எண்ணியிருந்தது ஈடேற -224

224 "உனக்குச் சொந்தமானதை ஓர்நாளும் மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டியா.. ? அவ்வளவு சுயநலமானவளா நீ..! அப்புறம் எதற்காக ரம்...


224


"உனக்குச் சொந்தமானதை ஓர்நாளும் மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டியா..? அவ்வளவு சுயநலமானவளா நீ..! அப்புறம் எதற்காக ரம்யமாலினியின் மனதில் யார் இருக்கிறார்கள்ன்னு கேள்வி கேட்டுத் துளைத்த..?"  ஊடுறுவும் துச்சப் பார்வையோடு ஏளனமாக கேட்டாள் தரங்கிணி..
'இப்படியொரு பார்வை பார்க்க இவளால்தான் முடியும்..' என்று நினைத்துக் கொண்டாள் நந்தினி..
தரங்கிணி பார்க்கும் பார்வையிலேயே ஒருவரைக் கூறு போட்டு விடும் தன்மை கொண்டவளாக இருந்தாள்.. போதாக் குறைக்கு ஏளனக் குரல் வேறு..
'இளகிய குணமும் மனமும் கொண்டவங்க இவகிட்ட மாட்டினால் அவ்வளவுதான்..' நந்தினியின் மேனி சிலிர்த்தது..
"இங்கே பார்.."
"உன்னைப் பார்க்க நீயென்ன மகாராணியா..?"
"மகாராணியாய் இருந்தால்தான் பார்ப்பியா..?"
"அஃப்கோர்ஸ்.. கேரளாவில் மட்டுமில்லை.. உலகத்திலேயே பணக்காரங்க வரிசையிலே இருக்கிறவங்க மட்டும்தான் என்னிடம் பேச முடியும்.. என் லெவலுக்கு உன்னிடம் நின்று பேசுவதே பெரிய விசயம்.."
"லெவலைப் பத்தி நீ பேசற பார்.. குட் ஜோக்.. உன்னைப் போல பொடிபுத்தி படைச்ச லேடி, பெரிய விசயங்களைப் பத்தி யோசிச்சுக்கூடப் பார்க்கக் கூடாது.."
"புரியலை.."
"என்னிடம் நின்று பேசுன்னு உன்னைத் தஞ்சாவூரு தவிலை அடிச்சு கும்பகோணம் கொழுந்து வெத்தலை பாக்கை வைச்சு நான் அழைக்கலை.. வயநாட்டு மகாராணிகூட நின்று பேசனும்னு எனக்குத் துளிக்கூட ஆசையில்லை.. ஸோ.. உன் லெவலுக்கு உச்சாணிக் கொம்பிலே ஏறி ஓடியே போயிரு.."
"யாரைப் பார்த்து ஓடச் சொல்கிற..? அது உன் புத்தி.. வீட்டை விட்டு ஓடி வந்து என் ரவியத்தானோட லைஃபில இண்டர்பியர் ஆகியிருக்கிறது நீ.. ஓடிப் போக வேண்டியது நீதான்.. நானில்லை.."
"ரவியத்தானா..? அஜந்தா அத்தான்னு சொன்னாக் கூடக் கேட்டுக்கலாம்.. அவரோட அத்தை மகள் அவள்.. நீயென்ன அத்தான்னு உரிமை கொண்டாடற..?"
"ஓ.."
தெளிவான மலையாள '' போட்டுத் தான் மலையாள தேசத்தில் பிறந்தவள் என்பதை நிரூபித்தாள் தரங்கிணி..
'இவர்கள் போடும் '' படு வித்தியாசமாக இருக்கிறது..' அந்த நிலைமையிலும் உச்சரிப்பைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினாள் நந்தினி..
'ஜெமினி படத்தில விக்ரம் போடும் '' போல இது இல்லை.. அந்த '' செந்தமிழ் 'ஓ..' இந்த '' வல்லிய மலையாள '' வல்லோ..'
"நான் எண்ட ரவிய ரவியத்தான்னு உரிமை கொண்டாடறதை ஆ அஜந்தா அப்ஜெக்ட் பண்ணினாக் கூடக் கேட்டுக்கலாம்.. அத்தானோட அம்மாச்சி மோள் அவள்.. நீயென்ன அப்ஜெக்ட் பண்றது..? ஹீ ஆர் யு..? ஆப்டர் ஆல் எண்ட அத்தானிடம் ஜோலி பார்க்கும் செக்கரட்டரி நீ.. எங்க ஃபேமிலி விசயத்தில இண்டர்பியர் ஆகிற உரிமையை யார் உனக்குக் கொடுத்தது.."
"ரவிதான் கொடுத்தார்.."
நிறுத்தி நிதானமாகச் சொன்னாள் நந்தினி.. சொல்லித்தான் ஆக வேண்டும்.. இதில் மூடுதிரை போட என்ன இருக்கிறது..? ஒளிவு, மறைவாய் காதல் பண்ண வேண்டிய அவசியம் அவளுக்கும் இல்லை, ரவிச்சந்திரனுக்கும் இல்லையெனும்போது எதற்காக மறைக்க வேண்டும்...? என்றைக்கு இருந்தாலும் மற்றவர்களுக்கு அது தெரிந்துதானே ஆக வேண்டும்.. அதை இன்றே சொல்லி தரங்கிணியுடன் மோதி விடுவது சாலச் சிறந்தது அல்லவா..
"ரவி.. யா..?" தரங்கிணி ஆத்திரமடைந்தாள்..
"அத்தானின் பெயரைச் சொல்கிறாயா..? எந்தா தைரியம்..?"
"இந்தா தைரியம்.. அள்ளி வைத்துக்க.. ஆளைப் பாரு.. அவரோட பெயர் ரவிச்சந்திரன்தானே.. அதை சுருக்கி 'ரவி, ரவி'ன்னுதான் அவரை நான் கூப்பிடுவேன்.. அதில அவருக்குச் சாலச் சந்தோசம்.. மனசிலாயி.."
நந்தினி வேண்டுமென்றே 'ரவி, ரவி,' என்று அவன் பெயரை மட்டும் ஹஸ்கி வாய்சில் சொல்லி விட்டு மற்ற வார்த்தைகளை ஹார்டு வாய்சில் உச்சரித்ததில்..
"யு.. யு.. யு.." என எண்ணையில் போட்ட அப்பம் போலக் கோபத்தில் துள்ளிக் குதித்தாள் தரங்கிணி..
"பார்த்து.. பக்கத்தில் பள்ளத்தாக்கு இருக்கு.. உருண்டு விழுந்து விடப் போகிற.." கரிசனம் காட்டி கடுப்பேற்றி விட்டாள் நந்தினி..
"ஈ.. வயநாட்டிலதான் ஞான் ஜனிச்சு.."
"அதை ஞான் அறிஞ்சு.."
"எண்ட வயநாட்டப் பத்தி ஞான் அறியும்.."
"அதையும் ஞான் அறியும்.. என்னங்கிற..?"
தரங்கிணி சுதாரித்தாள்.. அவளுடைய ஆத்திரத்தை நந்தினி கேலி செய்வதை புரிந்து கொண்டவளாக தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டாள்.. மூச்சை இழுத்து விட்டுத் தன்னை நிதானப் படுத்திக் கொண்டாள்..
'பொறுமை.. தரங்கிணி.. பொறுமை.. பதறிய காரியம் சிதறி விடும்.. இவளிடம் கோபப் படுவதைவிட.. இவளை வயநாட்டை விட்டு ஓட வைக்க வேண்டும்.. அதுதான் முக்கியம்..'
தனக்குள் உருப் போட்டுக் கொண்டிருந்தவளை விசித்திரமாகப் பார்வையிட்டு அவள் மனதில் இருப்பதை அவதானிக்க முயன்றாள் நந்தினி..
'புலி பதுங்கினாப் புரிஞ்சுக்கலாம்.. நரி ஊளையிடுவதை நிறுத்தினா ஏதோ தந்திரம் பண்ணுதுன்னுல்ல அர்த்தமாகுது.. இவ என்னத்தைப் பிளான் பண்றா..?'
"உனக்கு ரவிமேல வளர இஷ்டமமோ..?"
இந்தக் கேள்வியை இத்தனை அமைதியாக தரங்கிணி கேட்டு வைப்பாள் என்று எவர் சொல்லியிருந் தாலும் நந்தினி நம்பியிருக்க மாட்டாள்.. அவளது கண்ணெதிரே தரங்கிணி நின்று வாயசைத்ததால் நம்பினாள்..
"வெறும் இஷ்டமில்லை.. 'வள...ர..' இஷ்டம்.. கேட்டே.." என்று 'வளர' என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தாள்..
"ஓ.."
உதடுகளைக் குவித்த தரங்கிணியின் முகத்தில் ஆத்திரத்தின் அலைகளை எதிர்பார்த்து ஏமாந்து போனாள் நந்தினி.. யோகியைப் போல நிச்சலனமாக முகத்தை வைத்துக் கொண்டு..
"அங்ஙனவோ..?" என்று தரங்கிணி இமை கொட்டியதில் அதிசயித்துப் போனாள்..
"அங்ஙனதான் அம்மே.." வேண்டுமென்றே வம்பிழுத்தாள்..
"ஞான் நினக்கு அம்மையோ..?"
"ஓ.."
"நந்தினி எண்ட மோளோ.."
"அதி எதுக்கு..? நான் என் அம்மாவின் மகளாக்கும்.."
"அதையே மெயின்டெயின் பண்ணு.. கொஞ்சம் அமைதியாய் பேசினா உனக்கு என்னை அம்மாவாக்கி விடுவாயா..?"
"நீ புத்த சாமியாரிணி போல பிலிம் காட்டினா இப்படித்தான்.. ஒரிஜினல் தரங்கிணியை வெளியே கொண்டு வர வேணாமா..?"
"ஒரிஜினலைக் கண்டா நீ பயந்து விட மாட்டியா..?"
"உன்னிடமெல்லாம் எனக்குப் பயமே வராது தரங்கிணி.."
"ஓ.. உண்மையைக் கண்டா பயம் வராதோ..?"
"நீ உண்மையா..? ஹ..! உண்மைக்கும் உனக்கும் ரொம்பத் தூரம்ன்னு எனக்குத் தெரியும் தரங்கிணி.. கப்ஸா விடாம மேட்டருக்கு வா.."
"வரத்தானே வந்திருக்கிறேன்.. நினக்கு ரவிமேல இஷ்டம்.."
"வளர இஷ்டம்.."
"ரவிக்கு உன்மேல இஷ்டம்.."
'அதில உனக்கு கஷ்டம்..'
"என்ன..? பதிலைக் காணோம்.."
"வளர.. வளர.. இஷ்டம்.. போதுமா.."
"போதாதே.. கூடவே ரவிக்கு ரம்யமாலினி மேல வளர.. வளர.. இஷ்டமாச்சே.."
"இதோ பார்.. நாத்தனார் காய்ச்சலெல்லாம் எனக்குக் கிடையாது.. ரம்யமாலினியைப் போல சாந்தமான குணம் படைச்ச தேவதைப்பெண் தங்கையாய் வாய்த்தால் பிரியம் காட்டத்தான் செய்வார்கள்.. உன் மீதே உன் அண்ணன் பிரியம் காட்டும் போது ரம்யாவின் அண்ணன் அவள் மீது பிரியமாக இருப்பதில் என்ன ஆச்சரியம் வேண்டிக் கிடக்கு..?"
"என் அண்ணன் யாருன்னு உனக்குத் தெரியுமா..?"
"இதைச் சொல்லவா இவ்வளவு பில்ட்-அப் காட்டின..? உன் அண்ணன் யாருன்னு எனக்குத் தெரியாது.. அவரைத் தெரிந்துக்கனுங்கிற அவசியமும் எனக்கு இல்லை.. அவர் யாராக இருந்தால் எனக்கென்ன..?"
"உனக்கென்னவா..? அப்படியெல்லாம் நீ சொல்லி விட முடியாதும்மா.."
"அம்மாவா..?" நந்தினியின் முகம் அஷ்ட கோணலானது..
'இப்ப இவ முறையா..?..' நந்தினியின் மனதில் கலவரம் சூழ்ந்தது..
"அம்மையேதான்.. நினக்கு ஞான் அம்மையாகும் போது எனிக்கு நீ அம்மையாகக் கூடாதோ.."
'ஆமாண்டி.. அதுக்குத்தான் ஞான் வயநாட்டுக்கு வந்து..'
"எந்து பதிலையும் காணோமே.."
"உன்னைப் போல மகள் இருந்தா என்ன செய்திருப்பேன்னு நினைச்சுப் பார்த்தேன்.. ஒழுங்கா இருப்பியா, இருப்பியான்னு நான் போடற போட்டில வாலைச் சுருட்டி மடக்கி ஓரமா ஒதுக்கி உட்கார்ந்திருக்கனும்.. நீ தப்பிச்சிட்ட தரங்கிணி.."
"பட்ஷே.. நீ தப்பிக்கலையே நந்தினி.."
"எதிலிருந்து.."
"ரவியை விட்டு விலகி ஓடுவதிலிருந்து.."
தரங்கிணி சொல்லி வாய் மூடுவதற்குள் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டாள் நந்தினி.. எதிர்பாராமல் விழுந்த அறையில் கண்களில் பொறி பறக்க கன்னத்தைப் பிடித்தபடி தள்ளாடினாள் தரங்கிணி..
"கொன்று புதைச்சிருவேன்.." ஒற்றை விரலை உயர்த்தி எச்சரித்தாள் நந்தினி..
"வெறும் வாய் வார்த்தைக்கே கொன்று புதைக்கிற வரை போகிறாயே.. நிஜமாவே அதுதானே நடக்கப் போகுது.."
"எது..?"
"நீ ரவியை விட்டு விலகி ஓடுவது.."
அடிவாங்கியும் அடங்காமல் நந்தினியை நேருக்கு நேர் பார்த்தபடி சொன்ன தரங்கிணியிடம் தெரிந்த உறுதியில் பதறிப் போனாள் நந்தினி..
'கடவுளே..! இவ என்னதான் சொல்ல வர்றா..'
"என் அண்ணன் யார்ன்னு உனக்குத் தெரியாதுன்னு சொன்னியே.. அவன் யார்ன்னு இப்பச் சொல்லவா..?"
"சொல்லித் தொலை.. அவரென்ன பெரிய அப்பாடக்கரா..?"
"அதெல்லாம் இல்லை அம்மே.. ரம்ய மாலினியின் மனதில் இருக்கும் மன்னாதி மன்னன் யாருன்னு கேட்டுக்கிட்டு இருந்தியே.. அந்த மன்னாதி மன்னன் வேறு யாருமில்லை.. என் அண்ணன்தான்.."
"என்ன..?" ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டாள் நந்தினி..
பூகம்பத்தை அவளுக்குள் விதைத்து விட்டு எதுவுமே நடக்காததைப் போல படு அமைதியாக தோள்களைக் குலுக்கி கைகளை விரித்து..
"ஊம்.." என்றாள் தரங்கிணி..
"உன் அண்ணனை ரம்யமாலினி நினைத்துக் கொண்டிருக்கிறாளா..?"
"பிரேமம் கொண்டிருக்கிறாள் நந்தினியம்மே.."
"பொய் சொல்லாதே.."
"அவளிடம் என்கொயர் பண்ணி விட்டு நான் சொல்வது பொய்யா, மெய்யான்னு ஒரு முடிவுக்கு வா.."
"ரம்யா அரண்மனைக்குள் இருப்பவள்.."
"பட்ஷே.. சொந்தபந்தங்களின் பங்சனுக்கு ஃபேமிலியுடன் அட்டெண்ட் பண்ணுகிறவள்.. யு நோ.. எங்க ஃபேமிலி ரவியோட ஃபேமிலிக்கு குளோஸ் ரிலேடிவ்.. இதை நந்தினி அறியுமோ.."
'நீ ஓடி வந்தவள்..' தரங்கிணியின் விழிகள் சொல்லியதில் தொய்ந்து போனாள் நந்தினி..
"தனபாலன்..! என் அண்ணன்..! கேரளத்தின் ஸ்டார் இமேஜில் இருக்கிற கோடிஸ்வர பிஸினெஸ் மேன்களில் பர்ஸ்ட் பொசிசன் ரவியத்தானுக்கென்றால் செகண்ட் பொசிசனில் என் அண்ணன் இருக்கிறான்.."
"இல்லையே.. செகண்ட் பொசிசனில் நிறையப் பேர் இருக்கிறதா நான் பிஸினெஸ் மேகசின்ல படிச்சேனே.."
தரங்கிணியின் முகம் அவளது இயல்பான பயங்கரத்துக்கு ஓர் கணம் மாறியது.. மறுகணத்தில் சுதாரித்தவள்..
"என் அண்ணனோடு சிலர் இருக்கலாம்.. பட்ஷே.. என் அண்ணன் ரம்ய மாலினியை விவாகம் கழித்து விட்டால் செகண்ட் பொசிசனில் என் அண்ணன்
மட்டும் தான் இருப்பான்.. அவனுடன் இருப்பவர்கள் தேர்டு பொசிசனிற்குப் போய் விடுவார்கள்.." என்று சொன்னாள்..
சொன்னவள் அத்துடன் நிறுத்தாமல்..
"அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.." என்றாள்..
அவளது கண்களில் மிதந்த கனவில் நந்தினிக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது..
"யு ஸீ நந்தினி.. ரம்யமாலினிக்காக எதையும் செய்யும் ரவியத்தான் அவளுடைய காதலை நிறைவேற்றி வைக்க டிரை பண்ணிக் கொண்டிருக்கிறார் பட்ஷே.. என் அண்ணன் என்னை ரவியத்தான் மேரேஜ் பண்ணிக் கொண்டால்தான் அவன் ரம்யமாலினியை மேரேஜ் பண்ணிக் கொள்வான் என்கிற கண்டிசனை முன்னால் வைத்திருக்கிறான்.. இதுவரை அதை மறுக்காத ரவி இனி அதை மறுக்க நினைக்கலாம்.. அப்படி மறுத்தால் நிச்சயமாக என் அண்ணன் ரம்யாவை மேரேஜ் பண்ணிக்க மாட்டான்.. ரவி அதைப் பற்றிக் கவலைப் படாமல் இருக்க மாட்டார்.. தங்கைக்கு துரோகம் செய்து விட்ட குற்ற உணர்வு அவர் மனதில் வந்து விடும்.. முழு மனதோடு நிம்மதியாக உன்னை அவர் மேரேஜ் பண்ணிக் கொள்வாருன்னா நினைக்கிற..?"
'கடவுளே..!' விழி மூடி தோற்றுப் போனவளாக தளர்ந்து நின்று விட்ட நந்தினியைத் திருப்தியுடன் பார்த்தாள் தரங்கிணி..
'இது.. இது.. இது.. இதைத்தானே எதிர்பார்த்தேன்..'
நந்தினியின் மனதில் குருதியைக் கொட்ட வைத்து சந்தோசம் தரங்கிணியின் மனதினில் குளிர்ச்சியைக் கொட்டியது..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -224
எண்ணியிருந்தது ஈடேற -224
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-224.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-224.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy