எண்ணியிருந்தது ஈடேற -225

225 "ரவியின் மனதை விடு.. அவர் மனது கல் மனது.. தங்கை மனதில் யாரை நினைத்தால் என்னன்னு உன்னை மேரேஜ் பண்ணிக்க நினைக்கலாம்.. ரம்யாவ...


225


"ரவியின் மனதை விடு.. அவர் மனது கல் மனது.. தங்கை மனதில் யாரை நினைத்தால் என்னன்னு உன்னை மேரேஜ் பண்ணிக்க நினைக்கலாம்.. ரம்யாவின் மனது அங்ஙனவா..? அவள் மனது பூப்போல மென்மையானதாச்சே நந்தினி.. என் அண்ணனை மறந்து அவள் எங்ஙன ஜீவிப்பாள்..?"
'அந்த அளவுக்கா தனபாலனை ரம்யமாலினி காதலிக்கிறாள்..?' நந்தினிக்கு மயக்கம் வருவதைப் போல இருந்தது..
"உனக்கென்ன வந்தது நந்தினி..? நீ எங்கிருந்தோ வந்தவள்.. ரம்யமாலினியைப் பற்றியும் அவளுடைய காதலைப் பற்றியும் உனக்கென்ன கவலை..? உனக்குத்தான் கனவிலும் நினைக்காத வாழ்க்கை கிடைக்கப் போகிறதே.. என்ஜாய் இட் வித் ஹேப்பி.. யார் எப்படிப் போனால் உனக்கென்ன..?"
நந்தினிக்கு தொண்டையை அடைத்தது.. இப்படியொரு இடர் வருமென்று அவள் நினைத்தும் பார்க்கவில்லையே.. வயநாட்டில் ஒளிந்து மறைந்து வேலை பார்க்கத்தான் வந்தாள்.. வந்த இடத்தில் ரவிச்சந்திரனின் கவர்ந்திழுக்கும் கவர்ச்சி நிரம்பிய அழகில் மயங்கிப் போனாலும் மனதை இழுத்துப் பிடித்துத் தள்ளி நின்றாளே.. அவன் காதல் சொல்லியும் அவனது காதலை ஏற்றுக் கொள்ளாமல் விலகி நின்றாளே..
'அப்போல்லாம் இந்தக் காதலெனும் மாயப்பிசாசு என் மனசுக்குள் புகுந்து கொன்று திங்கலையே..'
நந்தினிக்கு அழ வேண்டும் போல இருந்தது.. ரவிச்சந்திரன் அவளுக்குக் கிடைப்பானா என்ற பயம் எழுந்து மனம் முழுவதையும் ஆக்ரமித்தது.. அவளுடைய காதல் நிறைவேற யாதொரு தடையும் இருக்காது என்று அடிமனதில் வேர் விட்டு ஆலவிருட்சமாக எழுந்து நின்ற நம்பிக்கை தகர்ந்து சரிந்தது..
"ரவிச்சந்திரனுக்கு வேண்டுமென்றால் காதல் பெரிதாக இருக்கலாம் பட்ஷே.. எண்ட சேட்டனுக்கு ஞான் மட்டுமே பெரிது.. என்னை ரவிச்சந்திரன் இக்னோர் பண்ணினால் டெபனிட்டா அவன் ரம்யமாலினியை இக்னோர் பண்ணுவான்.. மனசிலாயி.. பை.. ஸீ யு.. மறுபடியும் உன்னைப் பார்க்க எனக்கு விருப்பமில்லை தான்.. நீயாக ஓடிப் போனால் சரி.. போகலைன்னா பார்த்துத்தானே ஆகனும்..? அதுதான்.. ஸீ யு ன்னு சொன்னேன்.."
தான் சொன்ன 'ஸீ யு'க்கான தன்னிலை விளக்கத்தைக் கொடுத்து விட்டு 'ராணி நடை' போட்டு சாலையில் நிறுத்தி வைத்திருந்த காருக்குச் சென்று விட்டாள் தரங்கிணி.. அவள் காரைக் கிளப்புவதற்கும் ரம்யமாலினி செல்போன் பேச்சை முடித்து விட்டு அருகில் வருவதற்கும் மிகச் சரியாக இருந்தது..
"ஸாரி நந்தினி.. லேட் ஆகிருச்சு.." தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்தவள் தரங்கிணியின் காரைப் பார்த்ததும் பிரகாசமானாள்..
"தரங்கிணியின் கார் போல இருக்கே.."
ரம்யமாலினியின் ஆவலில் நந்தினியின் மனம் தொய்ந்தது..
"ஆமாம்.. அது அவங்க கார்தான்.." என்றாள் சோர்வாக..
"அவங்களா வந்திருக்காங்க..?"
ரம்யமாலினி கேட்டுக் கொண்டிருந்தபோதே தரங்கிணியின் கார் பறந்து விட்டது.. ரம்யமாலினியின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை நந்தினியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
'இந்த ஏமாற்றம் எதற்காக..? அப்படின்னா தரங்கிணி சொன்னது உண்மைதானா..?'
"அவங்க உன்னுடன் பேசினாங்களா நந்தினி..?"
அவளுடன் ஒன்றுபட்டு விட்ட உணர்வையும், நட்பின் நெருக்கத்தையும் தந்த 'நீ, உன்' என்பது போன்ற ஒருமை விளிப்பு அப்போது ஓர்விதமான அன்னியப்பட்டு விட்ட தனிமையுணர்வை நந்தினிக்குள் விதைத்தது.. தரங்கிணியை மட்டும் அவள் 'அவங்க' என்று மரியாதையுடன் அழைப்பதா என்று நந்தினியின் மனது சிணுங்கியது..
"ம்ம்ம்.. பேசினாங்க ரம்யா.."
"நானும் உன்னுடன் வந்திருக்கிறேன்னு அவங்களிடம் சொன்னாயா..?"
"ம்ம்ம்.. சொன்னேன் ரம்யா.."
"தெரிந்துமா எனக்காக வெயிட் பண்ணி என்னைப் பார்த்துப் பேசாமல் போயிட்டாங்க.."
'தெரிந்தேதான் அவள் போயிருக்கிறாள்..'
நந்தினியின் மனம் சோர்ந்தது.. வேண்டுமென்றே தான் தரங்கிணி ரம்யமாலினியைச் சந்திக்காமல் போயிருக்கிறாள் என்பது நந்தினிக்குப் புரிந்தது.. ரம்யமாலினிக்கு எப்படி அதை புரிய வைப்பாள்..?
ரம்யமாலினியுடன் பேசாமல் விலகிச் சென்றால் ரம்யமாலினி எந்த அளவுக்கு வருத்தப்படுவாள் என்பதை நந்தினி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே ரம்யமாலினியைக் கவனிக்காததைப் போல புறக்கணித்து விலகிச் சென்றிருக்கிறாள்..
"என்மீது அங்களுக்கு ரொம்பப் பிரியம் நந்தினி.."
'இல்லை ரம்யா.. அவளுக்கு உன்மீது உண்மையான பிரியம் இருந்ததில்லை.. இனி இருக்கப் போவதும் இல்லை.. அவளுக்குத் தேவையானது உன் அண்ணனின் மனைவியென்ற பெருமை.. உன் அண்ணன்மீது கூட அவளுக்குக் காதலில்லை.. பிரியமில்லை..'
"அன்புன்னா அன்பு.. அப்படியொரு அன்பு நந்தினி.."
"ஓ..."
ரம்யமாலினி எதையோ சொல்லத் துடித்து நாணம் வந்ததினால் அதை மறைத்து தவித்ததில் நந்தினி தவித்துப் போனாள்..
"நந்தினி.."
"ம்ம்ம்.."
"நந்தினி.."
"சொல்லு.. ரம்யா.."
"நந்தினி.. நான்.."
அன்றொரு நாள் தன் மனதிலிருந்த காதலை உத்ராவிடம் சொல்ல முடியாமல் நந்தினி திணறிய திணறலை ரம்யமாலினியிடம் கண்டாள் அவள்.. அது உணர்த்தியது ஒன்றுதான்.. ரம்யமாலினியின் மனதில் காதல் உணர்வுகள் மலர்ந்திருக்கின்றன..
ரம்யமாலினி திணறிய திணறலைக் காணச் சகிக்காமல் அவளே கேட்டு விட்டாள்..
"ரம்யா.. உன் மனதில் யார் மீதாவது எண்ணம் இருக்கிறதா..? ஐ மீன்.. உன் மனதில் உண்மையாகவே மன்னாதி மன்னன் யாராவது இருக்கிறாங்களா..?"
"நந்தினி.."
ரம்யமாலினியின் சிவந்த முகம் மேலும் சிவந்தது.. ரகசியத்தை தோழியிடம் பகிர்ந்து கொள்ளப் போகும் குறுகுறுப்பை அவள் விழிகளில் கண்டாள் நந்தினி..
"இப்போப் போனாங்கள்ல.. தரங்கிணி.."
"ம்ம்ம்..."
எந்த விவரம் நந்தினியின் வாழ்வைப் பாதிக்கப் போகிறதோ.. அந்த விவரத்தை மனம் கனக்க செவி மடுத்தாள் நந்தினி..
"தரங்கிணியோட அண்ணன்.. தனபாலன்.."
மேலே பேச முடியாமல் ரம்யமாலினி தடுமாறினாள்..
"அவரை நீ காதலிக்கிறயா ரம்யா..?" வெறுமையான குரலில் கேட்டாள் நந்தினி..
அவளுக்குள் பரவிய வெறுமையில் அவளுக்கே அவள் மீது கோபம் வந்தது.. அவளுக்கொரு நியாயம்.. ரம்யமாலினிக்கு ஒரு நியாயமா..? அவள் மனதில் காதல் வந்திருப்பதைப் போல ரம்யமாலினிக்கும் காதல் வரக் கூடாதா..?
"காதல்ன்னு இல்லை நந்தினி.."
நந்தினியின் வயிற்றில் பாலை வார்த்தாள் ரம்யமாலினி..
"அப்ப.. நீ அவரைக் காதலிக்கலையா..?" நந்தினி பரபரத்தாள்..
"என் மனதில் அவர் மீது ஒரு பிடித்தம் இருக்கிறது நந்தினி.. அது காதலான்னு எனக்குத் தெரியாது.. பட்.. அவரை மட்டும்தான் நான் ஸ்பெசலா நினைத்துப் பார்த்திருக்கிறேன்.. வேறு யாரையும் அப்படி நினைத்துப் பார்த்ததில்லை.."
பரபரத்த நந்தினியின் உற்சாகம் புஸ்வாணமாகி விட்டது.. காற்றுப் போன பலூனாக அவள் தொய்ந்து போனாள்.. ரம்யமாலினி தேவதைப் பெண்.. அவள் மனதில் பிரத்யேகமாக ஒருவனைப் பற்றி நினைத்திருக்கிறாள் எனும் போது அந்த நினைவுகளுக்கான மரியாதையைக் கொடுக்க வேண்டாமா..?
"உனக்கு அவரைப் பிடித்திருக்கில்லை.. அப்புறம் என்ன..?"
நந்தினி சடுதியில் தன்னையும் தன் நலனையும் மறந்து ரம்யமாலினியின் தோழியாக மென்மையாக முறுவலித்தாள்..
"அப்புறம் என்னன்னா..?" ரகசியச் சிரிப்புடன் கேட்ட ரம்யமாலினியின் முகத்தில் சந்தோசப் பூ மலர்ந்திருந்தது..
"அவரை உங்களுக்குப் பிடித்திருக்கிற விவரத்தை அத்தை, மாமாவிடம் சொல்லலாமே.."
"அவர்கள் சொல்லித்தானே என் மனசில் அவரைப் பத்தின நினைவு வந்தது.."
"ஓ.."
தெரிந்த விவரத்தை தெரியாத விவரம் போல அப்போதுதான் தெரிந்து கொள்வதைப் போலப் பாவனை செய்ய வெகுவாக சிரமப்பட்டாள் நந்தினி.. அவளுக்கு நடிக்க வராது.. அஜந்தாவுக்கு அது கைவந்த கலையாக இருக்கக் கூடுமென்ற தேவையில்லாத நினைவு ஊடாடி எரிச்சலைக் கிளப்பியது..
மனதின் வலியில் கிளம்பியிருக்கும் எரிச்சலுக்கான காரணமாக அஜந்தாவை முன்னிருத்தத் தோதாக அவளது நினைப்பை வலிய இழுத்து வந்திருக்கிறது அவள் மனது என்று அவளுக்குப் புரியவில்லை.. மாறாக இன்னதென்று வரையறுக்க முடியாத எரிச்சல் உணர்வுக்கு ஆட்பட்டு அவள் துடிதுடித்தாள்..
அதை உணராமல் தன் மனதிலிருந்த உணர்வுகளைத் தோழியிடம் பகிர்ந்து கொள்ளும் உற்சாகத்தோடு பேசிக் கொண்டிருந்தாள் நந்தினி..
"தரங்கிணியின் ஃபேமிலி எங்க ஃபேமிலிக்கு ரிலேட்டிவ் நந்தினி.. குளோஸ் ரிலேட்டிவ்ன்னு கூடச் சொல்லலாம்.."
"ஓ..."
"குளோஸ் ரிலேட்டிவ்ன்னா அஜந்தா உரிமை கொண்டாடற அளவுக்கு குளோஸ் ரிலேட்டிவ்.."
"அப்படியா..?"
"அஜந்தா அப்பாவுக்குத் தங்கை மகள்ன்னு சொல்லிக்கிறா இல்லையா.. தரங்கிணியும் ஒருவகையில் அப்படித்தான்.. தரங்கிணியின் அம்மா அப்பாவுக்கு சித்தப்பா மகளாம்.. தட் மீன்ஸ்.. எங்க தாத்தாவுடைய கூடப் பிறந்த தம்பியின் மகள்.. இவங்களுக்குச் சப்போர்ட்டா எங்க தாத்தாவின் தங்கைகள் இருக்கிறாங்க.. அவங்களுக்கு அத்தையையும் அவங்க குடும்பத்தையும் பிடிக்காது.."
'இந்த ஒரு காரணத்தினாலேயே இவளுக்கு தனபாலனைப் பிடித்திருக்க வேண்டும்..'
ரம்யமாலினியும் அதைத்தான் சொன்னாள்..
"எங்க ரிலேட்டிவ்ஸ்ல எங்க அத்தையின் குடும்பத்தை எதிர்த்து நிற்கிற துணிச்சல் இவங்க குடும்பத்துக்கு மட்டும்தான் இருக்கு நந்தினி.. மத்தவங்க அவந்திகா அத்தையின் குடும்பத்தை எதிர்த்து நிற்கத் தயங்குவாங்க.."
'இப்படியொன்னு இருக்கா..'
"தரங்கிணி இருக்காங்களே.. அவங்க அசால்ட்டா அஜந்தாவை டாமினேட் பண்ணிட்டுப் போய்க்கிட்டே இருப்பாங்க.. அவங்க பண்ணுகிற இன்சல்ட்டில அஜந்தா நான்கு நாள்களுக்கு எழுந்திருக்க முடியாம குளிர் ஜீரம்ன்னு படுத்திருவா.."
'இவ அஜந்தாவை விட டேன்ஜரஸ்ன்னு இதிலிருந்தே உனக்குப் புரியலையா ரம்யா..?'
கேட்க நினைத்ததைக் கேட்க முடியாமல் ஊமையானாள் நந்தினி.. இதைக் கேட்க அவள் யார் என்ற தன்னிரக்கம் அவளைக் கலக்கியது..
"தனபாலன் ஹேண்ட்சம், அண்ணனுக்கு அடுத்த படியாப் பேசப்படற யங் பிஸினெஸ் மென்களில ஒருத்தர் அப்படிங்கிற ரீசனுக்காக எல்லாம் அவர் மேல சாப்ட்
கார்னர் வரலை நந்தினி.. என் அண்ணனைப் பத்தி உனக்கே தெரியும்.. இவரை விடப் பெரிய பொஸிசனில இருக்கிறவரா.. இன்னும் ஹேண்ட்சம்மா, பெட்டரா ஒருத்தரை எனக்காக அண்ணன் செலக்ட் பண்ணிக் கொண்டு வந்து நிறுத்தும்.."
'அப்புறமும் ஏன் ரம்யா தரங்கிணியின் குடும்பத்தில போய் மாட்ட நினைக்கிற..?'
ரவிச்சந்திரன் தரங்கிணியின் அண்ணனுக்கு ரம்யவைக் கொடுக்கக் கூடாது என்று பேசியதாக ஒரு நினைவு நந்தினிக்குள் வந்து வந்து போனது.. அன்று இதைக் குறித்த அக்கறையோ ஆவலோ இல்லாமல்.. ஏதோ ஒரு செய்தியாக மட்டும் அவள் கேட்டுக் கொண்டாள்..
'அது ரம்யாவுக்குத் தெரியுமா..?'
தெரியவில்லையென்றால் அதைத் தெரியப் படுத்த ஒரு போதும் நந்தினி முயல மாட்டாள்.. அந்த வேலைகளை அஜந்தாவும், தரங்கிணியும்தான் செய்வார்கள்.. நந்தினியால் செய்ய முடியாது.. அது அவளது குணமல்ல..
ரம்யமாலினி தன் அண்ணனின் ஆளுமையின் மீது பிரியம் கொண்டவள்.. அவனைக் கதாநாயகனாகப் பார்த்துப் பெருமை கொள்பவள்.. அவன்தான் அவளுக்கு எல்லாமும்.. வீணாவின் தாய்மடியையும் தாண்டிய பாதுகாப்பை ரவிச்சந்திரன்தான் தங்கைக்கு அளித்துக் கொண்டிருந்தான்.. அனைத்து அடையாளங்களையும் மறந்து தன்னை ரவிச்சந்திரனின் தங்கையென்று மட்டுமே முதன்மையாக அடையாளம் சொல்லும் ரம்மாலினிக்கு மட்டும் ரவிச்சந்திரனின் முடிவு தெரிந்திருந்தால் தனபாலனை ஓர் நொடியில் மறந்து விட மாட்டாளா..?


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -225
எண்ணியிருந்தது ஈடேற -225
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-225.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-225.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy