எண்ணியிருந்தது ஈடேற -235

235 கருமை நிறம் மேவிய மணற்பரப்பின் மீது தன் போக்கில் நடந்து கொண்டிருந்தாள் நந்தினி.. மனம் ஒரு நிலையாக இல்லாமல் அலையடிக்கும் அலைகடலாய்...


235

கருமை நிறம் மேவிய மணற்பரப்பின் மீது தன் போக்கில் நடந்து கொண்டிருந்தாள் நந்தினி.. மனம் ஒரு நிலையாக இல்லாமல் அலையடிக்கும் அலைகடலாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்து.. ரவிச்சந்திரன் அவளுடன் வரவில்லை.. முக்கியமான பிஸினெஸ் மீட்டிங் என்று 'ஹவா..' பீச்சுக்குச் சென்றிருந்தான்.. நியுஸிலாந்தைச் சேர்ந்த கம்பெனியொன்றின் பிரதிநிதிகள் அங்குதான் தங்கியிருந்தார்கள்.. திருவனந்தபுரத்தின் 'யாழ்' ஹோட்டல் தவிர கோவளத்தின் மூன்று 'பீச்'களிலும் ரவிச்சந்திரனுக்கு ரிசார்ட்டுகள் இருந்தன.. அவற்றில் 'ஹவா' பீச்சிலிருந்த ரிஸார்ட்டைத்தான் நியுசிலாந்தைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுத்தனராம்..
"பிகாஸ்... ஹவா பீச் சூரியக் குளியல் கலாச்சாரத்திற்குப் பெயர் பெற்றது..." என்றான் ரவிச்சந்திரன்..
"சூரியக் குளியல்ன்னா..?" அப்பாவியாய் கேட்டாள் நந்தினி..
ரவிச்சந்திரனுக்குச் சிரிப்பு வந்தது.. குருகுருவென அவளைப் பார்த்தபடி 'ஹவா..' பீச் பக்கம் காரை ஓட்டிக் காட்டினான்.. நீச்சல் உடைகளுடன் கடற்கரை வெயிலில் கால் நீட்டி ஈஸிசேரில் படுத்திருந்த வெளிநாட்டு ஆண், பெண்களைப் பார்த்ததும் நந்தினிக்கு வெட்கமாகி விட்டது.. அவளது முகச் சிகப்பை ரசித்தவன்..
"நீயும் 'சன் பாத்' எடுத்துக்கயேன்.." என்றான்..
"அடி வாங்கப் போறிங்க.." அவனுடனான சண்டையை மறந்து மிரட்டினாள் அவள்..
"ஹேய்.. அவங்களை விட உனக்கு ஸ்விம்மிங் டிரஸ் படு ஷீட்டா இருக்கும்டி.." பார்வையாலேயே அவளது உடல் வளைவுகளை அளவெடுத்தான் ரவிச்சந்திரன்..
'ராஸ்கல்..' உடல் கூச துப்பட்டாவை இழுத்து விட்டுக் கொண்டாள் அவள்..
"ஓ.." உதட்டைச் சுழித்து வளைத்து ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தான் அவன்..
'இவன் சன் பாத் எடுத்தால் எப்படியிருக்கும்..' தறிகெட்டு ஓடியது அவள் மனது..
செக்கச் சிவந்த உடலும்.. ரோமங்கள் அடர்ந்த மார்புமாக உடலை இறுக்கிப் பிடிக்கும் அடர் ஊதா வண்ண டிராயருமாக அவனை நீச்சலுடையில் கற்பனை பண்ணிப் பார்த்தவளுக்கு 'ஜிவ்'வென்று ஆகிப் போனது.. அவன் பெல்ட் மன்னன் என்பதையும் மறந்து..
'இவன் எனக்கே எனக்கா..?' என்று சொக்கிப் போனாள் அந்த சொப்பன சுந்தரி..
"ம்ஹீம்.. நீ குடுத்து வைத்தது அவ்வளவுதான்.. சன் பாத் எடுத்தா அப்படியொரு ரிலீஃபா இருக்கும்.. இதுக்குன்னே நான் 'ஹவா' பீச்சுக்கு வருவேன்.. தெரியுமா..?" என்றான் அவன்..
"என்னது..! நீங்க சன் பாத் எடுப்பீங்களா..?" அரண்டு போனாள் நந்தினி..
"ஊம்.. எனக்கு அது பிடிக்கும்.."
நந்தினியின் பார்வை கடற்கரையைச் சுற்றிச் சூழன்றது.. கோவளத்தின் இரண்டாவது பெரிய பீச்சான 'ஹவா' பீச்சின் கடற்கரை முழுவதும் வெண்மை நிற அழகிகள் நீச்சலுடையுடன் வலம் வந்து கொண்டிருந்தார்கள்..
"எது பிடிக்கும்..?"
அவர்களைப் பார்த்தபடி பல்லைக் கடித்தாள் நந்தினி.. அவளது பார்வை போன திக்கில் பார்த்தவன்..
"உன் புத்தியிருக்கே.." என்று அவளது பின் மண்டையில் தட்டினான்..
"என் புத்திக்கென்னவாம்..? அது நல்லாத்தான் இருக்கு.. உங்க புத்திதான் மேய்ச்சல் புத்தியா இருக்கு.."
"இது கட்டுக்கடங்காத காளைடி.. மேயறதா இருந்தா சொந்த மேய்ச்சல் நிலத்திலதான் மேயும்.."
அவனது பேச்சில் அவளது முகம் குங்குமமானது.. அவன் சரசம் பேச ஆரம்பித்தாலே அவள் முகத்தில் ரத்தம் பாய்ந்து விடுகிறது.. பொல்லாதவன் இவன் என்ற கோபம் வருகிறது.. அவனது பார்வை மேய்ந்த மேயலில் எக்ஸிமோக்கள் போல உடல் முழுவதும் கவசம் போல போர்த்திக் கொள்ள வேண்டும் போல ஆகிப் போனது..
'இப்படிப் பார்க்காதேடா..' முகம் சிவக்க உதட்டைக் கடித்தாள் அவள்..
"ஆஹாஹா.. இந்தக் காளை இதுக்கு முன்னாலே வேற மேய்ச்சல் நிலத்தில மேய்ந்ததே இல்லையாக்கும்.." பேச்சு வாக்கில் சொல்லி விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள்..
'கோபித்துக் கொள்வானோ..' பயத்துடன் விழித்தாள்.
"இல்லேடி.." கோபமில்லாமல் ஆனால் தீவிரமான முகபாவத்துடன் அவன் தலையை அசைத்தான்..
"உன்னைப் பார்த்த பின்னால் நான் வேறு பெண்ணைப் பார்த்ததில்லை.. இதை நம்பறதும் நம்பாததும் உன் விருப்பம்.. நான் என்ன சொல்ல..? பட்.." யோசனையுடன் தலையை ஆட்டியவன் கடலை வெறித்தான்..
"நீ கேட்கலாம்.. இப்போது ராமனாய் இருக்கிறதினால இதுக்கு முன்னால் கிருஷ்ணனாய் இருந்த காலங்கள் இல்லாமல் போயிருமான்னு.. அப்போதும் இப்போதும் நான் ராமனாய்த்தாண்டி இருந்தேன், இருக்கிறேன்.. மனதால் கூட எந்தப் பெண்ணையும் விரும்பினதில்லை.. நான் விரும்பிய, விரும்புகிற முதலும், முடிவுமான பெண் நீ மட்டும்தான்.. புரிந்துக்க.. கிருஷ்ணன் ராதையைக் காதலித்தான்.. ருக்மிணியை மேரேஜ் பண்ணிக்கிட்டான்.. நான் அப்படியில்லடி.. என்னோட ராதையும் நீதான்.. ருக்மிணியும் நீதான்.."
கண்கள் கலங்க நந்தினியும் கடலை வெறித்தாள்.. அவன் சொல்லும் வார்த்தைகள் சத்தியமானவை.. அவனது காதல் ஆத்மார்த்தமானது.. இது எல்லாமே அவளுக்குப் புரிகின்றது.. இதையும் தாண்டி அவன்தான் 'பெல்ட் மன்னன்' என்று அவளுக்குத் தெரிய வந்திருக்கும் ரகசியம் அவளைத் துரத்துகின்றதே.. அவள் என்ன செய்வாள்..?
எதற்கும் கவலைப்படாமல் 'க க போ..' என்று இருந்த பிள்ளை மனது எங்கு போனது என்று ஏங்கினாள் நந்தினி.. இந்த நந்தினி அவளில்லை.. சிட்டுக் குருவியைப் போல விட்டுச் சிறகடிக்க முடியாமல் பாரமாக அவள் மனதில் துயரம் ஏறி அமர்ந்திருந்தது..
அவள் வேறு, அவன் வேறு என்று அவன் நினைக்க வில்லையே.. அவன் மனதை அழுத்திக் கொண்டிருந்த எண்ணங்களை அவளுடன் பகிர்ந்து கொண்டானே..
"தனபாலனை நான் வேண்டாம்ன்னு ரிஜக்ட் பண்ணுகிறதுக்கு இதுதான் ரீசன் நந்தினி.. தனபாலன் கிருஷ்ணன் கேரக்டர்டி.. காலேஜில் படிக்கும் போதே வருடத்திற்கு நான்கு பேரை சின்சியராக் காதலிப்பான்.. இரண்டு மூன்று மாதங்களிலேயே காதல் 'பிரேக்-அப்' ஆகிவிட்டதுன்னு அடுத்த காதலுக்குப் போய் விடுவான்.. காதலுக்கு பிரேக் அப் சொல்கிறவன் கல்யாணத்துக்கு டைவர்ஸ் சொல்ல எவ்வளவு நேரமாகும்..? காதலோட வேல்யூ தெரியாதவனுக்கு கல்யாணத்தோட வேல்யூவும், ஃபேமிலி வேல்யூவும் தெரிந்து விடுமா..? ரம்யா தனபாலனை தனபாலனுக்காக விரும்பலாம்.. பட், அவன் ரம்யாவை ரம்யாவுக்காக விரும்பலை.. என் தங்கைங்கிற அவளோட ஐடெண்டிக்காக விரும்புகிறான்.. ரம்யாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா கேரளத்திலயும், பிஸினெஸ் வெர்ல்டிலயும் அவனோட இமேஜீம் மதிப்பும் பலமடங்கு இன்கிரிஸாகும்.. அதுதான் அவனுடைய எண்ணம்.. யோசித்துப் பார்.. என்னுடைய தங்கை என்பது மட்டுமே ரயம்மாலினியின் அடையாளமா..?"
"இல்லவே இல்லை.." உடனடியாக மறுத்தாள் நந்தினி..
"தட்ஸ் குட்.. ரம்யமாலினி ஃசாப்ட்டானவ.. ஷி இஸ் ஸோ குட்.. யாருக்கும் கெடுதல் நினைக்காத நைஸ் பெர்சன்.. அவளோட அருமை தெரிந்தவனிடம் தான் அவளை ஒப்படைப்பேன்.. தனபாலனைப் போன்ற செல்பிஷ் மேனுக்கு ஓர்நாளும் அவளை மேரேஜ் பண்ணிக் கொடுக்க மாட்டேன்.."
"பட்.. ரம்யா வேறு ஒன்றைச் சொல்கிறாளே.."
"என்னவாம்..?"
"தரங்கிணியின் குடும்பம் மட்டும்தான் அஜந்தாவின் குடும்பத்தை எதிர்த்து நிற்க முடியுமாம்.."
"அப்படின்னா இவங்க எப்பேற்பட்ட கிரிமினல்ஸா இருப்பாங்கன்னு நினைத்துப் பாரு.."
ரவிச்சந்திரன் சுட்டிக் காட்டிய கோணத்தில் 'ஆமாம்தானே..' என்று தோன்றியது நந்தினிக்கு..
"அப்படியிருந்தாத்தான் அபராஜிதனை மிரட்டி வைக்க முடியும்ன்னு அவ நினைக்கிறாளே.."
"ரப்பிஷ்..! அபராஜிதன் என்ன அவ்வளவு பெரிய தாதாவா..? அவனை இல்லாமல் பண்ணிவிட எனக்கு ஒரு செகண்ட் ஆகாது.. அப்பாவுக்காக பார்க்கிறேன்.. என் அத்தையின் மகனாகி விட்டான்.. பிழைத்துப் போகட்டும் என்று விட்டு வைத்திருக்கிறேன்.. இதற்காகவெல்லாம் தனபாலனை சூஸ் பண்ணக் கூடாது.."
ரம்யமாலினியின் மனதில் தனபாலனின் மீது எண்ணம் இருக்கிறதே என்ற கலக்கம் நந்தினியின் மனதை விட்டு அகலவில்லை.. ரவிச்சந்திரன் ஓர் முடிவெடுத்து விட்டால் அதிலிருந்து மாறவே மாட்டான் என்பது அவளது மனதைப் போட்டு அரித்தது.. ரம்யாவின் மனம் போல வாழ்க்கை கிடைக்க என்ன வழி என்ற சிந்தனை வேறு நந்தினியின் மனதை குடைந்து கொண்டிருந்தது..
ரவிச்சந்திரன் 'ஹவா' பீச்சுக்குக் கிளம்பிப் போய் விட்டான்..
"ரூமுக்குள்ளேயே அடைந்து கிடக்காமல் பீச்சோரமா நடந்துவிட்டு வா.. உன் முகமே வாடியிருக்கு.. வெளியில் சுற்றி விட்டு வந்தா ரீலிஃபா இருக்கும்.. இன்றைக்கு முழுவதும் நான் பிஸி.. ஹெவி வொர்க் காத்திருக்கு.. உனக்காக கார் அரேன்ஜ் பண்ணியிருக்கிறேன்.. ஓகேவா..?"
கிளம்புவதற்கு முன் அவன் காட்டிய கரிசனத்தில் அவளது மனம் நெகிழ்ந்து போனது..
"நானும் கூட வரவா..?" அவனது செக்கரட்டரியாக அவளும் பதிலுக்கு கரிசனம் காட்டினாள்..
"எதுக்கு..? சன் பாத் எடுத்துக்கிட்டு இருக்கிற நியுசிலாந்துக்காரங்க.. அதை மறந்துட்டு உன்னை சைட் அடிக்க ஆரம்பிச்சுருவாங்க.. எனக்குத் தாங்காது.. உங்க டீலிங்கே வேண்டாம்ன்னு காண்ட்ராக்டைக் கேன்சல் பண்ணிட்டு நெக்ஸ்ட் பிளைட்டில அவங்களை நியுசிலாந்துக்கு பேக்-அப் பண்ணிருவேன்.. அந்தக் கலவரமெல்லாம் நடக்காம இருக்கனுமுன்னா நீ 'ஹவா' பீச் பக்கம் கால் வைத்து விடாதே..."
அவனது பேச்சில் 'ஆமாம்டா.. நான் பெரிய உலகப் பேரழகி..' என்ற சிரிப்பு வந்தது.. அவன் வாயால் அவளை உயர்த்திப் பேசியது இனிப்பாக இருந்தது.. அவன்தான் பெல்ட் மன்னன் என்ற சஞ்சலத்தில் இனிப்பின் ஊடே கசப்பு பரவியது.. மனதை அழுத்திய சஞ்சலத்தை தாங்க மாட்டாமல் அவள் கடற்கரைப் பக்கம் சுற்றிப் பார்க்கத் தனித்துப் புறப்பட்டு விட்டாள்..
கோவளத்தின் பசுமை கருத்தைக் கவரவில்லை.. பசுந்தென்னந்தோப்புகளின் ஓரமாக பரந்திருந்த கடற்கரையின் மணற்பரப்பு சற்று கருமை கலந்ததாக காணப்பட்டது..
"மோனசைட்டும், லைம்னைட்டும் இந்த மணலில் கலந்திருக்குடி.." என்று ரவிச்சந்திரன் சொல்லியிருந்தான்.
ஒருபுறம் பசுமையான தென்னந்தோப்பு.. மறுபுறம் வெண்மையான அலைகளின் நுரைகளோடு கூடிய நீலக்கடலின் சத்தம் என்று நந்தினியின் கவலைகளை மறக்க வைக்கும் இயற்கையின் அழகு அவளை வசீகரித்துக் கொண்டிருந்தது.. பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அந்த இயற்கையழகில் மனதை பறி கொடுத்த நந்தினி கவலையை மறந்து கோவளத்துக் கடற்கரையின் அழகை ரசிக்க ஆரம்பித்து விட்டாள்.. கோவளத்துக் கடலின் அழகு விவரிக்க முடியாத பரவசத்தை அவள் மனதில் விதைத்தது..
கோவளத்தில் மூன்று பீச்சுகள் இருந்தன.. சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் என்று அற்புதத் தரிசனங்களை அதிகாலையிலும், பின்மாலையிலும் அள்ளி வழங்கின.. மூன்று கடற்கரைகளும் 17கி.மீ நீளத்துக்கு கடலை யொட்டிக் காணப்பட்டன.. கடினமான பாறை அமைப்புகள் இம்மூன்று கடற்கரைகளையும் பிரிப்பது போல அமைந்திருந்தன..
முதன் முதலில் அந்தப் பாறைகளைப் பார்த்த போது..
"வாவ்.." என்று வாய் விட்டு ரசித்த நந்தினி அந்தப் பாறைகளின் அழகில் ஈர்க்கப் பட்டவளாக கால் வைத்துத் தாவ முயன்றாள்.. சரேல் என அவை வழுக்கி விட்டதில் சரிந்து விழப் போனவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்ட ரவிச்சந்திரன்..
"இதெல்லாம் வழுக்குப் பாறைகள்டி.. கவனமா நடக்கனும்.. இல்லேன்னா வழுக்கி விட்டு விடும்.." என்று சிரித்தான்..
'நீ ஏண்டா பெல்ட் மன்னனா இருந்து தொலைத்த..?' மனதுக்குள் மருகினாள் நந்தினி..
அவன் அருகில் இல்லாத அந்தப் பொழுதிலும் அவனைப்பற்றிய எண்ணங்களே அவள் மனதை வியாபித்திருந்தன.. அண்ணாந்து பார்த்தாள்.. 'குரும்கல்' என்ற பாறையின்மீது 35மீட்டர் உயரத்தில் அமைந்திருந்த 'லைட் ஹவுஸ்' அவளது பார்வையில் பட்டது.. அவள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த பீச்சிற்கு 'லைட் ஹவுஸ் பீச்..' என்றுதான் பெயராம்.. உயரமான லைட் ஹவுஸ் இருக்கும் பீச் என்பதால் அந்தப் பெயர் வைக்கப் பட்டிருக்கிறதாம்.. அருகில் நடந்து சென்ற சுற்றுலாப் பயணிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டு சென்றார்கள்.
கோவளத்தின் மூன்று கடற்கரைகளில் லைட் ஹவுஸ் பீச்தான் பெரியது என்று ரவிச்சந்திரன் சொல்லியிருந்தான்.. அடுத்த பெரிய பீச் 'ஹவா பீச்..' மூன்றாவது பீச்.. 'சமுத்ரா பீச்..'
'சமுத்ரா பீச்..' மிக எளிமையான பீச்.. தனிமையானதும் கூட.. மனதின் பாரம் குறைய தனிமை வேண்டி அங்கே சற்று நேரம் அமர்ந்திருக்க விரும்பிய நந்தினி கடற்கரை மணலில் உட்கார்ந்து கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
"ஹலோ.."
பழக்கப்பட்ட குரல் என்று திரும்பிப் பார்த்தால் அங்கே அபராஜிதன் நின்று கொண்டிருந்தான்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -235
எண்ணியிருந்தது ஈடேற -235
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-235.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-235.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy