்ணாடியில் முகம் பதித்து வெளியே பார்த்தாள்.. அவளது எதிர்காலம் போல இருள் அவளை மருட்டியது..
"நந்துகூட என்னை ஏமாத்திட்டானே.."
வாய்விட்டு முணுமுணுத்தவளை நிமிர்ந்து பார்த்த எதிர் சீட்டுக்காரனின் விழிகள் அவளை சந்தேகத்துடன் அளந்தன..
'தானாப் பேசிக்கிறதினால இவன் என்னைப் பைத்தியம்ன்னு நினைக்கிறானோ..'
போடா என்று திரும்பி உட்கார்ந்து கொள்ளவும் முடியவில்லை.. அவன் பாட்டுக்கு டி.டி. ஆரிடம் கம்ப்ளெயிண்ட் பண்ணக் கிளம்பி விட்டால் வம்பு வந்து சேர்ந்து விடும்.. வாதாடும் மனநிலையில் நந்தினியில்லை.. சோர்ந்திருந்தாள்..
'பேசறப்ப மைண்டு வாய்ஸா... இல்லை சவுண்டு வாய்ஸான்னு செக் பண்ணிக்கிட்டுப் பேசித் தொலைக்கனும்..'
வாயை இறுக்கி மூடிக் கொண்டு வெளியே வேடிக்கை பார்ப்பவளைப் போலத் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.. எதிர் சீட்டுக்காரன் கையிலிருந்த புத்தகத்தில் ஆழ்ந்து விட்டான்.. அப்பாடி என்று நிம்மதி கொள்ள முடியாமல் பெருமூச்சு வந்தது.. மனதுக்குள் நந்து அவளைத் திட்டித் தீர்த்த நொடிகள் வந்து நின்றன..
"ஒரு தரம் 'பேக்'கா இருந்தா ஓகே.. எப்பப் பார்த்தாலும் பேக்கு மாதிரியே இருப்பேன்னு அடம் பிடிச்சா எப்படிக்கா..?"
"பேசாதேடா நீ.."
"நான் பேசாமல்தான் இருந்தேன்.. நீதான் எனக்குப் போன் போட்டுப் பேசிக்கிட்டு இருக்க.. நினைவிருக்கட்டும்."
"தம்பியாடா நீ..?"
"இல்லையா..? உனக்கு அண்ணனா..? இது கூட நல்லாத்தான் இருக்கு.. எனக்கு லைன் கிளியர்ன்னு சொல்லு.. நாளைக்கே அப்பாகிட்டச் சொல்லி உனக்கு முதல்ல எனக்குக் கல்யாணம் நடந்தாகனும்னு சொல்லனும்.."
"நீ அதிலேயே இரு.. பறக்கா வெட்டி.. வயசுக்குத் தக்கனப் பேசித் தொலைடா.."
"என் வயசுக்கு இப்படித்தான் பேசுவேன்.. பறக்கா வெட்டியாய் இருக்கப்பவே இப்படி.. இன்னும் தியாகச் செம்மலாய் இருந்தேன்னு வைய்யி.. கையில கமண்டலத்தைக் கொடுத்துக் காசி பக்கம் அனுப்பி வைத்திருவாங்க.. நான் எப்பவுமே 'வருமுன் காப்பவன்..' தெரியுமோ நோக்கு..?"
"பல்லைக் கழட்டிருவேன்.. படவா ராஸ்கல்.. நீ என் பக்கம்ன்னு பார்த்தா பெல்ட் மன்னன் பக்கம் கூட்டுச் சேர்ந்திருக்கியா..?"
"கூட்டெல்லாம் எனக்கு ஷீட் ஆகாதுக்கா.. நீயென்ன திடிர்ன்னு போன் பண்ணி இந்தக் குதி குதிக்கிற..? நீதான் சிம்மை மாற்றியிருக்கிற.. நானில்லை.. எனக்குப் போன் பண்ணிப் பேச இத்தனை நாளா..?"
"நடிக்காதேடா.. நான் போன் பண்ணலைன்னா என்ன..? உத்ராவும், கம்மாண்டரும் தினமும் போன் பண்ணிப் பேசியிருப்பாங்கள்ல.. அது எனக்குத் தெரியாதுன்னா நினைக்கிற..?"
"உனக்குத் தெரிஞ்சு போச்சா..? அதுதான் இந்தக் கோபமா..? அதுசரி.. என்ன.. கம்மாண்டர்ன்னு சொல்கிற.. அத்தானுக்கு நிக் நேம் வைச்சிருக்கியா..?"
"அத்தானா..? அந்த அளவுக்கு வந்துட்டியா..?"
"நீ வரலையா..?"
"டேய்ய்.. அதிகமாப் பேசினா முகரையைப் பேர்த்திருவேன்.. துரோகி.. பெல்ட் மன்னன் கையில என்னைப் பிடிச்சுக் கொடுக்கனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இத்தனை நாளாக் காத்திருந்தேன்னு தெரியாமப் போயிருச்சேடா.."
"என்ன நீ.. திரும்பத் திரும்ப நீ 'பேக்கு' ங்கிறதை புரூவ் பண்ணிக்கிட்டு இருக்கிற..?"
"கொலைவெறியில இருக்கேன்.. எரிச்சலைக் கிளப்பாதே.. இந்த ஆள்தான் என்னைப் பெண் கேட்டு வந்தவர்ன்னு தெரிஞ்சிருந்தும் நீயும் உத்ராவும் கூட்டுச் சேர்ந்துக்கிட்டு அதை மறைத்திருக்கீங்க.. உங்க ரெண்டு பேரையும் என்ன செய்தால் தேவலாம்..?"
"எதுவும் செய்ய வேணாம்.. லூஸில விடு.."
"லூஸா..?"
"நீ லூஸேதான்க்கா.. எப்பேற்பட்ட மாப்பிள்ளை உனக்குக் கிடைத்திருக்கிறார்.. அதைக் கொண்டாடத் தெரியாம லூஸாட்டம் பேசிக்கிட்டு இருக்கியே.. கேணத்தனமாவே இருப்பியா.."
"மிதி வாங்கப் போறடா.."
"நீ மிதிக்கிற வரைக்கும் உன் பக்கத்தில நின்னு மாட்டிக்க நானொன்னும் நீயில்லை.. நந்து..! அது என்ன கூட்டுச் சேர்ந்திட்டயா.. கூட்டுச் சேர்ந்திட்டயான்னே ஏலம் போடற..? நான் யாரோடும் கூட்டுச் சேரல.. உனக்கு நல்லதுன்னு என் மனதுக்குப் பட்டதைச் செய்துக்கிட்டு இருக்கேன்.."
"இது எனக்கு நல்லதா..?"
"இல்லைன்னா ஏன் காதலிச்ச..? யாருன்னு தெரியாம காதலிக்கிறப்ப அவர் உனக்கு நல்லவராத் தெரிஞ்சாரு.. இப்ப பக்கா வில்லனாத் தெரிகிறாரா.. உன்கூட ரொம்பக் கஷ்டம்க்கா.."
"அதுக்காக பெல்ட் மன்னன்கூட என்னைக் கூட்டுச் சேர்த்து விடுவியா..? நல்லா வருவேடா நீ.."
"நீ அந்த பெல்ட் மன்னனை விடவே மாட்டியா..? அதுதான் அத்தானுக்கு 'கம்மாண்டர்'ன்னு நிக்நேம் கொடுத்தாச்சே.. அதில நில்லு.. பெல்ட் மன்னனை மறந்திரு.."
"பாவி..! எப்படியெல்லாம் அட்வைஸ் கொடுக்கிற.. மறந்திருன்னு சொன்னா மறந்திர முடியுமாடா..?"
"கிராக்குன்னு சொன்னா மட்டும் கோபம் வந்துருது.. மறக்காம பெல்ட் மன்னனை நினைத்துக்கிட்டே இருக்கப் போறியா..? உனக்கென்ன மறை, கிறை கழண்டு போச்சா..? அருமையான மாப்பிள்ளை கிடைச்சிருக்கார்.. அற்புதமான வாழ்க்கை கிடைக்கப் போகுது.. அதை என்ஜாய் பண்றதை விட்டு விட்டு பெல்ட் மன்னனை மறக்க முடியலைன்னு பேத்திக்கிட்டு இருக்கிற..?"
இவன்கூடப் பேசினால் வேலைக்கு ஆகாது என்று லைனைத் துண்டித்து விட்டு உத்ராவைக் கூப்பிட்டாள்.. அவள் நந்தகுமாருக்கு மேலே இருந்தாள்..
"இப்ப என்னடி ஆகிருச்சு..? ரவிசாருக்கு உன்னைத் தெரியும்.. போட்டோவில் பார்த்திருக்கிறார்.. அவரோட அம்மாவும், தங்கையும் தஞ்சாவூர் வரைக்கும் போயி உன் வீட்டில் அவருக்காக உன்னைப் பெண் கேட்டிருக்காங்க.. இவ்வளவு தானே..?"
"இவ்வளவுதானேவா..? எவ்வளவு ஈஸியாச் சொல்ற உத்ரா.."
"வேற எப்படிச் சொல்லச் சொல்ற..? உனக்கு என்னதாண்டி பிரச்னை..? உன் விருப்பமில்லாம உன் கழுத்தில் தாலியைக் கட்டிட்டாரா..?"
"ஓ..! உனக்கு அது ஒரு குறையா..? அப்படி அவன் செய்யட்டும்ன்னுதானே அவன் பொறுப்பில என்னை ஒப்படைச்ச..?"
"நிச்சயமா இல்லை நந்தினி.. நீ சூசைட் அட்டெம்ப்ட் பண்ணினதும் எனக்கு என்ன செய்கிறதுன்னே தெரியலை.. வினித்திடம் புலம்பினேன்.. அவரோட பிரண்டுக்கு பிரண்டாத்தான் ரவிசார் எங்களுக்கு அறிமுகமானார்.. புத்திசாலியா ஒரு செக்கரட்டரி வேண்டும்ன்னு சொன்னாராம்.. கேரளத்துக்காரங்களா இல்லாம தமிழ்நாடா இருந்தாத் தேவலைன்னும் சொன்னாராம்.. அந்த இடத்தில வினித்தும் இருந்தாராம்.. வினித்துக்கு டக்குன்னு ஐடியா வந்து உன் பிரச்னையைச் சொல்லி உனக்கு உதவ முடியுமான்னு கேட்டிருக்கிறார்.. ரவிசார் ஓகேன்னு சொல்லியிருக்கார்.. வினித்தோட பிரண்ட் ஜெனூன் பெர்சன்.. அவர் கேரண்டி கொடுத்ததினாலதான் உன்னை வயநாட்டுக்கு அனுப்பி வைத்தோம்.. அப்ப இந்த விவரமெல்லாம் எனக்குத் தெரியாது நந்தினி.."
"இப்பத் தெரியுமா..?"
"தெரியும்.. நந்தகுமாரும், ரவிசாரும் போனில் பேசினாங்க... விவரம் சொன்னாங்க... எனக்கே ஆச்சரியமாகிருச்சு நந்தினி.. பாரேன்.. உனக்கு அவர், அவருக்கு நீதான்னு இருக்கிறப்ப யாரால் அதை மாத்த முடியும்..? சொல்லு.."
"என்னால் என் தலைவிதியை மாத்த முடியலைன்னு சொல்லிக் காட்டறியாடி.."
"ஏய்ய்.. ச்சீ.. அடிச்சேன்னா பாரு.. உனக்குன்னு எங்கேயிருந்துடி இப்படியாப்பட்ட யோசனையெல்லாம் வந்து தொலைக்குது..? ரவிசார் உனக்கு ஹஸ்பெண்டாக் கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்கனும் நந்தினி.. கண்டதையும் நினைத்து மனதைப் போட்டு உழப்பி உன் வாழ்க்கையைக் கெடுத்துக்காதே நந்தினி.. அவ்வளவுதான் சொல்வேன்.."
"ஏன்..? அதுக்கும் மேலேயே சொல்லேன்.. நீங்கள்ளாம் ஒன்னாச் சேர்ந்து என்னை ஏமாத்திட்டு எனக்கு அறிவுரை சொல்லனும்.. நான் அதைக் கேட்டுக்கனும்னு ஆகிப் போயிருச்சில்ல..? ஏண்டி நிறுத்திட்ட..? சொல்லு உத்ரா சொல்லு.. நீ சொல்லும் அறிவுரையைக் கேட்கத்தான் நான் ஓடோடி வந்து உனக்குப் போன் பண்ணிக்கிட்டு இருக்கிறேன்.. உன் அறிவுரையென்னும் வெள்ளத்தில நீந்த ஓடோடி வந்திருக்கும் என்னை ஏமாற்றி விடாதே உத்ரா.."
"உன் தஞ்சாவூரு 'லொள்ளு' இருக்கே.. அப்பப்பா.. நீ அவரைக் காதலிக்கிறதானே..?"
"காதலிச்சா..? அவர் செய்ததெல்லாம் சரின்னு ஆகிருமா..?"
"உனக்கு என்னதாண்டி பிராப்ளம்..?"
"என்னை எனக்காக அவர் காதலிக்கலை உத்ரா.. அவரை வேண்டாம்ன்னு சொன்னதில அவரோட ஈகோ பாதிக்கப் பட்டிருக்கு.. என்னை ஜெயிக்கனும்னு காதலிக்கிறதா நடிச்சிருக்கார்.. கடைசியில் அவர் ஜெயிச்சுட்டார்.. நீங்கள்ளாம் அதுக்காக அவருக்கு சப்போர்ட் பண்ணியிருக்கீங்க.. நான்தான் சப்போர்ட் பண்ண ஆளில்லாம தனிச்சு நிற்கிறேன்.. நீ எனக்காக இருக்கிறன்னு நினைத்தேன் உத்ரா.. நீயும் என்னை ஏமாத்திட்டயேடி.."
"உளராம நான் சொல்கிறதைக் கேள் நந்தினி.."
"கேட்டவரைக்கும் போதும்.. பை.."
நந்தினி செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து ஹேண்ட் பேகில் போட்டுக் கொண்டு எழுந்து நின்றாள்.. அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை மனம் அவசரமாகத் திட்டமிட்டது.. அவள் இருப்பது 'யாழ்' ஹோட்டலில்.. ரவிச்சந்திரனுக்குத் தெரியாமல் அறையைக் காலி செய்ய முடியாது.. எனவே பெட்டிகளைத் தவிர்த்தாள்.. ஹேண்ட் பேக்கையும் தவிர்த்தாள்.. அவளுடைய சம்பளப் பணம் என்ற பெயரில் கற்றையாக அவன் கொடுத்திருந்த பணக்கட்டைக் கைக் குட்டையில் சுற்றி எடுத்துக் கொண்டாள்..
'வேலை கிடைக்கும் வரை லேடிஸ் ஹாஸ்டலில் தங்க உதவும்.. செலவுக்குப் பணம் வேண்டுமே..'
வயநாட்டுக்கு வந்திருப்பதால் அவள் இன்னும் வங்கிக் கணக்கை ஆரம்பிக்கவில்லை.. ஏற்கனெவே இருக்கும் வங்கிக் கணக்குக்கு ஏ.டி.எம் கார்டு இருந்தது.. அதில் வரவு, செலவு வைத்துக் கொண்டால் மேகநாதனுக்குத் தெரிந்து விடும் என்பதால் அந்தக் கணக்கை அவள் உபயோகிக்கவில்லை..
'எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கிறது.. எதுவும் தெரியாத கூமுட்டை நான் மட்டும்தான்.. இது தெரியாம பெரிய புத்திசாலி மாதிரி இங்கே தலை மறைவாய் இருக்கிறதா நம்பிக்கிட்டு இருந்திருக்கேன்..'
கசப்பான புன்முறுவலுடன் அறையை விட்டு வெளியே வந்தாள்.. ஹோட்டலின் முன்பக்க தோட்டத்தில் நடைபயின்றபடி வாசல் கேட்டருகே சென்றவள் மெதுவாக நடந்து சாலையை அடைந்தாள்.. பின்னாடி ஓடி வந்த செக்யூரிட்டியிடம்..
"ஜஸ்ட் எ ஸ்மால் வாக்.." என்று சிரித்தாள்..
அவன் தலையாட்டி விட்டுச் சென்று விட இவள் நடையின் வேகத்தைக் கூட்டி நடந்து தெருவின் திருப்பத்தில் திரும்பி ஆட்டோவைப் பிடித்தாள்.. ரயில்வே ஸ்டேசனுக்குப் பறந்து வந்து விட்டாள்..
'கிரேட் எஸ்கேப்..!'
சிலாகிக்கத்தான் முடியவில்லை.. சென்னைக்குச் செல்ல ஏஸி கம்பார்ட்மெண்டில் டிக்கெட் கிடைத்து விட்டது.. பெட்டி, பையென்று எதுவும் இல்லாமல் உடுத்தியிருந்த சுரிதாருடன் அவள் ரயிலில் ஏறி அவளுக்கான இடத்தைக் கண்டு பிடித்து உட்கார்ந்தாள்.. எதிர் சீட்டில் உட்கார்ந்திருந்தவன் வெறுங்கையுடன் வந்தவளை விசித்திரமாகப் பார்த்து வைத்தான்.. அப்போது ஆரம்பித்த விசித்திர பார்வை ரயில் ஆரம்பித்த பின்பும் தொடர்கிறது..
கண்ணாடி ஜன்னலின் மீது சாய்ந்திருந்தவள் அருகில் யாரோ வந்து நிற்கும் உணர்வில் திடுக்கிட்டு ஏறிட்டுப் பார்த்தாள்.. போதி மரத்தடி புத்தன் போல புத்தகமும் கையுமாக உட்கார்ந்திருந்த எதிர்சீட்காரன் கையில் ஒரு கைக்குட்டையுடன் நின்றிருந்தான்.
"வாட் டு யு வான்ட்..?" நந்தினி பதறி எழுந்து கொள்ள முயன்றாள்..
"நீதான்டி வேண்டும்.." அவளை எழுந்திருக்க விடாமல் குனிந்து அவள் முகத்தில் மயக்க மருந்தில் நனைக்கப்பட்டக் கைக்குட்டையை அழுத்தினான்..
"ஹீ ஆர் யு.." மயக்கத்தில் ஆழ்ந்தபடி அவள் குழறினாள்..
"ஹா.. ஹா.. ஓரிஜினல் பெல்ட் மன்னன் நான் தாண்டி.. மக்கு.." மயக்கத்தில் புதைந்து கொண்டிருந்த நந்தினியின் செவிகளில் தெளிவாக அந்த வார்த்தைகள் கேட்டன.

- எட்டாம் பாகத்தில் தொடரும்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -238
எண்ணியிருந்தது ஈடேற -238
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-238.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-238.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy