எண்ணியிருந்தது ஈடேற -228

228 அந்த ஓர் நொடியே நந்தினிக்குப் போதுமானதாக இருந்தது.. அவளைச் சுற்றிக் கவிந்திருந்த மன இருள் விலகி அங்கே பிரகாச வெள்ளம் பீறிட்டுப் ப...


228

அந்த ஓர் நொடியே நந்தினிக்குப் போதுமானதாக இருந்தது.. அவளைச் சுற்றிக் கவிந்திருந்த மன இருள் விலகி அங்கே பிரகாச வெள்ளம் பீறிட்டுப் பாய்ந்தது.. கழிந்த மணித்துளிகளில் அவளை உயிர்ப்பித்த அந்த மணித்துளியை சேகரித்து தன் மனதில் பத்திரப்படுத்திக் கொண்டாள் நந்தினி.. அவளுடைய மனதுக்கு இனியவனின் மனதுக்கு இனியவளாக தரங்கிணி இல்லையென்பதில் அவளது மனம் ஆறுதலடைந்தது..
"அவள் எனக்கு வேண்டியவளா..?"
முகம் சுருங்க ரவிச்சந்திரன் கேட்ட தொனி கடினமாக இருந்து வைத்ததில் ரம்யமாலினியின் முகம் வாடி விட்டது.. அதில் நந்தினியின் மனது சங்கடம் கொண்டது..
"ரம்யா ஒன்றும் தப்பாய் சொல்லவில்லையே.." ரம்யாவுக்காக பரிந்து பேசினாள்..
"உன்னைக் கேட்டேனா..?" ரவிச்சந்திரன் அவளை உறுத்துப் பார்த்த பார்வையில் நந்தினிக்குள் நடுக்கம் கலந்த சுகம் உண்டானது..
அவனது கோபத்தில் பயம் வந்தாலும் அந்தக் கோபம் தரங்கிணியைப் பற்றிய பேச்சின் மீதானது என்பதில் சுகம் வந்தது..
"இல்லை.. நானும் ரம்யாவும் தான் வாக்கிங் போனோம்.." நந்தினி சொல்ல ஆரம்பிக்கும் போதே..
"ஷட்-அப்.." என்று உறுமினான் ரவிச்சந்திரன்..
உடல் தூக்கிப் போட வாயை மூடிக் கொண்டாள் நந்தினி..
"வாயை மூடுன்னு சொன்னேன்.. ஒரு தரம் சொன்னால் புரியாதா..? சொல்பேச்சுக் கேட்கக் கூடாதுன்னு பிடிவாதமா..?"
இல்லை பாஸ் என்று சொல்லத்தான் நினைத்தாள்.. அதைச் சொல்ல வாயைத் திறந்தாக வேண்டுமே.. அவன்தான் வாயை மூடச் சொல்லிக் கத்திக் கொண்டிருக்கிறானே.. வாயைத் திறந்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமே என்று வாய்க்கு இரட்டைத் தாழ்ப்பாள் இறுக்கி மூடி விட்டாள்..
"லுக் அட் மி ரம்யா.. தரங்கிணியொன்றும் எனக்கு வேண்டியவளில்லை.. அவளுடைய அண்ணன் என் கிளாஸ்மேட் அண்ட் பிரண்ட்.. அவங்க ஃபேமிலி நமக்கு ரிலேட்டிவ்ஸ்.. தட்ஸ் ஆல்.. தனியாய் எனக்கும் அவளுக்கும் முடிச்சுப் போடாதே.."
"ஐ ஆம் ஸாரி அண்ணா.." ரம்யமாலினி கண்கலங்கி விட்டாள்..
'இப்போதுதான் கொஞ்சம் சிரித்தாள்.. ரிலாக்ஸாய் வெளியில் போய் வந்தாள்.. அதற்குள் அழ வேண்டியதாகி விட்டது..' நந்தினியின் மனம் கனத்தது..
மனம் விட்டுச் சிரிக்கக் கூட முடியாமல் சிறை பட்டிருக்கும் அந்த அரண்மனைக் கிளியின் விலங்குகளை உடைத்துச் சுதந்திர வானில் பறக்க விட வேண்டுமென்று அவள் ஆதங்கப் பட்டாள்..
'அதற்கு உன் காதலை விட்டுக் கொடுத்தாக வேண்டுமே..'
அறிவு அறிவுறுத்தியதில் உதட்டைக் கடித்துக் கொண்டு பெருமூச்சு விட்டாள்.. அந்த ஒலியில் அவளைப் பார்த்த ரவிச்சந்திரனின் புருவங்கள் மறுபடியும் முடிச்சிட்டன.. கலக்கம் நிறைந்த காதலியின் விழிகளுக்குள் எதையோ துழாவுவதைப் போல ஊன்றிப் பார்த்தான்..
இமைகள் படபடக்க நந்தினியும் கண் கலங்கினாள்.. அதை ரம்யமாலினி அறிந்து விடாத வண்ணம் இமைகளைச் சிமிட்டி முகம் திருப்பினாள்.. அவளது துக்கத்தை அவளால் ரம்யமாலினியிடமிருந்து மறைத்து விட முடிந்தது.. ரவிச்சந்திரனிடமிருந்து மறைத்து விட முடியவில்லை..
"வாக்கிங் போனா சீனரியை மட்டும் பார்த்து விட்டு வரனும்.. சீன் போடறவங்களை பார்த்து விட்டு வந்து தேவையில்லாத பிராப்ளத்தையெல்லாம் கிரியேட் பண்ணிக்கிட்டு இருக்கக் கூடாது.."
ரம்யமாலினியின் கண்ணீரைக் கவனிக்காததைப் போலக் கண்டிப்புடன் சொன்னான் ரவிச்சந்திரன்.. நந்தினியால் தாள முடியவில்லை.. தன் சுயநலத்திற்காக ரம்யமாலினியை விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள் என்று அவளது மனச்சாட்சி உறுத்த ஆரம்பித்து விட்டது.
"வாட் இஸ் திஸ் பாஸ்.. நாங்க ஒன்றும் தரங்கிணியைத் தேடிப் போய் பேசலை.. அவங்களாத்தான் வந்தாங்க.. பேசினாங்க.. போனாங்க.. அதுவும் என்னுடன் தான் பேசினாங்க.. அவங்க வந்து போனதுகூட ரம்யாவுக்குத் தெரியாது.. போன் காலை அண்டெண்ட் பண்ணப் போய் விட்டா.. போன் பேசி முடித்து ரம்யா வர்றப்ப தரங்கிணி காரில் ஏறியாச்சு.."
அவன் திட்டினால் திட்டிக் கொள்ளட்டும் என்று விளக்கம் சொல்ல ஊடே புகுந்து விட்டாள் நந்தினி.. அவன் அவளை முறைத்ததை பொருட்படுத்தாமல் விறைப்பாக நின்றாள்.. துளைக்கும் பார்வையுடன் அவளை ஊன்றிப் பார்த்து சோதித்து வைத்தான் அவன்.. அவள் அயரவில்லை..
"ஓ.." அவன் தாடையைத் தடவினான்..
'எதுக்கு இந்த 'ஓ..?''
"காரில ஏறினவ ரம்யாவைப் பார்க்கலையா..?"
"எனக்குத் தெரியாது.."
"தட் மீன்ஸ்.. ரம்யாவைப் பார்த்தும் அவ காரை விட்டு இறங்கிப் பேசாம போயிட்டா.. ஆம் ஐ கரெக்ட்..?"
'எவ்வளவு சரியாக எடை போடுகிறான்..' வியந்து போனாள் நந்தினி..
"யு ஆர் கரெக்ட் அண்ணா.. நான் வருகிறதை அவங்களும் பார்த்தாங்க.. தரங்கிணியின் காரா அதுன்னு கேட்டுக் கொண்டிருக்கும் போதே காரைக் கிளப்பிப் போய் விட்டாங்க.. நானும் நந்தினியுடன் வந்திருக்கிறது அவங்களுக்குத் தெரியுமான்னு நந்தினியிடம் கேட்டேன்.. தெரியும்ன்னு நந்தினி சொன்னா.. தெரிந்தே அவங்க வெயிட் பண்ணி என்னிடம் பேசாமல் கிளம்பிப் போயிட்டாங்க அண்ணா.."
நந்தினியும், ரம்யாவும் ஒருவரையொருவர் அவள், இவள் என்று சிநேகிதிகளைப் போலப் பேசிக் கொள்வதைக் கவனித்தான் ரவிச்சந்திரன்.. அவர்களுக்கு இடையே ஏற்பட்டிருந்த தோழமை அவனுக்குப் பிடித்தமானதாக இருந்தது.. தரங்கிணியைப் பற்றிய பேச்சுத்தான் அவனுக்குப் பிடித்தமானதாக இல்லை..
"நீ அவளிடம் பேசனும்னு அவதான் எதிர்பார்க்கனும் ரம்யா.. அவ உன்னிடம் பேசனும்னு நீ எதிர்பார்க்கக் கூடாது.. தட்'ஸ் நாட் பெய்ர்.. நீ ரவிச்சந்திரனின் தங்கை.. மைண்ட் இட்.."
"அண்ணா.."
"எதற்காக அவளுக்கு இவ்வளவு இம்பார்டன்ஸ் கொடுக்கிற..? அவ அஜந்தாவை விட டேன்ஜரஸ்.."
அப்பாடி என்றிருந்தது நந்தினிக்கு... இதை எப்படி ரம்யாவிடம் சொல்வது என்று மலைத்துக் கொண்டிருந்தவளின் பிரச்னையை வெகு இலகுவாக தீர்த்து வைத்து விட்டான் அவளது காதலன்..
ரம்யாவின் முகம் கூம்பி விட்டது.. அவள் எதுவும் சொல்லாமல் நகர்ந்து விட்டாள்.. அதற்கு முன்னால் நந்தினி அவளை அப்படியொரு முக பாவனையுடன் கண்டதில்லை.. சஞ்சலமும், சிந்தனையும், கலக்கமும் கலவையாய் முகமெங்கும் படிந்திருக்க அந்த அரண்மனையின் இளவரசி சொல்லவொண்ணா மனத்துயருடன் நடந்து விட்டாள்.. நந்தினிக்குள் துயரம் வந்தது.. வாய் விட்டு ''வென அழ வேண்டும் போல துக்கித்தாள்.. 'என்னால்தானே..' என்ற குற்றஉணர்வு அவளுக்குள் கவிவதை அவளால் தடுக்க முடியவில்லை.
"உனக்கு என்னடி ஆச்சு..?" ரவிச்சந்திரன் அதட்டினான்..
"ரம்யா மனசு சங்கடப்பட்டுப் போகிறா.." நந்தினி கண்கலங்கினாள்..
"சொல்கிறதைப் புரிந்துக்காம சங்கடப்பட்டா என்ன செய்கிறது..? நெருப்புச் சுடும்ன்னு சொன்னாக் கேட்டுக்கனும்.. இல்லை தொட்டுத்தான் தெரிந்துக்குவேன்னு அடம் பிடித்தா பார்த்துக்கிட்டு இருக்க முடியாது.. புரியுதா.."
"அவளுக்கு அது புரியனுமே.."
"அது என் கவலை.. நான் பார்த்துக்கறேன்.."
'இதற்கென்ன அர்த்தம்..?' நந்தினியின் மனம் சிணுங்கியது..
அவனது கவலையில் அவளுக்குப் பங்கு இல்லையென்று தள்ளி நிறுத்துகிறானா..?
"நான் உங்களுக்குத் தேர்ட் பெர்சனா..?"
"ஏய்ய்.."
ரவிச்சந்திரன் முரட்டுத்தனமாக அவளை இழுத்து எழும்புகள் நொறுங்கும் அளவிற்கு இறுக்கி அணைத்தான்.. அந்த உடல்வலியில் அவளது மனவலி
ஓடி விட்டது..
"ரவி.."
அவன் மார்பில் முகம் புதைத்த நந்தினி தேம்பியழுதாள்.. மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அந்தப் பக்கமாக அவன் நின்றிருப்பதைப் போல மருண்டிருந்தவளின் மனபயம் அணையுடைத்து வெளிப்பட்டது..
"ம்ப்ச்.. அழக்கூடாது.. அந்தத் தரங்கிணியெல்லாம் ஒரு ஆள்.. அவள் எதையோ சொன்னாள்ன்னு பயந்து அழுவியாடி.. யாரு நீ..?"
"உங்க பெண்டாட்டி.." அவள் மூக்கை உறிஞ்சினாள்..
"ஏய்ய்.. அழுமூஞ்சிப் பெண்டாட்டி.." அவளது புருசனாக அவன் கிளர்ந்தான்..
"நாம பிரிஞ்சிருவோமோன்னு பயமா இருக்கு.."
"என்னடி சொன்ன..?"
அவளை விலக்கி நிறுத்தி அவன் உலுக்கிய உலுக்கலில் நிலை குலைந்து விழப் போனாள் நந்தினி.. தாக்கியவனே தாங்கிப் பிடித்துத் தூக்கி நிறுத்தினான்.. வெறி கொண்ட அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் நடுங்கிப் போனாள்.. ரௌத்ரம் நிரம்பிய அவனது விழிகள் ரத்தமெனச் சிவந்திருந்தன..
"விலகிப் போயிருவியா..?" அவன் உறுமினான்..
"பாஸ்.. அப்படி எங்கே நான் சொன்னேன்..?"
"பாஸ்..? உங்க பெண்டாட்டின்னு சொன்னவ செக்கரட்டரியாகிட்டாளா..?"
"எல்லாத்தையும் குற்றமா எடுத்துக்கிட்டா என்னதான் செய்கிறது..?"
"அதனால என்னை விட்டுப் போயிடலாம்ன்னு டிசைட் பண்ணிட்ட..?"
"வேண்டாம் பாஸ்.. வாய் வார்த்தைக்குக் கூட அப்படிச் சொல்லாதீங்க.. செத்துருவேன்.."
உதடுகள் துடிக்கச் சொன்னவளை இறுக்கிக் கொண்டவனிடம் மெதுவாக அமைதி திரும்ப ஆரம்பித்தது.. கோபம் குறைந்தவனாக அவளது கூந்தலில் முகம் புதைத்து செவியோரம் முணுமுணுத்தான்..
"யு ஆர் மை வொய்ப்.. இதிலிருந்து மாறாதே.. அவ்வளவுதான் சொல்வேன்.. மாற நினைத்தேன்னா நான் நானா இருக்க மாட்டேண்டி.. என்னுடைய இன்னொரு முகத்தை நீ பார்க்க வேண்டியிருக்கும்.."
நந்தினி பேசாமடந்தை போல பதுமையாக நின்றாள்.. எதையும் பேசத் தோன்றவில்லை.. எதைப் பேசினாலும் அந்த நொடியின் இனிமை கலைந்து விடுமோ என்று அச்சமாக இருந்தது.. அவளுக்கான அவனது ரௌத்ரத்தை அவள் விரும்பி ரசித்து நுகர்ந்தாள்.. நீ வேண்டும்.. நீ மட்டுமே வேண்டும் என்ற அவனது தேடலில் புதையுண்டு போனாள்..
அவனாக அவளை விலக்கி நிறுத்தும்வரை அவனது அணைப்பிலிருந்து அவள் விலகவில்லை.. அதில் அவன் திருப்தி அடைந்தான்.. அவளுக்கு விடுதலை கொடுத்து விலகி நின்றவன்..
"தரங்கிணியை மைண்ட் பண்ணிக்காதே.." என்றான்..
"பட்.. ரம்யா வேறு ஒன்றைச் சொல்கிறாளே.."
"என்னத்தைச் சொல்வா.. அவளுடைய அண்ணனுக்கு ரம்யாவை மேரேஜ் பண்ணிக்கிற புரபோசல் இருக்குன்னு சொல்லுவா.. ஸோ வாட்..? உனக்கும் அது தெரியுமே.. அதை வேண்டாம்ன்னு நான் டிசைட் பண்ணியதும் தெரியுமே.."
"இல்லை பாஸ்.. இது அதுக்கும் மேலே.."
"அதுக்கும் மேலேன்னா..?"
ரவிச்சந்திரனின் முகம் கடினமானது... உறுத்து விழித்தவனைப் பார்க்க நந்தினிக்குப் பயமாக இருந்தது.. ரம்யமாலினியை காட்டிக் கொடுக்கிறாளோ என்றும் தயங்கினாள்.. அவன் விடவில்லை..
"சொல்ல வந்ததைச் சொல்லப் போகிறயா இல்லையா.."
அவன் போட்ட சப்தத்தில் பயந்து போனவளாக..
"சத்தம் போடாதீங்களேன்.." என்று கெஞ்சினாள் நந்தினி..
"ஓகே.. சப்தம் போடவில்லை.. என்னன்னு சொல்லு.."
"தரங்கிணி சொல்கிறா.."
"என்னன்னு..?"
"ரம்யா மனசில தரங்கிணியின் அண்ணன் மேலே ஒரு சாப்ட்-கார்னர் இருக்குன்னு.."
"ரப்பிஷ்.."
உறுதியாக மறுத்தான் ரவிச்சந்திரன்.. இப்படிச் சொல்கிறவனிடம் எப்படி ரம்யமாலினியின் மனதைப் பற்றி எடுத்துச் சொல்வது என்று நந்தினிக்குத் திகைப்பாக இருந்தது..
"அவள் உளருகிறதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாதே.. ரம்யாவைப் பற்றி எனக்குத் தெரியும்.. நீ மனதை ரிலாக்ஸாய் வைத்துக் கொள்.. நாளை நாம் திருவனந்தபுரத்துக்குப் போக வேண்டியிருக்கு.. திரும்பி வர ஒன் வீக்காகலாம்.. உன் திங்ஸை பேக் பண்ணி வைத்துக்க.."
அதுவரை அவர்களுக்கு நேரம் கொடுத்து பொறுமை காத்த செல்போனை பொறுமையிழந்து அலற ஆரம்பித்தது.. ரவிச்சந்திரன் ஒரு பறக்கும் முத்தத்தை நந்தினியின் பக்கம் ஊதிப் பறக்க விட்டு விட்டு செல்போனில் பேச ஆரம்பித்து விட்டான்.


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -228
எண்ணியிருந்தது ஈடேற -228
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-228.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-228.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy