எங்கிருந்தோ ஆசைகள்...-43

43 நீசிரிக்கும் மென்சிரிப்பில்... நிலவுவர ஆசைகொண்டேன்... கழுத்தில் படிந்திருந்த டையின் முடிச்சை சரி செய்த பார்த்தசாரதி கண்ணாடி பா...


43
நீசிரிக்கும் மென்சிரிப்பில்...
நிலவுவர ஆசைகொண்டேன்...

கழுத்தில் படிந்திருந்த டையின் முடிச்சை சரி செய்த பார்த்தசாரதி கண்ணாடி பார்த்தார்... லேசாக நரை விழுந்திருந்த மீசையை சிறிய அளவிலான  சீப்பினால் சீவிக்கொண்டவரின் பின்னாலிருந்து உதட்டைச் சுழித்து அழகு காட்டிய சுந்தரி...
"போதும் தாத்தா.. என்னதான் சீவி விட்டுக்கிட்டாலும் உங்களுக்கு இளமை திரும்பப் போறதில்ல...", என்று கிண்டலடித்தாள்...
கண்ணாடிக்குள் தெரிந்த மனைவியைப் பார்த்துக் கண்ணடித்தார் பார்த்தசாரதி.. அவள் முகம் குங்குமமாக சிவந்து விட்டது...
"அட.. பாட்டிக்கு வெட்கத்தைப் பாரேன்.." உல்லாசமாக சிரித்தபடி திரும்பியவருக்கு கோட்டை மாட்டி விட்டபடி..
"அர்ஜீன் போன் பண்ணியிருந்தான்.." என்றாள் சுந்தரி...
"அவன் உனக்கும்.. ஆனந்திக்கும்தானே போன் பண்ணுவான்.. எனக்குப் போன் பண்ணனும்கிற நினைப்புத்தான் அவனுக்கு இல்லையே..." பொறாமையுடன் சொன்னார் பார்த்தசாரதி..
"இதில ஒரு போட்டியா..? அவன்தான் போன் பண்ணனுமா..? ஏன்.. நீங்க அவனுக்குப் போன் பண்ணினா ஆகாதா..?" சுந்தரி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்..
"பண்ணாம இருப்பேனா சுந்தரி.. எங்கே...? நான் போன் பண்ணினா ஒற்றை வார்த்தையில பதிலைச் சொல்லிட்டு போனை கட்பண்ணிடறானே... அதுவே உன்னிடமும்.. ஆனந்தியிடமும் பேசறதுன்னா மணிக்கணக்கில் பேசறானே..." ஆதங்கப்பட்டார் பார்த்தசாரதி...
எல்லாத் தகப்பன்களிடம் இது போன்ற ஆதங்கம் உண்டு.. கண்டிப்பை மட்டுமே உணர்த்தி வளர்க்கிற தகப்பனிமிருந்து ஒரு காலகட்டத்தில் மகன் விலகி நின்று விடுகிறான்.. அவனால் தாயிடமும்.. சகோதரியிடமும் இயல்பாக பேசிப் பழக முடியும்.. தகப்பனிடம் அதைச் செய்ய முடியாது...
தோளுக்கு மேல் வளர்ந்த மகனைத் தோழனாக நினைக்கும் தந்தையே மகனின் மனதை ஜெயிக்கிறான்.. மகனின் மனஉணர்வுகளைப் புரிந்து கொண்டு அணுக முடிகிற தகப்பனையே எந்த மகனும் விரும்புவான்...
பார்த்தசாரதி பிள்ளைகளிடம் கனிவையும்.. கண்டிப்பையும் காட்டித்தான் வளர்த்தார்.. என்ன ஒன்று.. அந்தக் கனிவை மகளிடமும் கண்டிப்பை மகனிடமும் காட்டி விட்டார்.. தளை போட்டுக் கட்டுப்படுத்த மகன் என்ன கன்றுக்குட்டியா..? கன்றுக் குட்டியே தளையை அறுத்துக் கொண்டு துள்ளி விளையாடும் போது.. மகன் மட்டும் எப்படிக் கட்டுக்குள் அடங்கி நிற்பான்..?
அர்ஜீன் கல்லூரிப் பருவத்திலேயே தன் கட்டுக்களை அறுத்தெரிந்து விட்டான்.. எதையும் நேரிடையாக பார்த்த சாரதியிடம் பேசாமல் சுந்தரி மூலம் சொல்லி விட ஆரம்பித்தான்.. அதற்கும் மேலாக.. அப்பாவுக்கும்.. மகனுக்கும் இடையில் பாலமாக நின்றாள் ஆனந்தி.. அந்தப் பாலத்தின் இருமுனையிலும் நின்றிருந்த பார்த்தசாரதியும் அர்ஜீனும் அந்தப் பாலத்தைக் கடந்து நேரடியாக கை குலுக்க முனையவேயில்லை...
தொழில்ரீதியாக பேசும் போது மட்டும் அவர்கள் ஒருவரிடம் ஒருவர் நேரடியாக பேசிக் கொள்ளுவார்கள்.. அதையும் ஒரிரு வார்த்தைகளில் அர்ஜீன் முடித்துவிடுவான்.. பெரும்பாலான நேரங்களில் இருவருக்குமே மாற்றுக் கருத்துக்கள்தான் இருந்தன..
ஒரு கட்டத்தில் பார்த்தசாரதியின் பிடியிலிருந்து நழுவிய அர்ஜீன் கம்யூட்டர் கம்பெனியொன்றைத் துவக்கினான்.. வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்த பார்த்தசாரதிக்கு அதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை...
"நாம ஷீ எக்ஸ்போர்ட் பண்ற கம்பெனிய நடத்தறோம் சுந்தரி.. கூடுதலா ஹேண்ட்பேக்.. அது இதுன்னும் தயாரிச்சு எக்ஸ்போர்ட் பண்றோம்.. இதிலயே கொள்ளை லாபம் வருது.. அவன் இதை மேற்பார்வை பார்த்தாலே போதுமே..."
இது அர்ஜீனிடம் சொல்ல வேண்டிய விவரம் என்று சுந்தரிக்கு புரியாமலில்லை.. அவள் சொன்னால் அவள் மகன் கேட்பானா..? அதனால் ஆனந்தியிடம் தஞ்சமடைந்தாள் சுந்தரி..
"அம்மா.. இதைப்பத்தி அர்ஜீன்கிட்ட ஏற்கனெவே நான் பேசிட்டேன்.. நம்ம கம்பெனிக்கு டாடிதானே முதலாளின்னு அவன் சொல்றான்ம்மா.. தனிச்சு இயங்கனும்னு விருப்பப்படறான்.. அவன் நினைக்கிறதும் நியாயம்தானே..?"
ஆனந்தி சொன்னதை அப்படியே பார்த்தசாரதியின் காதுகளுக்கு கடத்தினாள் சுந்தரி...
"இதுதான் அவன் பிரச்னைன்னா நாளைக்கே அவனை கம்பெனியின் எம்.டியா ஆக்கிடறேன் சுந்தரி.. அவனே முதலாளியாக இருக்கட்டும்.. நான் அட்வைசரா இருந்துட்டுப் போறேன்..."
பார்த்தசாரதியின் வாய்மொழி ஆனந்தியிடம் சென்றது...
"அம்மா.. அவனுக்கு இது பிரச்னையில்லை.. டாடி உருவாக்கின கம்பெனியில அவன் பிள்ளைகள் சொந்தம் கொண்டாடலாம்.. அவன் சொந்தம் கொண்டாடக் கூடாதுன்னு நினைக்கிறான்..."
"புத்தியோடதான் பேசறயா ஆனந்தி.. அப்பாவோட சொத்தில அவர் பெத்த பிள்ளைகளுக்கு உரிமையில்லையா..?"
"அவன் அந்த அர்த்தத்தில சொல்லலைம்மா.. இப்ப நம்ம டாடியையே எடுத்துக்கங்க.. அவரோட பூர்விகம் திருநெல்வேலிதான்.. அவரோட கொள்ளுத்தாத்தா காலத்தில வியாபாரம் செய்ய மதுரைக்கு வந்தாங்க.. அவரோட தாத்தா மதுரையில கடையை ஆரம்பிச்சார்... அது அவரோட அப்பா காலத்து வரைக்கும் இருந்தது..நம்ம டாடி என்ன பண்ணினார்..? கடையைப் பாத்துக்கிட்டு மதுரையில இருந்திருக்கலாமே.. எதுக்கும்மா சென்னைக்கு வந்து தொழிலை ஆரம்பிச்சாரு..."
"குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரையை ஓட்ட முடியுமா ஆனந்தி.. அவர் சென்னைக்கு வராம மதுரையிலேயே இருந்திருந்தா நீயும் அர்ஜீனும் பிறக்கிறப்ப வசதியான குடும்பத்தில வேணும்னா பிறந்திருப்பீங்க.. கோடிஸ்வரக் குடும்பத்தில பிறந்திருக்க மாட்டிங்க..."
"ஏம்மா..? டாடி செய்ய நினைச்சதை அவரோட அப்பா கடையிலிருந்தே ஆரம்பிச்சிருக்கலாமே... அதை மாடலைஸ் பண்ணியிருக்கலாம்.. எக்ஸ்போர்ட் பண்ணியிருக்கலாம்.. இம்போர்ட்டும் பண்ணியிருக்கலாம் அவர் அதைச் செய்யலையே..."
"என்ன ஆனந்தி புரியாம பேசற..? என் மாமனார் கண்டிப்பானவரு.. கல்லாப்பெட்டியில உன் டாடியை உட்கார விட்டாலும் வரவு செலவை கண்காணிச்சுக்கிட்டே இருப்பாரு.. எதைச் செஞ்சாலும் அவரைக் கேட்டுத்தான் செய்யனும்கிறப்ப உன் டாடியால எந்த புதுமுயற்சியையும் செய்ய முடியாதே.. இதுன்னா அப்படியில்லை.. கொஞ்ச பணத்தைக் கொடுங்கன்னு உன் தாத்தாகிட்ட கேட்டு வாங்கி சின்னதாத்தான் இந்த கம்பெனியை ஆரம்பிச்சார்.. என்னைக் கல்யாணம் பண்ணின பின்னாலே என் சொத்தும் சேர்ந்தது இப்ப ஆலமரமா வளந்து கிளை பரப்பி நிக்குது.. இந்தியா பூராவும் நம்ம கம்பெனிக்கு பிரான்ச் இருக்குது.. இதையெல்லாம் உன் தாத்தாகூட இருந்திருந்தா டாடியாலே செய்ய முடிஞ்சிருக்காதும்மா..."
"இதுமட்டும்தானாம்மா.. இன்னும் இருக்கா..?"
"இருக்கு ஆனந்தி.. இப்ப நீயும் அர்ஜீனும் பெருமையா சொல்லிக்கறிங்களே.. இது எங்க டாடி உருவாக்கின கம்பெனின்னு.. அதிலதான் உன் டாடி சந்தோசப் படறார்.. பரம்பரையா ஒருகடையிருந்துச்சு.. அதைக் காப்பாத்தி பிள்ளைக கையில ஒப்படைச்சோம்ன்னு இல்லாம வெளிநாட்டுக்கு ஏற்றுமதிபண்ற கம்பெனியை ஆரம்பிச்சு.. இது எங்க அப்பாவோட கம்பெனின்னு சொல்ல வைச்சிருக்காரு பாரு.. இதிலதாண்டி ஒரு ஆம்பளையோட சந்தோசமே அடங்கியிருக்கு..."
இதைச் சொன்ன சுந்தரியின் குரலில் பொங்கி வழிந்த பெருமையைக் கவனித்தாள் ஆனந்தி.. மெதுவான குரலில் கேட்டாள்...
"இதே ஆம்பளைப் புத்திதான் நம்ம அர்ஜீனுக்குள்ளேயும் ஊறிப் போயிருக்கும்மா..."
"ஆனந்தி.."
சுந்தரிக்கு எதுவோ புரிவதைப் போல இருந்தது.. அவள் கண்முன்னாலேயே வளர்ந்த மகன் விலகி நின்று விசுவரூபம் எடுப்பதை மலைப்புடன் அவள் உணர்ந்தாள்..
"அவன் சாதிக்க நினைக்கிறான்ம்மா.. அவன் உருவாக்கினதுன்னு அவன் பெண்டாட்டி பிள்ளைகளுக்கு அடையாளம் காட்ட நினைக்கிறான்.. என் டாடி சம்பாதிச்ச சொத்தில நான் உட்கார்ந்து சாப்பிடல.. அந்த வருமானத்தில இருந்து என் பெண்டாட்டி பிள்ளைகளைக் காப்பாத்தல.. நான் சுயமாய் சம்பாதிக்கிறவன்னு உலகத்துக்கு உணர்த்த நினைக்கிறான்.. ஒவ்வொரு ஆம்பளைக்குள்ளேயும் இந்த வீம்பும் பிடிவாதமும் ஒளிஞ்சிருக்கும்.. அர்ஜீன் மட்டும் இதில் விதி விலக்காகி விடுவானா..?"
"ஆனா ஆனந்தி.. இப்பல்லாம் கம்யூட்டர் கம்பெனி தெருவுக்கு ஒன்னா நிக்குதுன்னு உன் டாடி சொல்றாரே.."
"காம்பெடிசன் இல்லாத பிஸினெஸே இந்த உலகத்தில் இல்லைம்மா.. ஏன்..? டாடி ஒருத்தர்தான் ஷீ தயாரிச்சு எக்ஸ்போர்ட் பண்றாரா..? இந்த பிஸினெஸ்ஸில் காம்பெடிசன் இல்லையா..?"
"டாடி அனுபவசாலி ஆனந்தி.. அவருக்கு இந்தத் தொழிலில் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு..."
"எடுத்தவுடனேயே அவருக்கு எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சிருச்சா..? அனுபவப் பட்டுத்தானே அவரும் அதைக் கண்டிருக்கார்..? அதைப்போல அர்ஜீனும் கண்டுக்குவான்..."
"இப்ப என்னதான் செய்யலாம்கிற..?"
"அவன் கேட்கிற பணத்தைக் கொடுங்கம்மா.. அவன் விருப்பப்பட்ட கம்பெனியை ஆரம்பிக்கட்டும்..."
"டாடிகிட்ட இருக்கிற பணமெல்லாம் அவனோடது தானே ஆனந்தி..? அவன் உரிமையா எடுத்துக்கிறதை விட்டுட்டு கடனாக் கொடுன்னு கேட்கிறானே.. அதுதானே டாடிக்கு பிடிக்க மாட்டேங்குது..."
"அவன் போக்கிலே அவனை விடுங்கம்மா... அவன் சுயமா சாதிக்கனும்னு ஆசைப்படறான்.. அதில தப்பில்லம்மா..."
ஆனந்தி எடுத்துச் சொல்லியதில் அர்ஜீன் கேட்ட பணத்தை அரை மனதாக கொடுத்தார் பார்த்தசாரதி... அதை ஒரே வருடத்தில் வட்டியும் முதலுமாக அர்ஜீன் திருப்பிக் கொடுத்தபோது அவருடைய புருவங்கள் உயர்ந்தன.. அர்ஜீன் அவருடைய கட்டுப்பாட்டை விட்டு நழுவிக் கொண்டிருப்பதாக அவர் உணர்ந்தார்..
அர்ஜீன் கம்யூட்டர் கம்பெனியில் அழுத்தமாக கால் பதித்தான்.. அவனுடைய கம்பெனிகள் விரிவடைந்தன.. வெளிநாட்டில் படித்தவன்.. தொழில் ரீதியாக வெளிநாட்டு கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டு.. வெளிநாடுகளுக்குப் பறக்க ஆரம்பித்தான்.. நிற்க நேரமில்லாமல் அவன் ஓட ஆரம்பித்தபோது.. அவனைக் கட்டுப் படுத்தி தன் நிழலுக்குள் வைத்துக் கொள்ள முடியாத ஆதங்கத்தில் பார்த்தசாரதி அமிழ்ந்தார்...
அர்ஜீன் அவரைவிட பெரிய தொழிலதிபனாக உருமாறிக் காண்பித்தான்.. அவருடைய மகன் அவன் என்ற அடையாளம் பின்னுக்குத் தள்ளப்பட்டு.. அர்ஜீனுடைய அப்பா அவர் என்ற அடையாளம் முன்னுக்கு வந்ததில் அவருக்குள் இருந்த தனிமனித ஈகோ சிறிதளவு காயப்பட்டது...
எந்த சந்தோசத்திற்காக அவர் மதுரையை விட்டு புலம் பெயர்ந்து சென்னையில் கால் பதித்தாரோ.. அந்த சந்தோசத்தில் சிறிதளவு குறைவதை அவர் உணர்ந்தார்.. எந்த அடையாளத்திற்காக அவர் தனித்துப் போராடினாரோ.. அந்த அடையாளத்தை மகன் மிஞ்சி விட்டதில் அவருக்குள் சிறிதளவு வருத்தம் ஏற்பட்டது...
'இது என் குடும்பம்.. என் ஒட்டு மொத்த சம்பாத்தியமும் இவர்களுக்காகத்தான்...'
பார்த்தசாரதி இப்படி நினைத்திருக்க.. உன் வருமானம் எனக்கு வேண்டாம்.. எனக்கும்.. என் மனைவி மக்களுக்கும் என்னால் சம்பாதித்து போடமுடியும் என்று அர்ஜீன் விலகிப் போனதில் அவர் மனம் காயப்பட்டது..
"அவன் கைமீறிப் போறான் சுந்தரி.." தனிமையில் மனைவியிடம் புலம்புவார்...
"அவன் பெரிய ஆளா மாறினதில உங்களுக்கு சந்தோசம்தான் வரனும்.. அதை விட்டுட்டு இப்படிப் புலம்பக் கூடாது.." சுந்தரி அதட்டுவாள்...
அர்ஜீன் பார்த்தசாரதியின் கையை மீறித்தான் போய் விட்டான்.. அவனும்.. அவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் நேருக்கு நேராகப் பார்த்துப் பேசிக் கொள்கிற சந்தர்ப்பங்கள் குறைவாகவே இருந்தன...
"அர்ஜீன் சாப்பிட வரலை..?"
"இப்பத்தான் சாப்பிட்டுப் போறான்..."
"எனக்காக காத்திருக்கலாமில்ல..?"
"அவனுக்கு பிளைட்டுக்கு நேரமாச்சாம்ங்க.."
"எப்ப வருவானாம்..?"
"சொல்ல முடியாதுன்னு சொன்னான்..."
இதையெல்லாம் அவரிடம் ஏன் அவன் பகிர்ந்து கொள்வதில்லை..? ஒருநாளின் இருபத்திநான்கு மணி நேரத்தில்.. ஒரு சிறு மணித்துளியை அவருக்காக அவன் கொடுத்தாலென்ன..? தாயையும்.. தமக்கையையும் நினைக்கிறவன்.. தந்தை என்ற ஒருவனைப் பற்றியும் நினைத்துப் பார்த்தால் என்ன..?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,177,ஆசையா.. கோபமா...?,17,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,92,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,16,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்...-43
எங்கிருந்தோ ஆசைகள்...-43
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-43.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-43.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy