எண்ணியிருந்தது ஈடேற -229

229 "யெஸ்.. யெஸ்.. ஐ கேட்ச் இட்.." இவன் எதைப் பிடித்து விட்டான் என்ற நினைவோடு அரண்மனைக்குள் விரைந்தாள் நந்தினி.. அவனுடன...


229


"யெஸ்.. யெஸ்.. ஐ கேட்ச் இட்.."
இவன் எதைப் பிடித்து விட்டான் என்ற நினைவோடு அரண்மனைக்குள் விரைந்தாள் நந்தினி.. அவனுடன் திருவனந்தபுரம் போகப் போகிறாள் என்று நினைத்தாலே இனித்தது.. ஆலப்புழாவின் படகு வீட்டின் தனிமையும் இனிமையும் திருவனந்தபுரத்திலும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உடலும் மனமும் பரபரத்தன..
'திங்ஸை பேக் பண்ணனும்..'
வேகமாக மாடிப்படிகளில் தாவி ஏறி அவளது அறை இருந்த திசைப்பக்கம் வளைந்து திரும்பியவள் அஜந்தாவின் மீது மோதி விட்டாள்..
'இவளுக்கு இதுவே வேலையாகி விட்டது.. யாழினி பாட்டியிடம் பற்ற வைக்கப் போனவ இங்கே என்ன பண்ணுகிறா..? வேவு பார்க்கிறாளா..?'
எரிச்சலுடன் இவள் முகம் சுளிக்க.. அவளோ..
"உன் பிரண்ட் என்னன்னா முகத்தை குழ நீளத்துக்கு தூக்கி வைத்துக்கிட்டு மொட்டை மாடியில் போய் உட்கார்ந்திருக்கிறா... நீ என்னடான்னா அவளோட அண்ணன்கூடக் கட்டிப் பிடித்து ரொமான்ஸ் பண்ணிட்டு வர்றே.. என்னே ஓர் தோழமை..! வாஹ்ரே வா.. மூழ்காத ஷிப் உங்க பிரண்ட்ஷிப்தான் போ.." என்றாள்..
'ரம்யாவை மறந்துட்டேனே..' நந்தினி தவித்துப் போனாள்..
அஜந்தா சொல்வது உண்மைதானே என்றிருந்தது.. ரம்யாவைப் பற்றிய எண்ணமில்லாமல் சுயநலமாய் ரவிச்சந்திரனுடன் காதல் செய்த குற்றஉணர்வு வந்தது.. அதை அஜந்தாவிடம் காட்டிக் கொள்ளாமல்..
"எங்க பிரண்ட்ஷிப்பை நீ பாராட்டறது இருக்கட்டும்.. உன்னோட பேச்சுத்தமிழை நான் பாராட்டித்தான் ஆகனும்.. தஞ்சாவூர்காரியான எனக்கே இப்படி சரளமா தமிழ் கொஞ்சி விளையாடாது.. உன்னிடம் விளையாடுது பாரு.. இப்படிப் பேசற நீ, உன் தாத்தா, பாட்டியின் முன்னாலே என்கிட்டப் பேசறப்ப 'ஞான், எண்ட'ன்னு மலையாளத்தை துவம்சம் பண்ணியே.. ஏன்..? நீ மலையாளம், நான் தமிழ்ன்னு பிரிச்சுக் காண்பிக்கிற எட்டப்பி வேலைதானே..?" என்று பேச்சை மாற்றினாள்..
"எட்டப்பியா..? அது என்ன எட்டப்பி..?"
"எட்டப்பனுக்கு பெண் பால்.. உனக்கான பொருத்தமான நிக் நேம்.. உனக்குச் சொன்னாப் புரியாது.."
"ஓகே.. லீவ் இட்.."
அஜந்தா அலட்சியமாக தோள்களைக் குலுக்கிக் கைகளை விரித்ததில் நந்தினிக்கு ஆச்சரியமாகி விட்டது.
அவ்வளவுதானா..? வேறு ஒன்றுமே இல்லையா..? எப்படி..? அஜந்தா எந்த ஒரு சின்ன நிகழ்வையும் ஊதியே பெரிய நிகழ்வாக்கி இமயமலையைப் போல உருவாக்கி விடுபவள் என்ற உண்மை நந்தினியை நிரடியது..
அப்பேற்பட்ட லங்கிணியான அஜந்தாவுக்கு 'எட்டப்பி' என்ற பட்டப் பெயரை நந்தினி சூட்டிக் கொண்டிருக்கிறாள்.. அதை இரண்டு கைகளையும் விரித்துத் தோள்களைக் குலுக்கி 'ஓகே.. லீவ் இட்..' என்று மூன்றே வார்த்தைகளில் அஜந்தா புறம் தள்ளுகிறாள் என்றால் நம்பும்படியாகவா இருக்கிறது..? அதிலும் அப்போதுதான் நந்தினி அஜந்தாவின் மூக்கை உடைத்து ஓட்டி விட்டிருக்கிறாள்..
'இவள் அஜந்தாதானா..? நந்தினி இமைகளைக் கொட்டி உறுத்துப் பார்த்தாள்..'
'ஏன் இன்னும் இவ யாழினி பாட்டியிடம் பற்ற வைக்கப் போகலை..?'
"என்ன அப்படிப் பார்க்கிற..?"
"நத்திங்.."
"உனக்கு ஏற்கனெவே சொல்லியிருக்கிறேன் நந்தினி.. ஒன்றுமில்லையென்று நாம் நினைப்பதிலேதான் நிறைய உண்மைகள் ஒளிந்திருக்கும்.."
மர்மப்பார்வையுடன் அமானுஷ்யக் குரலில் தலையை ஆட்டியபடி மோகினி போல அஜந்தா பேசிய தினுசில் நந்தினிக்குத் 'திக்'கென்று ஆனது.
"உண்மைகளைப் பற்றி நீ பேசக் கூடாது அஜந்தா.. உண்மைக்கும் உனக்கும் ரொம்பத் தூரம்ன்னு விரல் சுவைக்கிற பிள்ளை கூடச் சொல்லி விடும்.." மனதின் பயத்தை மறைத்தபடி அலட்சியமாகச் சொன்னாள் நந்தினி..
"ஸோ வாட் நந்தினி..?"
அந்தக் கேள்வியையும் அஜந்தா அனாசியமாகக் கடந்ததில் நந்தினியை பயம் பீடித்துக் கொண்டது.. இனம் புரியாத பயம்.. மனதில் செல்லரிக்கிற பயம்.. துரத்தும் அந்த பயத்திடமிருந்து ஓடி ஒளிந்து கொள்ள இடமில்லாமல் களைத்துப் போனாள் நந்தினி..
அஜந்தா பேசும் பேச்சுக்களில் ஏதோ மறைபொருள் இருப்பதைப் போல அவளுக்குத் தோன்றி வைத்தது.. அந்த மறைபொருள் வெளிப்படுமானால் நந்தினியின் நிம்மதி குலையக் கூடும் என்று அவளின் ஆழ்மனம் எச்சரித்து அறிவுறுத்தியது. ஆழ்மனதின் உந்துதலால் நந்தினி கூடுமான வரை அஜந்தாவின் பார்வையில் அகப்படாமல் தள்ளியே இருந்தாள்.. அந்த அரண்மனைக்குள் வந்ததிலிருந்தே அஜந்தாவைக் கண்டால் அவள் ஆறடிக்குத் தள்ளி நிற்பவள்தான் என்றாலும் இப்போது அது அதிகமாக ஆறடி நூறடியாகியிருந்தது..
அஜந்தாவிடமிருந்து விலகி நிற்க நந்தினி நினைத்தாலும் அஜந்தா அதற்கு விடுவதாக இல்லையே.. அஜந்தாவின் கண் பார்வைக்கு அகப்படாமல் பதுங்கிப் பதுங்கி நந்தினி நடமாடினாலும் அவளுடைய முதுகுக்குப் பின்னால் வந்து நின்று சொரிந்து விட்டுத் தன் இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தாள் அஜந்தா..
'இப்படிக் கண்ணைக் கட்டிக்கிட்டு மயக்கம் வருகிற அளவுக்கு சோதித்து வைக்கிறாளே..' நந்தினிக்கு ரோதனையாக இருந்தது..
எங்கிருந்தோ வந்தவளையே இந்த அளவுக்கு அஜந்தா சோதித்து வைக்கிறாளே.. அந்த அரண்மனையில் பிறந்து வளர்ந்த ரம்யமாலினியை எந்த அளவுக்கு வாட்டி வதக்கியிருப்பாள்..?
'பாவம் ரம்யா..'
உடனடியாக ரம்யாவைப் பார்த்து ஆறுதல் கூற வேண்டும் என்று அவளது மனது பறந்தது.. நகரவிடாமல் வழியை மறைத்து அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருந்தாள் அஜந்தா..
"எந்தா நந்தினி..? எந்துக்கு நந்தினி இத்தரயும் ஆலோசிக்கனுமாம்..?"
"இதோ பார்.. நான் யோசிக்கிறதையெல்லாம் நீ கேள்வி கேட்கக் கூடாது.. அதைச் சொன்னா நீ தாங்க மாட்ட.."
"ஓ..! நந்தினியா அப்படியொரு முடிவுக்கு வந்து விடலாமோ.. ஈ அஜந்தாவின் மனது எதையும் தாங்கும் இரும்பு மனது.."
"கல் மனசுன்னு சொல்லு.. கேட்டுக்கறேன்.. இரும்பு மனசுன்னு சொல்லாதே.. ஆமாம்.. உனக்கெதுக்கு இந்த வேலை..? என் மனசு.. என் யோசனை.. அதைத் தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்யப் போற..?"
"எத்தனையோ செய்யலாம்.."
"நீ எதையோ செய்து தொலை.. அதையெல்லாம் மத்தவங்க யோசனையைக் கேட்டுச் செய்து தொலை.. என் யோசனையைப் பத்திக் கேள்வி கேட்டு பி.ஹெச்.டி பட்டம் வாங்கனும்னு மட்டும் நினைக்காதே.."
"எந்துக்கு நந்தினி இத்தரயும் அலுத்துக்கறதாம்..?"
"ஒன்னு தமிழில் பேசு... இல்லேன்னா மலையாளத்தில சம்சாரி ரெண்டும் கெட்டானாய் என் உயிரைக் குறைக்காதே.."
"ரெண்டும் கெட்டானா..? ஞானோ..? ஹா.. ஹா.. வல்லிய ஜோக்கல்லோ.."
கடகடவென்று நகைத்தவளைப் பதைப்புடன் பார்த்தாள் நந்தினி.. இத்தனை பேச்சுக்கு இந்நேரம் கலவரம் வெடித்திருக்க வேண்டும்.. ஒன்றும் இல்லாத பேச்சிற்கே அந்த அரண்மனையை கலவர பூமியாக்கி விட்டு ஓய்பவள் அஜந்தா.. அவளை வன்மையாகத் தாக்கும் வார்த்தைகளை வெகு இலகுவாக கடக்கிறாள் என்றால் அது நன்மைக்கான அறிகுறியல்ல.. ஆழப் புதைந்து கிடக்கும் பூகம்பத்திற்கான அறிகுறி..
"உன்னை ரெண்டும் கெட்டான்னு யாரும் சொல்ல மாட்டாங்க அஜந்தா.. உன்னால் ஆக்கவும் முடியும்.. அழிக்கவும் முடியும்ன்னு எனக்குத் தெரியும்.. ஜெகஜால கில்லாடி நீ.."
"ஓ.. நந்தினி அங்ஙன பறஞ்ஞோ..?"
"அங்ஙனதான் பறஞ்ஞு.. வழியை விடறயா..?"
"எந்துக்கு இத்தனை வேகம் நந்தினி..? உண்மையைத் தேடி ஓடுகிறயா..?"
"ஆமாம்ன்னுதான் வைத்துக்கயேன்.."
"அந்த உண்மை எது அல்லது யார் நந்தினி..? ரவி அத்தானோ..?"
"இந்தக் கேள்விக்கு கன்பர்மா ஆமாம்ன்னுதான் பதில் சொல்வேன்.. ரவிக்கு மறுபெயர் உண்மை.."
"அங்ஙனவோ..? ஹா.. ஹா.. நீ அப்ப பறஞ்சதை விட இதுவல்லோ வல்லிய ஜோக்.. ஹா.. ஹா.."
"அஜந்தா.."
"அடங்கு நந்தினி அடங்கு.. ஓவர் ஆட்டம் உனக்கு ஆகாது.."
"இதை நான் சொல்லனும்.."
"இப்போ இதை நான் சொல்லி நீ கேட்க வேண்டிய நேரம் வந்திருக்கு.. ரவியத்தான் உன்னிடம் சொன்னாரே.. அவருடைய இன்னொரு முகத்தை நீ பார்க்க வேண்டியிருக்கும்ன்னு.. அந்த இன்னொரு முகம் எதுவென்று உனக்குத் தெரியுமா..?"
நந்தினிக்குள் அதிர்வலைகள் தோன்றின.. 'ஓடி விடு நந்தினி..' என்று அவளது அடி மனது கூக்குரலிட்டது.. அவளுக்குத் தெரியாத ரகசியம் ஒன்றை அஜந்தா
அறிந்து வைத்திருக்கிறாள் என்று தோன்றியது.. அது நந்தினியின் காதலை வேரோடு பிடுங்கி எறிந்து விடும் ரகசியமாகவும் இருக்கலாம்.. அதையறிந்தால் நந்தினி உயிர் வாழ்வாளா..?
"ரவியைப் பற்றி எனக்குத் தெரியும்.. நீ சொல்லித் தெரிந்துக்கனும்ங்கிற அவசியமில்லை.." நந்தினி விரைய முயன்றாள்..
"ஓ..ஓ..ஓ..." அஜந்தா கை நீட்டி அவளைத் தடுத்தாள்..
"உனக்கென்ன பைத்தியமா..?"
"ஊஹீம்.. உனக்குத்தான் பைத்தியம்.."
"எதுக்கு இப்ப வழியை மறைக்கிற..? உன் பாட்டியிடம் பற்ற வைக்கப் போகலையா..?"
"நீயேன் ஓடப் பார்க்கிற..?"
"உன்னைக் கண்டால் ஓடித்தானே ஆகனும்..?"
"உண்மையைக் கண்டு நீ ஓடற நந்தினி.. என்னைக் கண்டு நீ ஓடலை.. உண்மையை ஃபேஸ் பண்ண உனக்கு பயம்.."
இப்படியொரு நேர் கொண்ட பார்வையை அஜந்தா பார்க்கக் கூடும் என்று எவரேனும் சொல்லியிருந்தால் 'ஹ..' என்ற ஒற்றை எழுத்தில் அதைப் புறக்கணித்து கெக்கலி கொட்டிச் சிரித்திருப்பாள் நந்தினி..
எவரும் சொல்லாமல் நேருக்கு நேராய் அவள் பார்வையை சந்திக்க நேரிட்டதில் விதிர்த்துப் போய் விட்டாள்.. 'பயமா..? எனக்கா..? ஹ..!' என்று ஏன் அவளால் சொல்ல முடியவில்லை..?
"நீ தூண்டிலைப் போட்டு விலங்கை இழுக்கிற ஆளு.. உன்னிடம் எனக்கென்ன பேச்சு..?" விரைய முயன்றாள்..
"ஓடப் பார்க்கிறயா..? எத்தனை நாள் ஓடி ஒளிவ நந்தினி..? உண்மையை ஓர்நாள் ஃபேஸ் பண்ணித்தானே ஆகனும்..?"
அஜந்தாவின் அழுத்தமான கேள்வியில் அசையாமல் நின்றாள் நந்தினி.. இமைகளை ஓர்முறை இறுக்கி மூடித் திறந்தாள் அவளது மனம் படபடவென அடித்துக் கொண்டது..
சிந்தனையை ஓர்முகப் படுத்தி யோசிக்கும் போது அஜந்தா சொல்வது சரிதானோ என்ற கேள்வி எழுந்தது.. அவள் ஏன் அஞ்சுகிறாள்..? அஜந்தா சொல்லப் போகும் உண்மை அவள் வாழ்வை சூறாவளியாக்கி சிதைத்து விடும் என்ற பயமா..?
ஓடக்கூடாது என்று தீர்மானித்தாள் நந்தினி.. ஓட முயன்றால்தான் அஜந்தா கேள்வி மேல் கேள்வியாக கேட்டு ஒரு வழியாக்குவாள்.. ஓடாமல் எதிர்த்து நின்றால் என்ன செய்வாள்..?
"என்ன உண்மை..?" நந்தினி நிதானமாக கேட்டாள்..
"ஓ.. உண்மையை ஃபேஸ் பண்ண நந்தினி தயாராயி.." அஜந்தா உதட்டைக் குவித்தாள்..
"உண்மையைப் பேச நீயே தயாராக இருக்கும் போது அதை ஃபேஸ் பண்ண நான் தயாரா இருக்க மாட்டேனா..? சொல்லு.. சொல்லு.."
"சொல்லவா..?"
"ஏய்ய்.. சொல்லுன்னுதானே நானும் சொல்றேன்.."
"ரவியத்தானுக்கு இன்னொரு முகம் உண்டு.."
அஜந்தா நிறுத்தி நிதானமாகச் சொன்னாள்.. ஊடுறுவும் அவளது பார்வையில் நந்தினியின் முதுகுத் தண்டு ஜில்லிட்டது.. உறைபனியின் குளிர் முழுவதையும் அவளுக்குள் அவள் உணர்ந்தாள்..
"இருக்கட்டும்.. அதைப்பற்றி உனக்கென்ன வந்தது..?"
"எனக்கென்ன வந்ததா..? என் கண் முன் நடக்கும் கண்ணாமூச்சி விளையாட்டைப் பற்றி உன்னிடம் சொல்ல வேண்டாமா..?"
"வேண்டாம்.."
"வேண்டாமா..? உண்மை விளம்பியான நந்தினியா இதைச் சொல்வது..?"
"உனக்கு என்னதான் வேண்டும் அஜந்தா..?"
ஓய்ந்து போனவளாக கேட்டாள் நந்தினி.. அஜந்தா ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டைத் தாங்கி நிற்கும் சக்தி அவளுக்கு இல்லை..
"நீ ஓடிப் போக வேண்டும்.. இந்த வயநாட்டை விட்டு.. ரவியத்தானின் வாழ்க்கையை விட்டு திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே தஞ்சாவூரைப் பார்த்துத் தலை தெறிக்க ஓடிப் போக வேண்டும்.. என்ன..? ஓடிப் போயிடறயா..?"
ஓடிவிடு.. ஓடிவிடு.. ஓடிவிடு..
நந்தினியின் காதுகளில் பெருத்த கூக்குரல் ஒலிப்பதைப் போன்ற பிரமை ஏற்பட்டது.


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -229
எண்ணியிருந்தது ஈடேற -229
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-229.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-229.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy