எண்ணியிருந்தது ஈடேற -221

221 "சொல்லு ரம்யா.. ?  உன் மனசில இருக்கிற அந்த மன்னாதி மன்னன் யார்.. ?" நந்தினி தூண்டித் துருவினாள்.. ரம்யமாலினி தலையை ...


221


"சொல்லு ரம்யா..உன் மனசில இருக்கிற அந்த மன்னாதி மன்னன் யார்..?"
நந்தினி தூண்டித் துருவினாள்.. ரம்யமாலினி தலையை ஆட்டி ரசித்துச் சிரித்தாள்.. அந்தச் சிரிப்பில் மறுப்பில்லாததில் நந்தினியின் சந்தேகம் அதிகரித்தது.. ரம்யமாலினியுடன் தனியாக உலாவ வந்ததிற்கு பயன் உண்டாவதைப் போல இருந்தது..
வீணாவுடன் கோவிலுக்குச் செல்லும் போது வயநாட்டு மலைப்பாதையில் உலாவி வெகு நாள்களாகி விட்டன என்று விசனத்துடன் சொன்னாள் ரம்யமாலினி..
"என்னங்க இது.. இப்படிச் சொல்கிறீங்க..வயநாட்டு மலைராணியாய் பிறந்துட்டு மலைப் பாதையில உலா வர்றதுக்கு இம்புட்டு ஏக்கப்படறீங்களே.."
"இல்லை நந்தினி.. இந்த அபராஜிதன் பண்ணும் தொந்தரவால் அம்மா என்னைத் தனியே வெளியே அனுப்ப மாட்டாங்க.. அரண்மனையில் கூட அவங்க பக்கத்திலேயே வைத்துக்குவாங்க.."
ரம்யமாலினியின் துயரம் ததும்பிய விழிகளை பார்த்த நந்தினிக்கு மனம் வலித்தது.. வயநாட்டின் ராஜகுமாரி அவள் நாட்டின் அழகை ரசிக்க முடியாமல் அரண்மனையில் சிறை படுவதா..அதை நந்தினி பார்த்துக் கொண்டு இருப்பதா..?
"நானிருக்கப் பயமேன்..?"
நந்தினி களத்தில் இறங்கி விட்டாள்.. வீணாவிடம் அடம் பிடித்து அனுமதியும் வாங்கி விட்டாள்..
"அத்தை.. அத்தை.."
"என்னம்மா.."
"ராம்யாவும் நானும் மலைப்பாதையிலே ஒரு ஸ்மால் வாக் போயிட்டு வர்றோமே.."
"வேண்டாம்மா.."
"ப்ளீஸ் அத்தை.. பச்சைப் பசேல்ன்னு செடிகளும்.. கலர்கலரா பூக்களுமா பார்க்கவே அழகாயிருக்கும் அத்தை.."
"நம்ம அரண்மனைத் தோட்டத்தில இல்லாத செடிகளும் பூக்களுமா அங்கே இருக்கு..?"
வீணா மடக்க.. ரம்யமாலினியின் முகம் சோர்ந்தது.. அம்மா அனுப்பவே மாட்டாங்க என்று நந்தினியிடம் அபிநயித்தாள்.. இரு.. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பதிலுக்கு சைகை காட்டினாள் நந்தினி.. என்ன பார்த்துக் கொள்வாய் என்பதைப் போல ரம்யமாலினி கைகளை விரிக்க.. எத்தனையோ பார்த்து விட்டேன்.. இதைப் பார்க்க மாட்டேனா என்று வலது கையைக் குவித்துக் காட்டினாள் நந்தினி..
"என்ன.. ரெண்டு பேரும் பயங்கரமா மோனோ ஆக்டிங் காண்பிக்கறீங்க..?"
வீணா ஓரக்கண்ணால் மகளையும் நந்தினியையும் பார்வையிட்டபடி கேட்டாள்..
"பார்த்தீங்களா..வயசுப் பெண்கள் நாங்க.. எங்களுக்குள்ளே பேசிச் சிரிச்சுக்க பிரைவஸியே இல்லாமப் போச்சு.. வெறுமனே கையைக் காலை ஆட்டினதுக்கே கேள்வி கேட்டாச்சு.. இதில பேசிச் சிரிக்க எங்கே போகிறது..?"
"தோட்டத்துக்குப் போங்கன்னுதான் சொல்லியாச்சே.."
"தோட்டத்தில பிரைவஸி இருக்குன்னு யார் சொன்னது அத்தை.. நானும் ரம்யாவும் பேசனும்னு இல்லை.. சேர்ந்து நின்றாலே போதும்.. 'டிஷ்'ன்னு அஜந்தா காட்சி கொடுத்திடறா.. என்னடா இதுன்னு கண்ணைச் சிமிட்டறதுக்குள்ள மாயமாகி பாட்டிகிட்ட கோள் மூட்டப் போயிடறா.. பாட்டி வந்து என்னை விட்டுட்டு ரம்யாவை பிடிபிடின்னு பிடிச்சுடறாங்க.. நந்தினி கூட வாக்கிங் போய் சிரிச்சுப் பேசத் தெரியுது.. அஜந்தாவைக் கண்டாலே ஏன் உனக்கு ஆக மாட்டேங்குதுன்னு கேட்டு வைக்கிறாங்க.. அஜந்தாவைக் கண்டா யாருக்குமே ஆகிறதில்லை.. அவங்களையெல்லாம் பாட்டியாலே கேள்வி கேட்க முடியுமா..?"
நந்தினி கேட்ட நியாயத்தில் வீணாவின் உதடுகள் துடித்தன.. சோர்ந்திருந்த மகளின் முகத்தைப் பார்த்தாள்.. கோடிஸ்வர ராஜ குடும்பத்தில் பிறந்த பெண்ணிடம் இருக்க வேண்டிய மலர்ச்சியும்மகிழ்வும் ரம்ய மாலினியிடம் இல்லாமல் போனதில் துயர் கொண்டாள்..
"பாட்டி கெட்டிக்காரங்க.. எங்கே அவங்களுடைய அதிகாரம் செல்லுபடியாகுமோ.. அங்கேதான் கேள்வி கேட்டாங்க.. அவங்களாலே அஜந்தாவைக் கேள்வி கேட்க முடியாது.. அவ கேள்வியின் நாயகி.. பிளேட்டை அப்படியே பாட்டி பக்கம் திருப்பி விட்டுக் கேள்விதுணைக் கேள்விதுணைக்குத்துணை கேள்வின்னு கேட்டு பாட்டியையே ஒரு வழி பண்ணிருவா.."
நந்தினி விவரித்த தினுசில் ரம்யமாலினி..
"களுக்.." என்று சிரித்து வைத்தாள்..
மகள் மலர்ந்து சிரித்ததில் வீணாவின் முகமும் மலர்ந்து விட்டது..
"போக்கிரி.." நந்தினியின் தலையில் செல்லமாக குட்டு வைத்து விட்டு இளையவர்களின் சிரிப்பில் அவளும் கலந்து கொண்டாள்..
"அதனாலதான் சொல்றேன் அத்தை.. அவங்க கண்ணை உறுத்துகிறதைப் போல தோட்டத்தில நின்னு மாட்டாடாம காதலர்களைப் போல நானும் ரம்யாவும்
மலைப் பாதைக்கு ஓடி ஒளிந்து மறைந்து பேசிப் பழகப் போகிறோம்.."
"காதலர்களைப் போலவா..ஹா.. ஹா.."
ரம்யமாலினியின் சிரிப்பு விரிந்தது.. வீணா நந்தினியின் குறும்புப் பேச்சில் ஈர்க்கப் பட்டவளாக..
"உன் வாய் இருக்கே.. அப்பப்பா.." என்றாள்..
"அப்ப நானும் ரம்யாவும் பழகிப் பார்க்க ஆரம்பிக்கலாமா அத்தை.." போலி வினயத்துடன் கை கட்டி வாய் பொத்திகேட்டு வைத்தாள் நந்தினி..
"பேசியே ஆளைக் கவிழ்த்துருவியே.. அதுசரி.. அது என்ன பழகிப் பார்க்கிறது..ரம்யாவை நீ முன்னே பின்னே பார்த்ததே இல்லையா..?"
"உண்மையாகச் சொல்லப் போனால் ரம்யாவைப் பார்த்ததோடு நிறுத்திக் கொண்டிருக்கிறேன்னுதான் தோணுது அத்தை.. சேர்ந்தாற்போல ரெண்டு வார்த்தை பேசிப் பழகியதில்லை.."
நந்தினியின் வார்த்தைகளில் தொனித்த உண்மையில் வீணா அனுமதி தந்து விட்டாள்..
"பத்திரமாப் போய் வரனும்.." என்று எச்சரிக்க மட்டும் மறக்கவில்லை..
"நாங்கள்ளாம் யாரு..வயநாட்டு ரவிச்சந்திரனோட தங்கையும்செக்கரட்டரியுமாச்சே.. எங்களிடம் வம்பு பண்ணும் தைரியம் யாருக்கு உண்டு..?"
"அவந்திகாவின் பிள்ளைகளுக்கு உண்டு.."
வெறுப்புடன் சொன்னாள் வீணா.. ரம்யமாலினியின் முகத்திலும் அந்த வெறுப்பு பரவியது..
"வீட்டுக்கு உடையவர்களை ஒண்ட வந்தவங்க ஓடஓட விரட்டறாங்க பாருங்க.. இங்கேதான் இந்தக் கொடுமையைப் பார்க்கிறேன்.."
நந்தினிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது..
"அவங்க ஒண்ட வந்தவர்களா தங்களை நினைத்துக் கிறதில்லை நந்தினி.. வீட்டுக்கு உடையவங்களாத்தான் தங்களை நினைத்துக்கிறாங்க.. நினைத்தால் நினைத்து விட்டுப் போகட்டும்.. இந்த அரண்மனையில் பிறந்த பெண்ணாயிற்றே என்று நானும் பெருந்தன்மையாய் விட்டுக் கொடுத்துப் போய் விடுவேன்.. அதுதான் தவறாகி விட்டது.. சொத்து சுகத்தை விட்டுக் கொடுக்கலாம்.. பெற்ற பிள்ளைகளை விட்டுக் கொடுக்க முடியுமா..?"
மனம் கனக்க கேள்வி கேட்டாள் வீணா.. நந்தினியின் மனம் குழுங்கிப் பதறியது..
"எப்படியத்தை முடியும்..?" என்றாள் அவள்..
"ரவிச்சந்திரனுக்கு அஜந்தாவாம்.. ரம்யாவுக்கு அபராஜிதனாம்.. எப்படித் திட்டம் போடுகிறார்கள் பார்.. இதைப் பற்றிக் கருத்துக் கூடக் கேட்பதில்லை... இவர்களுக்கு இவர்கள்தான்னு சர்வாதிகாரமா முடிவு பண்ணுகிறாங்க.."
"சர்வாதிகாரம்தான் அத்தை.. நான் சொல்கிறதை நீ கேட்டுத்தான் ஆகணும்ங்கிற சர்வாதிகாரம்.."
தன்னையுமறியாமல் சொல்லி விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டாள் நந்தினி..
"ஸாரி அத்தை.. உங்க ஃபேமிலி விசயத்தில தேவையில்லாம இண்டர்பியர் ஆகிறேன்.."
"எங்க ஃபேமிலின்னு பிரிச்சுப் பேசினா அடிச்சுருவேன் நந்தினி.. இது உன் ஃபேமிலி.." வீணா நந்தினியை வாத்சல்யத்துடன் அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்..
"அத்தை.." மனம் நெகிழ்ந்தவளாக அவளது பாதம் பணிந்து எழுந்தாள் நந்தினி..
"ஹை..! உங்க அத்தையை எப்படிக் கைக்குள்ள வைத்துக்கிறதுங்கிற வித்தையைக் கற்று வைத்திருக்கீங்க.. பிழைத்துக்குவீங்க.." ரம்யமாலினி விகல்பமில்லாமல் சிரித்தாள்..
'இவளுடைய மனது வானம் போல பரந்து விரிந்தது..நந்தினியின் மனம் விகசித்தது..
ரம்யமாலினி வீணாவின் வார்ப்பாக இருந்தாள்.. குணத்தில் குன்றாய்பெருந்தன்மையில் இமயமாய் நின்றாள்.. அவளுக்கான வாழ்க்கை அழகானதாக அமைய வேண்டும் என்று நந்தினி விரும்பினாள்.. ரம்யமாலினியின் மனம் விரும்பும் வாழ்க்கையாக அது இருக்க வேண்டும்.. சுதந்திரமாக அவள் விருப்பம் போல வாழும் வாழ்க்கையாக அவளுக்கு கிட்ட வேண்டும்..
மொத்தத்தில் ரம்யமாலினி வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ வேண்டும் என்று நந்தினி மனதார ஆசைப்பட்டாள்.. இதுவரை சிரிக்காத சிரிப்பை வாழ்நாள் முழுவதும் சிரித்தபடி நிறைவானதொரு வாழ்க்கையை ரம்ய மாலினி வாழ வேண்டும்..
நந்தினியின் உபயத்தால் ரம்யமாலினி வெளியுலகில் சுதந்திரமாக கால் பதித்தாள்.. பூக்கள்பறவைகள்பனிமேகம் என்று ஒவ்வொன்றையும் அவள் ரசித்துக் கைகளைத் தட்டிக் குதூகலித்ததில் நந்தினியின் மனம் வலித்தது..
வயநாட்டு அரண்மனையின் இளவரசிக்கு இவையெல்லாம் அரிதானவைகளா..இவை அத்தனையும் அரண்மனையின் தோட்டத்திலேயே கிடைத்து விடுமே.. அங்கு இல்லாத பூக்களா..செடிகளா..பறவைகளா..தொலைவானில் தெரியாத பனி மேகங்களா..பசுமை படர்ந்த மலை முகடுகளை அரண்மனையின் பால்கனியிலிருந்தே பார்த்து ரசிக்கலாமே..
"அதற்கான மனநிலை இருக்க வேண்டாமா..?" நியாயமான கேள்வியைக் கேட்டாள் ரம்யமாலினி..
"உண்மைதான்.." உடனடியாக ஒப்புக் கொண்டாள் நந்தினி..
அவந்திகாவும்அவளது பிள்ளைகளும் இருக்கும் இடத்தில் தொண்டையில் தண்ணீர் இறங்குவதே கடினமான ஒன்றாக இருக்கும்.. இதில் வயநாட்டின் இயற்கையழகை ரசித்து மகிழும் மனநிலை எங்கிருந்து வரும்..?
"தோட்டத்திற்குப் போக முடியாது நந்தினி.. அங்கே அபராஜிதன் வந்து வம்பிழுப்பான்.. அவனை அண்ணன் அடித்து விரட்டியதும் போய்த் தொலைந்தான்னு நிம்மதியாத் தோட்டத்துப் பக்கம் போனா அஜந்தா வந்து நிற்பா.. என்றைக்கு இருந்தாலும் நீ அபராஜிதனின் வொய்ப்தான்னு சபதம் போடுவா.. தோட்டத்துக்கும் போக முடியாது.."
தெளிவாக காய் நகர்த்தி ரம்யமாலினியின் சுதந்திரத்தை அவந்திகாவின் குடும்பம் அபகரித்துக் கொண்டிருப்பதை நந்தினியால் புரிந்து கொள்ள முடிந்தது.. திட்டமிட்டு ரம்யாவை அறைக்குள்ளேயே அடைபட வைத்திருக்கிறார்கள்..
"அரண்மனையிலும் சுதந்திரமா இருக்க முடியாது.. பாட்டி கண்ணில பட்டு விட்டால் கூப்பிட்டு கிளாஸ் எடுப்பாங்க.. அபராஜிதனைத்தான் நான் மேரேஜ் பண்ணிக்கனும்.. அதுதான் குடும்பத்துக்கு நல்லதுன்னு சத்தம் போடுவாங்க.."
"யார் குடும்பத்துக்கு நல்லதாம்..?"
"அவங்க மகள் குடும்பத்துக்குத்தான் நல்லது.. மகன் குடும்பத்தைப் பற்றி அவங்க நினைத்துப் பார்த்ததே இல்லையே.. அப்பாவை தங்கையின் குடும்பத்துக்காக தியாகம் பண்ணனும்னு சொல்லிச் சொல்லியே ஒரு வழியாக்கிட்டாங்க.. அடுத்து அவரின் குடும்பத்தாரும் தியாகம் பண்ணித்தான் ஆகனும்னு ரூல் போடறாங்க.."
"இதெல்லாம் டூமச் ரம்யா.."
விருப்பமில்லாத திருமணத்திற்கு பெற்றவர்கள் கட்டாயப் படுத்தினார்கள் என்று வீட்டை விட்டே வெளியேறியவள் நந்தினி.. இங்கே என்னடாவென்றால் தாத்தாபாட்டிஅத்தைஅத்தையின் குடும்பம் என்று உறவுகள் கட்டாயப் படுத்துகிறார்கள்..
'பெண்ணுக்கென்று ஒரு மனம்அதில் புதைந்திருக்கும் ஆசைகள்எதிர்பார்ப்புகள்இவைகளைப் பற்றி எவரும் யோசிப்பதில்லை.. பெண்ணாக பிறந்து விட்டால் யோகியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்..'
"பாட்டி திரும்பத் திரும்ப ஃபோர்ஸ் பண்றாங்க நந்தினி.. நான் அபராஜிதனை லைக் பண்றேன்னு சொல்லிட்டா எல்லா பிராப்ளமும் சால்வ் ஆகிடும்ன்னு சொல்கிறாங்க.. என்னால் எப்படி அப்படிச் சொல்ல முடியும் நந்தினி..அவனை நினைத்தாலே எனக்குக் குமட்டும்.. மனிதனா அவன்..அவனைப் போய் என்னுடன் இணைத்துப் பேச பாட்டிக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ.. அதனாலேயே நான் ரூமை விட்டு வெளியே வருவதில்லை.."
"அத்தைமாமாபாஸ் இவங்கள்ளாம் உங்களை அவுட்டிங் அழைத்துக்கிட்டு போகிறதில்லையா..?"
"அம்மா கோவிலுக்குத்தான் கூப்பிட்டுக்கிட்டுப் போவாங்க.. அப்பாவுக்கு தனியாக குடும்பத்துடன் மட்டும்ன்னு அவுட்டிங் போக அனுமதியில்லை நந்தினி.. அவர் கிளம்பினா ஒட்டு மொத்த அரண்மனையும் சேர்ந்து கிளம்பி விடும்.. தன் குடும்பம்ன்னு அவர் நினைத்து விடக் கூடாது.. பழகி விடக் கூடாதுங்கிறதில கவனமா இருப்பாங்க.. அதையும் மீறி அவர் கிளம்பினா குடும்பத்தைப் பிரிக்க நினைக்கிறாயான்னு சண்டை போட்டுக் களேபரம் பண்ணிருவாங்க.. அதுக்குப் பயந்தே நானும் அம்மாவும் அப்பாவை அவுட்டிங் கூப்பிட்டுக்கிட்டுப் போகச் சொல்லிக் கேட்கவே மாட்டோம்.. அண்ணனோட கதையே வேறு.. ஒவ்வொரு செகண்டும் விலை மதிப்பில்லாததுன்னு சொல்லும்.. உலகத்தைச் சுற்றி பிஸினெஸ் பண்ணுகிறதை அவுட்டிங் கூப்பிட்டுக்கிட்டுப் போகச் சொல்லி டிஸ்டர்ப் பண்ண முடியுமா நந்தினி..?"
"முடியாதுதான்.."
"பட்.. அண்ணன் எங்களை நினைத்துப் பார்த்து டூர் ஏற்பாடு பண்ணும்.. அம்மாவும்நானும் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்துட்டோம்.. அண்ணன் ஓர்முறை எங்களை வெர்ல்டு டூருக்கு அழைத்துக்கிட்டுப் போனது.. அப்பாதான் பாவம்.. எதிலும் ஜாயின் பண்ணிக்கலை.."
"மாமா ஜாயின் பண்ணினா உனக்கும்அத்தைக்குமான பிரைவசி பாதிக்கப்படும்ன்னு நினைச்சிருப்பார்.."
"அதே.. அதே.."
ரம்யமாலினியின் தலையாட்டலில் தகப்பனைக் குறித்த பெருமிதம் இருந்தது.. அபரிதமான தந்தை பாசத்தை ரவிவர்மனிடம் கண்டாள் நந்தினி..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -221
எண்ணியிருந்தது ஈடேற -221
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-221_3.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-221_3.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy