எண்ணியிருந்தது ஈடேற -223

223 எப்போது அழைக்க ஆரம்பித்தார்கள் என்பதையே உணராமல் அவளும் ரம்யமாலினியும் ஒருவரையொருவர் ஒருமையில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள...


223


எப்போது அழைக்க ஆரம்பித்தார்கள் என்பதையே உணராமல் அவளும் ரம்யமாலினியும் ஒருவரையொருவர் ஒருமையில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.. அதை நந்தினி குறிப்பிட்ட போது..
"ஆமாமில்ல.." என்று விழிகளை மலர்த்திச் சிரித்தாள் ரம்யமாலினி..
அதன் பின்னால் அவர்கள் இருவரும் என்னென்னவோ பேசிச் சிரித்தார்கள்.. தனது குழந்தைப் பருவம் முதல் குமரிப் பருவம் வரை மனதில் தேக்கி வைத்திருந்த அத்தனை உணர்வுகளையும் நந்தினியிடம் பகிர்ந்து கொண்டாள் ரம்யமாலினி.. அவளுடைய திருமணத்தைப் பற்றிய பேச்சு வந்தபோது..
"பிடிக்காம மேரேஜ் பண்ணிக்கிறதை விட மேரேஜே பண்ணிக்காம இருக்கிறது பெட்டர் நந்தினி.." என்றாள் ரம்யமாலினி..
"இதை என்னிடம் சொல்கிறயா..? பிடிக்காத மேரேஜிலிருந்து தப்பிக்க ஸ்டேட் விட்டு ஸ்டேட் ஓடி வந்திருக்கிறவ நான்.. பட்.. உனக்குப் பிடிக்காத மேரேஜ் நடக்க சான்ஸே இல்லையே.. அத்தையும், மாமாவும் உன் மேல உயிரையே வைத்திருக்கிறாங்க.. பாஸ் உன்னைக் கண்ணுக்குள்ள வைச்சுப் பார்த்துக்கிறார்.. உன் விருப்பம் போலதான் மேரேஜ் நடக்கும்.." தலையை ஆட்டியாட்டிப் பேசினாள் நந்தினி..
"அப்படியும் சொல்லி விட முடியாது நந்தினி.. அண்ணனுக்கு பிடிவாதம் அதிகம்.. எனக்கு எது நல்லதுன்னு என்னைவிட அதுக்குத்தான் அதிகம் தெரியும்ன்னு நினைக்கும்.."
"நிஜம்தானே.."
"நிஜம்தான் நந்தினி.. அந்த நினைப்பினால் என் விருப்பத்துக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுக்காம என் மேரேஜை பிக்ஸ் பண்ணினாலும் பண்ணலாம்.. யு ஸீ.. அம்மாவும், அப்பாவும் அண்ணன் ஒரு முடிவெடுத்துட்டா அதை மாற்றியமைக்க நினைக்கவே மாட்டாங்க.. அண்ணனோட டிசிசன்தான் ஃபைனல் டிசிசன்.."
"ஐ ஸீ..."
தன் வீட்டிலும் அப்படித்தானே நினைத்திருப்பார்கள் என்ற நினைவில் நந்தினியின் மனம் கனத்தது.. குற்ற உணர்வு வந்த போதிலும் பெல்ட் மன்னனை மாப்பிள்ளையாக ஏற்க மனம் மறுத்தது.. ஒருவேளை ரவிச்சந்திரனை அவள் சந்திக்காமல் இருந்திருந்தால்
கூட பெற்றவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு பெல்ட் மன்னனைத் திருமணம் செய்து கொள்ள சம்மதித் திருக்கலாம்.. இப்போது ரவிச்சந்திரனைத் தவிர வேறு ஒருவனை அவளால் மனதால் கூட நினைக்க முடியாது..
"மனதார ஒருத்தனை நினைச்சுட்டா மன்மதனே வந்து நின்னாலும் திரும்பிப் பார்க்க முடியாது.." கனவில் மிதப்பவள் போல சொன்னாள் நந்தினி..
"செர்ட்டன்லி.." அதே கனவில் மிதக்கும் குரலோடு ரம்யமாலினி சொல்லி வைத்ததில் திகைப்பாகி..
"ஹேய்.." என்று ரம்ய மாலினியின் முன்னால் குனிந்து கைகளைக் குவித்தாள்..
"யார் அந்த லக்கி மேன்..?"
"யாருமில்லையே.." ரம்யமாலினியின் முகத்தில் வெட்கச் சிகப்பு..
"யாருமே இல்லாமலா உன் கன்னம் காஷ்மீர் ரோஜாப்பூ நிறத்துக்கு மாறுது..?"
"ஹேய் நந்தினி.. சும்மா சிரிப்பு மூட்டாதே.."
"உள்ளதைச் சொன்னா உனக்குச் சிரிப்பு வருதா..? சொல்லு ரம்யா.. உன் மனசில யாரிருக்கிறாங்க..?"
"புரியலை.."
"உனக்கா புரியலை..?"
"யெஸ்.."
"புரியும்படி மறுபடியும் கேட்கவா..?"
"கேளேன்.."
"சொல்லு ரம்யா.. உன் மனசில இருக்கிற அந்த மன்னாதி மன்னன் யார்..?"
நந்தினி தூண்டித் துருவினாள்.. ரம்யமாலினி தலையை ஆட்டி ரசித்துச் சிரித்தாள்.. அந்தச் சிரிப்பில் மறுப்பில்லாததில் நந்தினியின் சந்தேகம் அதிகரித்தது.. ரம்யமாலினியுடன் தனியாக உலாவ வந்ததிற்கு பயன் உண்டாவதைப் போல இருந்தது..
"மன்னாதி மன்னன்னா அது என் அண்ணன்தான் கேரளத்தில மன்னாதி மன்னன்னு அண்ணனைத்தான் அடையாளம் காட்டுவாங்க.."
"பார்றா.. உங்க அண்ணன் பெரிய பிஸ்தாவாக்கும்.."
சொல்லும்போதே நந்தினியின் நாக்கில் வெல்லக் கட்டியை வைத்ததைப் போல இனித்தது..
"இல்லையா பின்னே.."
"ஓகே.. என்னோட பாஸ் பெரிய பிஸ்தாதான்.. ஐ அக்ரி இட்.. இந்த கேரளாவில வேறு ஒரு மன்னன் இல்லையா..?"
"நீ இருக்கியே.."
"நான் இருக்கிறது இருக்கட்டும்.. வேறு ஒரு மன்னன் உன் மனதில் இல்லையா..?"
"சும்மா இரு.."
ரம்யமாலினி விளையாட்டாய் மிரட்டிக் கொண்டிருந்த போது அவளது செல்போன் ஒலிக்க ஆரம்பித்து விட்டது..
"யார்..?" என்று பார்த்தவள்..
"என் பிரண்ட்.." என்று நந்தினியிடம் சொல்லி விட்டுத் தள்ளிப் போய் பேச ஆரம்பித்து விட்டாள்..
மரங்கள் அடர்ந்திருந்த சரிவின் ஒருபக்கம் ரம்ய மாலினியும் மறுபக்கம் நந்தினியுமாக அவர்கள் பிரிந்து நின்றிருக்க.. நந்தினியின் காதோரமாக..
"ரம்ய மாலினியின் மனதில் இருக்கும் மன்னன் யார்ன்னு எனக்குத் தெரியும்.. சொல்லவா..?" என்ற பெண்குரல் ஒலித்தது..
'எவ இவ..?'
வெடுக்கென்று கழுத்தை வெட்டித் திரும்பிய நந்தினி திடுக்கிட்டு நின்று விட்டாள்.. அவளுக்கு எதிரே அசூசையாக அவளைப் பார்த்தபடி தரங்கிணி நின்றிருந்தாள்..
'இவளா..?' நந்தினியின் மனம் நடுங்கியது..
அது என்னவோ தெரியவில்லை.. தரங்கிணியைக் கண்டாலே நந்தினியின் அடி மனதில் இன்னதென்று புரியாததொரு பயம் வந்து சூழ்ந்து கொள்கிறது..
'அஜந்தாவை விட இவ தௌசண்ட் மடங்கு டேன்ஜரஸ்..'
"என்ன.. பேயடிச்சதைப் போல ஸ்டன்னாகி நின்னுட்ட.." எகத்தாளமாக கேட்டாள் தரங்கிணி..
'நீ பேய்தானேடி..' வெறுப்புடன் வேறு பக்கமாக பார்த்தாள் நந்தினி..
"உன்னிடமெல்லாம் நின்று பேச வேண்டியிருக் கேன்னு நான்தான் முகத்தைத் திருப்பிக்கனும்.. நீ உல்டாவா முகத்தைத் திருப்பி ஃபிலிம் காட்டற.. நினைப்புத்தான் உனக்கு.." ஏளனமாக சொன்னாள் தரங்கிணி..
"யார் நினைப்பு..?" பட்டென கேட்டு விட்டாள் நந்தினி..
என் மனதில் ரவிச்சந்திரனைப் பற்றிய நினைவுதான்.. என்பதைச் சொல்லாமல் அவள் சொல்லியதில் வெகுண்ட தரங்கிணி பார்த்த பயங்கரப் பார்வையில் நந்தினி பயந்து போனாள்..
"உனக்கு இருக்கும் பல நினைப்பு.. அதைப் பத்தியெல்லாம் நான் மைண்ட் பண்ணிக்கப் போகிறதில்லை.. தகுதிக்கு ஏற்றதைப் போல நினைப்பிருக்கனும்.. உனக்குத்தான் உன் தகுதியைப் பற்றிய நினைவே இல்லையே.."
தரங்கிணி பேசப்பேச.. நந்தினியின் மனதில் தரங்கிணியைப் பற்றி இருந்த பயம் ஓடியே போய்விட்டது..
'இவள் யார் என்னைக் குறைவாக பேச..' என்ற கோபம்தான் முன்னால் வந்து நின்றது..
நந்தினி பழைய நந்தினியாக நிமிர்ந்து நின்று தரங்கிணியை நேர் கொண்ட பார்வை பார்த்தாள்..
"என் தகுதி என்னன்னு எனக்குத் தெரியும்.. உனக்குத்தான் அது தெரியாமல் போச்சு.."
"உன் தகுதியைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரிந்து கொள்ளனும்ங்கிற அவசியமில்லை.. நீயெல்லாம் எனக்கு ஈக்குவல் பெர்சனா..?"
"உனக்கு ஈக்குவலா இருக்க எனக்குக் கொஞ்சம் கூட இஷ்டமில்லை.. தெரிஞ்சுக்க.. என் லெவலே வேறு.."
நந்தினியின் அலட்சியமான உதட்டுச் சுழிப்பில்..
"ஷட் அப்.." என்று கத்தி விட்டாள் தரங்கிணி..
"உஸ்ஸ்.." ஆள்காட்டி விரலை வாயில் வைத்து அவளை அடக்கிய நந்தினி..
"சத்தம் போடக் கூடாது.. இதுக்கே இந்த சவுண்டுன்னா இன்னும் நான் டென்சனை ஏத்தி விட்டா இந்த வயநாட்டையே பிளந்து விடுகிறதைப் போல சவுண்டு விட்டிருவ போல இருக்கே.. ஓவர் டென்சன் உடம்புக்கு ஆகாதும்மா.."
"அம்மாவா..?"
"யெஸ்.. அம்மா மீன்ஸ் மம்மி.. உன்னைப் பார்த்தால் பப்பா மாதிரியா இருக்கு..? பப்பா போல டிரஸ் போட்டுக் கிட்டா நீ பப்பா ஆகிருவியா..? நீயும்.. உன் டிரெஸ்ஸீம்.."
தரங்கிணி அணிந்திருந்த சின்ன அளவிலான மினி ஸ்கர்ட்டையும், ஸ்லீவ்லெஸ் பனியனையும் வெறுப்புடன் பார்த்தாள் நந்தினி..
"இந்த வயநாட்டுக் குளிருக்கு உல்லன் ஸ்வெட்டர், சால்வைன்னு எஸ்கிமோக்கள் போலக் கவர் பண்ணிக் கிட்டாக்கூடத் தாக்குப் பிடிக்க முடியலை.. நீயெல்லாம் எப்படித்தான் இத்தனூண்டு மினி ஸ்கர்ட்டோட அலைகிறயோ.. உனக்குக் குளிரவே குளிராதா..?"
"யு.. யு.."
"ஐ.. ஐ..?"
"கண்ட்ரி புரூட்.."
"கண்ட்ரி மீன்ஸ் 'நாடு..' நான் பக்கா தஞ்சாவூர் காரிம்மா.. நீதான் வயநாடு.. ஸோ.. கண்ட்ரி புரூட் யாரு..? நீயா இல்லை நானா..?"
"உன் லிமிட்டைத் தாண்டிப் பேசற.."
"என் லிமிட் எதுங்கிறதை நான்தான் டிசைட் பண்ணனும்.. நீ டிசைட் பண்ணக் கூடாது.."
"ஏய்ய்.."
"ம்ப்ச்.. சும்மா என்கிட்ட வந்து சவுண்டு விடக் கூடாது.. நீ யார்..? நான் யார்..? எனக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்..? என் வேலையை நான் பார்க்கிறேன்.. உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போவியா.. அதை விட்டுட்டு என்னிடம் வந்து லிமிட்டைப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கிற.. உனக்கு என்னதான் வேணும்..?"
நந்தினியின் கேள்வியில் அவளையே உறுத்துப் பார்த்த தரங்கிணி..
"எனக்கு வேணும்ங்கிறதைச் சொன்னால் விலகிப் போய் விடுவியா..?" என்று கேட்டாள்..
'இவ கம்மாண்டரை.. மீன் பண்றா..'
நந்தினியின் ரத்த நாளங்கள் கொதித்தன.. அவளுடைய உடைமைப் பொருளை இறுக்கிப் பிடித்துப் பத்திரப் படுத்திக் கொள்ளும் வேகத்தோடு..
"எனக்குச் சொந்தமானதை ஒருநாளும் மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன்.. அதுக்கு வேற ஆளைப் பாரு.." என்று படபடத்து விட்டாள்..
"ஓ.." ஆங்காரத்துடன் நந்தினியை முறைத்த தரங்கிணி..
"உனக்குச் சொந்தமானதோ..?" என்று கொதித்தாள்..
"யெஸ்.. எனக்குச் சொந்தமானதுதான்.."
நந்தினியின் உறுதியில்..
'அவன்மீது இத்தனை நம்பிக்கையா..?' என்று தரங்கிணியின் ஆங்காரம் அதிகமானது..
"உன் வேலையைப் பார்த்துக்கொண்டு இருக்கிறதாச் சொல்கிறாயே.. செக்கரட்டரி வேலை பார்க்கதானே வந்த..? ஒரு நாள்கூட உருப்படியாய் நீ வேலை பார்த்த தில்லையாமே.. செக்கரட்டரி வேலையைத் தவிர மத்த எல்லா வேலைகளையும் பிளான் பண்ணி ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிக்கிட்டு இருக்கிறயாமே.." இகழ்ச்சியாகத் தரங்கிணி சொல்ல, அலட்டிக் கொள்ளாமல் அவளை ஏற இறங்கப் பார்த்த நந்தினி..
"ஸ்கெட்ச் போட்டுத் தூக்கினேனா..? யாரை..?" என்று ஒன்றும் அறியாதவளைப் போல வினவி வைத்தாள்.
"நிச்சயமா என்னையில்லை..." தரங்கிணி தோள்களைக் குலுக்கிக் கைகளை விரித்தாள்..
"உன்னைச் சூச்சுன்னு உச்சுக் கொட்டிக் கூப்பிட்டாலே ஓடி வந்திருவ.. இதில ஸ்கெட்ச் போட்டுத் தூக்குவாங்களா என்ன..? அந்த அளவுக்கு ஜீரோன்னு என்னை நினைச்சியா..?"
"உன்னைப் போய் ஜீரோன்னு நான் நினைப்பேனா..? யாரு நீ..?"
"நந்தினி.."
"அது ஊருக்கு.. எனக்கு நீ பக்கா கேடி.."
"உன்னைப் போல என்னையும் நினைத்தால் எப்படி..?"
எப்படிப் பேசினாலும் நந்தினியின் மனதை புண்படுத்த முடியவில்லை என்பதில் வெறியாகிப் போனாள் தரங்கிணி.. அதுவரை அவளுக்கு யாரும் இந்த அளவுக்குப் பதிலடி கொடுத்ததில்லை.. ஆனானப்பட்ட அஜந்தாவையே போட்டுத் தாக்கி விட்டு படு கூலாக கடந்து செல்பவள் தரங்கிணி.. அவள் கற்று வைத்திருந்த அத்தனை குரூரங்களையும் பிரயோகித்தும் நந்தினியை வெற்றி காண முடியாததில் அவளது வெறி தலைக்கு ஏறியது..
"உன்னையெல்லாம் வைக்கிற இடத்தில வைக்கனும்னு ரம்யமாலினிக்குத் தெரியலை.."
"நீதான் சொல்லி கொடுத்து விட்டுப் போயேன்.."
"சொல்லத்தான் போகிறேன்.. நான் சொன்னால் அவள் கேட்பாள்.. ஏன் தெரியுமா..?"
தரங்கிணியின் சாகசமும் குரூரமும் சரிவிகிதத்தில் கலந்த பார்வை நந்தினியைத் துளைத்தது.. நந்தினிக்குள் குளிர் பரவியது.. அவளது உயிரைப் பறிக்கும் வார்த்தைகளை தரங்கிணி சொல்லப் போகிறாள் என்று அவளது உள்மனம் பதறியது... அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் நீ எதையோ உளறிக் கொள்.. எனக்கொன்றும் இல்லை என்பதைப் போல அசட்டையாக முகத்தை வைத்துக் கொண்டாள்..
தரங்கிணியின் விழிகளில் வெறி கொண்ட மிருகத்தின் வேட்டையாடும் கோபம் தெறித்தது..
"என்னவோ பெரிய இவளாட்டம் ரம்யமாலினியிடம் உன் மனதில் இருக்கும் மன்னாதி மன்னன் யார்ன்னு கேட்டியே.. அதைத் தெரிந்து என்ன பண்ணப் போகிற..?"
தரங்கிணியின் கேள்விக்கும் நந்தினியின் காதலுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத நுட்பமானதொரு தொடர்பு இருப்பது நந்தினியின் அறிவுக்கு புலப்பட்டு விட்டது..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -223
எண்ணியிருந்தது ஈடேற -223
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-223.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-223.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy