எண்ணியிருந்தது ஈடேற -233

233 கடற்கரையில் குவிந்து கிடந்த பாறைகள் அரண்போல கடல்நீரைத் தடுத்து ஒரு அழகிய வளைகுடாப் பகுதியை ஏற்படுத்தியிருந்தது.. கோவளம் கடற்கரையி...


233

கடற்கரையில் குவிந்து கிடந்த பாறைகள் அரண்போல கடல்நீரைத் தடுத்து ஒரு அழகிய வளைகுடாப் பகுதியை ஏற்படுத்தியிருந்தது.. கோவளம் கடற்கரையின் தனிச் சிறப்பான இந்த அமைப்பு குளிப்பதற்குத் தோதான இடமாக இருந்ததால் சுற்றுலாவாசிகள் குளித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்..
வேறு ஒரு தருணமாக இருந்திருந்தால் நாமும் குளிக்கலாம் என்று நந்தினியையும் இழுத்துக் கொண்டு கடலில் இறங்கியிருப்பான் ரவிச்சந்திரன்.. நந்தினியும் குதியாட்டம் போட்டு கடல் குளியலை ரசித்திருப்பாள்..
அந்த உல்லாச மனநிலை அவர்களிடம் விடை பெற்றிருக்க எதிரும் புதிருமாக நின்ற இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டிருந்தார்கள்..
"நான் சொன்னதில் என்னடி தப்பு..?" உறுத்துப் பார்த்தபடி கேட்டான் ரவிச்சந்திரன்..
"நாம என்ன ஹனிமூன் கப்புளா..?"
"பின்னே.. இல்லையா..?"
நிதானமாக கேட்டவனின் பிடிவாதத்தில் அவளது மனம் தளர்ந்தது.. இல்லை என்று சொல்ல வாய் வராமலும் ஆமாம் தானே என்று ஏற்றுக் கொள்ள மனம் இல்லாததாலும் அவள் சுணங்கி நின்றாள்.. ரவிச்சந்திரனின் தீர்க்கமான பார்வை அவளது முகத்தை ஆராய்ந்தது.. நந்தினியால் அவனது பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை...
தவறு செய்தது அவன்.. பொய் சொன்னது அவன்.. ஆனால் அவன் தைரியமாக அவளை உற்று உற்றுப் பார்க்கிறான்.. பாதிக்கப்பட்ட அவளோ குற்றவாளியைப் போல தலையைக் கவிழ்ந்து கொள்கிறாள் என்றால் இந்த வழக்குக்கு முடிவுதான் என்ன..?
"நான் உன்னை நோட் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன்டி.. கொஞ்ச நாளாவே நீ நீயாக இல்லை.. உன் மனதில் ஏதோ குடையுது.. அதை என்னிடமிருந்து மறைக்கிற.."
"மறைக்கிறது நானில்லை.."
"பின்னே.. நானா..?"
"ஆமாம்.. ஆமாம்.. ஆமாம்.."
கடல்காற்று அவர்களின் முகத்தில் மோதியது.. கரையின் மீது அலைகள் மோதிச் சிதறிக் கடலுக்குள் திரும்பின.. துயர அலைகளை மனதுக்குள் சுமந்தாள் நந்தினி..
எத்துனை அழகான கடற்கரை..! ஒரு புறம் நீலக்கடல்..! மறுபுறம் பசுமையான தென்னந் தோப்பு..! இரண்டுக்கும் இடையே வளைகுடாவைப் போல ஒயிலாக வளைந்து மயக்கும் கடற்கரை..! நீச்சல் குளத்தைப் போன்ற கடல்பகுதி..! அதில் நீந்திக் குளிக்கும் சுற்றுலா வாசிகள்..!
இத்தகைய கடற்கரையில் அலைகள் வீசும் கடலை ரசித்தபடி இதமான மணற்பகுதியில் எதிர்காலக் கனவுகளை பகிர்ந்தபடி நடக்கும் அனுபவம் பேரானந்தம் கொண்டதல்லவா..
அந்த ஆனந்தத்தை அனுபவிக்க முடியாத சாபம் வாங்கிய துரதிர்ஷ்டசாலியாக பேதலித்து நின்றாள் அவள்..
"ஓ.. ஒன்றுக்கு மூன்றாய் 'ஆமாம்' வருகிறதென்றால் இதைப்பற்றி நாள் கணக்கில் நீ யோசித்திருக்க வேண்டும்.. இதற்கான உன் பதிலும் 'ஆமாம்' ஆகத்தான் இருக்க வேண்டும்.."
"ஆமாம்.."
"நினைத்தேன்டி.. நீ இப்படித்தான் சொல்வேன்னு நினைத்தேன்.. சொல்லிட்ட.. மேடம் இத்தனை ஸ்ட்ராங்கா சொல்கிறதா இருந்தா ரீசனும் ஸ்ட்ராங்கா இருந்தாகனுமே.. என்ன ரீசன்..?"
"நீங்கள் யார்..?"
புருவங்களை நெறித்தபடி அவளைத் தீர்க்கமாக அவன் பார்த்து வைத்தான்.. துக்கம் படிந்திருந்த நந்தினியின் முகத்தில் தெரிந்த தீவிரத்தில் அவனது புருவங்கள் சுருங்கின..
"நான் யாருன்னு தெரியாமலா நீலிமலைக் காட்டில் வுட்-ஹவுஸில என்னோடு இரண்டு நாள் தங்கின..?" சீறிப் பாய்ந்த அவனது கேள்வியில்..
"பாஸ்.." என்று அதிர்ச்சியானாள் நந்தினி..
'என்ன வார்த்தைகளைக் கேட்டு விட்டான்..' அவளுக்கு நெஞ்சை அடைப்பதைப் போல இருந்தது..
'இவனா என் காதலன்..? இவனையா நான் உருகி உருகி காதலிக்கிறேன்..?' வெறுத்துப் போனது..
அவள் மனதில் மண்ட ஆரம்பித்த வெறுப்பைப் பற்றிய கவலை துளியும் இல்லாமல் படு அலட்சியமாக அடுத்த கேள்வியை கேட்டு வைத்தான் ரவிச்சந்திரன்..
"நான் யாருன்னு தெரியாமலா ஆலப்புழா படகு வீட்டில என்னோடு கொஞ்சிக் குழாவி குடும்பம் நடத்தின..?"
"ஸ்டாப் திஸ் நான்ஸென்ஸ்.." நந்தினி வெடித்தாள்..
"அடங்குடி.." புறங்கையை வீசிய ரவிச்சந்திரன் அதற்கும் அடுத்த கேள்வியை கேட்டு விட்டுத்தான் பேச்சை நிறுத்தினான்..
"நாம திருவனந்தபுரத்துக்கு வந்து இரண்டு நாள் ஆச்சு.. இஷ்டத்துக்கு ஊர் சுத்திக்கிட்டு இருக்கிறோம்.. கோழிக் கோடிலும் இதே கதைதான்.. நான் யாருன்னு தெரியாமலே என்னுடன் ஊர் சுற்றுகிறாயா..?"
'அப்பேற்பட்டவளா நீ..' என்ற அவனது எள்ளலில் அவளது ரத்தம் கொதித்தது..
விரல்களை மடக்கி உள்ளங்கைகளுக்கு குவித்து, இமைகளை மூடி, மூச்சை இழுத்து விட்டுத் தன்னைச் சமன் படுத்திக் கொண்டாள்.. அலட்சியமாக கால் விரித்து நின்று.. முன்னங்கைகளை முன்புறமாக மடித்துக் கட்டியபடி அவளை ஊடுறுவும் பார்வையை பார்த்துக் கொண்டிருந்தான் ரவிச்சந்திரன்..
"குட்.." என்றாள் நந்தினி..
எதற்கு என்று அவன் கேட்கவில்லை.. இமைக்காமல் அவளைப் பார்த்த பார்வையை விலக்காமல் நின்றான்.. கடற்காற்றில் அலை பாய்ந்த அவனது தலைமுடியில் அவள் மனம் சிக்கித் தவித்தது.. அவன் மீதான வெறுப்பையும் மீறி பொங்கி வரும் காதலை அணை கட்ட முடியாமல் அவள் துயரம் கொண்டாள்..
'இல்லை..' தனக்குள் சொல்லிக் கொண்டாள்..
'நான் தோற்று விடக் கூடாது.. திட்டம் போட்டு என்னை இவன் ஏமாற்றியிருக்கிறான்.. காதல் சொல்லி என் மனதைக் கலைத்து விட்டுக் கேட்கக் கூடாத கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறான்.. இவனுக்கு என்மீது இருப்பது காதலல்ல.. வன்மம்.. இவனை வேண்டாமென்று நான் சொன்னதற்காக பழிவாங்க என்னைக் காதலிப்பதைப் போல நடித்திருக்கிறான்.. இவன் தான் வேண்டுமென்று என்வாயால் நான் சொல்ல வேண்டும்.. அது மட்டும் தான் இவனுக்கு வேண்டும்.. நான் வேண்டாம்.. நான் வேண்டுமென்று நினைத்திருந்தால் இப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டான்..'
உயிருக்குயிராய் காதலிப்பவன் ஏமாற்றுக்காரனாக இருந்தாலும் அவனைப் பிரிய நேர்வது மிகப் பெரும் வலி.. அந்த வலியை அப்போது அனுபவித்துத் துடித்துக் கொண்டிருந்தாள் நந்தினி..
குற்றுயிரும் குலையுயிருமாக அவள் துடித்த துடிப்பின் வேதனையை அவள் முகத்தில் கண்ட ரவிச்சந்திரனின் முகம் இறுகியது.. எதற்காக இந்தத் துடிப்பு என்று தனக்குள் அவன் கேட்டுக் கொண்டான்..
எதையும் இலகுவாக எதிர் கொள்ளும் குழந்தை மனம் கொண்ட நந்தினியின் விழிகளில் இது போன்ற வேதனை வருமானால் அவள் எந்த அளவுக்கு யோசித்திருக்க வேண்டும்..? எத்தனை தினங்களாக யோசித்திருக்க வேண்டும்..?
அவன் மீதான நம்பிக்கையை அவள் கை விட்டு விட்டதைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்ட ரவிச்சந்திரனின் முகம் இறுகியது.. அவனறியாத ரகசியங்களும் அவள் மனதில் இருக்கக் கூடும் என்பதில் அவன் கோபம் கொண்டான்.. அவனது பார்வையின் தீட்சண்யத்தில் அவள் கோபம் கொண்டாள்..
'செய்வதையெல்லாம் செய்து விட்டு பார்க்கிற பார்வையைப் பாரேன்.. இவன்மீது குற்றத்தை வைத்துக்கிட்டு நான் என்னவோ குற்றம் செய்ததைப் போலயில்ல பார்த்து வைக்கிறான்..'
மனதுக்குள் கோபம் கோபமாக வந்தது.. கூடவே துக்கமும் சேர்ந்து வந்தது..
'விரும்பி வந்தவளைத்
             தொலைத்து விடப் போகிறாயா..?'
அவளது மருகும் பார்வையைத் தாள மாட்டாதவனாக ரவிச்சந்திரன் ஓரடி எடுத்து வைத்தான்..
"கிட்ட வராதீங்க.." நந்தினி கண்களை இறுக மூடி வலது கையை நீட்டிக் கத்தியதில் அப்படியே நின்று விட்டான்..
"நீங்கள் ஏமாற்றுக்காரர்.." அவள் குமுறினாள்..
புருவங்கள் சுருங்க அவன் பார்த்த பார்வையில் அவள் பயந்து போனாள்.. ரத்தமென சிவந்த கண்களுடன்.
"யாரை ஏமாற்றினேன்..?" என்று அவன் அதட்டினான்..
"மத்தவங்களைப் பற்றி எனக்குத் தெரியாது.. என்னை நீங்க ஏமாற்றிட்டிங்க.. அதைப்பத்தி மட்டும் தான் நான் சொல்ல முடியும்.." துணிவைத் திரட்டிக் கொண்டு பதில் சொன்னாள்..
"மத்தவங்களுமா..? ஓ..! அப்படி எத்தனை பேரை ஏமாற்றியிருப்பேன்னு நினைக்கிற..?"
"யாருக்குத் தெரியும்..?"
"இந்த ஏமாற்றக்காரனை நம்பித்தான் ஊர் விட்டு ஊர் வந்த.. நினைவிருக்கட்டும்.."
"அந்த முட்டாள் தனத்துக்குத் தான் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறேனே.. எவளோ ஒளிந்து கொள்ள போலிஸ் ஆபிசரின் வீட்டைத் தேடினானாம்.. அந்தக் கதையாய் என் கதை ஆகிப்போச்சு.."
"இப்ப என்னதாண்டி ஆகியிருக்கு..?"
"நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க.."
"என்னடி கேட்ட..?"
"நீங்கள் யார்..?"
அவன் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தான்.. இமைக்காத அவனது பார்வையில் அவளது இதயம் சிலிர்த்தது.. ஓடிப் போய் அவனது கழுத்தைக் கட்டி கைகளால் வளைத்து ஊஞ்சலாடி விட உள்ளம் துடித்தது.. அவன் மீதான கட்டுக்கடங்காத காதலுக்கு கரை போட முடியாமல் தடுமாறித் தவித்தாள் நந்தினி..
"நீயே சொல்லு.. நான் யார்..?"
அவன் கெட்டிக்காரத்தனமாக கேள்வியை அவள் பக்கமாக திருப்பி விட்டு விட்டான்..
"நீங்கள்.. நீங்கள்.. ஏமாற்றுக்காரர்.."
"ஈஸிட்..? என்னடி செய்தேன்..? உன் கையில் என் குழந்தையைக் கொடுத்து விட்டுக் கை கழுவப் பார்க்கிறேனா..?"
பட்டவர்த்தனமாக அவன் கேட்ட கேள்வியில்..
"பாஸ்.." என்று முகம் சிவக்கப் பேச்சு வராமல் திணறிப் போனாள் நந்தனி..
அவன் ஒரு மார்க்கமாக அவளைப் பார்த்த வண்ணம் உதட்டைச் சுழித்தான்.. அந்த அழகில் மயங்கிக் கிறங்கிப் போனவளின் மனம்..
'ஏண்டா என்னை ஏமாற்றின..?' என்று குமுறியது..
"சொல்லுடி.." அவன் புருவங்களை உயர்த்தி இறக்கி அவளை கொன்று தின்றான்..
"பேசாமல் நின்றால் எப்படி..? என்னவோ நான் ஏமாற்றுக் காரன்னு குற்றப் பத்திரிக்கை வாசித்த.. என்ன ஏமாற்றுனேன்னு கேட்டால் பேசாமல் நிற்கிற..? பேசுடி.. பேசக் கூடாததையெல்லாம் பேசிட்டு இதுக்குப் பதில் பேசாம நின்றால் எப்படி..?"
"பேசக் கூடாததை பேசினேனா..? நானா..?"
மயக்கம் கலைந்தவளாக அவள் சீறிச் சினந்தாள்.. அவன்மீது குற்றமில்லாததைப் போல அவன் பேசிய பேச்சில் அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது..
"நீங்கதான் செய்யக் கூடாததை செய்துட்டு நிற்கறிங்க.."
கோபத்தில் கொதித்து விட்டு 'ஐயோடா..' என்று வாயடைத்து நின்றாள்..
'சும்மாவே இவன் கேட்கக் கூடாத கேள்வியை யெல்லாம் கேட்டு வைத்தான்.. இந்தப் பேச்சுக்கு என்னவெல்லாம் பேசி வைக்கப் போகிறானோ..'
அவள் பயந்ததைப் போலதான் நடந்தது.. இரை கிடைத்து விட்ட சிங்கத்தின் விழிகளைப் போல அவனது கண்கள் பளபளத்தன..
"செய்யக் கூடாததை செய்து விட்டேனா..? உன்னிடமா..? எங்கே..? எப்போது..?" என்று ஆரம்பித்து அறியாப்பிள்ளை போல அவன் கேட்ட கேள்விகளின் பசுமை தாங்க முடியாதவளாக அவள் காதுகளைப் பொத்திக் கொண்டாள்.. அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் வெட்கம் பிடுங்கித் தின்றது..
'இப்படியெல்லாம் இவன் பேசுவானா..?'
அவன் அதற்கும் மேல் பேசி வைத்தான்.. மங்களூர் எக்ஸ்பிரஸின் இரவு நேரப் பயணத்தில் ஒரே கூபேயில் இருவரும் தனித்துப் பயணம் செய்ததில் ஆரம்பித்து நீலிமலை மரவீடு, ஆலப்புழா படகு வீடு என்று அத்தனையையும் இழுத்து வைத்து பச்சை நிறமே, பச்சை நிறமே என்று பாடாத குறையாய் கேள்விகளைக் கேட்டு விட்டுத்தான் ஓய்ந்தான்..
இதில் காதுகளில் விரல்களை விட்டு நின்றவளின் அருகே வந்து விரல்களைப் பிடுங்கி விட்டு காதருகே குனிந்து வண்டை வண்டையாக அவன் கேட்டு வைத்ததுதான் ஹைலைட்..
"அக்லி மேன்.."
கோபத்துடன் அவன் நெஞ்சில் கைகளால் குத்தியவளின் கைகளைச் சேர்த்துப் பிடித்து இழுத்து அணைத்து மூச்சு முட்ட முத்தம் பதித்தான் அந்த 'அக்லி மேன்..'


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -233
எண்ணியிருந்தது ஈடேற -233
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-233.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-233.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy