எங்கிருந்தோ ஆசைகள். -42

42 என் கொழுசு சப்தத்திலே - நீ எனைத்தேட ஆசைகொண்டேன்... ' இவன் நான் பெற்ற மகனான தேவாங்கு எனப்படும் தேவராஜன்தானா... ?' த...


42
என் கொழுசு சப்தத்திலே - நீ
எனைத்தேட ஆசைகொண்டேன்...


'இவன் நான் பெற்ற மகனான தேவாங்கு எனப்படும் தேவராஜன்தானா...?'
துரியோதனனின் முகத்தில் பிரமிப்பு எழுந்தது.. தேவராஜன் பேசிய விசயமும்.. அவன் அதைப் பேசின விதமும் அப்படிப்பட்டது...
"பாருங்கப்பா.. நாம நம்ம ஊரு திருவிழாவுக்கு போனப்ப பாரதகதய நாடகமா போட்டாங்களா இல்லயா..?" தேவராஜன் கேட்டான்...
"ஆமாண்டா அதுக்கென்ன..?" என்ற துரியோதனனின் மனதில் சட்டென்று ஒரு பயம் வந்துவிட்டது...
அவரைச் சொல்லிக் குற்றமில்லை.. தேவராஜன் கொண்ட வந்து விட்ட வம்பு வழக்குகள் அவரை அப்படிப் பயமுறுத்தி வைத்திருந்தன...
"ஏண்டா மகனே..! அதில வேசம் கட்டின பொம்பள புள்ளைககூட சகவாசம் வைச்சுத் தொலைச்சிருக்கியா..? யாராச்சும் வம்பு வழக்குன்னு வந்து நின்னா படியளக்க எனக்கு திராணியில்லடா..."
'இதத்தவிர வேற எந்த நல்லதையும் என்கூட இணைகூட்டி நினைச்சுராதீங்க..' பல்லைக் கடித்தான் தேவராஜன்..
"அப்படியெல்லாம் ஒன்னுமில்லப்பா..." என்று ஒரு தடவைக்கு ஆயிரம் தடவை அவன் அடித்துச் சொல்லிய பின்பே அவர் சமாதானமானார்..
நடந்ததைக் கவனித்துக் கொண்டிருந்த தேன்மொழி வாயைப் பொத்தித் தன் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.. அதைக் கவனித்த தேவராஜன் இன்னும் கொஞ்சம் நொந்து நூலாகிப் போனான்...
"அப்புறம் எதுக்குடா.. நாடகக் கதையெல்லாம் நடுவீட்டுக்குள்ள கொண்டு வர்ற..?" செல்வி திட்டித் தீர்த்தாள்...
விட்டிருந்தால் கணவன் கண்கள் நிலைகுத்த நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாரே என்ற பயம் அவளுக்கு...
"காரணமாத்தான் கதை சொன்னேம்மா.. அந்த பாரதக் கதையில வர்ற அர்ச்சுனன்.. துருபத ராஜாவோட சண்டை போட்டுத் தோக்கடிச்சுருவான்..."
"இப்ப இது ரொம்ப முக்கியம்.. ஏங்க.. நீங்க வாங்க.. சாப்பிடப் போகலாம்.. இவன் வாயப் பாத்துக்கிட்டு இருந்தா இப்படித்தான் கதை சொல்லுவான்..."
"பொறு செல்வி.. பயபுள்ள பாரதக்கதயெல்லாம் போட்டுத் தாக்காறான்.. அத என்னான்னுதான் கேப்போமே.."
"எனக்கென்ன.. நான் சொல்லுறதச் சொல்லிட்டேன்.. அப்புறமா இவன் எசகு பிசகா பேசிப் புட்டான்னு நெஞ்சைப் புடிச்சிக்கிட்டு உக்காரக் கூடாது..."
"யம்மோவ்.. என்னப்பத்தி நல்லதாவே நினக்க மாட்டியா..."
"நீ நினக்க விடலியேடா மகனே.."
"விடு செல்வி.. நீ சொல்லுடா தேவா..."
"தோத்துப் போன துருபத மகாராசா என்னா செஞ்சான் தெரியுமா..?"
"என்னத்தைச் செஞ்சான்..? பொண்ணைக் கட்டிக் கொடுத்து அந்த அர்ச்சுனனை அவனுக்கு மாப்பிள்ளையாக்கிக் கிட்டான்..."
"அதையே நீங்களும் செஞ்சா என்ன...?"
"டே.. ய்ய்.. தேவா..."
அதிசயப்பட்டுப் போனார் துரியோதனன்..
'இந்த யோசனை ஏன் எனக்குத் தோணலை..?'
"நினைச்சுப் பாருங்கப்பா.. அந்த அர்ச்சுனனுக்கு நம்ம தேன்மொழியக் கட்டிக் கொடுத்துட்டா.. அந்தக் கடை நம்ம தங்கச்சியோட கடையாகிரும்.. அதை வித்துப்புட்டோம்.. உங்க சிநேகிதன்கிட்டத் தோத்துப் புட்டோம்கிற வருத்தம் உங்கள விட்டு ஓடிப்போயிரும்..."
"வாஸ்தவம்தாடா.." தாடையைத் தடவியபடி யோசித்தார் துரியோதனன்..
"நல்லாயிருக்கு உங்க நாயம்.. இவன்தான் போகாத ஊருக்கு வழி சொல்றான்னா.. அத ஊம் போட்டுக் கேட்டுக்கிட்டு இருக்கீங்களே.. நடக்கிற கதயப் பேசுங்க.."
"நடக்காதுன்னா நீ நினைக்கிற...?"
"என்னங்க நீங்க.. அவங்க வேற ஜாதி.. நாம வேற ஜாதி... சாதிவிட்டு சாதி அவங்க பொண்ணுக் கட்டுவாங்களா..?"
"வெளிநாட்டுக்கெல்லாம் போய் படிச்சுட்டு வந்தவன் சாதியப்பத்தி பேசுவானாடி..?"
"சரி.. அத விடுங்க.. அவங்க எப்பேற்பட்ட கோடிஸ்வரங்க..! நம்ம கடய நாம அவங்களுக்கு வித்திருக்கோம்.. அவங்களும் இத பத்தோட பதினொன்னு.. அத்தோட இது ஒன்னுன்னு வாங்கிப் போட்டிருக்காங்க.. அப்பேற்பட்ட பெருங்கொண்ட பணக்காரங்க நம்ம வீட்டில பொண்ண எடுப்பாங்களா..?"
துரியோதனனுக்கு மனைவியின் பேச்சு ரசிக்கவில்லை.. அவர் அதிருப்தியுடன் சூள் கொட்டினார்..
"ம்ப்ச்.. என்னடி பேசறவ..? நாம என்ன நடுரோட்டிலயா நிக்கறோம்..? அவன் இன்னைக்குத் தாண்டி பெருங்கொண்ட பணக்காரன்.. அந்தக் காலத்தில எங்கூட படிக்கிறப்ப.. அவனவிட நான்தாண்டி பணக்காரன்.. அவனோட தாத்தன்கடய வித்துப் பொழப்பு நடத்தினப்ப.. எங்க தாத்தன் கால்மேல காலப் போட்டு உட்கார்ந்து மரவியாபாரம் செஞ்சவருடி..."
இந்தப் பெருமையைக் கேட்ட செல்வி.. முகவாயை தோள்பட்டையில் இடித்துக் கொண்டாள்...
"உக்கும்.. இந்தப் பெருமையப் பேசித்தான அந்த ஆளோட விரோதத்த வில கொடுத்து வாங்கியிருக்கீங்க.."
"அடிப்போடி பைத்தியக்காரி.. பொழைக்கிறவனுக்கு ஆணவம் இருக்கத்தாண்டி செய்யும்.. அத வருசக்கணக்கா மனசிலேயே வைச்சிருந்து அவன் வஞ்சம் தீர்ப்பான்னு நான் கனவா கண்டேன்..?"
"அப்படி வஞ்சம் தீர்த்ததினால என்ன கெட்டுப் போச்சு..? மத்தவங்களவிட சரிபாதி விலயக்கூடக் கொடுத்துத்தான வாங்கியிருக்காரு.. அதனாலதான் நாம கடனையும் அடைச்சு.. புதுக்கடையையும் ஆரம்பிச்சிருக்கோம்.. நினப்பில வையுங்க..."
"அது எதுக்கான வில செல்வி..? அதிக வில கொடுத்தாத்தான்.. வாங்கப் போறவன் யாரு... எவருன்னு ஆராய்ஞ்சு பாக்காம நாம கடையைக் கொடுத்துடுவோம்-கிறதுக்காக கொடுத்த விலதான் அது.."
"எப்படியோ தொலயட்டும்.. இப்ப எதுக்காக அந்தப் பேச்ச இழுக்கனும்..? இனிமேயாவது நம்ம பொழப்பப் பாக்கலாமில்ல.."
"பாக்காம என்ன செய்யப் போறேன் செல்வி.. ஆனாலும் தேவா சொல்றதப் போல செஞ்சுபாத்தா என்னன்னு என் மனசுல கேள்வி ஓடுதுடி..."
"அத ஓடஓட விரட்டுங்க.. சாதிவிட்டு சாதி பொண்ணக் கட்டிக் கொடுத்தா.. நம்ம சாதிசனம் என்ன பேச்சு பேசுவாங்கன்னு கொஞ்சமாச்சும் நினச்சுப் பாத்தீங்களா...?"
"எடுத்துச் சொல்லலாம்.. அவன்கிட்டயிருக்க பணத்துக்காக பொண்ணக் கொடுக்கல.. அவன ஜெயிக்கனும்ன்னு பொண்ணக் கொடுத்தேன்னு சொன்னாக் கேட்டுக்கப் போறாங்க..."
செல்வி கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் துரியோதனனிடம் பதில் இருந்தது.. நடந்து கொண்டிருந்த பேச்சு தன்னைப் பற்றியது என்ற கவலை சிறிதுமின்றி.. டிவியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த நகைச்சுவைக் காட்சியை ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்த மகளைக் கவலையுடன் பார்த்தாள் செல்வி...
ஆண்களின் போட்டி பொறாமைகளுக்கு பெண்பிள்ளைகளின் வாழ்வு பணயமாக்கப்படுவதா என்ற துயரம் அவளுக்குள் எழுந்தது.. அந்தக் கவலையுடனே சமையலறைக்குச் சென்றாள் அவள்.. பாத்திரங்களில் உணவு வகைகளை அவள் எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது...
"அம்மா.." என்று அங்கே வந்தாள் தேன்மொழி...
"தேனு..." செல்வியின் குரல் தழதழத்தது...
"விட்டுத் தள்ளும்மா.. அண்ணனே ஒரு காமெடி பீஸ்.. அது உடுக்கடிக்குதுன்னா.. அப்பாவும் கூடச் சேர்ந்து ஆடறாரு..."
"இது உன் வாழ்க்கைடாம்மா.."
"என் வாழ்க்கைக்கு ஒன்னும் ஆகாது.. எனக்கென்னவோ இதில ஏதோ ஒரு 'உள் குத்து' இருக்குன்னு தோணுது..."
"என்னடி..?"
"அண்ணன் எதுக்காக திடிர்ன்னு அப்பாவோட கௌரவத்தில அக்கற காட்டுது...? இதில ஏதோ இருக்கும்மா.."
"எனக்கும் அப்படித்தான் தோணுது.. புத்திசாலிப் புருசன்னு நான் நினைச்சுக்கிட்டு இருந்த உன் அப்பாவே அவன் விரிக்கிற வலயில தானாப் போயி சிக்கிக்கிறாருன்னா இத நான் எங்கே போய் சொல்ல..?"
"என்கிட்ட சொல்லு.. நான் எதுக்கு இருக்கேன்..? நீ சொல்றத ஊம் போட்டுக் கேக்கத்தான இருக்கேன்..?" கண்சிமிட்டிச் சிரித்தாள் தேன்மொழி...
அந்தச் சிரிப்பில் மனம் நெகிழ்ந்தாள் செல்வி...
"ஏங்கண்னு.. உனக்கு பயமா இல்லயா..?" துக்கத்துடன் கேட்டாள்...
"எதுக்கு பயப்படனும்..? அப்பா பொண்ணு கொடுக்கிறேன்னு சொன்னவுடனே அவங்க தவ்விக்கிட்டு ஒப்புக்குவாங்களா..? போம்மா வேலைப்பாத்துக்கிட்டு.."
"தேன்மொழி..."
"அண்ணன் தூண்டிவிடுது.. அப்பா ஆசைப்படறாரு.. அவர் ஆசையைக் கெடுப்பானேன்..? விட்டுரும்மா.. அவர் போக்கில விட்டுரு.. போய் கேக்கட்டும்.. அவங்க சரின்னு சொன்னாத்தான நம்ம சாதி சனத்துக்கு என்ன பதிலைச் சொல்றதுன்னு கவலப்படனும்..? அதெல்லாம் அந்த பயபுள்ளைக சரிகொடுக்காதுக..."
"எதைவைச்சுச் சொல்றடி..."
"அப்பாவுக்குத்தான் பைத்தியம் பிடிச்சிருக்குன்னா அவங்களுக்குமா பைத்தியம் பிடிச்சிருக்கப் போகுது..? அதைவைச்சுத்தான் சொல்றேன்..."
"நடக்காதுன்னு உனக்கும் தெரியுது.. எனக்கும் தெரியுது.. அப்புறம் எதுக்காக இவரு ஆடிக்கிட்டு பொண்ணு கொடுக்கறேன்னு முந்திக்கிட்டுப் போகனும்..? நாம கேட்டோம்.. அவங்க மாட்டேன்னுட்டாங்கன்னு பேரு வருகிறதுக்கா..?"
"அதுக்குத்தான் அண்ணன் பிளான் போடுதுன்னு நானும் நினைக்கறேம்மா.. எதனாலயோ.. அண்ணன்.. அப்பாவுக்கும் அவங்களுக்கும் இடையில இருக்கிற பகையை ஊதிப் பெரிசாக்கப் பாக்குது.. பாக்கலாம்.. என்னைக்கிருந்தாலும் பூனைக்குட்டி வெளியில வந்துதான ஆகனும்..?"
"இதில உன்பேரு அடிபடுதே தேன்மொழி..."
"விடும்மா.. இதயெல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு.."
"நாள பின்ன யாராச்சும் இதப்பத்திக் கேட்டா என்னன்னு பதில் சொல்லுவேன்..?"
"அவங்கதான் பொண்ணு கேட்டாங்க.. நாங்க சாதி விட்டு சாதி பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டோம்ன்னு சொல்லு.. இது ஒரு பெரிய விசயமா..?"
"தேன்மொழி.. அசத்தறடி..."
செல்வி.. மகளின் கன்னத்தில் கைவைத்து திருஷ்டி கழித்தாள்.. அவள் மனதில் நிம்மதி வந்திருந்தது.. தேன்மொழியிடம் இருந்த தெளிவைப் பார்க்க பார்க்க.. பெற்ற இரண்டில்.. ஒன்றாவது உருப்படியாய் அறிவுடன் இருக்கிறதே என்று அவள் மனம் தேறினாள்...
சாப்பிடும் போதே.. தகப்பனும் மகனும். தேன் மொழியின் திருமணத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.. எந்த மண்டபம் நல்ல மண்டபம் என்பது வரைக்கும் தேவராஜன் போக.. துரியோதனனோ சொந்த பந்தங்களில் யார் யாருக்கு என்ன விலையில் துணி எடுக்க வேண்டும் என்று பட்டியிலிட ஆரம்பித்து விட்டார்...
செல்விக்கு தலை வேதனையாய் இருந்தது.. புத்திசாலிப் புருசனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கும் இறுமாப்பில் இருந்தளுக்கு.. அந்தப் புருசனின் புத்தி சுவாதீனத்தின் மீது சந்தேகம் எழுந்தது...
'இத்தன நாளும் இந்த மனுசன் வேசம் கட்டியிருந்தாரோ...'
சந்தேகத்தின் தீவிரத்தில் சாப்பிட்டு முடித்த மனிதருக்கு வெற்றிலை பாக்கைக் கொடுக்க மறந்து உள்ளே போய் விட்டாள்.. அதை வெற்றிகரமாக கைப்பற்றிய தேவராஜன்.. தகப்பனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்தபடி.. திட்டம் போட ஆரம்பித்தான்...
"என்னத்தடி பேசிக்கிறாங்க..?" எரிச்சலுடன் கேட்டாள் செல்வி...
"ஸ்கெட்ச் போடறாங்கம்மா..." என்றாள் தேன்மொழி..
"எதுக்காம்..?"
"வேற எதுக்கு..? மாப்பிள்ளயத் தூக்கத்தான்.."
"தூ.. பொண்ணத் தூக்கிக்கிட்டு வந்து தாலி கட்டற பரம்பரையில பொறந்துட்டு.. மாப்பிள்ளயத் தூக்க திட்டம் தீட்டுதுகளே.. இதுகள்ளாம் உருப்படுமா..?"
"அம்மா.. ரொம்பத்திட்டாதே.. அதில உன் புருசனும் சேர்ந்திருக்கார்..."
"நேத்து வரைக்கும் இந்த மனுசன் நல்லாத்தானேடி இருந்தாரு..?"
"நாளைக்கு நல்லா ஆயிருவாரு..."
"அப்ப.. இன்னைக்கு கதை..?"
"இன்னைக்கு கதைய விட்டுத்தள்ளு.. நாளக்கி எப்படி இருக்கப் போகிறாருங்கிறது மட்டும்தான நமக்கு முக்கியம்..?"
"தேனு..."
"விடும்மா.. இதுகள வேடிக்க பாத்துக்கிட்டு தூக்கத்த கெடுத்துக்காம தூங்கப் போ.. இதுக ரெண்டும் முழிச்சுக்கிட்டே கனவு காணட்டும்.."
தேன்மொழி இலகுவாகச் சொல்லிவிட்டு தூங்கப் போய் விட்டாள்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -42
எங்கிருந்தோ ஆசைகள். -42
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-42.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-42.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy