எண்ணியிருந்தது ஈடேற -219

219 அஜந்தாவின் நெஞ்சினில் கூரிய அம்புகள் பாய்ந்த நாள் அது.. அன்று கேட்ட வார்த்தைகளை என்றுமே அஜந்தா மறக்க முடியாத அளவிற்குப் பேசி விட...

219


அஜந்தாவின் நெஞ்சினில் கூரிய அம்புகள் பாய்ந்த நாள் அது.. அன்று கேட்ட வார்த்தைகளை என்றுமே அஜந்தா மறக்க முடியாத அளவிற்குப் பேசி விட்டாள் தரங்கிணி..
"அபராஜிதனின் அணியத்திக்கு பெகுமானம் இல்லா.. யோகானந்தன் எங்ஙனமோ அங்ஙனமே அபராஜிதனும் பெகுமானமில்லாமல் அலைஞ்ஞு... ஞான் அங்ஙன அல்ல.. எண்ட தரவாடு பெகுமானம் கொண்டதல்லோ.. ஞான் தனபாலனின் அணியத்தியாக்கும்.. தனபாலன் ஆரெண்டு ஈ கேரளமே அறியும்.. நீ அறிஞ்ஞு..?"
அஜந்தா உதட்டைக் கடித்துக் கொண்டு பேசாமல் இருந்தாள்... உணர்வுகள் பொங்கியெழுந்தன... தரங்கிணியின் நகையாடலில் இருந்த உண்மை
அவளைச் சுட்டது.. தனபாலன் கேரள தேசத்தின் இளந்தொழிலதிபன்.. ராஜ வம்சப் பாரம்பர்யப் பெருமை கொண்ட கோடிஸ்வரன்.. பரம்பரைச் சொத்துக்களைப் பெருக்கிப் பன்மடங்காக்கிக் கொண்டிருப்பவன்..
அஜந்தாவின் அண்ணனான அபராஜிதன் அப்படியில்லையே.. அவன் யோகானந்தனைப் போல பலமடங்கு ஊதாரியாக இருந்தான்.. அடுத்தவரின் சொத்துக்கு ஆளாப் பறந்தான்.. கேடியிலும் கேடி பக்கா கேடியென்று பெயரெடுத்திருந்தான்.. யோகானந்தன் கடன் வாங்கினார்.. பல தலைமுறைகளுக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு இருந்த பரம்பரைச் சொத்துக்களை உலகம் சுற்றியே அழித்தார்.. பற்றாக்குறைக்கு மனைவியின் சொத்துக்களை ஸ்வாஹா பண்ணிவிட்டு மாமனாரின் சொத்தைக் கை வைத்தார்.. ஆயிரம் கோடி கடனில் அவரை ஜாடிக்குள் அடைபட்ட பூதமாய் மாற்றி ரவிச்சந்திரன் சிறை வைத்த பின்னால் வேறு வழியின்றி பல்லைக் கடித்துக் கொண்டு பழைய நாள்களின் மலரும் நினைவுகளுடன் மாமனாரின் அரண்மனையோடு மாப்பிள்ளையாக செட்டில் ஆகிக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்.. இத்தனை அட்டூழியங்கள் செய்தாலும் யோகானந்தன் பெண்கள் விவகாரத்தில் நேர்மையானவர்.. கணக்கில்லாமல் கடன் வாங்குவார்.. சொத்துக்களை விற்றுத் தின்பார்.. ஆனால் எவரையும் ஏமாற்றிப் பிழைக்க நினைக்க மாட்டார்.. மாமனார் சொத்தையும், மைத்துனன் சொத்தையும் தன் சொத்தாக நினைத்துக் கபளீகரம் பண்ண நினைப்பார்.. அதை நேரடியாகச் செய்து நெஞ்சுவலியை வரவைப்பாரே தவிர மறைமுகமாக செய்ய மாட்டார்..
அபராஜிதன் கேடியிலும் கேடி, கடைந்தெடுத்த கேடியாக இருந்தான்.. தூணுக்கு பெண்கள் உடையை அணிவித்திருந்தாலும் '' யென பல்லைக் காட்டிக் கட்டிப் பிடித்து வைத்தான்.. அவன் இழுத்து வைக்கும் பெண் விவகாரங்களை அருள்மொழிவர்மனுக்குத் தெரியாமல் மறைப்பதற்குள் அவந்திகாவுக்கு உயிர் போய் உயிர் வரும்.. சிலவற்றைக் கேள்விப் படும் போது அஜந்தாவுக்கே குமட்டல் வந்து விடும்.. நீயெல்லாம் ஒரு மனிதனா என்று தமையனைத் திட்டித் தீர்த்து விடுவாள்.. ஆனாலும் அவன் தயவு அவளுக்கு வேண்டுமே.. ரம்யமாலினியின் சிண்டைப் பிடிக்க இப்படிப்பட்ட அயோக்கிய அண்ணன்தான் வேண்டும் என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துப் போவாள்..
தொழில் திறமையென்பது அபராஜிதனிடம் கடுகளவும் கிடையாது... அவன் கெட்டிக்காரனாக இருந்திருந்தால் ரவிச்சந்திரன் அளித்த உதவிகளையும், சலுகைகளையும், பதவிகளையும், பொறுப்புக்களையும் சரிவரப் பயன்படுத்தி உச்சத்திற்குப் போயிருக்கலாம்.. அவன் அப்படி முன்னேற வேண்டும் என்றுதான் ரவிச்சந்திரனும் விரும்பினான்.. மறைமுகமாக உதவிக்கரம் நீட்டினான்..
அபராஜிதன் அவற்றை பயன்படுத்திக் கொள்ளவில்லை.. அடுத்தவரின் முதுகில் சவாரியேறிப் பழக்கப்பட்டிருந்தவன் உழைத்துப் பிழைக்க விரும்ப வில்லை.. உல்லாசியான யோகானந்தன் உலகத்தைச் சுற்ற மகனைப் பழக்கப் படுத்தியிருந்தார்.. அவன் கூடவே பெண்களை அழைத்துக் கொண்டு சுற்றப் பழகியிருந்தான்.. அவனிடம் இல்லாத கெட்ட பழக்கமில்லை.. அனைத்து வகையான தீய பழக்க வழக்கங்களுக்கும் ஒட்டு மொத்த உரிமையாளன் போல அவன் ஆடித் தீர்த்துக் கொண்டிருந்தான்.. அவன் ஆடும் ஆட்டத்தில் அஜந்தாவே கவலை அடைந்திருந்தாள்.. ஏற்கனெவே ரவிச்சந்திரன் அபராஜிதனை மாநிலம் விட்டு மாநிலம் கடத்தியிருந்தான்.. அப்படியும் அபராஜிதன் அடங்காததில் எந்த நொடியும் அவன் அபராஜிதனை தேசம் விட்டு தேசம் கடத்திவிடும் அபாயம் இருந்தது.. அதை உணர்ந்தாவது அபராஜிதன் அடக்கி வாசித்தால் தேவலையென்று அஜந்தா அபராஜிதனிடம் பலமுறை சொல்லி விட்டாள்.. அவன் செவிகளில் தங்கையின் அறிவுரை ஏறவே இல்லை..
அபராஜிதனின் கல்யாண குணங்களை அறிந்து வைத்திருந்த கேரளத்தின் இளம்பெண்கள் அவனைக் கடுகளவும் மதிக்க மாட்டார்கள்.. ஏளனப் பார்வையுடன் நகர்ந்து விடுவார்கள்.. இவ்வாறு வயநாடு மட்டுமின்றி ஒட்டு மொத்த கேரளமும் அறியும் அளவுக்கு கேடித்தனம் நிறைந்த அபராஜிதனின் தங்கையென்று சொல்லிக் கொள்வதில் அஜந்தாவுக்கு என்ன பெருமை இருக்க முடியும்..?
தனபாலன் பெருமை மிக்கவன்.. அவனுடைய தந்தை பரம்பரைப் பெருமையை விட்டுக் கொடுக்காமல் கட்டிக் காப்பாற்றி மகனின் கைகளில் ஒப்படைத்தார்.. அவன் அதை மேலும் பெருக்கி கேரளத்தின் முக்கிய தொழிலதிபனாக மாறி விட்டான்... அவனுடைய தங்கையென்று தரங்கிணி பீற்றிக் கொள்வதில் அர்த்தமுள்ளது.. அஜந்தாவால் அபராஜிதனின் தங்கை நானென்று பீற்றிக் கொள்ள முடியுமா..? அதனால்தானே இன்னாரின் மகள், இன்னாரின் தங்கையென்ற அடையாளங்களைத் துறந்து அருள்மொழிவர்மனின் பேத்தி என்ற அடையாளத்தை மட்டும் முன்னிருத்துகிறாள்..
அதை இப்போதும் சுட்டிக் காட்டினாள் தரங்கிணி..
"நிண்ட அடையாளமெண்டு அருள்மொழிவர்மனிட கொச்சு மோளெண்ட அடையாளத்தைதானே நீ பறஞ்ஞோண்டே இருந்தாகனும்.. யோகானந்தனிட மோளெண்டோ, அபராஜிதனிட அணியத்தியெண்டோ பறஞ்ஞா எவ்விதமான பெகுமானம் கிட்டுமென நீ அறியுமல்லோ.. நீ வல்லிய கெட்டிக்காரியல்லோ.."
"அங்ஙனவே இருக்கட்டும்.. அதில் நினக்கு எந்தா கஷ்டம்..? நிண்ட ஜோலிய நோக்கிட்டுப் போயி.."
"எந்துக்கு..?"
சட்டமாகக் கேட்டாள் தரங்கிணி.. போடி உன்னுடன் எனக்கென்ன பேச்சு என்று எழுந்து போய் விடலாம்தான்.. அப்படிப் போக முடியாமல் அஜந்தாவின் கால்கள் பிணைக்கப் பட்டிருந்தன.. அவளால் தரங்கிணியிடம் தோற்றுப் போக முடியும்.. நந்தினியிடம் தோற்க முடியாது.. அப்படித் தோற்கக் கூடாது என்ற ஆங்காரத்தினால்தான் தரங்கிணி பேச்சு வார்த்தைக்கு அழைத்ததும் சரியென்று கிளம்பி வந்திருக்கிறாள்..
"இப்ப எந்துக்கோசரம் என்ன நீ விளிச்சு..? பிணக்கு (சண்டை) கொள்கிறதுக்கோ..?"
அஜந்தா எரிச்சலுடன் கேட்ட பின்பும் தரங்கிணி அடங்கவில்லை அஜந்தாவைப் போட்டுப் பார்த்தாள்..
"ஞான் உன்னுடன் சம்சாரிக்க வேண்டுமென விளிச்சு.. பட்ஷே.. நீ எண்ட தரவாடை வெறிச்சு.. ஈ தரவாடு எங்க தரவாடு.. மனசிலாயி.."
"ஞான் மட்டும் ஈ தரவாடு எங்க தரவாடெண்டா பறஞ்ஞு..?"
"நீ பறஞ்ஞாலும் பறயலாம்.. ஆரானு நீ..? யோகானந்தனின் மோளல்லோ... ரவியத்தானிட கொட்டாரத்த நிங்க குடும்பத்தோட கொட்டாரமாக்கி உட்கார்ந்து ஊன் (சாப்பாடு) கழிச்சு.. (சாப்பிடுவது).."
"அதில நினக்கு எந்துக்கு இம்புட்டு வருத்தம்..? எண்ட அம்மாவன் (மாமன்) மோனல்லோ ரவியத்தான்.. அவரிட கொட்டாரம் எண்ட கொட்டாரமல்லோ.."
"சொப்பனம் காணாண்டாம் அஜந்தா.. ரவியத்தான் எனிக்குத்தான்.. கேட்டே.."
"எண்ட அம்மாவன் மோன் எனிக்குத்தான்... கேட்டே.."
இருவரும் சண்டைக் கோழிகள் போல சினந்து எழுந்தார்கள்.. நந்தினியின் நினைவு வந்தவுடன் அடங்கி உட்கார்ந்தாள்..
"நோக்கு அஜந்தா.. எனிக்கு நிண்ட வதனத்த நோக்கத் துளியளவும் இஷ்டமில்ல.."
"எனிக்கும் அங்ஙனதான்.. நிண்ட வதனம் குரங்கு வதனம்.."
"நிண்ட எலி வதனத்தவிட எண்ட வதனம் வல்லியதல்லோ.."
"ஓ.. ஈ வயநாட்டில சுந்தரியெண்டு பறஞ்ஞா ஈ அஜந்தாவத்தான் பறஞ்ஞு.. அறியுமோ..?"
"ஞான் அறிஞ்ஞு எந்துக்கு ஆசி..? ரவியல்லவோ அறியனும்..? நீ சுந்தரியெண்டா ஆ நந்தினியெனும் பெண்குட்டி ஆரானு..?"
"பேயானு.."
வெறுப்புடன் சொன்னாள் அஜந்தா.. இந்தக் கருத்தில் மட்டும் ஒன்று பட்டு ஆமோதித்தாள் தரங்கிணி..
"ஒரப்பானு (நிச்சயமாய்) அவ பேய்தான்.."
"பேயோட்டி ஆகனுமல்லோ.."
"ஒரப்பானு பேயோட்டனுமல்லோ.."
"எந்து செய்யலாம்..?"
பிணக்கை மறந்து அவர்கள் ஒன்றுபட்டு யோசித்தார்கள்.. அஜந்தாவின் அழகுக்குப் பக்கத்தில் நந்தினியால் நிற்க முடியுமா என்று அஜந்தா கொந்தளித்தாள்.. தரங்கிணியின் பின்புலம் நந்தினிக்கு இருக்கிறதா என்று தரங்கிணி மறைமுகத்தாக்குதலைத் தொடுத்தாள்.. எதைச் செய்தாவது நந்தினியை வயநாட்டை விட்டு ஓட வைக்க வேண்டும் என்றாள் அஜந்தா.. அதைத் தான் பார்த்துக் கொள்வதாக வாக்களித்த தரங்கிணி நந்தினியைப் பற்றிய விவரங்கள் தெரிந்தால் சொல்லும்படி கேட்டாள்.. அதை வைத்து நந்தினியை விரட்ட முடியுமா என்று ஆலோசிக்க முடியும் என்று கூறினாள்..
"ஆ நந்தினி எவரென்று அறிஞ்சுக்கிறது எனிக்கு ஈஸிதான் அஜந்தா.. கேட்டே.. எனிக்கு அதி போதாதல்லோ.. அதிக்கும் மேலே அவளப் பத்தின
ரகசியம் வல்லதும் தெரியனுமல்லோ.. நினக்கு வல்லதும் அறிஞ்ஞுமோ..?"
'அதுக்குத்தானே காத்திருக்கேன்..' அஜந்தா மனதுக்குள் நொடித்தாள்..
அவளறிந்து வைத்திருக்கும் ரகசியங்களை தரங்கிணியிடம் அவிழ்த்துக் கொட்ட அவளென்ன பைத்தியமா..? அவை அத்தனையும் தங்கச் சுரங்கங்கள்.. ரவிச்சந்திரனை விட்டு நந்தினியைத் துரத்தியடிக்கும் ரகசியப் பெட்டகங்கள்.. அவற்றை வைத்து நந்தினியைத் துரத்தியடித்துவிட்டு ரவிச்சந்திரனின் கரம் பற்றுவாள் அஜந்தா.. அதை விட்டு விட்டு நந்தினியைத் துரத்துவதற்காக தரங்கிணியிடம் ரவிச்சந்திரனை ஒப்புக் கொடுத்து விலகி நிற்க மாட்டாள்..
"எனிக்கு எதுவும் தெரியாது போயி.. ஞான் எந்து செய்யும்..? ஓர் திவசம் ஆ நந்தினிய பெர்சனல் செக்கரட்டரின்னு ரவியத்தான் பறஞ்ஞு அழைத்து வந்து.. அதி மட்டுமே ஞான் அறியும்.."
"ஓ..."
உனக்கா எதுவும் தெரியாது என்ற சினம் துளிர்க்க உதட்டைக் குவித்து '' போட்டாள் தரங்கிணி.. அஜந்தா உலக மகா கேடியென்பதை தரங்கிணி அறிவாள்.. நந்தினியைப் பற்றி எதையும் அறிந்து கொள்ளாமல் அஜந்தா விரல் சுவைத்து உட்கார்ந்திருக்கிறாள்
என்று நம்ப தரங்கிணி ஒன்றும் விரல் சுவைக்கும் குழந்தையல்லவே..
அஜந்தாவின் நிலைமை என்னவென்பதை தரங்கிணி அறிவாள்.. எந்த நொடியிலும் ரவிச்சந்திரன் அஜந்தாவின் குடும்பத்தை வெளியேற்றி விடலாம்.. வயநாட்டு அரண்மனை வாழ்வு சாஸ்வதமல்ல என்பதை அறிந்து வைத்திருக்கும் அஜந்தா அது நிலைத்திருக்க எதையும் செய்வாள் என்பதையும் தரங்கிணி அறிவாள்.. ரவிச்சந்திரனைத் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அஜந்தா நினைப்பது நடக்கும்.. அப்படியிருக்க எங்கிருந்தோ வந்த நந்தினி அஜந்தாவின் எதிர்காலக் கனவை பறிக்க விட்டு விடுவாளா..?
'எனிக்கெல்லாம் இவள் ஒரு போட்டியே இல்லை..'
அலட்சியமாக உதட்டைச் சுழித்தாள் தரங்கிணி.. நந்தினியைப் பற்றிய விவரங்களை அறியாமலே அவளை வெல்லும் வித்தையை தரங்கிணி அறிவாள்.. அஜந்தா ஆயிரமாயிரம் ரகசியங்களை அடை காத்து என்ன செய்ய..? நந்தினியை அவள் விரட்டி விட்டாலும் ரவிச்சந்திரன் அவளுக்குக் கிடைக்க மாட்டான்.. அஜந்தாவின் மீதான ரவிச்சந்திரனின் ஆழ்ந்த வெறுப்பை தரங்கிணி அறிவாள்.. இந்த உலகத்தின் கடைசிப் பெண்ணாக அஜந்தா இருந்தாலும் ரவிச்சந்திரன் அவளைத் திரும்பியும் பார்க்க மாட்டான் எனும்போது அஜந்தாவை நினைத்து தரங்கிணி கலங்க வேண்டிய அவசியமே இல்லையே..
"நீ ஒந்நும் அறியாப் பெண் குட்டிதான் அஜந்தா.."
"நீ அனைத்தும் அறிந்த பெண்குட்டியல்லோ.."
"இதி.. இதி.. இதை நீ விஜாரம் கொள்ளனும் அஜந்தா.. ஞான் அனைத்தும் அறிந்த பெண் குட்டிதான்.."
'இதை எதற்காக என்னிடம் சொல்கிறாள்..'
"அந்த அனைத்திலும்ங்கிற வார்த்தையில ரவியத்தானை விவாகம் கழிக்கிறதும் அடங்குமல்லோ.."
"தரங்கிணி.." அலறினாள் அஜந்தா..
"உஸ்ஸ்.. சப்தம் எந்துக்கு அஜந்தா.." அடக்கினாள் தரங்கிணி..
"ரவி எண்ட அத்தான்.."
அஜந்தாவும் தரங்கிணியும் ஒருவரையொருவர் பகைமையுடன் பார்த்துக் கொண்டார்கள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -219
எண்ணியிருந்தது ஈடேற -219
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-219.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/enniyirunthathueedera-219.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy