எண்ணியிருந்தது ஈடேற -230

230 தரங்கிணியும் நந்தினியை ஓடி விடச் சொல்கிறாள்.. அஜந்தாவும் ஓடிவிடச் சொல்கிறாள்.. நந்தினியை ஓட வைப்பதில் அவர்கள் இருவரும் காட்டிய ...


230


தரங்கிணியும் நந்தினியை ஓடி விடச் சொல்கிறாள்.. அஜந்தாவும் ஓடிவிடச் சொல்கிறாள்.. நந்தினியை ஓட வைப்பதில் அவர்கள் இருவரும் காட்டிய ஆர்வத்தில் நந்தினிக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது..
எதிலும் ஒன்று படாமல் எதிரும் புதிருமாக நிற்கும் அஜந்தாவும் தரங்கிணியும் இந்த ஒன்றில் மட்டும் ஒன்று பட்டு நிற்கிறார்களே.. ஒருவருக்கொருவர் எதிரியாக இருப்பவர்களின் பொது எதிரியாக நந்தினி மாறி விட்டாளா..?
"உனக்குப் பிடித்ததைச் செய்யத்தான் நான் பிறப்பெடுத்திருக்கிறேனா..? ஓடிப் போயிடுன்னு நீ சொன்னா நான் ஓடிப் போயிடுவேனா..? இருந்தாலும் உனக்கு இத்தனை தைரியம் ஆகாது அஜந்தா.."
"அப்ப நீ ஓடிப் போக மாட்ட.."
"மாட்டவே மாட்டேன்.."
"இங்கேயே இருந்து ரவியத்தானை விவாகம் கழிக்கப் போற..?"
"அஃதே.. அஃதே.."
"ஓ.. ஏன் நந்தினி.. எதுக்காக நீ தஞ்சாவூரை விட்டு ஓடி வந்த..?"
"அது உனக்குத் தேவையில்லாத விசயம்.."
"அங்ஙனம் நீ பறயக் கூடாது நந்தினி.. எனிக்கு எதி வேணும்னு ஞான்தான் பறயனும்.."
"உனக்குத்தானே.. உன் முதுகில் ஒரு கோடியை வைத்துக்கிட்டு அடுத்தவங்க முதுகில் ஒன்றாவது கிடைக்காதான்னு தேடிக்கிட்டு அலைகிற ஜென்மம் தானே நீ.."
"சொல்லிக்க.. நான் அங்ஙனதான்.. எந்தா இப்ப.. எவரோ ஒரு பெல்ட் மன்னனாமே.. ஆ ஆளை விவாகம் கழிக்க மாட்டேன்னு நீ வயநாட்டுக்கு ஓடி வந்தாயாமே.."
"ஆமாம்.. அதுக்கு என்ன இப்ப..?"
"இதிக்கு நீ வயநாட்டுக்கு ஓடி வந்திருக்க வேண்டிய தேவையே இல்லையே நந்தினி.. பேசாம தஞ்சாவூரிலேயே இருந்திருக்கலாமே.."
"என்ன உளருகிற..?"
நந்தினி சீறினாள்.. அஜந்தா சொல்ல வருவதில் இருக்கும் உண்மை எதுவாக இருக்கக்கூடும் என்று அறிய விரும்பாமல் அவளது மனம் பதைத்தது.. அஜந்தா ஒன்றும் நந்தினியின் நலம் விரும்பியல்லவே.. அவள் சொல்லப் போகும் உண்மை எதுவாக இருந்தாலும் அது நந்தினிக்கு நலம் உண்டாக்குவதாக நிச்சயம் இருக்காது..
"அவதான் உளருகிறான்னு தெரியுதில்ல.. அப்புறமும் ஏன் இங்கே நின்று டயத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கிற..?"
ரவிச்சந்திரனின் கடுமையான குரல் அவளைக் காப்பாற்றி விட்டது.. அவன் வந்து விட்டான் என்ற நிம்மதியில் நந்தினியின் சுவாசம் சீரானது.. அவளது திணறல் குறைவதை ஓர் எள்ளலுடன் கவனித்த அஜந்தா..
"நந்தினியிடம் பெல்ட் மன்னனைப் பற்றிப் பேச ஆரம்பிக்கும் போதே நினைத்தேன்.. அத்தான் உடனடியாய் வந்து விடுவார்ன்னு.. நினைத்தது நடந்து விட்டது.." என்று குத்தலாகச் சொன்னாள்..
"பாஸ்.." நந்தினி ஆரம்பிக்கும் போதே..
"நீ.. போ.." என்று பட்டுக் கத்தரித்தான் ரவிச்சந்திரன்.
அவனது முகத்தைப் பார்த்த நந்தினி திகைத்தாள்.. கட்டுக்கடங்காத ஆத்திரத்தை அவன் கட்டுப் படுத்திக் கொண்டிருந்தான்.. சினத்தில் அவனது கண்கள் சிவந்து பளபளத்தன..
'என்ன ஆச்சு இவனுக்கு..' நந்தினி தயங்கினாள்..
"உன்னைப் போகச் சொன்னேன்.."
ரவிச்சந்திரன் காட்டுக் கத்தலாகக் கத்தினான்.. அவன் போட்ட சப்தத்தில் ஆங்காங்கே வேலை செய்து கொண்டிருந்த வேலையாள்கள் கையிலிருந்ததை நழுவ விட்டு நடுங்கி நின்றார்கள்.. நடுக்கத்துடன் பின் வாங்கிய நந்தினி ஒரே ஓட்டமாக மாடிப் படிகளில் ஏறி ஓடி விட்டாள்.. அவளது அறைக்கப் போக வேண்டுமானால் அஜந்தாவைக் கடந்து செல்ல வேண்டும்.. அப்படிக் கடக்கும் போது அஜந்தா வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டாள்.. வம்பிழுப்பாள்.. நந்தினி அவளையுமறியாமல் தேங்கி நின்று விடுவாள்.. ரவிச்சந்திரன் இருக்கும் நிலைமையில் நந்தினி தேங்கி நின்றால் சும்மா விடமாட்டான் என்று தோன்றியது..
'அடி பின்னி விடுவான்..'
ஏற்கனெவே களைத்துப் போன மனதுடன் ஓய்ந்திருந்தவளுக்கு அடி வாங்கத் தெம்பில்லை.. அதனால் அங்கேயிருந்து தப்பித்தால் போதுமென்று அவள் கால் போன போக்கில் மாடிப் படிகளில் ஏறி விட்டாள்.. படிகளின் முடிவில் இருந்த அரண்மனையில் மேல்மாடி 'தொங்கும் தோட்டம்' போல அவளை 'வா' வென்று வசீகரித்து அழைத்தது..
எங்கு பார்த்தாலும் தொட்டிச் செடிகள்.. இரும்பு வளைவுகளில் படர்ந்திருந்த கொடி முல்லை.. உட்கார்ந்து ரசிக்க சாய்வான நாற்காலிகள்..
அங்கிருந்து பார்த்தால் வயநாட்டின் மலைப்பாதையும், தேயிலைத் தோட்டங்களும் வரைபடம் வைத்து வரைந்து தீட்டிய சித்திரம் போல கவின் மிகு அழகோடு காட்சியளித்தன.. பக்கத்தில் நிற்பதைப் போல மேற்கு தொடர்ச்சி மலைகள் பனிபடர்ந்த மேகங்களோடு மயக்கின..
'இத்தனை நாளா இங்கே வராம மிஸ் பண்ணிட்டேனே..'
அஜந்தாவையும், தரங்கிணியையும் மறந்தவளாய் இயற்கையழகில் தன்னை மறந்து லயித்து சுற்றி வந்தாள் நந்தினி.. மெலிதான கேவல் ஒலி அவளது ரசனையைக் கலைத்தது.
'யார் அழுகிறது..?'
கொடி வீட்டுக்குள் எட்டிப் பார்த்தால் அங்கே ரம்யமாலினி தன்னந் தனியளாய் அமர்ந்து விசும்பிக் கொண்டிருந்தாள்..
வயநாட்டு அரண்மனையின் இளவரசி அநாதை போல தனித்து அமர்ந்து விசும்பிக் கொண்டிருந்தது நந்தினியின் மனதை பாதித்தது.. தன் துக்கத்தை மறந்தவளாக அவள் தோழியின் துக்கத்தை ஆற்ற அருகில் விரைந்தாள்..
"ரம்யா.."
"நந்தினி.."
ஆறுதலளிக்க தோழி வந்து விட்டதில் வாய் விட்டுத் தேம்பி அழுதாள் ரம்யமாலினி.
"ம்ப்ச்.. அழக் கூடாது.. உன் அண்ணன் சொன்னதுக்கா இப்படி அழுகிற..?" பக்கத்தில் உட்கார்ந்து தோழியைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டாள் நந்தினி.
"இல்லை நந்தினி.. அண்ணன் கோபப்படுதுன்னு அழலை.. அண்ணனுக்குத் தரங்கிணியைக் கண்டால் ஆகாம போயிருச்சேன்னுதான் அழுகிறேன்.." ரம்யா விம்மினாள்..
தன்னைக் கட்டுக்குள் கொண்டுவர வெகுவாக சிரமப்பட்டாள் நந்தினி.. எவளால் நந்தினியின் வாழ்க்கை அழிந்து விடுமோ.. அவளைத் தன் தமையன் விலக்கி நிறுத்துகிறான் என்று அழுது கொண்டிருக்கிறாள் ரம்யமாலினி.. அவளுக்கு நந்தினி ஆறுதல் சொல்லியாக வேண்டும்..
'என்ன கொடுமை இது சரவணன்..!'
திருப்பரங்குன்றத்தில் இருக்கும் சரவணப் பெருமானை அழைத்து பெருமூச்சு விட்டாள் நந்தினி..
"தரங்கிணியை அண்ணனுக்கு பிடிக்காமப் போனதுன்னா அவங்களோட அண்ணனையும் அண்ணனுக்குப் பிடிக்காம போயிரும் நந்தினி.." ரம்யா புலம்பினாள்..
"அப்படியேன் நினைக்கிற..? உன் அண்ணன் சொல்வதும் உண்மையாய் இருக்கலாமில்லையா..? அஜந்தாவை விட தரங்கிணி டேன்ஜரஸ் லேடின்னு உன் அண்ணன் நினைக்கிறார்.. அதனால் உன்னை வார்ன் பண்ணுகிறார்.. இது தப்பில்லையே.."
"இது எனக்குத் தெரியாதுன்னா நினைக்கிற..?"
ரம்யமாலினியின் கேள்வியில் நந்தினிக்குத் தூக்கிவாரிப் போட்டது.. தெரிந்தும்மா அழுது கொண்டிருக்கிறாள் என்ற வியப்பு மேலிட்டவளாக..
"என்னப்பா சொல்கிற..?" என்று கேட்டாள்..
"அஜந்தாவை விட தரங்கிணி டேன்ஜரஸ்தான்.. அதனால்தான் அவங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது.. யு நோ.. அஜந்தா தரங்கிணியிடம் பயப்படுவாள்.. அபராஜிதனையே ஓர் வழி பண்ணி விடும் திறமை தரங்கிணியிடம் இருக்கிறது நந்தினி.."
எங்கே சுற்றினாலும் இவள் அபராஜிதனிடம் வந்துதான் நிற்பாள் என்று நினைத்துக் கொண்டாள் நந்தினி.. அஜந்தாவையும் அபராஜிதனையும் எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி.. அவர்கள் ரம்யமாலினியின் ஆதர்சத்திற்கு உரியவர்கள் என்பதில் நந்தினியின் மனம் வலித்தது..
"சரி சரி.. விடு ரம்யா.. உன் அண்ணன் ஏதோ மூட் அவுட்டில் இருந்திருப்பார்.. சுள்ளுன்னு பேசிட்டார்.. நாளைக்கே நாம் எடுத்துச் சொன்னால் கேட்டுக்குவார்.." மனம் கனக்க தோழியை சமாதானப் படுத்தினாள் அவள்..
"அண்ணனாவது.. நாம் சொல்கிறதை கேட்டுக் கொள்வதாவது அண்ணனைப் பற்றி நீ இன்னும் சரியாத் தெரிந்துக்கலை நந்தினி.."
ரம்யா என்னவோ இயல்பாகத்தான் இதைச் சொன்னாள்.. நந்தினிக்குத்தான் அது சுளீர் என்று மனதில் தைத்தது..
'இதைத்தானே அஜந்தாவும் சொல்கிறா.. நான் அவனைச் சரியாத் தெரிந்துக்கலைங்கிறா.. எனக்குத் தெரிந்த ரவிச்சந்திரன் வேறு ஒருவனா..? உண்மையில் அவன் யார்..?'
'பெல்ட் மன்னன்..' அஜந்தாவின் குரல் ஒலிப்பதைப் போல பிரமை ஏற்பட காதுகளைப் பொத்திக் கொண்டாள்..
ரம்யமாலினிக்கு இருந்த மனநிலையில் அவள் நந்தினி படும் பாட்டைக் கவனிக்கவே இல்லை.. தன் போக்கில் புலம்பிக் கொண்டிருந்தாள்..
"அண்ணன் ஒருவரைப் பற்றி இப்படின்னு டிசைட் பண்ணி வைத்துட்டா அதிலிருந்து மாறவே மாறாது.. யார் சொன்னாலும் கேட்டுக்காது.. அத்தோடு அண்ணனுக்குப் பிடிக்காத எதையும் யாரும் பேச மாட்டாங்க நந்தினி.."
"உன் அத்தையும், அத்தை குடும்பமும், தாத்தா பாட்டியும் பேசுவாங்களே.."
நந்தினி சிரிக்காமல் சொன்னாள்.. ரம்யமாலினி மெல்லச் சிரித்தாள்.. அவளது இதழ்களில் விரிந்த புன்னகையில் நந்தினியின் மனம் சற்று லேசானது..
"நீ இருக்கியே.."
செல்லமாக தோழியின் கைகளைத் தட்டினாள் ரம்யா.. மெதுவாக பேச்சை மாற்ற முயற்ச்சித்தாள் நந்தினி.. அவளது முயற்சிக்குத்தான் பலன் உண்டாகவில்லை.. எந்தத் திசையில் பேச்சைத் திருப்பினாலும் தரங்கிணியைப் பற்றிய பேச்சிற்கே வந்து நின்றாள் ரம்யமாலினி..
"நான் இருக்கேனில்ல.. அழாம எழுந்து வா.."
"அண்ணன் ஏன் தரங்கிணி மேலே கோபமா இருக்கு..?"
"யாருக்குத் தெரியும்..? ஏதாவது ரீசன் இருக்கும்.. அந்த மலையைப் பார்த்தியா.. மிஸ்ட் படிஞ்சு பார்க்க அழகா இருக்கில்ல.."
"தரங்கிணி மேலே இருக்கிற கோபம் அவங்க அண்ணன் மீதும் இடம் மாறிரும் நந்தினி.."
"அவங்க பிரண்ட்ஸ்.. இன்றைக்கு அடித்துக்கு வாங்க.. நாளைக்கு கூடிக்குவாங்க.. நீ அந்தப் பறவையைப் பாரேன்.."
"அண்ணன் தனபாலனோடு அடித்துக்கக் கூடாது நந்தினி.. கூடிக்கனும்.. அதுதான் எனக்கு வேண்டும்.."
"அப்படியே நடக்கட்டும்.. நீ அதை விட்டு வெளியில் வா ரம்யா.. ஆக்சுவலா உங்க அரண்மனையின் மொட்டை மாடியிலும் தோட்டம் இருக்கும்ன்னு எனக்குத் தெரியவே தெரியாது.. தெரிஞ்சிருந்தா தினமும் இங்கேதான் டேரா போட்டிருப்பேன் தெரியுமா..?"
"அண்ணனுக்கு ஏன் என் மனது தெரியாமல் போனது நந்தினி..?"
நந்தினிக்கு கொடி வீட்டில் முட்டிக் கொள்ளலாமா என்றிருந்தது.. வாழ்க்கையே வெறுத்துப் போனது.. அவள் என்னதான் செய்வாள்..? என்னதான் செய்ய வேண்டும்..?
"எனக்காக ஒன்று செய்வாயா நந்தினி..?"
ரம்யமாலினியே கேட்டு விட்டாள்.. என்ன செய்வது என்று தெரியாமல் வெறுத்துப் போய் உட்கார்ந்திருந்த நந்தினி இயந்திரம் போல தலையை ஆட்டி வைத்தாள்..
எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு ஏதேனும் ஒன்றைச் செய்து தொலைக்கலாம் அல்லவா..?


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -230
எண்ணியிருந்தது ஈடேற -230
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-230.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-230.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy