எண்ணியிருந்தது ஈடேற -232

232 அடர்ந்த தென்னந்தோப்புகளைத் தூரத்திலிருந்து பார்த்த போது பச்சைக் கம்பளம் பரந்து விரிந்திருந்ததைப் போல இருந்தது.. தஞ்சைக்கு அரு...


232


அடர்ந்த தென்னந்தோப்புகளைத் தூரத்திலிருந்து பார்த்த போது பச்சைக் கம்பளம் பரந்து விரிந்திருந்ததைப் போல இருந்தது..
தஞ்சைக்கு அருகேயுள்ள மேகநாதனின் பூர்விக கிராமத்தில் தென்னந்தோப்புகள் உண்டு.. தஞ்சை மண் விவசாயத்திற்குப் பெயர் பெற்றது.. காவிரிப் பாசனம் என்பதால் கரையோரம் தென்னந்தோப்புகள் இருக்கும்.. பசுமை நிரம்பிய தென்னந்தோப்புகள் நந்தினிக்குப் பரிச்சயமானவைதான்.. புதிதானவையல்ல..
ஆனால்.. கோவளம் கடற்கரையில் குவிந்திருக்கும் தென்னந்தோப்புகள் வித்தியாசமானவயாக இருந்தன.. மலையாளத்தில் கோவளம் என்ற வார்த்தைக்கு 'தென்னந் தோப்பு..' என்று அர்த்தமாம்.. பெயருக்கு ஏற்றபடி இங்கே ஏராளமான தென்னந் தோப்புகள் இருந்தன.. கடற்கரை முழுவதும் வரிசை கட்டி அடர்ந்திருந்த தென்னந்தோப்புகளில் காற்றாட உலாவுவது சுகமானதாக இருந்தது..
"காஷ்மீர் 'வடக்கின் சொர்க்கபுரி..' என்றால் கோவளம் 'தெற்கின் சொர்க்கபுரி..'" என்றான் ரவிச்சந்திரன்..
அதி முக்கியமான வேலையென்று அவளை அழைத்து வந்திருந்தவன் சுற்றுலாப் பயணியைப் போல ஜீன்ஸ் பேண்ட், டிசர்ட், கூலிங்கிளாஸ் என்று அளப்பறையாய் இருந்தான்.. திருவனந்தபுரத்தின் 'யாழ்' ஹோட்டலில் தங்கியிருந்தார்கள்.. முதல் நாள்தான் வயநாட்டிலிருந்து வந்திருந்தார்கள்.. மறுநாளே ஊரைச் சுற்றிப் பார்க்க அழைத்து வந்து விட்டான்..
"வேலைன்னு சொன்னீங்களே.." நந்தினி ஞாபகப் படுத்தினாள்..
"யாழ் ஹோட்டலை செக் பண்றதும் வேலைதாண்டி.." அறிவுறுத்தினான் அவன்..
'இவனுக்குத்தான் எந்த ஊருக்குப் போனாலும் அங்கே ஒரு பிஸினெஸ் இருக்குமே..'
"அது சரி.. என் வேலையைப் பற்றி உனக்கென்ன கவலை..? என்னுடன் ஊர் சுற்றப் பிடிக்கலையா..?"
அவன் பார்வை கூர்மையாக துளைத்ததில் அவள் முகம் சிவந்தாள்.. அவனது கேள்வி என்னைப் பிடிக்க வில்லையா என்பதைப் போல இருந்ததில் மனம் படபடக்க...
"அப்படியொன்னும் சொல்லலையே.." என்று முணுமுணுத்தாள்..
"வாய் விட்டுச் சொல்லலை.."
"புரியலை.."
"புரியலை..?"
"ம்ம்ம்.. புரியலை.."
"உன் மனசு சொல்லுதுடி.."
"நீங்க கண்டிங்க.."
"கேட்டேன்.."
"எதை..?"
"உன் மனது சொல்லுவதை.."
ஆளை மயக்கும் அந்த ஆணழகன் அவள் கை தொட்டு அருகில் இழுத்தான்.. அவனது கை வளைவுக்குள் சிறைபட்டவளின் முகத்தோடு முகம் வைத்து..
"உன் மனது பேசுவதை என் மனது கேட்கும்டி.." என்றான்..
உதடுகள் துடிக்க அவன் மார்பில் முகம் புதைத்து தழுவிக் கொண்டாள் நந்தினி.. நீதான் எனக்காக நிச்சயிக்கப்பட்ட பெல்ட் மன்னனா என்று மனம் கதறியது.. அஜந்தா எதைச் சொல்ல யத்தனிக்கிறாள்..? அவளைச் சொல்ல விடாமல் ஏன் அவன் தடுக்கிறான்..?
மனம் முழுவதும் கேள்விகளும் குமுறல்களுமே சுழன்று கொண்டிருந்தன.. அவன் அவளை ஜெயிக்க நினைத்தான் என்பதில் நந்தினி நிலைகுலைந்து போயிருந்தாள்.. அவளை ஜெயிக்க அவனுக்கு வேறு வழியே அகப்படவில்லையா..? காதல் என்ற வார்த்தையை முன்னிருத்தித்தான் அவளை வென்றிருக்க வேண்டுமா..?
நந்தினிக்கு கருப்பு வெள்ளைத் திரைப்படம் ஒன்று நினைவுக்கு வந்தது.. பழைய படம்.. 'புதிய பறவை..' என்ற அந்தத் திரைப்படத்தில் நடிகர் திலகமும், அபிநய சரஸ்வதி சரோஜா தேவியும் இணைந்து நடித்திருப்பார்கள்.. அந்தப் படத்தின் உச்சகட்டக் காட்சியின் இறுதிப் பகுதியில் சிவாஜி கணேசன் சரோஜா தேவியைப் பார்த்து..
"ஏம்மா.. என் குற்றத்தைக் கண்டு பிடிக்க உனக்கு வேறு வழியே தெரியலையா.. காதல் என்ற பொய்தான் கிடைத்ததா..?" என்பதைப் போலக் கேட்டு வைப்பார்..
அதே மனத்துடிப்பைத்தான் நந்தினியும் அனுபவித்துக் கொண்டிருந்தாள்..
'ஏன் இதை மறைத்தாய்..?'
அவனுள் புதைந்தபடி அவனிடம் மனதுக்குள் கேட்டாள்.. அவள் மனது சொல்வதை அவன் மனது கேட்கும் என்றானே..
இந்த மருகலை ஏன் கேட்கவில்லை..?
'தற்கொலைக்கு முயன்றேனே.. உனக்குப் பயந்து ஊரை விட்டு ஓடி வந்து உன்னிடமே அனாதை போல அகதியாக தஞ்சம் புகுந்தேனே.. உன் மனதில் என்னை என்னவென்று நினைத்தாய்..? நீ சொல்வதைப் போல நான் 'தத்தி' தாண்டா.. புத்திசாலியில்லை..'
"என் நந்தினி.." அவளை இறுக்கிக் கொண்டவனின் காதோர முணுமுணுப்பில் அவள் கிறுகிறுத்தாள்..
'நீ வேண்டாம்ன்னு ஓடி வந்தவளை இப்படி நீயே எல்லாமும்ன்னு சரண்டர் ஆக வைச்சிட்டயேடா.. எவ்வளவு வேதனைப் பட்டேன் தெரியுமா..? மனசெல்லாம் ரணமா இருந்ததுடா.. அன்றைக்கு நான் பட்ட வேதனைகளை உன்னால் அழித்து விட முடியுமா..? அம்மா, அப்பா, தம்பி, பாட்டி, தாத்தா மற்றும் என் சொந்த பந்தம்ன்னு கலகலப்பா இருந்தவளை நிராதரவாய் நிற்கதியாய் நிற்க வைத்தது நீதான்னு தெரியாமல் உன்னை என் காவலனா நினைத்தேனே.. அதெல்லாம் பொய்யா..?'
"ம்ஹா.. வாசனையாய் இருக்கியேடி.." அவளது கூந்தலில் முகம் புரட்டி வாசம் பிடித்து அவளை வதைத்தான் அவன்..
'கொல்லறயேடா நிராதரவாக நான் நின்ற பொழுதுகளை உன்னால் இல்லாமல் ஆக்கிவிட முடியுமா..? நான் யார் என்று தெரிந்திருந்தும் என் மனம் நோக நீ பேசினாயே.. அது ஏன்..? உன்னை வேண்டாமென்று நான் சொன்னதற்கு ஆங்காரப் பட்டாயே.. உன் காதலை மறுத்ததிற்கு கோபப்பட்டதாய் நான் நினைத்தேனே.. உன்னையே மறுத்ததிற்கு கோபப்பட்டாய்ன்னு தெரியாமல் போய் விட்டதே..'
"நீயில்லாத வாழ்வை இத்தனை நாள் எப்படிடீ வாழ்ந்தேன்..?"
அவளது முகத்தை கைகளில் ஏந்தி காதல்ததும்ப ரவிச்சந்திரன் கேட்டபோது அவனது கண்களில் பொய்யில்லை... நந்தினி தவித்துப் போனாள்... அவனில்லாத வாழ்வை நினைத்துப் பார்க்கக் கூட அவளுக்குத் தெம்பில்லையே..
'ஏண்டா இத்தனை காதலை எனக்குள் வர வைத்தாய்..? நீயே சகலமும்ன்னு ஆகிப் போனேனே.. இப்போது வந்து உன் உண்மை முகத்தைக் காட்டுகிறயே.. இத்தனை நாளாய் பொய் முகத்துக்குப் பின்னால் ஒளிந்திருந்தாய்ன்னு எனக்குத் தெரியாமல் போய் விட்டதே.. உன்மீது உயிரை வைத்து விட்டேனே.. நீ பொய்காரன்னு தெரிஞ்சும் பிரிய மனசு மறுக்குதே.. நீ இரக்கமில்லாத ராட்சண்டா.. அழகிய அசுரன்..! என்னை அலைக்கழிக்கப் பிறந்தவன்.. நீ யாரென்பதை மறைத்து என்னை ஏமாற்றி உன்னைக் காதலிக்க வைத்தவன்.. நீபொய்.. உன் வார்த்தைகள் பொய்.. ஆனால்.. ஆனால்..'
நந்தினி தவியாய் தவித்தாள்.. அந்த பொய்காரனின் முகத்தை ஊன்றிப் பார்த்தாள்.. உன்மத்தமான காதல்தான் தெரிந்தது..
'உன் காதல் மட்டும் மெய்யாய் இருந்து தொலைக்குதேடா.. நான் என்ன செய்வேன்..?'
பெல்ட் மன்னன் என்று அவளால் அழைக்கப் பட்டவனின் மீது அவள் கொண்டிருந்த ஆழமான வெறுப்பு ரவிச்சந்திரனை முழுமனதாக ஏற்றுக் கொள்ள முடியாமல் அவளை தடுத்துக் கொண்டிருந்தது..
அவனில்லாமல் அவளில்லை.. அதே தருணத்தில்.. அவன் பெல்ட் மன்னனாக இருந்தால் அவனுக்கு அவளில்லை..
'நீ வேண்டாமென்று ஓடி வந்தவளிடம் உன்னை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.. பேசிப் புரிய வைத்திருக்க வேண்டும்.. பொய் நாடகமாடி என்னை ஏமாற்றியிருக்கக் கூடாது.. உன்னை என் சுவாசமாய் நினைக்க வைத்திருக்கக் கூடாது.. பொய்யில் என்னை வீழ்த்தி விட நினைத்தாயா..?'
"அதிகமா யோசிக்காதேடி.. சீரியஸா முகத்தை வைச்சுக்காதே.. இது உனக்கு ஷீட் ஆகலை.. துருதுரு குறுகுறு நந்தினிதான் எனக்குப் பிடிச்ச நந்தினி.."
'அவதானே ஏமாளி.. உனக்குப் பிடிக்கும்தான்..'
"ஹேய் வாயாடி.. எதுக்காக ஊமை வேடம் போடற..?"
"எனக்கு வேசம் போடத் தெரியாது.. என்னையும் உங்களைப் போல நினைத்தால் எப்படி பாஸ்..?"
வெடுக்கென்றுதான் அவள் சொன்னாள்.. அவனுக்கு உறைக்கட்டும் என்றுதான் சொன்னாள்.. நான் வேடம் போடுகிறவனா என்று சண்டைக்கு வரட்டும்.. அப்போது ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என்று கருவிக் கொண்டிருந்தவளுக்கு அதற்கான வாய்ப்பையே அவன் கொடுக்கவில்லை..
"ஹா.. ஹா.. என் செல்லத்துக்கு கோபம் வந்து விட்டது.. இதுதான் என் நந்தினி.. மை ஸ்வீட் ஹார்ட்.." என்று முத்தம் கொடுத்துக் கொஞ்சினான்..
'ஏண்டா இப்படிப் படுத்தற..?' தாள முடியாத வேதனையுடன் வெட்கம் போல அவன் தோள் வளைவில் முகம் புதைத்துத் தப்பித்தாள் நந்தினி..
அடர்ந்திருந்த தென்னந்தோப்பின் ஓரமாக கடலலைகள் வந்து மோதி கரையைத் தொட்டுச் சென்றன.. அந்த அழகில் நந்தினியின் காயப்பட்டிருந்த மனம் லேசாக ஆற யத்தனித்தது..
கேரளா என்றாலே சுற்றுலா என்றுதான் சொல்வார்கள்.. அந்த அளவுக்கு உலகத்தில் உள்ளவர்களின் கருத்தைக் கவர்ந்திருந்த கவின் மிகு அழகு தேசம் கேரளா.. கேரளத்தின் கடற்கரைகள் தனித்துவ மானவை.. அடர்ந்த தென்னந்தோப்புகளுடன் வரிசையாக அமைந்திருக்கும்.. கோவளம் கடற்கரை பிரசித்தி பெற்றது.
திருவனந்தபுரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது கோவளம்.. இங்குள்ள கடற்கரை வளைவான வடிவத்துடன் உலகப் புகழ்பெற்ற அழகிய கடற்கரை என்ற பெருமையைக் கொண்டது..
"இங்கேதான் 'செம்மீன்..' பிலிமை ஷீட் பண்ணினாங்களாம்.."
ரவிச்சந்திரன் சொன்னதும் சட்டென முகம் திருப்பிக் கடற்கரையைப் பார்த்தாள் நந்தினி.. பச்சைப் பசேலென்ற தென்னந்தோப்புகளின் பக்கத்தில் கடலைகள் கால் நனைக்க கடலோரமாக 'செம்மீன்' திரைப்படத்தின் கதாநாயகி ஓடி வருவதைப் போல ஓர் தோற்றம் தோன்றி மறைந்தது..
"கடலின் அக்கர போனாரே..
             காணாப் பொண்ணுனு போனாரே..
    போய் வரும் போழ்
             என்ன கொண்டு வரும்..?
    கை நிறைய என்ன கொண்டு வரும்..?
             பதினாறாம் ராவிலே..
         பாலாறு திறையிலே.."
ரவிச்சந்திரன் பாடிய பாடலில் கரைந்து போனாள் நந்தினி.. நிறைவேறாத காதலின் துயரத்தைச் சுமந்து வந்த  பாடலைக் கேட்கும் சக்தியற்றவளாக அவன் வாய்பொத்தி தடுத்து விம்மினாள்..
"வேணாம் பாஸ்.. பாடாதீங்க.."
"ஏண்டி..?"
"மனசை என்னவோ செய்யுது.."
"பைத்தியம்.."
அவளை இறுக்கிக் கொண்டவனின் அணைப்பில் இறுகியவள் அவனை இறுக்கிக் கொண்டாள்... விடுபட்டால் அவனை விட்டு விலகி ஓடி விடுவாளோ என்ற பயம் மனதுக்குள் புகுந்து ஆட்டுவித்தது.. அவன் பெல்ட் மன்னனாகவே இருக்கட்டும்.. அவன் பொய் என்பதால் அவனது காதலும் பொய்யாகி விடுமா..?
அவளது மனப் போராட்டத்தை உணர்ந்தவனாக அவளைத் தட்டிக் கொடுத்து அமைதிப் படுத்தினான் ரவிச்சந்திரன்.. மழலைக்கான தாலாட்டைப் போல மெல்ல மெல்ல அவளது மனதை அமைதிப் படுத்தியது அவனது தட்டுதல்.. தாய்ப் பறவையின் சிறகுக்கடியில் உணரும் பாதுகாப்பை அன்றும் அவனிடம் உணர்ந்தவளுக்கு
இவனா பொய்காரன் என்று மனம் வலித்தது..
அலைகள் வீசும் கடலோரமாக அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள்.. அவளை விலக விடாமல் அவளது தோளைச் சுற்றிக் கைபோட்டு அணைத்துச் சேர்த்து நடந்து கொண்டிருந்தான் ரவிச்சந்திரன்.. அவர்களைக் கடந்து சென்ற வயோதிகத் தம்பதி சிநேகிதமாக சிரித்தார்கள்.. உடையும் முக அமைப்பும் அந்தத் தம்பதியை வடநாட்டை சேர்ந்தவர்கள் என்று அறைகூவி அறிமுகப் படுத்தின.. அதை மெய்ப்பிப்பது போல அந்தத் தம்பதி தங்களுக்குள் இந்தியில் பேசிக் கொண்டார்கள்..
"ஆர் யு ஹனிமூன் கப்புள்..?" அந்தப் பெண்மணி வினவினாள்..
நந்தினிக்கு லஜ்ஜையாகி விட்டது..
'இப்படி ஈஷிக் கொண்டு வந்தால் இப்படித்தானே கேட்பார்கள்..' என்ற சங்கடத்துடன் விலக முயன்றாள்..
ரவிச்சந்திரனின் கரம் அவளது தோள் மீது அழுத்தமாக பதிந்து அவளது விலகலை ஆட்சேபித்தது..
"யெஸ்.. வீ ஆர்.." என்றான் அவன்..
"ஃபைன்.. ஃபைன்.." அவர்கள் நடந்து விட..
"ஏன் அப்படிச் சொன்னீங்க..?" என்று சீறினாள் நந்தினி..
ரவிச்சந்திரனின் கண்கள் இடுங்கின..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -232
எண்ணியிருந்தது ஈடேற -232
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-232.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-232.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy