எண்ணியிருந்தது ஈடேற -231

231 "உனக்காக எதையும் செய்வேன்.." நந்தினி வாக்குக் கொடுத்து விட்டாள்.. அதனால் ஏற்படப் போகும் பின் விளைவுகள் எதுவாக இருந்...


231


"உனக்காக எதையும் செய்வேன்.."
நந்தினி வாக்குக் கொடுத்து விட்டாள்.. அதனால் ஏற்படப் போகும் பின் விளைவுகள் எதுவாக இருந்தாலும் அதுவே ஆண்டவன் விட்ட வழி என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவளது மனம் முடிவெடுத்தது.. தரங்கிணிக்கும் அஜந்தாவிற்கும் இடையே அல்லல் படுவதற்கு பதில் ரம்யமாலினியின் மன அமைதிக்காக எதையும் செய்து விட்டு தொலைந்து விடலாம்..
"அண்ணனிடம் எனக்காக பேசுவாயா..?"
"நிச்சயமாய் பேசுவேன்.. கவலைப் படாதே.."
ரம்யமாலினியைச் சமாதானப்படுத்திக் கீழே அழைத்துக் கொண்டு போனாள்.. மேல்மாடித் தோட்டத்தின் அழகில் லயிக்க முடியாமல் அவளது மனது ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.. ரவிச்சந்திரன் யார் என்ற கேள்வி அவளது மனதை குடைந்து கொண்டிருந்தது.. அஜந்தா எதை உணர்த்த முயல்கிறாள்..?
'ஆ வல்லிய சுந்தரன் எண்ட கம்மாண்டரா..? இல்ல.. பெல்ட் மன்னனா..?'
யோசித்து யோசித்து தலை வலித்ததுதான் மிச்சம்.. எதுவும் பிடிபடவில்லை.. அஜந்தாவிடம் பேசினால் தெளிவாகும் என்று தோன்றியதில் அதிர்ந்து போனாள் நந்தினி..
அவளா அஜந்தாவின் துணையை நாட நினைக்கிறாள்..?
'கடவுளே..!'
கண்களை இறுக மூடி சோபாவில் கால் மடித்து உட்கார்ந்து மறுகினாள்.. மனதுக்குள் பல சிந்தனைகள் முட்டி மோதிக் கலவரப் படுத்தின.. வீணா தமிழகத்தில் பிறந்தவள் என்பது திடிரென்று நினைவுக்கு வந்தது..
'அம்மாவோட பால்யகால சிநேகிதியா, மாமன் மகளா இவங்க ஏன் இருக்கக் கூடாது..'
சிந்தனைகள் பின்னல்களாகி கோர்வையாக ஒன்று சேர்ந்தன.. அவற்றை உருவகப் படுத்தினால் ஓர் வடிவம் கிடைத்தது.. அது தெளிவாக ரவிச்சந்திரன் பெல்ட் மன்னனாக இருக்கக் கூடும் என்ற பிம்பத்தைப் பிரதிபலித்தது..
'மோகன் சொன்னானே.. சாருக்கு கோபம் வந்தால் பெல்ட்டை எடுத்து விளாசிடுவார்ன்னானே.. அதை ஆனந்தன் சாரும் ஒப்புக்கிட்டாரே.. ரவியிடம் துப்பாக்கி இருக்கிறதே.. அவன் ஷீட் பண்ணினதுண்டுன்னு ஆனந்தன் சார் சொன்னாரே..'
நந்தினிக்குத் தலை வலித்தது... நெற்றிப் பொட்டுக்கள் 'விண், விண்' என்று தெறித்தன... விரல்களால் அழுத்திக் கொடுத்தாள்.. வலி குறைய வில்லை.. மனதில் நந்தகுமார் சொல்லிய வார்த்தைகள் அலைமோதின..
'கோபம் வந்தால் பெல்ட்டாலே விளாசித் தள்ளிருவானாம்.. கன்னைக் கையிலெடுத்தா சுடாமக் கீழே வைக்க மாட்டானாம்.. பாவம்க்கா நீ..'
கடைசியில் அவள் பாவப்பட்ட ஜன்மமாக ஆகி விட்டாளா..? பிடிக்காத திருமணத்திலிருந்து தப்பிக்க வயநாட்டுக்கு ஓடி வந்தாளே.. அந்தத் திருமணத்திலிருந்து தப்பித்து விட்டாளா..? இதற்கு நீ வயநாட்டிலேயே இருந்திருக்கலாமே என்று ஏளனமாக அஜந்தா பரிதாபப் படும் நிலைமையிலா அவள் இருக்கிறாள்..?
'மலர் டீச்சர்..!'
நந்தினியைப் பார்த்தாலே விழிகள் செறுக மோகன் மயக்கத்துடன் உச்சரிக்கும் இந்தப் பெயரைக் கேட்டு நந்தினிக்கு ஏன் கோபம் வரவில்லை..? நந்தகுமாரின் நினைவு ஏன் வந்தது..?
பெல்ட் மன்னனின் தங்கையை நந்தகுமார்..
'மலர் டீச்சர்..'
என்று வர்ணித்தானே.. அந்த நினைவு மன ஆழத்தில் இருந்து தடுத்ததினால்தானே சகோதர பாசம் வந்தது..
'நந்தகுமார் சொன்ன மலர் டீச்சர் ரம்யமாலினியா..?'
அப்படியும் இருக்குமோ என்ற சஞ்சலத்தில் தவித்துப் போனாள் நந்தினி.. ஆழ்ந்து யோசிக்க யோசிக்க அனைத்தும் பொருந்தி வந்தன..
வீணா தமிழகத்தில் பிறந்தவள்... அவளும் ரம்யமாலினியும் அடிக்கடி தமிழகக் கோவில்களைச் சுற்றிப் பார்த்து வணங்கி வரக் கிளம்பிப் போய் வருவார்கள்... அரண்மனைக்குள் சிறைபட்டிருக்கும் மகளை வெளியுலகிற்கு அழைத்துச் செல்ல வீணா கையாண்ட யுக்தி இது... ரவிச்சந்திரனால் அவர்களோடு அனைத்து இடங்களுக்கும் போய் வர முடிந்ததில்லை... நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருப்பவன் அவன்... ரவிவர்மனால் மனைவி, மகளென்று கிளம்பி விடமுடியாது.. அவர் தனியொரு குடும்பத்தின் தலைவனல்ல.. அருள் மொழிவர்மனின் மகன், அவந்திகாவின் அண்ணனென்று யாழினி போர் முரசு கொட்டி விடுவாள்.. மகளுக்கான அமைதி கெட்டு விடக் கூடாது என்று ரவிவர்மன் பின் வாங்கி விடுவார்.. உலகம் முழுவதையும் தாய், தங்கையுடன் சுற்றி வந்த ரவிச்சந்திரனால் தந்தையைத் தங்களுடன் இணைத்துக் கொள்ள முடிந்ததில்லை..
'ஸோ.. அத்தையும் ரம்யாவும் மட்டும் தஞ்சாவூர் கோவிலுக்கு வந்திருக்க சான்ஸ் இருக்கு..'
எந்தத் திசையில் திரும்பினாலும் நிம்மதி கிடைக்க வில்லை ரவிச்சந்திரன்தான் பெல்ட் மன்னன் என்று அனைத்து ஆதாரங்களும் அடித்துக் கூறின.. நந்தகுமாரின் வர்ணனைகள் வீணாவுக்கும், ரம்யமாலினிக்கும் பொருந்தி வந்தன.. அவன் பெல்ட் மன்னனின் குணாதிசியங்களாக பிட்டுப் பிட்டு வைத்த அனைத்தும் ரவிச்சந்திரனின் குணாதிசயங்களாக இருந்தன..
ரவிச்சந்திரனின் கோபம்.. கண்டிப்பு.. கறார்த்தன்மை.. எதற்கெடுத்தாலும் அடித்து விடும் மூர்க்கம் என்று அவளறிந்த ரவிச்சந்திரன் பெல்ட் மன்னனின் பிம்பமாகத்தானே இருக்கிறான்..
'இவனை நான் காதலிக்கிறேனே..'
நந்தினியின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.. சொன்னாளே.. அன்று உத்ராவிடம் சொன்னாளே..
"நீ பெல்ட்டாலே விழுகிற அடியைப் பத்தியும், ரிவால்வரில வர்ற குண்டைப் பத்தியும் மட்டுமே பேசற உத்ரா.. அதுக்கு நான் பயப்படறேன்னு நினைக்கிற.. இல்லைடி.. என் பயமே வேற உத்ரா.. என் சுயமரியாதை அழியப் போகுதேன்னு நான் பயப்படறேன்.. அடிமையைப் போல வாழவேண்டி வந்துருமோன்னு நான் பயப்படறேன்.."
இப்படிப் பேசின நந்தினி தோற்றுப் போனாளா..? எவனை வெறுத்து வீட்டை விட்டு ஓடி வந்தாளோ அவனிடமே காதல் எனும் பெயரில் அடிமையாகப் போகிறாளா..?
"நான் மனுஷியா.. இல்லை நான்கு கால் ஜீவனா..? பெல்ட்டாலே அடிச்சுத்தான் என்னைக் கண்ட்ரோலில் வைச்சுக்கனும்னா அன்பு, பாசம், காதல் என்கிற இதெல்லாம் எதுக்கு உத்ரா..? அதெல்லாம் இருக்கிற இடம் தெரியாமல் காணாமல் போயிராதா..? அப்படிப்பட்ட வாழ்க்கை என்னை அவமானப் படுத்தும் உத்ரா.. என் மேலேயே எனக்கு மரியாதை இருக்காது.. இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்திரும்.. அதுக்குப் பேசாம நான் செத்துப் போயிரலாம்.."
இதையெல்லாம் சொன்ன நந்தினி எங்கே போனாள்..? செஞ்சிக் கோட்டையிலிருந்து குதித்துச் சாகத் துணிந்த நந்தினியா இந்த நந்தினி..?
'இதெல்லாம் உத்ராவுக்குத் தெரியுமா..? இவன்தான் பெல்ட் மன்னன்னு தெரிந்துதான் குறிப்பா வயநாட்டைக் கைகாட்டி என்னை அனுப்பி வைத்தாளா..?'
அப்படித்தான் நடந்திருக்கிறது என்று தோன்றியது.. நந்தினியின் தற்கொலை முயற்ச்சியை உத்ரா நந்தகுமாருக்குத் தெரியப் படுத்தியிருக்கலாம்.. அவன் வீட்டில் சத்தம் போட்டிருக்கலாம்.. மேகநாதன் பதறிப் போய் பெல்ட் மன்னனுக்கு விவரம் சொல்லியிருக்கலாம்..
'அப்பா கல்யாணத்தை நிறுத்தத் துணிஞ்சிருப்பார்.. இவன்தான் தோல்வியை ஒப்புக் கொள்ளாதவனாச்சே.. என்னுடன் வயநாட்டுக்கு அனுப்பி வையுங்க.. உங்க பெண் மனதை நான் மாற்றிக் காட்டறேன்.. கட்டினா இவனைத்தான் கட்டுவேன்னு கை காட்ட வைக்கிறேன்னு சேலன்ஜ் பண்ணியிருக்கலாம்.. அட் லாஸ்ட் சேலன்ஜில் இவன் ஜெயித்து விட்டான்..'
கசப்புடன் புன்னகைத்தாள் நந்தினி.. எப்படியொரு பைத்தியக்காரியாய் அவள் இருந்திருக்கிறாள் என்று மனம் குமுறியது.. எதிரிலிருந்த கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்துக் கொண்டாள்..
'இந்த மூஞ்சி மேல எப்படி அவனுக்கு இப்படியொரு காவியக் காதல் வந்ததுன்னு இப்பத்தானே தெரியுது.. அடிநந்தினி.. உன் மூஞ்சியும் நீயும் பிடித்துப் போனதினால அவன் உன்னைக் காதலிக்கலை.. அவனைக் கட்டிக்க மாட்டேன்னு சூசைட் பண்ணிக் கொள்கிற ரேன்ஜிக்கு ஒருத்தி மறுத்திட்டாளேங்கிற ஈகோதான் அவனை உன்னைக் காதலிக்க வைத்திருக்கு..'
கதவு தட்டப்படும் ஒலியில் கன்னத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.. கதவைத் திறந்தாள்..
"அம்மே.." வாயெல்லாம் பல்லாக உள்ளே வந்தாள் ஓமனாக் குட்டி..
நந்தினி எப்படிப்பட்ட வீராதி வீரி..! சூராதி சூரி..! அஜந்தாவிடம் எப்படியெல்லாம் திறமையாக சொற்போர் புரிந்து புறமுதுகு காட்டி ஓட வைத்தாள் என்பதையெல்லாம் பாராட்டிப் பேசி விட்டு..
"அம்மை ஊன் கழிக்க வரணுமெண்டு அம்மை விளிச்சு.." என்றாள்..
'எந்த அம்மை எந்த அம்மையை விளிச்சு..?' என்ற கேள்வியையும்..
'ஞான் உனக்கு அம்மையோ..' என்ற கோபத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு..
"எனக்குப் பசியில்லை ஓமனா..." என்ற வெறுமையான பதில் திகைப்பைத் தந்தது..
'ஆரானு இது..? நந்தினி மேமோ..' சந்தேகத்துடன் உற்றுப் பார்த்தாள்..
தூசி படிந்த ஓவியம் போல வாடிய முகத்துடன் இருந்த நந்தினியைக் கண்டதும் துணுக்குற்றாள்..
"எந்தா மேம் இது..? அம்மையெண்டு ஞான் விளிச்சதில மேம் வெப்பராளம் கொள்ளலையோ..?"
"நீ அப்படியா சொன்ன..? நான் கவனிக்கலை ஓமனா.."
"எந்துக்கு மேமோட வதனம் வாடிப் போயி..? சிரசு நொம்பரமோ..?"
"தலைவலியெல்லாம் இல்லை ஓமனா.."
"வல்லதும் விஜாரம் கொண்டோ..?"
"எதையும் நினைக்கலை.. போதுமா.."
"எந்தா பறயுனு மேம்..? ஷீனம் (நோய்) உண்டெண்டு நிங்க வதனம் பறஞ்ஞு.. மேம் இல்லேண்டு பறஞ்ஞு.. தணுப்பு (குளிர்) வாட்டுதோ..?"
"இல்லைன்னு சொல்றேனில்ல.."
"சுகமானோ மேம்..?"
"வளர சுகம்.. நீ போயேன்.."
"ஞான் அம்மையிடம் எந்து பறயும்..?"
"எனக்கு பசியில்லைன்னு சொல்லு.."
ஓமனா நகர மனமில்லாமல் நகர்ந்தாள்.. கதவை அடைத்துவிட்டு படுக்கையில் வீழ்ந்தாள் நந்தினி.. அவளுக்குள் பிரளயம் வெடித்தது.. திட்டமிட்டு அவளை ரவிச்சந்திரன ஜெயித்து விட்டான் என்று மனம் குமுறினாள்.. அவள் வாயாலே அவனிடம் காதல் சொல்ல வைத்து விட்டான்..
"டொக்.. டொக்.."
அறைக்கதவு மறுபடியும் தட்டப்பட்டதில் அவளுக்கு கோபம் வந்தது.. காலிங்பெல் என்ற ஒன்று எதற்கு இருக்கிறது..? அதைப்பற்றிய நினைவே இல்லாமல் ஓமனா ஒருத்திதான் கதவைத் தட்டி வைப்பாள்..
"உனக்கு அறிவு இருக்கிறதா இல்லையா..?" சப்தம் போட்டபடி கதவைத் திறந்தாள்..
"இருக்குன்னுதான் இந்த உலகம் சொல்லுது.." என்றபடி உள்ளே வந்தான் ரவிச்சந்திரன்..
'இவனா..?'
நந்தினி தொய்ந்தாள்.. அந்த மனநிலையில் அவனை எதிர் நோக்கும் சக்தி அவளிடம் இல்லை... அவளை அறியாதவன் போல மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் அறிமுகமாகி.. கோழிக் கோடில் பேகிப் பழகி.. வயநாட்டுக்கு கொண்டு வந்து வசியம் பண்ணி மயக்கி விட்ட மாயக்காரன் இவன் என்ற கோபம் அவளுக்குள் கொந்தளித்தது..
"வாட் ஹேப்பன்..?"
ரவிச்சந்திரனின் பார்வை ஊசிக் குளிராய் அவளது உடலைத் துளைத்தது.. அவளது விழிகளுடன் விழிகள் கலக்க ஆழ்ந்து பார்த்தான்.. நந்தினி சலனம் கொண்டாள்.. வெறுக்க முடியாமல் விலக முடியாமல் மறுகினாள்.. அவளை நெருங்கி அவன் அணைத்தபோது அனைத்து சஞ்சலங்களும், சந்தேகங்களும் விலகி ஓடி விட மயங்கி நின்றாள்.. அவன் குனிந்தான்.. நந்தினி ஓடி விடு என்று மனது அலற.. அவள் சிலையாக நின்றாள்.. அவளது உதட்டோடு உதடு படிய அவன் கொடுத்த ஆழ்ந்த முத்தத்தில் மூச்சுத்திணறினாள்..
"ஏன் பசிக்கலை..? சாப்பிட வாடி.."
கிசுகிசுப்பாய் அவன் அழைத்த போது மறுக்க முடியவில்லை.. ஆட்டுக்குட்டியைப் போல அவனைப் பின் தொடர்ந்தவளுக்குள் தோற்றுப் போனவளின் சோர்வு வந்தது..
'நானே நானா..? யாரோதானா..?' என்ற கேள்வி எழுந்தது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -231
எண்ணியிருந்தது ஈடேற -231
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-231.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-231.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy