எங்கிருந்தோ ஆசைகள்.. -44

44 நீரோடு செல்லும் ஓடம்போல - உன்.. நினைவோடு நான் செல்ல ஆசைகொண்டேன்.. ' நியு எக்ஸ்போர்ட்ஸ் ' என்ற எழுத்துக்கள் ஒளிர்ந்த ...


44
நீரோடு செல்லும் ஓடம்போல - உன்..
நினைவோடு நான் செல்ல ஆசைகொண்டேன்..


'நியு எக்ஸ்போர்ட்ஸ்' என்ற எழுத்துக்கள் ஒளிர்ந்த கட்டிட வளாகத்திற்குள் பார்த்தசாரதியின் கார் நுழைந்து.. திரும்பி நின்றது.. ஓடிவந்து கதவைத்திறந்த காவலாளியின் வணக்கத்திற்கு லேசாக தலையை அசைத்து விட்டு மிடுக்குடன் படிகளில் ஏறினார் பார்த்தசாரதி...
'இது என்னுடைய கம்பெனி.. நான் இதன் முதலாளி..'
என்ற கர்வம் அவருடைய ரத்த அணுக்களில் கலந்தது.. அவர் இதுபோன்ற கர்வத்திற்கு பழக்கப்பட்டவர்.. அதை விட்டுக் கொடுக்க விரும்பாதவர்.. அதை உணர்ந்திருந்ததினால்தான் அர்ஜீன் தனித்து செயல்பட ஆரம்பித்தான்...
அவனுக்குத் தெரியும்.. பார்த்தசாரதி எப்போதும் முதன்மைப் பதவியை விட்டுக் கொடுக்க மாட்டார் என்பது...
அவர் சொன்னபடி அவனை அந்தக் கம்பெனிக்கு முதலாளி ஆக்கி விடுவார்தான்.. ஆனால் அவனைச் சுதந்திரமாக செயல்பட விடாமல் நிழல்போல பின் தொடந்து கொண்டேயிருப்பார்.. அவரின் கைகளுக்குள் அவனின் கைகளை அடக்கி அவனை அசைய விடாமல் ஆக்ரமித்திருப்பார்..
அர்ஜீன் புத்திசாலி... பதினைந்து வயதிலேயே தகப்பனாரின் குணத்தை எடைபோட்டு வைத்திருந்தவன்.. அவனுக்கு அவரின் கட்டுக்குள் அடங்க விருப்பமில்லை.. தளைகளை அறுத்தெரிய வேண்டிய அவசியமின்றி அவன் பார்த்தசாரதி போட்ட தளைகளுக்குள் அகப்பட்டுக் கொள்ளவேயில்லை...
"குட் மார்னிங் சார்..."
வரிசையாக மரத்தடுப்புகளுக்குள் அமர்ந்திருந்த தொழிலாளிகள் அவருக்கு வணக்கம் சொன்னார்கள்.. மிதப்பான பார்வையுடன் அவர்களைக் கடந்து அவருடைய அறைக்குள் பிரவேசித்த போது ஒரு சாம்ராஜ்யத்தின் மன்னகாக தன்னை அவர் உணர்ந்தார்...
டேபிளின் மீதிருந்த போனை எடுத்து லிஸியை அழைத்தார்..
அடுத்த நிமிடத்தில் அவள் அவர்முன்னால் வந்து நின்றாள்.. அந்த வேகத்தில் திருப்தி அடைந்தவராக அன்றைய அலுவல்களை கேட்டார்.. அவள் வரிசையாக சொல்லி முடித்ததும்.. மெயில்களை பார்வையிட்டார்... அவற்றுக்கான பதில்களை அவர் சொல்லச் சொல்ல.. மின்னல் வேகத்தில் அவற்றைக் குறித்துக் கொண்டாள் லிஸி.. அவள் போனதும்.. டேபிளில் இருந்த ஃபைல்களை புரட்டி ரிப்போர்ட்டை படிக்க ஆரம்பித்தார்.. போன் ஒலித்தது.. எடுத்து காதுக்கு கொடுத்தார்...
"சார்.. உங்களைப் பார்க்க.. நேகா குருப் ஆஃப் கம்பெனிஸின் எம்.டி மிஸ்டர் தீனதயாளன் சார் வந்திருக்கிறார் சார்..." என்றாள் லிஸி..
"ஓ... பெண்டாஸ்டிக்... இதுக்கு என்னைக் கேட்கனுமா..? உடனே அவரை அனுப்பி வை.." பரபரத்தார் பார்த்தசாரதி...
அறைக்கதவைத் திறந்து கொண்டு தீனதயாளன் உள்ளே வந்தபோது பார்த்தசாரதி அவருடைய சுழல் நாற்காலியை விட்டு எழுந்து அவருக்கு கை கொடுத்து வரவேற்றார்...
"வெல்கம் மிஸ்டர் தயாளன்.. ப்ளீஸ்.. உட்காருங்க.."
ராஜமரியாதையுடன் அவரை உட்காரவைத்து விட்டுத்தான் தன்னுடைய சுழல் நாற்காலிக்கு திரும்பினார் பார்த்தசாரதி..
"லிஸி..."
இன்டர்காமில் லிஸியை அழைத்து பழச்சாறை அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு.. தயாளனின் முகம் பார்த்தார்...
"ஹவ் ஆர் யு..?"
"ஃபைன்.." தலையாட்டிய தயாளனின் முகத்தில் சிநேகிதம் கலந்த சிரிப்பு நிறைந்திருந்தது..
அவர்கள் பொதுவான வியாபார நிலவரங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.. பேச்சு சுழன்று அரசியலுக்கு வந்து.. விளையாட்டிற்கு தாவி.. வானிலையில் நிலை கொண்டிருந்த போது.. லிஸி பழச்சாறுடன் அறைக்குள் வந்தாள்.. அவள் போனதும் பழச்சாறை அருந்திய படி தயாளன் கேட்டார்...
"உங்க சன் எப்படியிருக்கிறார் பார்த்தசாரதி..."
'இதை.. இதை.. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்..' பார்த்தசாரதியின் மனம் துள்ளிக் குதித்தது...
அவர் வெகுநாள்களாக இந்த ஒரு கேள்விக்காகத்தான் காத்திருக்கிறார்.. நேகா குருப் ஆஃப் கம்பெனிஸின் முதலாளியான தீனதயாளனுக்கு நேகா என்ற ஒற்றைப் பெண் மட்டுமே இருந்தாள்.. வெளிநாட்டில் படித்தவள்.. நேகா குருப் ஆஃப் கம்பெனிஸின் எம்.டியாக  பொறுப்பேற்றிருப்பவள்...
அவளை பல பார்ட்டிகளில் பார்த்தசாரதி பார்த்திருக்கிறார்.. கண்களில் அலட்சியம் கலந்த ஆணவத்துடன்.. நுனி நாக்கில் ஆங்கிலத்துடன் இருப்பாள்.. இந்தியத்தனமில்லாத.. அமெரிக்கத்தனமான தோற்றம்.. இந்த பிரபஞ்சத்தில் எனக்கு இணையாக யாருமேயில்லை என்பதைப் போன்ற பார்வை...
தீனதயாளனின் அனைத்து சொத்துக்களுக்கும் அவள் ஒரே வாரிசு என்பதினால் மட்டுமில்லாமல்.. அவளிடம் தென்படும் அலட்டலான கவர்ச்சிக்காகவும்.. அவளை ஈர்க்க முயலும் உயர்மட்ட வாலிபர்களின் கூட்டத்தை அவரறிவார்...
நேகா அவர்களைத் திரும்பிப் பார்க்க மாட்டாள் என்று அவரால் சொல்லிவிட முடியாது.. அவளுடன் பேச விரும்புகிறவர்களிடம் அவள் நின்று பேசத்தான் செய்வாள்.. ஆனால்.. அலட்சியம் கலந்த மமதையோடு தான் பேசுவாள்...
'இதையெல்லாம் அவாய்ட் பண்ண முடியாது...'
தனக்குள் சமாதானம் போலச் சொல்லிக் கொள்வார் பார்த்தசாரதி.. நேகா நினைத்திருந்தால் அவர்களுடன் பேசாமல் தவிர்த்திருக்க முடியும் என்று அவர் மனதில் ஓரத்தில் தோன்றினாலும் அவர் அதை அழித்து விடுவார்..
அதிகப் பணமிருந்தால் இதுபோன்ற திமிர் வருமா என்று அவருக்குத் தெரியவில்லை.. அவரிடமும் அதிக அளவில் பணம் இருந்தது.. ஆனால் அவர் பெற்ற ஆனந்தி நேகாவைப் போல திமிராக இருந்ததில்லையே என்ற எண்ணமும் அவருக்கு வந்துதான் போனது...
'ம்ஹீம்.. இதெல்லாம் பெத்தவங்க வளர்க்கிற வளர்ப்பு...'
ஆனந்தியை அவர் பாராட்டிச் சீராட்டி வளர்க்கவில்லை.. அதையெல்லாம் சுந்தரிதான் செய்தாள்.. அவரால் முடிந்ததெல்லாம் அவள்மீது பாசத்தைக் கொட்டியது மட்டும்தான்.. மற்றபடி.. மகளைக் கொஞ்ச அவருக்கு நேரம் ஏது..?
தீனதயாளனின் மனைவியான அனுபமா ஒன்றும் அல்ட்ரா மாடர்ன் பெண்ணல்ல.. சுந்தரியைப் போலவே பதவிசானவள்தான்.. ஒற்றை மகளான நேகாவைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்த்தாள்.. இருந்தும் நேகா ஆனந்தியைப் போல வளரவில்லையே...
அதைப்பற்றியெல்லாம் பார்த்தசாரதி யோசிக்கவே இல்லை.. அவர் யோசித்ததெல்லாம் ஒன்றே ஒன்றைப் பற்றித்தான்.. அது தீனதயாளனின் ஒட்டு மொத்த சொத்திற்கும் நேகா ஒருத்தி மட்டுமே வாரிசு என்பதுதான்..
இப்படிப்பட்ட ஒருத்தியைத்தான் அர்ஜீனுக்கு மணம் முடித்து வைக்க வேண்டுமென்று அவர் நினைத்திருந்தார்..  இதை அவர் நினைத்தால் மட்டும் போதுமா..? தீனதயாளனும் நினைக்க வேண்டுமில்லையா..?
அந்த நினைவு தீனதயாளனின் மனதில் வர வேண்டும் என்பதற்காகத்தான் அவர் காத்திருந்தார்.. ஒருவழியாக தீனதயாளனுக்கு அந்த நினைவு வந்து விட்டது போல.. அவரும் பார்த்தசாரதியைத் தேடிவந்து அர்ஜீனின் நலத்தைப் பற்றி விசாரித்து விட்டார்...
"ஓ.. ஹி இஸ் வெரி ஃபைன்.. மிஸ்டர் தயாளன்.. ஹவ் இஸ் நேகா...?"
மிகச்சரியாக அடுத்த அடியை எடுத்து வைத்து விட்டார் பார்த்தசாரதி.. தயாளனின் முகம் மலர்ந்தது.. ஒரே நேர்கோட்டில் அவர்களின் பேச்சு பயணிக்க ஆரம்பித்து விட்டதை அவர்கள் இருவருமே உணர்ந்து கொண்டார்கள்..
"அவளுக்கென்ன.. சூப்பரா இருக்கா.. கம்பெனியை சூப்பரா அட்மினிஸ்ட்ரேட் பண்றா.. உங்க சன் என்ன.. பாரின் பக்கம் பறந்துக்கிட்டே இருக்காரா..?"
"யெஸ்.. யெஸ்.. அவனுடைய பிஸினெஸ் அப்படி.."
"வெல் மிஸ்டர் சாரதி.. லாஸ்ட் வீக் நடந்த பார்ட்டியிலே உங்களைப் பார்த்த போதே இதைப் பற்றி பேசனும்னு நான் நினைத்தேன்.. பட்.. தனிமையான சூழல் கிடைக்கலை..."
"யா.. யா.. சுற்றிலும் சப்தமா இருந்தா நாம பேச நினைத்ததை பேச முடியாதுதான்..."
"கரெக்டா புரிஞ்சுக்கிட்டிங்க.. நேகாவும் அர்ஜீனும் பல பார்ட்டிகளில மீட் பண்ணியிருக்காங்க.."
"மீட் பண்ணித்தானே ஆகனும்..? உங்க பெண்.. நேகா குரு ஆஃப் கம்பெனியின் எம்.டி... அர்ஜீன் நியு எக்ஸ்போர்ட்டின் வருங்கால எம்.டி... ஆர்ச் கம்யூட்டர் சொலுசனின் நிகழ்கால எம்.டி... இவங்க இரண்டு பேரும் கலந்துக்காத பிஸினெஸ் பார்ட்டி சென்னையில் நடந்துவிடுமா..?"
"சரியாச் சொன்னீங்க மிஸ்டர் சாரதி.. நேகா அர்ஜீனை அட்மைர் பண்றா.."
"ஈஸிட்..? இதையேதான் அர்ஜீனும் என்னிடம் சொன்னான்.."
முழுப் பூசணிக்காயை பிரைட் ரைஸில் அமுக்கினார் பார்த்தசாரதி... ஒருநாளும் அர்ஜீன் அதைப்போல சொன்னவனல்ல..
"ம்ப்ச்.. மிஸ்டர் தயாளன் என்ன டாடி இப்படிப் பெண்ணை வளர்த்து வைத்திருக்கிறார்..?" என்றுதான் முகம் சுளித்திருக்கிறான்..
"ஏன் அர்ஜீன்..? ஷி இஸ் வெரி ஸ்மார்ட்.."
"பேசாம இருங்க டாடி.. எதையாவது சொல்லிடப் போறேன்.. பெண்ணா அது..? ரேஸ் குதிரை..!"
இன்னும் சொல்லப் போனால்.. பார்த்தசாரதியிடம் ஒரிரு வார்த்தைகளுக்கு மேலே பேசாதவன் நேகாவைப் பற்றிப் பேசும்போது மட்டும் அளவு கோலை வைத்துக் கொண்டதில்லை...
மகன் அதிகமாகப் பேசுகிறானே என்ற சந்தோசம் ஏற்படாமல்.. இதையெல்லாம் எதற்காக அவன் வேலை மெனக்கெட்டு அவரிடம் வந்து சொல்கிறான் என்ற சந்தேகம்தான் அவருக்குள் எழுந்தது...
'வருமுன் காத்துக் கொள்ளலாம்ன்னு நினைக்கிறானோ..'
இருந்தாலும் அதை மறைத்து அப்படியே பிளேட்டைத் திருப்பிப் போட்டு தான் ஒரு தேர்ந்த பிஸினெஸ் மேன் என்பதை நிருபித்தார் பார்த்தசாரதி..
"ஹௌ நைஸ்.." தீனதயாளன் மகிழ்ந்து போனார்...
"ஒன் ஆர் டூ இயரா நேகா அர்ஜீனை வாட்ச் பண்ணிக்கிட்டிருக்காளாம்.." என்று அவர் தொடர்ந்து சொல்ல...
'தெரியுமே.. அதை நான் வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்கேனே..' என்று மனதில் நினைத்துக் கொண்டு.. வெளியே...
"அப்படியா..?" என்று வரவழைத்துக் கொண்ட ஆச்சரியத்துடன் கேட்டார் பார்த்தசாரதி...
"யெஸ் மிஸ்டர் சாரதி... நேகா என்ன ஃபீல் பண்றான்னா... அர்ஜீன் அவளுக்குப் பொருத்தமான லைஃப் பார்ட்னரா இருப்பார்ன்னு ஃபீல் பண்றா..."
'நானும் அதையேதான் ஃபீல் பண்றேன்..' என்று மகிழ்ந்து போன பார்த்தசாரதி.. திரும்பவும் ஒரு
"அப்படியா..?" வை போலி ஆச்சரியத்துடன் வரவழைத்துக் கொண்டார்...
"ஸோ.. அதனால நான் என்ன நினைக்கிறேன்னா.. நாம ஏன் இந்த மேரேஜை பிக்ஸ் பண்ணி.. நடத்தி முடிக்கக் கூடாது..?"
"வொய் நாட்..? வித் பிளெஷர் மிஸ்டர் தயாளன்.."
அவர்கள் ஒருமனதாக.. அந்தத் திருமணத்தைப் பற்றிப் பேசி முடித்தார்கள்.. காவ்யாவைக் காதலித்த அர்ஜீன் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளும் முடிவோடு இருக்க.. பார்த்த சாரதியிடம் தோற்றுவிட்ட துரியோதனன்... அர்ஜீனுக்கு பெண் கொடுத்து அவனைத்தன் மாப்பிள்ளையாக்கி ஜெயித்து விடும் கனவோடு இருக்க.. சென்னையில் பார்த்தசாரதி அர்ஜீனின் திருமணத்தை முடிவு செய்து விட்டார்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.. -44
எங்கிருந்தோ ஆசைகள்.. -44
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-44.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-44.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy