எண்ணியிருந்தது ஈடேற -226

226 நிச்சயமாக ரம்யமாலினி அதைச் செய்வாள்.. அண்ணனுக்குப் பிடிக்காத எதுவும் அவளுக்கும் பிடிக்காது.. ரவிச்சந்திரனுக்குத் தரங்கிணியைப் ப...


226


நிச்சயமாக ரம்யமாலினி அதைச் செய்வாள்.. அண்ணனுக்குப் பிடிக்காத எதுவும் அவளுக்கும் பிடிக்காது.. ரவிச்சந்திரனுக்குத் தரங்கிணியைப் பிடிக்கவில்லை..  அவளது குணம் மோசம் என்பதை அவன் கணித்து விட்டான்.. அவள் இருக்கும் குடும்பத்தில் அவனது தங்கை நிம்மதியாக வாழ முடியாது என்று முடிவெடுத்து விட்டான் என்பது ரம்யமாலினிக்குத் தெரியாதே..
அவளுக்குத் தெரிந்ததெல்லாம் தனபாலன் ரவிச்சந்திரனின் நண்பன், தனபாலனின் தங்கையான தரங்கிணியிடம் ரவிச்சந்திரன் இன்முகத்துடன் பேசுவான் என்பதுதான்..
நண்பனின் தங்கை.. நெருங்கிய உறவினர்.. ரம்யமாலினியை தனபாலனுக்காக பெண் கேட்டிருக் கிறார்கள்.. இந்தக் காரணங்களினால் மட்டுமே ரவிச்சந்திரன் தரங்கிணியிடம் பேசிப் பழகினான் என்பதை தரங்கிணி கண்டு வைத்திருந்தாள்.. ரம்யமாலினிக்குத்தான் அது தெரியாமல் போய் விட்டது..
"எனக்குத் தனபாலன் மேல சாப்ட் கார்னர் வருகிறதுக்கான ஒரேயொரு காரணம் என்ன தெரியுமா..?"
'என்னவாக இருக்கும்..'
அதை அறிந்து கொள்ளும் ஆவலில்லா விட்டாலும் எதற்காக ரம்யமாலினி தனபாலனுக்குத் தன் மனதில் இடம் கொடுத்தாள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நந்தினியின் மனம் படபடத்தது..
ரம்யமாலினியைப் போன்ற தேவதைப் பெண்ணின் மனதில் இடம் பிடிக்க தரங்கிணியின் அண்ணனுக்கு என்ன தகுதி இருக்கக் கூடும்..?
அபராஜிதனை எதிர்த்து நிற்பதற்கான தகுதியிருந்தால் போதும் என்று அந்த தேவதைப் பெண் சொன்னாள்..
"அவனெல்லாம் ஒரு ஆளா..? உன் அண்ணன் நினைச்சா ஒரு செகண்டில அவனை இருக்கிற இடம் தெரியாம ஆக்கி விடுவாரே ரம்யா.."
"உண்மைதான் நந்தினி.. அப்படி அண்ணன் செய்து விட்டால் அண்ணனுடைய வாழ்க்கை முழுவதும் அந்தப் பழி தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கும்.. என்னால் அண்ணன் அந்தப் பழியை ஏற்றுக்கனுமா..?"
"என்ன பேசற நீ.. தங்கைக்காக அண்ணன் பழியேத்துக்கிட்டா தப்பில்லை.. அத்தோடு அபராஜிதனே ஒரு அயோக்கியன்.. நேர்மையில்லாதவன்.. அவனை ஒழித்துக் கட்டினா பாராட்டத்தானே செய்வாங்க.. யார் பழி போடுவாங்க..?"
"எங்க தாத்தாவும் பாட்டியும் பழி போடுவாங்க.."
"ஓ.. பட்.. பாட்டி பழி போடத்தான் செய்வாங்க.. தாத்தா உன் அண்ணனுடன் அனுசரித்துப் போகிறவராச்சே.."
"உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.."
வருத்தத்துடன் சிரித்தாள் ரம்யமாலினி.. அவளின் அந்த வருத்தம் நந்தினியின் மனதை என்னவோ செய்தது.. பாதித்தது.. ரம்ய மாலினி ராஜபரம்பரையில் பிறந்த கோடிஸ்வரி.. உலகம் முழுவதும் வியக்கும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட இளம் கோடிஸ்வர தொழிலதிபனின் பிரியத்துக்குரிய செல்லத் தங்கை.. அவள் சிரிப்பில் வருத்தம் நிரம்பியிருக்கிறது என்றால் இதை என்னவென்று சொல்வது..?
கடல்நீர் நடுவே குடிநீர் தேடும் துயரம் என்பது இதுதானோ..
"வருத்தப்படாதே ரம்யா.."
"வருத்தப் படத்தான் இந்த வாழ்க்கைங்கிறதைப் போல ஆகிப் போச்சு நந்தினி.. தாத்தா அண்ணனுடன் அட்ஜஸ்ட் பண்ணிப் போகிறதுக்கான ரீஸனே வேறு.. நியாய குணத்தாலேயும் அண்ணன் மேலே இருக்கிற பாசத்தினாலும் அவர் அட்ஜஸ்ட் பண்ணிப் போகலை.. நியாய குணம் இருக்கிறவரா இருந்தால் பெற்ற பிள்ளைகளுக்கு மத்தியில் ஃபார்ஸியாலிட்டி பார்த்திருக்க மாட்டார்.. இவருக்கு இவருடைய அப்பா பொறுப்பைத் தந்து ஒதுங்கிக் கொண்டதைப் போல என் அப்பாவிடம் பொறுப்பைக் கொடுத்து ஒதுங்கியிருப்பார்.. இத்தனைக்கும் தாத்தாவுக்கு தம்பி இருக்கிறார்.. அப்பாவுடன் பிறந்தது அவந்திகா அத்தை மட்டும்தான்.. இருந்தும் தாத்தா அப்பாவிடம் பொறுப்பைக் கொடுக்காம இறுக்கிப் பிடிச்சுக்கிட்டார்.. அவரோட டாமினேசன் குறையவே இல்லை.. அப்பாவை தலையெடுக்க விடவேயில்லை.."
'அதுதான் தெரிந்த கதையாச்சே..'
இதை வருத்தப்பட்டு மனபாரத்தை இறக்கி வைத்துக் கொண்டிருக்கும் தோழியிடம் சொல்ல முடியுமா..?
அதனால் வெறுமனே "ஊம்" கொட்டி வைத்தாள் நந்தினி..
"அத்தை மட்டும் செல்வாக்கா வாழ்ந்திருந்தா தாத்தா அண்ணனுடன் அட்ஜஸ்ட் பண்ணிப் போகவே மாட்டார்.. இந்த அரண்மனையும் 'தம்புரான்' பட்டமும் அவருக்கு மட்டும்தான் சொந்தம்ன்னு ஆணவம் காட்டியிருப்பார்.. அப்படி ஆட முடியாம அத்தை அவங்க லைஃபில தோற்றுப் போய் எங்க அரண்மனையிலேயே குடும்பத்தோடு
செட்டில் ஆகிட்டாங்க.. மாமாவோட ஊதாரித்தனத்திலே தாத்தாவோட அத்தனை புராப்பர்ட்டீஸீம் அண்ணன் பெயருக்கு மாறி விட்டது.. தாத்தாவே நினைத்துப் பார்க்க முடியாத லெவலிலே அண்ணன் உயர்ந்து நிற்குது.. இன்றைக்கான தாத்தாவின் ஐடெண்ட்டி 'தி கிரேட் பிஸினெஸ் மேக்னெட் ரவிச்சந்திரனின் தாத்தா..' என்பது தான்.. அண்ணன் தள்ளி நின்றால் இந்த வயநாட்டில் பறக்கும் குயில்கூட தாத்தாவை மதிக்காது.. ஸோ.. இன்றைக்கு இருக்கும் நிலைமையிலே தாத்தாவுக்கு அண்ணனை அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு போகிறதைத் தவிர வேறு வழியே இல்லை.."
"ம்ம்ம்.."
"அத்தைக்கு அதிக பாதிப்பில்லை.. அத்தையோட ஃபேமிலி எங்க அரண்மனையிலே வசதியாக வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க.. அத்தை பிள்ளைகளை அண்ணன் படிக்க வைத்தது... அபராஜிதனை கேரளாவுக்குள் கால் வைக்கக் கூடாதுன்னு விரட்டி விட்டாலும் மும்பையில் பொறுப்பான பதவி கொடுத்துத்தான் தங்க வைத்திருக்குது... அஜந்தாவுக்கும் அப்படித்தான்.. நாளைக்கு அவளுக்கு மேரேஜ்ன்னு வருகிற போது குறைவில்லாம சீர் செய்துதான் அண்ணன் மேரேஜ் பண்ணி வைக்கும்.."
"ம்ம்ம்.."
"இதில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் தாத்தாவின் ஒரிஜினல் முகம் வெளியில் வந்து விடும் நந்தினி.. இது அண்ணனுக்கும் தெரியும்.. அவந்திகா அத்தைக்கும் அவங்களோட குடும்பத்துக்கும் தெரியும்.. அதனால்தான் அவங்க திமிரா இருக்கிறாங்க.. அண்ணன் தாத்தா, பாட்டி மேலே ஒட்டுதல் இல்லாம இருக்கு.."
'நன்றியில்லாத மனிதர்கள்..'
எப்படிப்பட்ட சொந்தங்களின் மத்தியில் அவளுடைய கம்மாண்டர் வாழ்கிறான் என்று துயரம் கொண்டாள் நந்தினி.. சதா சர்வ காலமும் உழைத்துக் கொண்டிருப்பவனின் நிழலில் சகலவிதமான சௌகரியங்களுடன் வாழ்கிறவர்களின் மனதில் ரவிச்சந்திரனின் மீது அன்பும், மதிப்பும், மரியாதையும் இருக்க வேண்டாமா..?
'எங்கே..? இவங்க மனசில் குரோதமும், காழ்ப்புணர்ச்சியும்தானே கொட்டிக் கிடக்கு..?'
"அபராஜிதனுக்கு அண்ணனாலே ஏதாவது ஆச்சுன்னு தெரிஞ்சா தாத்தா எந்த எல்லைக்கும் போவார்.."
"அவரால் என்ன பண்ண முடியும்..?"
"பழிபோட முடியும்.. இப்பப் புரிந்ததா..?"
நந்தினிக்குப் புரிந்தது.. அருள்மொழிவர்மனும், யாழினியும் பழி போடுவார்கள் என்பதற்காக அஞ்சி விலகுபவனல்ல ரவிச்சந்திரன்.. ரம்யமாலினியும் அதைத்தான் சொன்னாள்..
"இவங்க பழி போடுவாங்கன்னு அண்ணன் யோசிக்காது.. அம்மா யோசிக்கிறாங்க.. பெரியவங்களின் மனவருத்தம் பிள்ளைகளைப் பாதிக்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்க.. அத்தையின் பிள்ளைகள் வாழ வழி செய்ன்னு அண்ணனிடம் அம்மாதான் ரெக்கமண்ட் பண்ணினாங்க.. அவங்க கெட்டவங்களா இருந்தாலும் நீ அவங்களுக்கு கெடுதல் செய்து விடாதேன்னு அம்மாதான் ரிக்வஸ்ட் பண்ணினாங்க.. தாத்தா, பாட்டி சொந்த பந்தங்களிடம் அழுது புலம்பினா அது அண்ணனின் இமேஜை பாதித்துரும்ன்னு அம்மா நினைக்கிறாங்க.."
நந்தினி பெருமூச்சு விட்டாள்.. பணமும் பலமும் இருந்தால் மட்டும் போதுமென்று யார் சொன்னது.? அதையும் தாண்டி சுற்றியிருப்பவர்கள் சூழ்ச்சியில்லாதவர் களாக இருக்க வேண்டும்..
'நிம்மதியில்லாத வாழ்வு என்ன வாழ்வு..?'
ரம்யமாலினி எதனால் சிரிப்பை மறந்தாள் என்று இப்போது நந்தினிக்குப் புரிந்தது.. இப்படிப்பட்ட மனிதர்களின் மத்தியில் எப்படி அவளால் சிரித்து சந்தோசம் கொண்டாட முடியும்..?
'அப்படி ஒதுங்கிப் போகிறவளையும் கண்ணிலே காண விடாமல் கரித்துக் கொட்டித் துன்பப் படுத்துகிறார்களே..'
"அபராஜிதனை அடக்குவது சிரமம் நந்தினி.. அண்ணனிடம் மட்டும்தான் அவன் பயப்படுவான்... எனக்கு அது போதாது.. என்னை மேரேஜ் பண்ணிக் கொள்கிறவனிடமும் அவன் பயப்பட வேண்டும்.. என் நிழலை நெருங்கக்கூட அஞ்சி நடுங்க வேண்டும்.. என் பெயரே சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டும்.. தெளிவாகச் சொல்வதாக இருந்தால் என் அண்ணனின் பராக்கிரமத்தில் பாதியாவது என்னை மேரேஜ் பண்ணிக் கொள்ளப் போகிறவனிடம் இருக்க வேண்டும்.. அபராஜிதனை ஓடவிட்டு மிதிக்கிறவனாக எவன் அஞ்சாமையுடன் இருக்கிறானோ அவனே என்னை மேரேஜ் பண்ணிக் கொள்ள முடியும்.. நான் என் அண்ணனின் சிறகுகளுக்கடியில் பாதுகாக்கப்பட்டு வளர்ந்தவள் நந்தினி.. அண்ணனின் போல்ட்னெஸ்ஸைப் பார்த்துப் பிரமித்திருக்கிறேன்.. அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் பாதியளவாவது என்னை மேரேஜ் பண்ணிக் கொள்ளப் போகிறவரிடம் இருந்தால்தான் என்னை ஸேவ் பண்ண முடியும்ன்னு நினைக்கிறேன் நந்தினி.. அபராஜிதனைப் பற்றி எனக்குத் தெரியும்.. எனக்கு மேரேஜ் ஆனாலும் என்னை அவன் நிம்மதியாக வாழவிட மாட்டான்.."
"உன் அண்ணன் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார் ரம்யா.."
"உண்டு இல்லையென்று பண்ணி விடும்தான்.. அது எனக்குப் பெருமை சேர்க்குமா..? என் ஹஸ்பெண்ட் அதைச் செய்யனும் நந்தினி.. அதுதான் எனக்குப் பெருமையாக இருக்கும்.."
இதுதான் பெண்மனது.. நாடாளும் ராஜாவின் மகளாக இருந்தாலும் கணவனின் பலத்திலும், பணத்திலும் வாழவே சுயமரியாதையுள்ள மனைவி நினைப்பாள்.. இது இந்தியப் பெண்களின் நிலைப்பாடு..
"நினைத்துப் பார் நந்தினி.. உனக்கு அண்ணனைப் பிடிக்கும்தானே.."
"ரம்யா.."
"உன் மனது எனக்குத் தெரியும் நந்தினி.. உனக்கு எதனால் அண்ணனைப் பிடித்திருக்கிறது..?"
பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள் நந்தினி.. அது, இது என்று வரையறுத்துச் சொல்ல முடிவதா அவனது குண இயல்பு..? வரையறுக்க முடியாத மாவீரனல்லவா அவன்..!
"அண்ணன் இரும்பு மனிதன் நந்தினி.. அவன் பக்கத்தில் இருக்கும் வரை யாருக்கும் எந்தவிதமான சங்கடமும் ஏற்படாது.. அதுவே அவன் பக்கத்தில் இல்லாமல் வேறு ஒருவரின் பாதுகாவலுக்கு நான மாறும் போது அவனளவுக்கு இல்லாவிட்டாலும்
அவனில் பாதியளவாவது பலவானாக அவர் இருக்க வேண்டுமல்லவா..?"
ரம்யமாலினியின் கேள்வியில் பொதிந்திருந்த நியாயம் நந்தினியை வாயடைக்க வைத்தது.. அவள் மனம் கலங்கியது..
'எனக்கான கம்மாண்டரின் பாதுகாவல் எப்போதும் நிலைக்குமா..? அவன் பக்கத்தில் நானிருக்க முடியுமா..? கடைசி வரை எனது காதலனாக, காவலனாக வாழ்க்கைப் பயணத்தில் கூட வருவானா..?'
"இப்போது சொல்லு நந்தினி.. நான் தரங்கிணியின் அண்ணன் மீது சாப்ட்-கார்னர் வைத்திருப்பதில் தவறேதும் இல்லையே.."
நந்தினி சோகையாக சிரித்து வைத்தாள்.. ஒன்று மட்டும் அவளது மனதில் பதிந்தது.. ரம்யமாலினி தனபாலனின் மீது காதல் கொண்டிருப்பதாக சொல்லவே யில்லை.. அவன்மீது ஒருவகையான சாப்ட் கார்னர் இருப்பதாகத்தான் சொல்கிறாள்..
'இதுவே பெரிதானதுதானே..'
"வயநாட்டில் ஒரு காலத்தில் தாத்தாவின் ஆதிக்கம் பெரிதாக இருந்தது நந்தினி.. அவருடைய அத்தனை புகழையும் செல்வாக்கையும் அவந்திகா அத்தை தன்பக்கமாகவும் தன் குடும்பத்தின் பக்கமாகவும் திருப்பி விட்டுட்டாங்க.. என்னவோ தாத்தாவுக்கு அவங்க மட்டும்தான் ஒரே பெண்ணாய் பிறந்தது போலவும், அப்பா அவங்களுக்கு சேவகம் பண்ணும் சேவகனைப் போலவும் நடந்துக்குவாங்க.. அப்பா, அம்மாவை மேரேஜ் பண்ணி அண்ணனும், நானும் பிறந்த பின்னாலும் தாத்தாவோட பேரப் பிள்ளைகள் நாங்க என்கிற ஐடெண்டி எங்களுக்கு கிடைக்கவேயில்லை.. அந்த ஐடெண்ட்டி ஆட்டோ மேட்டிக்கா அவந்திகா அத்தையோட பிள்ளைகளுக்கு சொந்தமாகிருச்சு.. இதை முதலில் இருந்தே சொல்லிக் காட்டியது தரங்கிணியோட குடும்பம் மட்டும்தான் நந்தினி.. அவந்திகா அத்தையையும், அஜந்தாவையும் அவங்க கன்சிடர் பண்ணிக்கவே மாட்டாங்க.. அபராஜிதனை ஒரு ஆளா மதிக்கவே மாட்டாங்க.. அத்தை குடும்பத்தோட சூழ்ச்சி அவங்களிடம் எடுபட்டதில்லை நந்தினி.. தரங்கிணி குடும்பத்தின் மீது எனக்கிருக்கும் அட்டாச்மெண்ட்டுக்கான இம்பார்ட்டண்ட் ரீசன் இது மட்டும்தான்.."
அஜந்தா குடும்பத்தின் சூழ்ச்சியே தரங்கிணியின் குடும்பத்திடம் எடுபடாது என்றால் தரங்கிணியின் குடும்பம் எப்பேர்பட்ட சூழ்ச்சிக்கார குடும்பமாக இருக்கும்..?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -226
எண்ணியிருந்தது ஈடேற -226
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-226.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-226.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy