எண்ணியிருந்தது ஈடேற -234

234 "வாட் ' ஸ் யுவர் பிராப்ளம் நந்தினி.. ?" முகத்தோடு முகம் வைத்துக் கேட்டவனிடம் வெறுப்பைப் பொழிய முடியவில்லை.. அசிங...

234


"வாட்'ஸ் யுவர் பிராப்ளம் நந்தினி..?"
முகத்தோடு முகம் வைத்துக் கேட்டவனிடம் வெறுப்பைப் பொழிய முடியவில்லை.. அசிங்கம் பிடித்தவன் என்று ஒதுங்க முடியவில்லை.. அவன் பச்சை பச்சையாகக் கேட்ட அசிங்கம் பிடித்த கேள்விகளுக்காக கோபப் பட முடியவில்லை.. உன் முகத்தில் விழிக்கப் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியவில்லை..
இயலாமையுடன் தோற்றுப் போனவளாக பொங்கி அழுதாள் நந்தினி.. அவன் பதறிப் போனான்..
"ஹேய்.. மக்கு.. நான் கோபத்தில் பேசிட்டேண்டி.. நீயே சொல்லு.. உன்மீது உயிரையே வைத்திருக்கிறேன்.. என்னைப் பார்த்து நீ ஏமாற்றுக்காரன்னு சொல்லலாமா..? அதனால்தான் அப்படியெல்லாம் பேசிட்டேன்.. இதுக்குப் போய் இப்படி அழுகறியே.. தத்தி, தத்தி.."
"அதைத்தான் புரூவ் பண்ணிட்டிங்களே.."
"எதை..?"
"நான் மக்கு, தத்திங்கிறதை.."
"ஹா.. ஹா.. நீ மக்கு, தத்திதாண்டி.. வாயால் பேசினதுக்கே இந்த அழுகை அழுகறியே.. உன்னை மேரேஜ் பண்ணிய பின்னாலே இத்தனையையும் ஆக்சன்ல காண்பிப்பேனே.. அப்ப என்னடி செய்வ..?"
"பாஸ்.."
நந்தினியின் முகம் ரத்தமென சிவந்தது.. அதை ரசித்துப் பார்த்தவனின் மேய்ச்சல் பார்வையில் அவளது உடல் முழுவதும் கூசியது..
'இவனை வெறுக்க வேண்டுமே..' அவளது மனம் பதறியது..
"ஹேய்.. குடாக்..!" காதோரமாக கிசுகிசுத்தான்..
'புதுசு புதுசா பெயரைச் சொல்வான்..' அவளது மனம் சிணுங்கியது.
"யாராவது ஏதாவது சொன்னாங்களா..?"
'வாயைப் பிடுங்கப் பார்க்கிறானா..? ஆமாம்டா.. உன் அத்தை மகள்தான் உண்மையைச் சொன்னாள்ன்னு சொன்னா என்ன செய்வான்..? அவளை வீட்டை விட்டுத் துரத்தி விடுவானா..?'
அஜந்தா அந்த அரண்மனையை விட்டுப் போவதில் நந்தினிக்கு யாதொரு ஆட்சேபமுமில்லை.. போய்த் தொலையட்டும்.. ரம்யமாலினி நிம்மதியாக இருப்பாள் என்றுதான் நினைப்பாள்.. ஆனால் நந்தினியிடம் ரவிச்சந்திரன்தான் பெல்ட் மன்னன் என்ற உண்மையைச் சொன்னதற்காக அவள் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டால் என்றால் நந்தினியால் தாங்க முடியாது.. தன்னால்தானே என்ற குற்ற உணர்வினால் துடித்துப் போவாள்..
நந்தினியின் நல்வாழ்வைப் பற்றிய அக்கறையினால் ஒன்றும் அஜந்தா ரவிச்சந்திரனைக் காட்டிக் கொடுத்து விடவில்லை என்பதை அவள் நன்றாகவே அறிவாள்.. நந்தினியும் ரவிச்சந்திரனும் திருமணம் செய்து கொள்வதை அஜந்தா அட்சதை தூவி வாழ்த்தி வரவேற்க மாட்டாள்.. அதைக் குலைக்க அனைத்து வேலைகளையும் செய்வாள் என்பதும் அவளுக்குத் தெரியும்..
அஜந்தாவின் சுயநலத்துக்காகவே அவள் ரவிச்சந்திரனைக் காட்டிக் கொடுத்தாலும் உண்மை உண்மைதானே.. ரவிச்சந்திரன் தான்தான் பெல்ட் மன்னன் என்பதை மறைத்து நந்தினியிடம் அறிமுகமில்லாதவன் போல நடித்துக் காதலைச் சொன்னது தவறுதானே.. ரவிச்சந்திரனைப் போன்ற தீரன் தான் இன்னார் என்பதை நெஞ்சை நிமிர்த்திச் சொல்லி விட்டு அதற்குப் பின்னால் காதலை முன்னிருத்தியிருக்க வேண்டாமா..? யார் இதைச் செய்திருந்தாலும் அவளால் மன்னித்து மறந்திருக்க முடியும்.. ரவிச்சந்திரன் செய்து விட்டான் என்பதைத்தான் மன்னிக்க முடியவில்லை..
'ரவியா இதைச் செய்தான்..?'
இந்தக் கேள்விதான் அவள் மனதை நெருஞ்சி முள்ளாய் நெருடிக் கொண்டிருந்தது.. எதற்கும் அஞ்சாத அஞ்சா நெஞ்சனா அவளிடம் பொய்யுரைத்து தான் இன்னார் என்பதை மறைத்துக் கபட நாடகம் ஆடினான்..?
"தரங்கிணி உன் மனதைக் குழப்பி விட்டாளா..?"
அவன் அஜந்தாவைக் கேட்கவில்லை என்பதில் அவளுக்கு ஆச்சரியம் வந்தது.. தரங்கிணிக்கு ரவிச்சந்திரன் தான் நந்தினிக்காக நிச்சயிக்கப்பட்ட பெல்ட் மன்னன்
என்று தெரிந்திருக்காது என்றே அவள் நினைத்தாள்.. தெரிந்திருந்தால் அதைத்தான் முதலில் சொல்லியிருப்பாள்... ரம்யமாலினியின் மனதில் தனபாலனின் மீதான சாப்ட் கார்னர் இருக்கிறது என்பதை அடுத்ததாகத்தான் சொல்லியிருப்பாள்..
"அவ என்னதாண்டி சொன்னா..?"
"அவ சொன்னதை உங்களிடம் ஏற்கனெவே சொல்லியாச்சு.."
"என்ன..? ரம்யா மனசில அந்த தனபாலன் மேலே ஒரு சாப்ட் கார்னர் இருக்குன்னு ஏதோ சொன்னியே.. அதுவா..? ம்ம்ம்..? அதுக்கா என்னுடன் சண்டை போட்டுக்கிட்டு இருக்கிற..?"
ஒருநொடி அனைத்தையும் தூக்கிப் போட்டு விட்டு அவனிடம் அடைக்கலமாகிவிட வேண்டும் போல இருந்தது... அப்படித்தானே இருக்கிறாள்... அவள் அப்படி இருப்பதாகத்தானே அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான்.. அவள் மனதில் புகுந்திருக்கும் சந்தேகப் பேயைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும்..
'ஊஹீம்.. இது முடியாது..'
அவனது அருகாமையில் இருந்தால் எதிர்க்க முடியாது என்று தோன்ற அவள் விலகி நடக்க யத்தனித்தாள்.. அவனது இரும்புக் கரம் அவளைப் பிடித்து இழுத்து நிறுத்தியது..
"நில்லுடி.."
அவள் மனதில் 'நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும்..?' என்ற பாடல் எதிரொலித்தது.. கட்டுக்கடங்காத மனம் அவனது ஒற்றைச் சொல்லில் நின்று விடுமா..?
என்ன ஒரு ஆச்சரியம்.. அலையடித்த அவளது மனது அமைதியானது.. கட்டுக்கடங்காத மனது அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நின்றது.. தன்னிச்சையாய் அவளது கால்கள் தேங்கி நின்றன.. அவனது பார்வை அவள் மனதைக் கட்டும் கயிறானது விந்தையிலும் விந்தை.. மனதுக்குத் தளை போட முடியுமா..? இவன் போடுகிறானே..
"உன்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன் நந்தினி.. என்னை விட்டு விலகனும்னு நினைக்காதே..
அது நடக்காது.. நான் அனுமதித்தால்தான் உண்டு.. அதுவும் நடக்காது.."
'எவ்வளவு தெனாவெட்டாப் பேசறான்..' நந்தினியின் ரத்தம் கொதித்தது..
'இதுக்கும் மேலே என்ன வேண்டும்..? இவன் வேண்டாம்ன்னு நான் சொல்லக் கூடாதாம்.. அது நடக்காதாம்.. யாருன்னு சொல்லாம வயநாட்டுக்கு கடத்திக்கிட்டு வந்திருக்கிறானில்ல.. அந்த ஆணவம்.. இவனக் காதலிக்க வைத்துட்டானில்ல.. அந்தத் திமிர்..'
"உன் மனதில என்ன சதியாலோசனை ஓடுது..?"
"சதியெல்லாம் உங்களுக்குத்தான் கை வந்த கலையாச்சே.. நான் 'தத்தி' பாஸ்.. மக்கு.. எனக்கு புத்திசாலித்தனம் பத்தாது பாஸ்.."
"ஹா.. ஹா.. இன்றைக்கு என்னடி.. எல்லாத்தையும் ரொம்பப் பெருமையா ஒப்புக்கிற..?"
"தோற்றுவிட்டவ ஒப்புக்கிட்டுத்தானே ஆகணும்..?" வறண்ட குரலில் சொன்னாள் நந்தினி.. அவளது குரல் வறட்சியில் அவளை உற்றுப் பார்த்தவன்.. தலையை யோசனையாய் ஆட்டி விட்டு..
"ஊஹீம்.. உன்னிடம் ஏதோ சரியில்லை நந்தினி.. நீ பொடி வைத்துப் பேசுகிறதைப் போலவே இருக்கு.." என்றான்.
"தத்திக்கு பொடி வைத்துப் பேசத் தெரியுமா..?"
"நீ தத்தியா..?"
"அப்படித்தானே பாஸ் நீங்க சொன்னீங்க..?"
"அடித்தேன்னா பாரு.." கையை ஓங்கினான் ரவிச்சந்திரன்..
அனிச்சையாக நந்தினி தலையைச் சரித்துப் பின் வாங்கியதில் அவனது முகம் மென்மையானது.
"உன்னைப் போய் அடிப்பேனாடி..?" அணைத்துக் கொண்டான்..
"அடித்ததே இல்லையா..?" அவள் விலக முயன்றாள்..
"அதெல்லாம் என் மனதை நீ புரிந்துக்கலை என்கிற கோபத்தில அடித்தது.. இப்ப அப்படியில்லையே.."
"இப்பவும் அப்படித்தான் பாஸ்.. உங்களைப் புரிந்துக்க முடியாமல்தான் தத்தியா நிற்கிறேன்.."
நந்தினியின் தொண்டை கமறியது.. அவளது முகத்தை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்து முகம் பார்த்தான் ரவிச்சந்திரன்.. அவனது இரும்புக் கைகளின் இறுக்கத்தில் அவளது கன்னத்தின் தசை வலித்தது.. முகம் கன்ற அவனது கைகளின் மீது அவளது கைகள் படிந்தன..
"நான் தத்தின்னு சொன்னதுக்கா இந்த அளவுக்கு அப்செக்ட் ஆகிற..?"
"தத்தியை தத்தின்னு சொன்னா ஒரு தப்புமில்ல பாஸ்.."
"உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்டி.."
நந்தினி உடைந்தாள்.. அவன் கோபத்தைக் காட்டினால் எதிர்த்து நிற்கலாம்.. பேராடலாம்.. காதலை முன்னிருத்தி நிற்கிறானே.. மனம் முழுவதும் அவன் மீதான காதலை சுமந்து கொண்டு நிற்பவளால் அவனது குற்றத்தைச் சுட்டிக்காட்டிச் சண்டை போட முடிய வில்லையே..
"வேண்டாம்.. வேண்டாம்.. சொன்னால் கேட்கனும்.."
அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு தலையைத் தடவிக் கொடுத்துச் சமாதானப் படுத்தினான் ரவிச்சந்திரன்..
"உன் மனது எதனாலோ அமைதியில்லாம இருக்குது.. தரங்கிணி பேசினதில நீ கலங்கியிருக்கிறன்னு நினைக்கிறேன்.. ரம்யா மனதில தனபாலன் மேலே சாப்ட் கார்னர் இருக்குன்னு அவ சொல்லியிருப்பான்னு கெஸ் பண்றேன்.. தரங்கிணியை நான் மேரேஜ் பண்ணிக்கலைன்னா ரம்யாவை தனபாலன் மேரேஜ் பண்ணிக்க மாட்டான்னு பயமுறுத்தியிருப்பா.. நீயும் அதைக் கேட்டுவிட்டு உன்னாலே ரம்யாவுக்கு பிடித்த மாப்பிள்ளை கிடைக்காமல் போய் விடுவானோன்னு அழுதுகிட்டு இருக்கிற.. ஆம் ஐ கரெக்ட்..?"
'இதுவும் கரெக்ட்தானே..' நந்தினி தேம்பியவாறு இருந்தாள்..
"முட்டாளாடி நீ..?"
'அதை உன் திருவாயால் எத்தனை தரம்தான் சொல்லுவ..? முட்டாளா இருக்கப் போய்த்தான் பெல்ட் மன்னனிடமிருந்து தப்பித்து விட்டேன்னு மங்களூர் எக்ஸ்ப்பிரஸில் ஏறி பெல்ட் மன்னனிடமே மாட்டியிருக் கிறேன்..'
"தரங்கிணியின் அண்ணன் எப்படியிருப்பான்..? தரங்கிணியைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு செல்பிஷ் மேனாகத்தானே இருப்பான்..? உன் தங்கையையும் குடும்பத்தையும் தூக்கியெறிந்து விட்டு வா.. உனக்கு என் தங்கையை மேரேஜ் பண்ணித் தருகிறேன்னு நான் ஒரு வார்த்தை சொன்னால் போதும்.. அடுத்த செகண்டே அவன் தரங்கிணியையும் அவனைப் பெத்தவங்களையும் தூக்கிக் கடாசிட்டு வந்து விடுவான்.. அவன் குடும்பம் அவனுக்கும் மேலே இருக்கும்.. உங்கள் வீட்டில் சம்பந்தம் பண்ண உங்கள் மகள் தரங்கிணிதான் இடைஞ்சலாக இருக்கிறாள்ன்னு நேரடியாகக் கூட இல்லை.. நான் மறைமுகமாகச் சொன்னாலே மகளை காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சி உடனடியாக மாப்பிள்ளை பார்த்து மேரேஜ் பண்ணி வைத்து அனுப்பி விடுவார்கள்.. தனபாலனுக்கும் அவனைப் பெற்றவர்களுக்கும் தேவையானது ஒன்றே ஒன்றுதான்.. தனபாலன் என் தங்கையின் கணவன் என்ற பட்டம்.. அந்த ஒரு அடையாளம் அவனை உச்சத்திற்கு கொண்டு போய் நிறுத்தி விடும்.. அதற்காக அவனும் அவனைப் பெற்றவர்களும் தரங்கிணியை உதறித்தள்ளத் தயங்கவே மாட்டார்கள்.. அப்படிப்பட்ட சுயநலம் பிடித்த ஃபேமிலி அது.."
"நிஜமாவா..?"
அவன் 'பெல்ட் மன்னன்' என்பதை மறந்து.. தான் அவனிடம் தோற்றுப் போனோம் என்பதையும் மறந்து ரம்யமாலினியின் மனதிலிருக்கும் எண்ணம் தடையின்றி நிறைவேறி விட வாய்ப்புள்ளது என்பதில் ஆவலாகி அண்ணாந்து அவன் முகம் பார்த்து வினவினாள் நந்தினி..
"இப்பத்தான் நீ என் நந்தினியா இருக்கிறடி.."
நிம்மதியுடன் குனிந்து அவளது இமைகளில் முத்தமிட்டான் ரவிச்சந்திரன்.. நந்தினியின் மனம் வலித்தது.. இப்போதும் அவள் அவனுடைய நந்தினியாக இல்லை.. தற்காலிகமாக அவன் பெல்ட் மன்னன் என்ற எதிர்பபை மறந்திருக்கிறாள் என்பதை அவன் அறிவானா..?
"தனபாலனுக்கும் ரம்யாவுக்கும் மேரேஜை பிக்ஸ் பண்ணி நடத்த எனக்கு தரங்கிணி ஒரு தடையாக இல்லை.. தனபாலனுக்கும் அவளுடைய பேரண்ட்ஸீக்கும் இவள் நடத்துகிற டிராமாவைப் பத்தித் தெரிய வந்தால் இவளை உண்டு இல்லைன்னு ஆக்கிருவாங்க.. உனக்கு அதெல்லாம் தெரியாதுன்னு சும்மா மிரட்டிப் பார்க்கிறா.. பயப்படாதே.."
"அப்படின்னா ரம்யாவை தனபாலனுக்கு மேரேஜ் பண்ணிக் கொடுத்துருவீங்கதானே..?" ஆவலுடன் கேட்டாள் நந்தினி..
அவளது ஆவலில் ரவிச்சந்திரனின் மனம் மிருதுவானது..
'இவளுக்குத்தான் என் தங்கையின் மீது எவ்வளவு பிரியம்..!' என்று நெகிழ்ந்தான்..
அதனால்தானே அவள் அவன் மனதுக்குப் பிடித்தவளாக மாறினாள்.. இவளை நீ திருமணம் செய்து கொண்டால் நான் சந்தோசப் படுவேன் ரவி என்று என்றைக்கு வீணா நந்தினியின் போட்டோவைக் காட்டிச் சொன்னாளோ.. அன்றைக்கு அவன் மனதில் அரியாசனம் போட்டு அமர்ந்து விட்டவள் அல்லவா அவள்..!
நந்தினி வீணா தேர்ந்தெடுத்த மருமகள்... அதனாலேயே ரம்யமாலினிக்கு நந்தினியைப் பிடித்திருந்தது..
"போட்டோவில் கூட என்னமா துருதுருன்னு இருக்காங்க பாருண்ணா.. இவங்க சிரிக்கிறப்ப கண்களும் சேர்ந்து சிரிக்கிறதைப் போலவே இருக்கில்ல.. இவங்க சிரிப்பு எனக்குப் பிடித்திருக்கு அண்ணா.." என்று நந்தினியின் அடையாளமான அந்த மலர்ந்த சிரிப்பை அவனுக்கு அடையாளம் காட்டியவள் ரம்யமாலினி..
எது அரிதோ அதுதானே மனித ஜீவன்களுக்கு மிகவும் பிடிக்கும்..?
ரம்யமாலினிக்கு மனம் விட்டுச் சிரிக்கும் சிரிப்பு அரிதானதாக இருந்தது.. வீணாவுக்கு வயநாட்டு அரண்மனையில் உண்மையான பாசமும் பிரியமும்
காட்டும் உறவினர் அரிதானவர்களாக இருந்தார்கள்.. அந்த இருவரின் ஏக்கத்தையும் இட்டு நிரப்பும் உயிர்ப்புக் கொண்டவளாக நந்தினி இருந்தாள்.. இருவரும் ஓர் மனதாக ரவிச்சந்திரனிடம் நந்தினியின் போட்டோவைக் காட்டினார்கள்.. தாயும் தங்கையும் ஆசைப்படுகிறார்களே என்றுதான் ரவிச்சந்திரன் அந்த போட்டோவை வாங்கிப் பார்த்தான்..
தலையைச் சரித்துச் சாய்வாக குனிந்து அடிக்கண்களால் சிரிக்கும் பார்வை பார்த்தபடி கழுத்தில் கிடந்த சங்கிலியை எடுத்துப் பற்களால் கடித்துக் கொண்டிருந்தாள் போட்டோவிலிருந்த நந்தினி..
ரவிச்சந்திரனுக்குள் ஓர் மின்னல் வெட்டியது.. போட்டோவிலிருந்த நந்தினி அவனைக் காந்தமென ஈர்த்து இழுத்தாள்..
அந்த நொடியிலிருந்து அவன் வேறு எந்தப் பெண்ணையும் 

ஏறிட்டும் பார்க்கவில்லை என்பதை அவள் அறிவாளா..?


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -234
எண்ணியிருந்தது ஈடேற -234
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-234.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-234.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy