எண்ணியிருந்தது ஈடேற -227

227 ' இதை ஏன் ரம்யா யோசித்துப் பார்க்கவில்லை.. ?' மனதில் அலைமோதிய கேள்வியுடன் நடந்தாள் நந்தினி.. ரம்யமாலினியுடன் தனியே உல...


227


'இதை ஏன் ரம்யா யோசித்துப் பார்க்கவில்லை..?'
மனதில் அலைமோதிய கேள்வியுடன் நடந்தாள் நந்தினி.. ரம்யமாலினியுடன் தனியே உலாவ வந்ததில் நன்மையடைந்திருப்பது அவளா இல்லை ரம்ய மாலினியா என்று மனது சோர்ந்தது.. இருவருமே இல்லை என்று தோன்றியது.. ஏன் அப்படித் தோன்றுகிறது என்று யோசித்துப் பார்த்தவளுக்கு தெளிவான விடை கிடைத்தது.
அது.. ரம்யமாலினி என்ற தேவதைப் பெண் வாழ்வதற்குத் தகுதியான இல்லம் தரங்கிணியின் இல்லமல்ல என்பதுதான்..
பொடித்தனமில்லாத, சூழ்ச்சிகளைப் பற்றி யோசிக்கத் தெரியாத, பெருந்தன்மை மிக்க சாந்தமான ரம்யமாலினிக்குத் தரங்கிணியைப் போன்ற சூழ்ச்சி மிக்க சூனியக்காரி நாத்தனாராக அமைவதா..? தரங்கிணி பிறந்த வீடா.. ரம்யமாலினிக்கு புகுந்த வீடாக அமைய வேண்டும்..? அங்கே ரம்யமாலினியால் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ்ந்து விட முடியுமா..?
"ஏன் பேசாமலே வர்றீங்க..?"
'என்னத்தைப் பேச..?'
பதில் சொல்லாமல் புன்முறுவல் பூத்தாள் நந்தினி.. அரண்மனை நெருங்கி விட்டதில் ரம்யமாலினியும் பேசுவதை நிறுத்தி விட்டாள்... போர்டிகோவில்
நின்றிருந்த அஜந்தா இருவரையும் குரோதமாக முறைத்துப் பார்த்தாள்..
'இவளாலும் இவ குடும்பத்தினாலும்தான் ரம்யாவின் மனதில் தரங்கிணியின் குடும்பத்தைப் பற்றிய எண்ணம் விழுந்திருக்கு..'
மனதுக்குள் திரண்டிருந்த ஒட்டு மொத்த ஆத்திரத்தையும், வெறுப்பையும் ஒன்று திரட்டி பதிலுக்கு முறைத்துப் பார்த்தாள் நந்தினி..
'விட்டா குரல்வளையை நெறித்துருவா போல இருக்கே..' அஜந்தாவே அரண்டு போனாள்..
"அம்மே..! சாய் கொண்டு வரட்டே..?" ஓமனா பிரசன்னமானாள்..
"ம்ப்ச்.." முகம் சுளித்தாள் நந்தினி..
அந்த முகச்சுளிப்பு தனக்கானது என்பதில் அஜந்தா பல்லைக் கடித்தாள்.. அது புரியாத ஓமனா..
"மேமை அம்மேன்னு ஞான் விளிச்சு.. அதில மேம் வெப்பராளம் கொண்டோ..?" என்று திருதிருத்தாள்..
"தெரியுதில்ல.. தெரிஞ்சுக்கிட்டே ஏன் திரும்பத் திரும்ப அதையே செய்கிற..? உனக்கெல்லாம் ஒரு தடவை சொன்னா மண்டையில ஏறாதா..?" சிடுசிடுத்தாள் நந்தினி..
"அம்மே.." அவளுடைய செல்ல 'அம்மை..' சிடுசிடுத்ததில் திகைத்துப் போய் தழுதழுத்தாள் ஓமனாக்குட்டி..
"ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டுச்சாம்."
நந்தினியின் முதுமொழியில் அஜந்தா பத்ரகாளியானாள்..
"யாரை பிடாரின்னு சொல்கிற..?" என்று அவள் பாய்ந்ததில் ஓமனாவின் அறிவுக் கண் திறந்து கொண்டது.
'ஓ.. எண்ட அம்மை ஈ அஜந்தாவயல்ல பறஞ்ஞு..' சந்தோசமாகி அவளும் சம்சாரிக்க ஆரம்பித்து விட்டாள்..
"எந்தா அம்மே.. நந்தினி மேம் என்னியல்லா பறஞ்ஞு.." ஊடே புகுந்தாள்..
"அவள் மேம்..! ஞான் உனக்கு அம்மையா..?" அஜந்தா உக்கிரமானாள்..
"ஞான் அம்மையெண்டு விளிக்கனுமெண்டு நிங்கதான் பறஞ்ஞு அம்மே.." ஒன்றுமறியாத சின்னப் பெண்ணாய் இமை கொட்டி மறுபடியும் 'அம்மே' போட்டாள் ஓமனா..
அஜந்தாவினால் பேச முடியவில்லை.. அவள் அப்படி ஒரு கட்டளையைப் பிறப்பித்திருப்பது உண்மைதான்.. வீட்டில் உள்ள மற்ற பெண்களான யாழினி, அவந்திகா, வீணா முதலியோரை ஓமனா 'அம்மே' என்று விளிக்கும் போது அஜந்தா மட்டும் 'மேம்' என்று விளிக்கப் படுவதா என்ற உரிமை முழக்கத்தில் அப்படியொரு கட்டளையைப் பிறப்பித்திருந்தாள்.. அதை வகையாய் இப்போது ஓமனா ஞாபகப் படுத்தியதில் பொறியில் மாட்டிய எலியானாள்..
"ஒ.. ஞான் சொல்வதையெல்லாம் நீ கேட்டு விட்டுத்தான் வேறு ஜோலி பார்க்கிறயோ..?" தோல்வியை ஒப்புக் கொள்ளாத அஜந்தாவாக பாய்ந்தாள்..
"அங்ஙன செவி மடுக்கலையெண்டா எண்ட ஜோலி போயிடுமல்லோ.." அப்பாவியாக கேட்டாள் ஓமனா..
'ஈ நந்தினிக் கழுதை வந்த பின்னாலே வேலைக்காரிகூட யோசிச்சுப் பேச ஆரம்பிச்சுட்டா..'
அஜந்தாவுக்கு யோசனைகள் பிடிக்காது.. அதுவும் மற்றவர்கள் யோசிப்பதை அறவே விரும்ப மாட்டாள்.. வயநாட்டு அரண்மனையில் இருப்பவர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டால் அஜந்தாவின் குடும்பம் என்ன ஆவது..?
"அதிகம் பேசாதே.. சொன்னதைச் செய்.." அதிகாரமாக உத்தரவிட்டாள் அஜந்தா..
"அம்மை வல்லதும் பறஞ்ஞோ..?" அவள் எதுவும் சொல்லவில்லையே என்று இமை கொட்டி கடுப்பேற்றினாள் ஓமனா..
"உன்னிடம் வல்லதும் (ஏதாவது) பறஞ்ஞுட்டாலும்.. கேட்டு விட்டுத்தான் வேறு ஜோலி பார்ப்ப.."
"அம்மே.. ஞான் வல்லதும் தெற்று (குற்றம்) செய்யலையல்லோ.. அம்மே எந்துக்காக என்னிய வேறு ஜோலி நோக்கச் சொல்லிப் பறஞ்ஞு..."
'இவளை எப்ப நான் வேறு இடத்தில் ஜோலி பார்க்கப் போகச் சொன்னேன்..?' அஜந்தாவுக்கு தலை வேதனையானது..
ஓமனா அந்த அரண்மனையில் உள்ளவர்களுக்கு இன்றியமையாத பணிப்பெண்.. யாழினிக்குக் கால்வலி தைலம் தடவி விட்டு.. அருள்மொழிவர்மனுக்குத் தலைவலி தைலம் எடுத்துக் கொடுத்து.. அவந்திகாவுக்கு கை பிடித்து விட்டு.. நொடிக்கொருதரம் அஜந்தா சொல்லும் வேலைகளை சுறுசுறுப்பாக ஓடியோடி செய்து கொடுத்து என்று ஓமனாக் குட்டியின் சிட்டுக்குருவி சுறுசுறுப்பிற்கு எந்தப் பணிப் பெண்ணாலும் ஈடு கொடுக்க முடியாது..
'இவள் ஓடி விட்டால் அவ்வளவுதான்..'
ஆனானப்பட்ட அரச குடும்பமாக இருந்தாலும் சுறுசுறுப்பான பணிப்பெண்ணை அனுசரித்துத்தான் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.. அவர்களுக்கு என்ன.. இந்த அரண்மனை இல்லாவிட்டால் வேறு அரண்மனை.. ஓமனா இல்லாவிட்டால் வேறு ஒரு பணிப்பெண் அத்தனை வேலைகளை அதிவிரைவாக செய்து முடிப்பாளா..?
கேரளத்தில் ராஜ குடும்பங்களுக்கா பஞ்சம்..? தடுக்கி விழுந்தால் சமஸ்தானம்.. ஊருக்கு ஒரு ராஜ குடும்பம்..
"இதுதான் சாக்குன்னு வேறு இடத்தில ஜோலி பார்க்க ஓடிப் போயிடலாம்ன்னு ஐடியா பண்றயா..?"
"ஆ ஐடியா எனிக்கு இல்லா.. எந்து கொட்டாரமாக இருந்தாலும் ஈ வயநாட்டு கொட்டாரத்துக்கு நிகரில்லா.. ஈ கொட்டாரத்திட தம்புராட்டி எண்ட வீணா அம்மையாக்கும்.. அவரிட ஜோலி பார்த்த ஞான் வேறு ஒரு தம்புராட்டியிட ஜோலி பார்ப்பதோ..? கேட்டே.."
'ஈ ஓமனாக்குட்டி வீணா அத்தையை தம்புராட்டி என்று சொல்கிறா.. இதை பாட்டியிடம் பற்ற வைக்கனுமே..'
அஜந்தா ஒரு தீப்பந்தம்..! அவள் பற்ற வைத்தால்.. என்றால் படு விரைவில் பற்றிக் கொள்ளும்.. கொழுத்திப் போட அவளுக்குத் தீக்குச்சித் தேவையே இல்லை..
அங்கிருந்து பறந்து விரையத் துடித்தாள் அஜந்தா.. போகிற போக்கில் ஓமனாவை நோக்கி..
"இவ்வளவு நேரமா இங்கே கால் கடுக்க நின்றுக்கிட்டு இருக்கிறேன்.. என்னைப் பார்த்து சாய் கொண்டு வரட்டேன்னு ஒரு வார்த்தை கேட்கலை.. இவள் வந்தவுடன் ஓடி வந்து சாய் கொண்டு வரட்டேன்னு பறக்கிற.. அதுசரி.. வேலைக்காரிக்கு வேலைக்காரிதானே ஆதரவு கொடுத்தாகனும்.." என்று ஒரு அம்பை எய்து வைக்க.. அது நந்தினியின் மனதில் தைத்து வலியை உண்டாக்கியது..
"வேலைக்காரின்னா மட்டமில்லை ஓமனா.. நாம வேலை செய்து பிழைக்கிறோம்.. மத்தவங்களை அண்டிப் பிழைக்கலை.." பதிலுக்குப் பதில் கொடுத்து விட்டாள்..
"குட் சாட் நந்தினி.."
குதூகலமாக கைநீட்டி நந்தினியின் கை பற்றிக் குலுக்கினாள் ரம்யமாலினி.. அஜந்தாவின் முகம் பயங்கரமாய் மாறியதில் விகாரமானது..
'என்னை அண்டிப் பிழைக்கிறவன்னு சொல்கிறா..'
இதையும் யாழினியிடம் பற்ற வைக்கும் விதத்தில் பற்ற வைக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள் அஜந்தா..
'ஓமனா வீணா அத்தையைத் தம்புராட்டின்னு சொன்னா.. பாட்டியொன்னும் தம்புராட்டியில்லை.. வீணா அத்தையை அண்டிப் பிழைக்கிறாங்கன்னு ஈ நந்தினி சொன்னான்னு பாட்டியிடம் பற்ற வைக்கனும்..'
பற்ற வைக்கும் வம்புத் தீயில் நந்தினியை முக்கிய குற்றவாளியாக கோர்த்து விடத் திட்டம் தீட்டி விட்ட அஜந்தா அதைச் செயல்படுத்த விரைந்தோடினாள்.
"எண்ட நந்தினி மேம் வல்லிய கெட்டிக்காரியாக்கும்.. ஆ அஜந்தா அம்மை ஓடியே போயி.. எண்ட மேம் அம்மையை ஓட வைச்சு.. கேட்டே.." ஓமனா மகிழ்ந்து போனாள்..
"கேட்டே, கேட்டேன்னு கேட்டுக்கிட்டே இருக்கிறயே.. சாய் கொண்டு வரட்டேன்னு கேட்டதை மட்டும் தோதா மறந்திட்டயே.. ஞான் வல்லிய கெட்டிக்காரியல்ல ஓமனா.. நீதான் வல்லிய கெட்டிக்காரி.." சிரிக்காமல் நந்தினி சொல்ல ரம்யமாலினி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்..
"ஹைய்யோ.. எண்ட மேம் ஜோக்கு பறஞ்ஞு.. மேம் பறஞ்ஞாலே சிரிப்புத்தானல்லோ.." ஓமனா சிரித்து மகிழ்ந்தபடி சாய் கொண்டு வர ஓடினாள்..
'என் பிழைப்பு இப்படியாகி விட்டதே..'
நந்தினி வானத்தை வெறித்தாள்.. பனி படர்ந்த கரும் மேகங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் முகடுகளை முற்றுகையிட விரைந்து கொண்டிருந்தன.. நந்தினியின் மனம் கனத்தது.. சிரிப்பை மூட்டி விடும் விகடகவியாக மட்டும் அவள் விலகி நின்று விடுவாளோ என்ற பயம் வந்தது..
"எங்கே போயிருந்த..?"
காதில் விழுந்த கனத்த ஆண் குரலில் ரணமான மனம் சடுதியில் ஆறிவிட எழுச்சியுடன் திரும்பினாள்.. அவளையே இமை கொட்டாமல் பார்த்த வண்ணம் நெருங்கி வந்தான் ரவிச்சந்திரன்.. நந்தினியின் மனம் பொங்கியது.. அவளது விழிகளில் தெரிந்த கலக்கத்தில் அவனது புருவங்கள் முடிச்சிட்டன..
"நந்தினி..?"
"பாஸ்.."
தாயைத் தேடும் மழலையாக தேம்பியது அவள் குரல்.. ரம்யமாலினி அதை உணராமல்..
"அண்ணா.." என்றாள் மலர்ச்சியாக..
அவளும் அங்கே இருக்கிறாள் என்ற உணர்வில் காதலர்கள் தங்களது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றார்கள்.. ரவிச்சந்திரனை விட்டு விலகாமல் மொய்த்து நின்றது நந்தினியின் பார்வை.. அவளது பார்வை வட்டத்திலிருந்து அவன் விலகினால் எங்கே அவளது வாழ்க்கைப் பாதையிலிருந்தே அவன் விலகி விடுவானோ என்று பயந்து நடுங்கியது நந்தினியின் பார்வை.. அதை உணர்ந்தவனாக அவளையே பார்த்தபடி தங்கையிடம் பேச்சுக் கொடுத்தான் ரவிச்சந்திரன்..
"என் செக்கரட்டரியை எங்கே கடத்திக் கொண்டு போயிருந்த..?"
நந்தினியிடம் எங்கே போயிருந்தாய் என்று நேரடியாகக் கேட்ட கேள்வியை தங்கையிடம் அவன் நாசுக்காக கேட்டதில் மருண்டாள் நந்தினி..
மிகச் சின்ன விசயத்தில் கூட தங்கையின் மனம் நோகக் கூடாது என்று இதமாக மாற்றிக் கேள்வி கேட்பவன் தங்கையின் மனதிலிருக்கும் எண்ணத்தை அறிந்தால் நந்தினியை விட்டு விலகி தரங்கிணியின் பக்கமாக சென்று விட மாட்டானா..?
"நாங்க வாக்கிங் போனோமே.."
சின்னக் குழந்தையின் குதூகலத்தோடு சொன்ன ரம்யமாலினியின் கூந்தலைக் கனிவுடன் கோதி விட்டான் ரவிச்சந்திரன்.. நந்தினியை மறந்தவனாகத் தங்கையின் சந்தோசத்தை அவன் ரசிக்கத் தொடங்கியதில் ஏக்கம் கொண்டாள் நந்தினி..
"என்னவோ வெர்ல்டு டூர் போனதைப் போல சந்தோசப் படறியே.."
"இது வெர்ல்டு டூரை விட மேல் அண்ணா.."
"ஓ.."
ரவிச்சந்திரன் நெகிழ்ந்து போனான்.. மயிலிறகின் மன வருடலாக தங்கையை வாத்சல்யத்துடன் வருடிக் கொடுத்தது அவன் பார்வை.. அந்த நொடியில் அருமை மிகு அண்ணனாக.. சுபத்திரையின் கண்ணனாக அவனைக் கண்டாள் நந்தினி.. தம்பியுடன் பிறந்தவளின் மனம் நந்தகுமாரின் தங்கையாகப் பிறக்கவில்லையே என்று ஏங்கியது..
"வாக்கிங் போன இடத்தில உங்களுக்கு வேண்டிய வங்களைப் பார்த்தோமே.."
நந்தினி துணுக்குற்றாள்.. தரங்கிணி ரவிச்சந்திரனுக்கு வேண்டியவளா.. இல்லை.. ரம்யமாலினிக்கு வேண்டியவளா..? தங்கைக்கு வேண்டப்பட்டவள் தமையனுக்கும் வேண்டப்பட்டவளாக ஆகி விடுவாளோ..
"யாரது..?"
இயல்பாகத்தான் கேட்டான் ரவிச்சந்திரன்.. நந்தினிக்குத்தான் அதில் ஒரு எதிர்பார்ப்பு நிறைந்திருப்பதைப் போல தோன்றி வைத்தது.. அவளது மனம் 'தடக், தடக்' என்று மங்களூர் எக்ஸ்பிரஸின் வேக ஒலியைப் போல அடித்துக் கொண்டது..
"தரங்கிணி..!"
கண்களையும், கைகளையும் விரித்து முகம் மலர ரம்யமாலினி சொன்னாள்.. ரவிச்சந்திரனின் மலர்ந்திருந்த முகம் ஒரு நொடியில் சுருங்கி விட்டது.


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -227
எண்ணியிருந்தது ஈடேற -227
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-227.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-227.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy