எண்ணியிருந்தது ஈடேற -237

237 பற்ற வைக்க வேண்டியதை பற்ற வைத்து விட்டு போலி அனுதாபத்துடன் விடை பெற்றுப் போய் விட்டான் அபராஜிதன்.. அலையடிக்கும் சமுத்ரா பீச்சின...


237


பற்ற வைக்க வேண்டியதை பற்ற வைத்து விட்டு போலி அனுதாபத்துடன் விடை பெற்றுப் போய் விட்டான் அபராஜிதன்.. அலையடிக்கும் சமுத்ரா பீச்சின் தனிமையிலே மூழ்கியவளாக அறைக்குத் திரும்பும் எண்ணமேயில்லாமல் அப்படியே உட்கார்ந்து விட்டாள் நந்தினி.. ஆள் நடமாட்டம் இல்லை என்பது அவளை அச்சுறுத்தவே இல்லை.. இடி மேல் இடியாக அவள் கேட்ட கதைகளில் இடிந்து போய் முழங்கால்களில் தலையைக் கவிழ்த்துக் கண்ணீரை உகுத்துக் கொண்டிருந்தாள்.. அவளது தலைமீது ஓர் கரம் படிந்தது.. உடல் தூக்கிப் போட்டாலும் உள்ளுணர்வு அது யார் என்பதைச் சொல்லி விட்டதில் மெதுவாகவே தலையை உயர்த்தினாள்..
"ஏய்ய்.. குடாக்..! நேரமாகிருச்சு.. ரூமுக்குத் திரும்பாம இங்கே உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்கியே.. என்னடி ஆச்சு.. வீட்டு நினைவு வந்து விட்டதா..?"
கனிவாக வினவியபடி அவள் பக்கத்தில் உட்கார்ந்து மடிசாய்த்துக் கொண்டான் ரவிச்சந்திரன்.. அந்தக் கனிவில் அவள் பொங்கி அழுதாள்.. அவன்தான் பெல்ட் மன்னன் என்று அறிந்த பின்பு பழைய நெருக்கத்தைக் காட்ட முடியாமல் மனம் சண்டித்தனம் செய்தது..
"ஏர்லியராவே மீட்டிங் முடிந்து விட்டது.. டீல் ஓகேயாகி காண்ட்ராக்டில் சைன் பண்ணியாச்சு.. வொர்க் ஓவர்ன்னு உன்னோடு டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்ன்னு ரூமுக்கு வந்தா நீயில்லை.. லைட் ஹவுஸ் பீச்சில் தேடிப் பார்த்தேன்.. ஹவா பீச்சு பக்கம் நீ வரமாட்டேன்னு தெரியும்.. இப்பல்லாம் தனிமை விரும்பியா ஆகிக்கிட்டு வர்றியா.. ஸோ.. நீ சமுத்ரா பீச்லதான் இருப்பேன்னு நினைத்தேன்.. நீ இங்கேதான் இருக்க.."
அவன் மடியில் முகம் புதைத்திருந்தவளின் தலையைக் கோதி விட்டபடி அவன் பேசிக் கொண்டேயிருந்தான்.. நிற்காமல் பெருகிக் கொண்டிருந்த கண்ணீரைத் துடைக்க மனமில்லாமல் அப்படியே படுத்திருந்தாள் நந்தினி.. அவனது வலிமையான
விரல்கள் அவளுடைய கண்ணீரைத் துடைத்து விட்டன.. அவளது கன்னத்தில் தட்டிக் கொடுத்து எழுப்பி உட்கார வைத்தான்.
"ம்ப்ச்.. இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி அழுதுகிட்டு இருக்கிற.. எல்லா பிராப்ளமும் சால்வ் ஆகப் போகிற சமயத்தில நீ இப்படி அழலாமா..? அம்மா, அப்பா, ரம்யாவிடம் நம் காதலைப் பற்றிச் சொல்லி விட்டேன்.. தாத்தா, பாட்டி கெஸ் பண்ணிட்டாங்க.. இனி உன் ஃபேமிலிக்கு கன்வே பண்ண வேண்டியதுதான் பாக்கி.. அதை நாங்க பார்த்துக்குவோம்.. ஒன் ஆர் டூ வீக்கில உன்னோட பேரண்ட்ஸீம் தம்பியும் உன்னைத் தஞ்சாவூருக்கு அழைத்துக்கிட்டுப் போக வயநாட்டுக்கு வருவாங்க பாரேன்.."
'இதுதான் பிளானா..?'
நந்தகுமாருக்கும் இது தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போதே மனம் வலித்தது.. பிடிக்காத திருமணத்திலிருந்து தப்பிப் போக அவன் துணை நின்றிருக்கிறான் என்று நினைத்தாளே.. அவளுக்குப் பிடிக்காத திருமணத்தை பிடித்த திருமணமாக மாற்றுவதற்கு அவன் துணை நின்றிருக்கிறான் என்று தெரியாமல் போய் விட்டதே.. உத்ரா கூட நந்தினியிடம் நடித்திருக்கிறாளே.. பெல்ட் மன்னனிடமிருந்து காப்பாற்றி அனுப்பி வைப்பதைப் போல பாவ்லா பண்ணிப் பெல்ட் மன்னனிடமே அனுப்பி வைத்து விட்டாளே.. வினித் அண்ணாவும் இதில் உள் கையா..?
யோசித்து யோசித்து தலை வலித்தது.. அவளைச் சுற்றியிருந்த அனைவர்மீதும் சந்தேகம் வந்தது.. எல்லோரும் அவளை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள் என்று மனம் குமுறினாள்..
"நம்ம மேரேஜை எங்கே வைத்துக்கலாம்..? நீலிமலை வுட்-ஹவுஸில் வைத்துக்கலாமா..? இல்லை.. ஆலப்புழா போட்-ஹவுஸில் வைத்துக்கலாமா..?"
அவையிரண்டிலும் அவனுடன் அவள் கழித்த நாள்களைப் பற்றி விரசமாக பேசியதை மறந்தவனாகப் பேசியவனை வெறித்துப் பார்த்தாள்.. அவளது அந்தப் பார்வையில் குற்ற உணர்வு கொண்டவனாக..
"ஸாரிடி.." என்றான் அவன்..
'ஸாரி..! இந்த ஒற்றை வார்த்தையில் அத்தனை குற்றங்களும் மன்னிக்கப்பட வேண்டுமா..? மன்னிக்கத் தான் முடியுமா..?'
"என் கோபத்தைக் கிளறின.. கோபம் வந்தால் என்ன பேசுகிறேன், என்ன செய்கிறேன்னு எனக்கே தெரியாது.."
"ஓ..! அப்படிக் கோபம் வர்றப்ப எல்லாம் பெல்ட்டை எடுத்து விளாசி மரணப் படுக்கையில் தள்ளி விடுவீங்களோ.. இல்லேன்னா துப்பாக்கியை எடுத்து
ஒரே குண்டில் ஆளைப் போட்டுத் தள்ளிட்டு காமா எதுவும் நடக்காததைப் போல ரொட்டின் வொர்க்கைப் பார்த்துக்கிட்டு இருப்பீங்களோ..?"
குற்றம் சாட்டும் பாவனையுடன் அவள் கேட்ட கேள்விகளில் அவனது புருவங்கள் சுருங்கின..
"இதையெல்லாம் யார் உனக்குச் சொன்னது..? மோகனா..?"
"மோகன் சொல்லிருவான்னுதான் அவனைக் கண்டாலே காத தூரத்துக்குத் தள்ளிப் போய் நின்றுக்கனும்னு ஆர்டர் போட்டு வைத்திருந்தீங்களே.."
"அஜந்தா சொன்னாளா..?"
"ஆக வயநாடு மொத்தத்ததுக்கும் இந்த விவரம் தெரிந்திருக்கு.. கூடவே இருக்கிற கேணச்சி எனக்குத்தான் விவரம் தெரியலை.."
ஆதரவாய் அவளை அணைத்து அமர்ந்திருந்தவன் வேகமாக அவளைத் தள்ளி விட்டான்.. மணற்பரப்பில் சரிந்து விழுந்தவளுக்கு கை கொடுக்காமல் உறுமினான்..
"ஆமாண்டி.. நான் அப்படித்தான் செய்தேன்.. தெரிந்து விட்டதில்லை.. விலகிப் போகனும்னா விலகிப் போய் விடு.."
சம்மடி அடிகளாய் நெஞ்சில் அறைந்த வார்த்தைகளினால் காயம் பட்டவளாக மன ரணத்துடன் துடித்துப் போனாள்.. வேறு என்ன வழியென்று புத்தி கேள்வி கேட்டது.. நான் அப்படித்தான்.. போவதானால் போய் விடு என்று அவனே சொல்லிவிட்டான்.. அவளுக்கு விடுதலை கொடுத்து விட்டான்.. இனி அவள் என்ன செய்ய வேண்டும்..? தஞ்சாவூரிலிருந்து ஓடி வந்தவளுக்கு வயநாடு அடைக்கலம் கொடுத்தது.. இங்கிருந்து எங்கு போவாள்..? தஞ்சாவூருக்கா..?
"கொஞ்ச நாளா பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்.. ஷெர்லெக் ஹோம்ஸ் மாதிரி துப்பறிந்துக்கிட்டு இருக்க.. எதுவா இருந்தாலும் நேரடியாப் பேசனும்.. நேரடியாக் கேட்கனும்.. வேண்டாதவங்க சொல்கிறதையெல்லாம் மனதில் போட்டுக்கிட்டு கேள்வி கேட்டா எனக்குப் பிடிக்காது.. நீ நீயா இல்லை நந்தினி.."
"நீங்க மட்டும் நீங்களா இருக்கீங்களா பாஸ்..?"
"ஏய்ய்.. உனக்கு என்னதான்டி பிரச்னை..? என்னதான் வேணும்..? சொல்லித் தொலையேண்டி.. தன்னந்தனியா சமுத்ரா பீச்சில வந்து உட்கார்ந்து அழுகிற அளவுக்கு என்ன நடந்து விட்டது.. நீ என்ன தெரிந்துக்கிட்ட..? நீ தனிமை விரும்பியில்லை நந்தினி.. உன்னுடைய அடையாளமே கலகலப்புதான்.. அது எங்கேடி போனது..? எங்கே தொலைத்த..?"
"நீங்கதான் தொலைய வைத்துட்டிங்க பாஸ்.."
"நானா..?"
"யெஸ்.. நீங்கதான்.. உங்க மனசைத் தொட்டுச் சொல்லுங்க.. மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸிலதான் என்னை முதன் முதலாப் பார்த்தீங்களா..?"
அவன் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டாள் நந்தினி.. அவனது இமையோரம் சிறு அசைவு தோன்றி மறைந்ததில் இவளுக்குள் ஏதோ நிகழ்ந்தது..
"இல்லை.."
அவன் உண்மையை ஒப்புக் கொண்டதில் மனம் உடைந்தாள் நந்தினி..
"வேற எங்கே பார்த்தீங்க பாஸ்..?"
"போட்டோவில் பார்த்தேன்.. யெஸ்.. உன்னை முதன் முதலா போட்டோவில்தான் பார்த்தேன் நந்தினி.. என் அம்மா இவதான் என் மருமகள்ன்னு சொன்னாங்க.."
"அத்தையும், ரம்யாவும் தஞ்சாவூருக்குப் போயிருந்தாங்களா..?"
"ம்ம்ம்.. தமிழ்நாட்டுக் கோவில்களுக்குப் போகிறப்ப தஞ்சாவூர் கோவிலுக்குப் போயிருந்தாங்க.."
"அங்கே என் அம்மாவை மீட் பண்ணினாங்களா..?"
"ஐ டோன்ட் நோ.. பட்.. உன்.. ஃபேமிலியை மீட் பண்ணினாங்களாம்.."
"என்னை உங்களுக்காகப் பெண் கேட்டாங்களா..?"
சட்டென்று திரும்பி அவளை உற்றுப் பார்த்த ரவிச்சந்திரனின் பார்வையின் கூர்மையில் நந்தினி உதட்டைக் கடித்தாள்.. கேட்கக் கூடாத கேள்வியை அவள் கேட்டு விட்டதைப் போல அல்லவா குற்றம் சாட்டும் பார்வை பார்க்கிறான்..?
இவள் இப்படி நினைக்க.. அவனோ அதே தினுசில்..
"என்னவோ செய்யக் கூடாத ஒன்றை அம்மா செய்து விட்டதைப் போல இல்ல கொஸ்டின் கேட்கிற..?" என்று கேட்டு வைத்தான்..
"பாஸ்.."
"ஏண்டி.. எனக்கென்ன குறைச்சல்..? எனக்காக உன்னைப் பெண் கேட்கக் கூடாதா..?"
"இதை எதுக்காக என்னிடம் மறைத்தீங்க..?"
"எப்படிச் சொல்ல..?" அவன் பெருமூச்சு விட்டான்..
"மேரேஜ் பிடிக்கலைன்னு நீ சூசைட் அட்டெம்ட் வரைக்கும் போயிட்ட.. உன்னிடம் இதையெல்லாம் சொல்லி அழைத்துக் கொண்டு வந்தால் கூட வந்து விடுவியா..? ஸோ.. எனக்காக உன்னைப் பெண் கேட்ட விவரத்தைச் சொல்லாமலே அழைத்து வந்தேன்.. பழகி என்னை உனக்குப் புரிய வைத்தேன்.."
"என்னைத் தோற்கடிச்சுட்டிங்கள்ல.."
"ஏய்ப்ப்.. இதில வெற்றி, தோல்வின்னு எதுவுமே இல்லை நந்தினி.. யோசிச்சுப் பார்த்தா உனக்கே அது புரியும்.. இது நம்ம வாழ்க்கைடி.. வெற்றி கிடைத்தா அது இரண்டு பேருக்கும் சொந்தமானது.. தோற்றுப் போனா இரண்டு பேரும்தான் தோற்றுப் போவோம்.. புரிந்துக்க.."
"மக்கு, தத்தின்னு சொல்லிச் சொல்லியே என்னை மக்காக்கிட்டிங்கள்ல.. தத்தின்னுதானே இத்தனை நாளா இந்த விவரத்தை சொல்லாம மறைத்து வைத்திருந்தீங்க..?"
திரும்பத் திரும்ப அவள் புலம்பியதில் அவன் எரிச்சலாகி விட்டான்.. கோபத்துடன் எழுந்து நின்று..
"இப்ப என்னடி வேணும் உனக்கு..? நான் உண்மையைச் சொல்லாம ஏமாற்றியதற்கு என்னைப் பனிஷ் பண்ணனுமா..? என்னை விட்டு விட்டுப் போகனுமா..? போக நினைத்தால் போய்விடு.. போ.. என் முகத்தில் விழிக்காதே.. நான் பொய்காரனாம்.. உண்மையைச் சொல்லலையாம்.. இவ கண்டு பிடித்து விட்டாளாம்.. போடி போ.. நான் பொய்காரன்தான்.. இனி என் கண் முன்னால் வராதே.." என்று கத்தி விட்டுப் போய் விட்டான்..
எங்கேயாவது போய் விட வேண்டும் என்ற வேகம் வந்தது நந்தினிக்கு.. அப்படியே கடலுக்குள் இறங்கி விடலாமா என்றிருந்தது.. காக்கும் கடலாய் அது அலையடித்து அவளை அமைதிப் படுத்த முயன்றது.. தோற்றுப் போன சோகத்துடன் இற்றுப் போன மனதுடன் கண்ணீர் விட்டபடி இறுகிப் போனவளாக கடலை வெறித்தபடி உட்கார்ந்திருந்தாள்..
"நந்தினி.."
அதட்டலுடன் அவளது முடியை முரட்டுத்தனமாகப் பிடித்து உலுக்கினான் ரவிச்சந்திரன்.. அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது..
'இவன் இன்னும் போகலையா..?'
மண்டியிட்டு மணலில் சரிந்து அவள் முகத்தைத் திருப்பி உறுத்துப் பார்த்தான் அவன்..
"என்னை விட்டுப் போகச் சொன்னேனே.. ஏன் போகாம இங்கேயே உட்கார்ந்திருக்க..?"
பதில் சொல்லாமல் உதட்டைக் கடித்தவளின் உதடுகளில் விரலால் சுண்டி விட்டான்.. வலியுடன் முகம் திருப்பிக் கொண்டவளின் முகத்தை முரட்டுத்தனமாகத் திருப்பி அவளது நாடியைப் பிடித்து விழிகளுடன் விழிகலக்க உன்மத்தம் பிடித்தவனைப் போல முறைத்தான்.. அவளது உயிர் துடித்தது..
"என்னை விட்டுப் போயிருவியாடி..?"
அந்த ஒற்றைக் கேள்வியில் அவள் கதறியழுக ஆரம்பித்தாள்.. அவளது கண்ணீர் முகத்தை மார்போடு சேர்த்தணைத்துக் கொண்டான் அவன்..
"என்னை விட்டுப் போக உன்னால் முடியுமாடி..?"
'அந்த தைரியம்தானே உனக்கு.. நான் உன்னை உயிருக்குயிராய் காதலிக்கிறேங்கிற திமிர்தானே உனக்கு.. உன் மேலிருக்கிற காதலினால் நீ என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வேன்.. எதைச் சொன்னாலும் பொறுத்துக் கொள்வேன்.. உன் காலடியிலேயே விழுந்து கிடப்பேன்ங்கிற தெனாவெட்டுத்தானே உனக்கு..'
"உன்னிடம் உண்மையைச் சொல்லிடனும்னுதான் நினைத்தேன் நந்தினி.. ஏன் சொல்லனும் என்கிற கொஸ்டின் எனக்குள்ளே வந்திருச்சு.. நான் யாராக இருந்தால் என்ன..? உன் மீது எனக்கிருக்கும் காதல் உண்மையானதுதானே.. அதில் பொய்யில்லையே.."
'யாருக்குத் தெரியும்..? உண்மையில்லாத உன்னிடம் இருக்கும் காதல் மட்டும் உண்மையாய் இருக்குமா..?'
வீம்புக்காக நினைத்தாலும் நினைக்கும் போதே அவளுக்கு மனம் பதறியது.. ரவிச்சந்திரனின் காதல் பொய்யாக இருக்குமானால் அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி அவளுக்கு இருக்கிறதா..?
'அந்த நொடியே செத்து விடுவேன்..'
கண்ணீர் உருண்டு திரண்டு கன்னங்களில் உருண்டது.. ஆறுதலாக மண்டியிட்டு அமர்ந்திருந்தவனின் மார்பில் சரிந்து விட மனம் துடித்தது.. அடக்கிக் கொண்டாள்.. அவன் மீதான காதல் அவளை பலவீனப் படுத்தி விடும்.. அது கூடாது.. எவ்வளவுதான் அவன் காரணங்களை அடுக்கினாலும் அவன்தான் பெல்ட் மன்னன் என்பதில் அத்தனை காரணங்களும் அடிபட்டுப் போகின்றனவே..
"டிரெயினில் உன்னைப் பார்த்தப்ப எனக்குள் உண்டான ஈர்ப்பு வேற எந்தப் பெண் மீதும் எனக்கு வந்ததில்லைடி.. நான் யாருன்னு தெரியாம 'ஹீ ஆர் யு மேன்..?'னு நீ சண்டைக்கு வந்ததும், உன்னுடைய பேச்சும், ஆட்டிடூயூடும் என்னை இம்ப்ரெஸ் பண்ணுச்சு.. உன்னுடம் வம்பிழுத்து விளையாட வைத்தது.. யு நோ.. நான் உலகம் முழுவதும் சுற்ற வருகிற பிஸினெஸ் மேன்.. தினமும் டிராவலில்தான் இருப்பேன்.. என்னுடைய அத்தனை டிராவலிலும் என்னால் மறக்க முடியாத டிராவல் எது தெரியுமா..? உன்னுடன் சென்னையிலிருந்து கோழிக்கோடுக்கு மங்களூர் எக்ஸ்பிரஸில் டிராவல் பண்ணினேனே.. அந்த டிhவல்தான்டி.. என் வாழ்நாள் முழுவதும் மனதில் நிலைத்திருக்கப் போகும் தித்திப்பான டிரவால் அது.."
நந்தினிக்குத் துக்கமாக இருந்தது.. அவன் மீதான அவளது மயக்கம் சற்றும் குறையவில்லை.. எந்நாளிலும் குறையப் போவதுமில்லை.. இருந்தாலும் அவளால் முழு மனதாய் அவனுக்குக் கழுத்தை நீட்ட முடியாது.. அவன்தான் பெல்ட் மன்னன் என்பதை மறந்து அவனுடன் குடும்பம் நடத்த முடியாது..
என்ன காரணத்திற்காக தமிழகத்தை விட்டுக் கேரளாவுக்கு அவள் ஓடிவந்தாளோ.. அந்தக் காரணம் கேலிக்கூத்தாகி விட்டதைப் போல உணர்ந்தாள்.. அவள்தான் எவ்வளவு பெரிய ஏமாளி..!
"அதிகமா யோசிக்காதே.. வா.. உன் பேரண்ட்ஸீம், என் பேரண்ட்ஸீம் நம்ம மேரேஜீக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிச்சுட்டாங்க.. இன்னும் கொஞ்ச நாளில லீகலா நீ என் வொய்பாகி விடுவ.. அதுதானே நமக்கு வேண்டும்..?"
நந்தினி ஆமாம் என்று தலையாட்டவில்லை.. கை கொடுத்தவனின் கை பிடித்து சோகையாய் எழுந்தவள் தளர்வாக அவனுடன் நடக்க ஆரம்பித்தாள்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -237
எண்ணியிருந்தது ஈடேற -237
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-237.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-237.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy