எங்கிருந்தோ ஆசைகள். -40

40 காற்றினிலே நான் கலந்து - உன் கன்னம் தொட ஆசைகொண்டேன்.. "அர்ஜீனன்னு பேரிருந்தா போற இடத்தில எல்லாம்.. ஒரு பொண்ணக் கணக்கு ப...


40
காற்றினிலே நான் கலந்து - உன்
கன்னம் தொட ஆசைகொண்டேன்..


"அர்ஜீனன்னு பேரிருந்தா போற இடத்தில எல்லாம்.. ஒரு பொண்ணக் கணக்கு பண்ணனும்னு சட்டம்.. கிட்டம் இருக்கா...?"
காவ்யாவின் கேள்வியில் அவன் கண்கள் இடுங்கின..
"என்ன பேசுகிறேன்னு புரிஞ்சுதான் பேசுகிறயா..?"
"நான் சின்னப்பப்பா பாருங்க.. என்ன பேசறோம்.. ஏது பேசறோம்ன்னு புரியாம பேசறதுக்கு.."
"நீ சின்னப் பாப்பான்னு அந்தச் சின்னப் பப்பா கூடச் சொல்லாது... என்னைப் பார்த்தா போகிற இடத்தில எல்லாம் பெண்ணைத் தேடறவன் போலவா இருக்கு..?"
"அப்புறம் எதுக்காக என்னைத் தேடறிங்க..?"
"உன்னைத் தேடினா.. ஊருக்கு ஒருத்தியைத் தேடினேன்னு அபாண்டமாய் பழி போடுவியா..?"
"நான் அப்பவே சொல்லிட்டேன்.. பழி போடறதைப் பத்தி நீங்க பேசக்கூடாதுன்னு.. உங்களாலே எனக்குத்தான் பழிவந்து சேர்ந்திருக்குன்னு.. இளங்கோ கல்யாணத்துக்கு எல்லாருமா சேர்ந்து வேனில் போகலாமுன்னு யாரைக் கேட்டு முடிவு பண்ணினீங்க...?"
"கடையில இருக்கிற எல்லோரையும்.. முக்கியமா உன்னையும் கேட்டுத்தான் முடிவு பண்ணினேன்.. நீதான் அந்த வேனையும் அரேன்ஜ் பண்ணின.. மறந்து போச்சா..?"
"அன்னைக்கே நாங்க சொன்னோம்..."
"நாங்கன்னா..?"
"நானும்.. பாவனாவும்.."
"என்ன சொன்னீங்க..?"
"அவங்வங்க வசதிப்படி கல்யாணத்துக்கு போயிட்டு வந்துக்குவோம்ன்னு.. நீங்க திட்டம் போட்டு காரியத்தை சாதிச்சிட்டிங்க..."
அவள் குமுறினாள்.. அர்ஜீனின் முகம் கல்லானது.. இந்த அளவுக்கு அவள் குமுறுவதாக இருந்தால்... அவளின் பார்வைகளுக்கான அர்த்தம் எதுவென்று அவன் யோசித்தான்..
அவன் காதல் சொன்னதைப் பிடிக்காமல் அவள் துடிப்பதாக இருந்தால்.. அவன் தினமும் கண்களின் வழியாக உணர்த்திய காதலில் துடித்திருக்க வேண்டுமே.. அவன் தொட்டது பிடிக்காமலிருந்தால் அவன் தொட்ட போது தள்ளி விட்டிருக்கலாமே.. மாறாக... தொய்ந்து அவன் கைகளில் சரிந்தாளே..
அவள் விழிகளில் வழிந்த மயக்கத்தை அவன் மறக்கவில்லை.. அவளா இப்படிப் பேசுகிறாள்..?
"எதைப் பேசினாலும் யோசித்துப் பேசறது பெட்டர்.. இது கடை.. பலர் வந்து போகிற இடம்.. நீ பேசறதைக் கேட்கிறவங்க.. என்னவோ நான் திட்டம் போட்டு உன் கற்பை சூறையாடி விட்டேன்னு கதை கட்டி விடப் போகிறாங்க.. ஒரு முத்தத்துக்கா இத்தனை பேச்சு..?"
"என்னது..?" காவ்யா வெகுண்டு விட்டாள்..
அந்நிய ஆண்களின் மூச்சுக் காற்றுக் கூடப் படாமல் தள்ளி நின்று பேசிப் பழகுகிறவள் அவள்.. மற்றவர்களின் விரல் நுனிகூட அவளைத் தீண்டியதில்லை.. அப்படிப் பட்டவளைத் தொட்டு முதன் முதலாக ஒரு ஆணின் ஸ்பரிசத்தை அவளுக்கு உணர்த்தியவன் அவன்.. முதல் முத்தத்தையும் தந்து அதிர வைத்தவன் அவன்.. அவனுடைய மூச்சுக் காற்றின் வெப்பத்தில் அவளை நடுங்க வைத்தவன் அவன்.. அப்படி அவளைத் தொட்டு விட்டவன் சொல்கிறான்.. ஒரு முத்தத்துக்கா இத்தனை பேச்சு என்று...
அவனறிவானா.. அவனின் விரல்நுனி அவள்மீது பட்டதே அவளுக்கு பெரிதான ஒரு விசயமென்று.. அதையும் தாண்டி அவனுடைய இதழ்களை அவள்மீது பதித்துவிட்டு.. அதை எளிதான ஒன்றைப் போல எப்படி அவன் கூறுகிறான்..?
அவளை அவன் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று அவளுக்குத் தோன்றிவிட்டது...
"நினைச்சேன்..."
"எதைடி நினைச்சே..."
"இந்த 'டீ' போட்டுப் பேசற வேலையெல்லாம் இங்கே வேணாம்..."
"ஏன்.. நான் உன்னை அப்படிப் பேசக் கூடாதா..?"
"கூடாது.. உங்களுக்கு அதுக்கான உரிமையும்.. தகுதியுமில்லை..."
"ஏய்ய்.. நான் உன்கிட்டக் காதல் சொன்னவன்டி..."
"நீங்க சொல்லிட்டா.. நான் உடனே ஏத்துக்கனுமா..? நீங்க பெரிய பணக்காரரா இருந்தா அது உங்க மட்டுக்கு.. பணத்தைப் பாத்து மயங்கற ஆள் நானில்ல.."
"நீ என் பணத்தைப் பாத்து மயங்கலைடி.. என்னைப் பாத்து மயங்கின..."
இவன் அடங்கவே மாட்டானா என்றிருந்தது காவ்யாவிற்கு...
அவனை வெட்கம் கெட்டுப் போய் ரகசியப் பார்வையிட்ட தினங்களை நினைத்து.. தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்..
'அதனால்தானே இவன் இம்புட்டுத் தெனாவெட்டா பேசறான்...'
"நீங்க பண்ற அலப்பறைக்கு.. இந்த ஊரே உங்களப் பாத்து மயங்குதுன்னு நீங்களா நினைச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல..."
"நினைச்சேண்டி.. உன்பேச்சு ஒரு தினுசா இருக்கும் போதே நினைச்சேன்.. நீ கழன்டுக்க நினைக்கிறேன்னு நினைச்சேன்.. தள்ளி நின்னா கள்ளப் பார்வை பார்க்கிறது.. கிட்ட வந்து தொட்டுட்டா.. குய்யோ முறையோன்னு சத்தம் போடறது.. இததானேடி நீ..."
"உங்களைக் கள்ளப்பார்வை பார்த்துட்டாலும்..."
"நீ பார்க்கலையா.."
"சும்மா சொன்னதையே சொல்லும கிளிப்பிள்ளை போல.. அதையே ஒப்பிச்சுக்கிட்டு இருக்காதீங்க... கள்ளப் பார்வை பார்த்தேன்.. கழுதைப் பார்வை பார்த்தேன்னு.. இந்தக் கழுதையைத்தான் என் அண்ணனும் கேட்டுச்சு.."
"என்னன்னு..?"
"உன் மனசில கள்ளம் புகுந்துருச்சுன்னு.. இத்தனை நாளில இது போல ஒரு வார்த்தையை என்னைப் பாத்து அது கேட்கிறாப்புல நான் நடந்துக்கிட்டது இல்லை.. இன்னைக்கு அது நடந்திருச்சு..."
'ஓ.. இதுதான் இவளோட கோபமா..?'
அர்ஜீனின் மனம் லேசானது.. அதுநேரம் வரை அவள் மனதிலிருக்கும் காதலை மறைத்து வைத்துப் பேசுகிறாள் என்ற கோபத்துடன் இருந்தவன் கோபம் தணிந்தான்..
"உன் அண்ணனுக்கு எப்படித் தெரியும்..?"
"தெரியலை.. யார் சொல்லியிருப்பாங்கன்னும் புரியலை.. பாவனா கிட்டக் கேட்டால் அவள் சொல்லலைன்னு சொல்றா.."
"அவளுக்கு எப்படித் தெரியும்..? வேனுக்குள் நடந்தது உனக்கும்.. எனக்கும் மட்டும்தானே தெரியும்..? நீதான் உன் வீட்டில் எதுவும் சொல்லலையே..."
அவன் யோசனையுடன் சொன்னான்.. அவள் கனல் பறக்க முறைத்துப் பார்த்தாள்...
'எதுக்கு முறைக்கிறா..?' அவனுக்கப் புரியவில்லை..
"நீங்க அந்த ஒன்னில்தான் நிப்பிங்களா..? அதைத் தாண்டி வெளியே வரவே மாட்டிங்களா..? நீங்க பண்ணி வைச்ச அநியாயத்தப்பத்தித் தெரிஞ்சிருந்தா என் அண்ணன் என்னை வெட்டிக் கொன்னு புதைச்சுட்டு அதே அரிவாளோட உங்களையும் தேடி வந்திருக்கும்..." அவள் கொதித்துக் கொண்டிருந்த போது...
"உன் அண்ணன் போஸ்ட் கிராஜிவேட்.. ஸ்டேட் கவர்ண்மென்டில ஹையர் ரேன்ஜில இருக்கிற ஆபிசர்.. அப்படி இப்படின்னு சொன்ன..? கடைசியில பாத்தா.. அவர் அருவாளைத் தீட்டறவரா இருக்காரே..." என்று அவன் எக்குத்தப்பாக கேட்டுவைத்தான்...
"நீங்க ஒரு முடிவோடதான் மதுரைக்குள்ள காலை வைச்சீங்களா..?"
"என்ன முடிவுன்னு நீயே சொல்லிரு.. நான் மாற்றிச் சொல்லிட்டா வம்பு..."
"வம்புக்கு பயந்த ஆள்தான் நீங்க.."
"ஒரு முத்தத்தக் கொடுத்ததுக்கு குற்றவாளிக் கூண்டில் ஏத்தாதே..."
இவனுக்கு முத்தமென்றால் அவ்வளவு எளிதாகப் போய்விட்டதா என்ற கோபத்தீ அவளுக்குள் மூண்டது...
"உங்களுக்கு அது ஈஸிதான் சாரே.. எங்களுக்குத் தான் அது கஷ்டம்..."
"எங்களுக்குன்னா.. யார்.. யார்..? நான் உனக்கு மட்டும் தானே முத்தம் கொடுத்தேன்..."
"ச்சே.. பெரிய ரோதனையாப் போச்சு.. யாரைக் கேட்டு கொடுத்தீங்க..? முத்தம் கொடுங்கன்னு நானா கேட்டேன்...?"
"ஓகே.. லீவ் இட்.. இதுதான் உன் கோபம்ன்னா.. ஐ ஆம் வெரி ஸாரி.. ஃபார் தட்.. நீ வேணும்னா நான் கொடுத்த முத்தத்தைத் திருப்பிக் கொடுத்துரு.. கணக்கு நேராகிரும்..."
அவன் சிரிக்காமல் கேட்டான்.. அவள் திணறிப் போனாள்.. இப்படி ஒரு கணக்கு பரிவர்த்தனையை எங்கேயும் அவள் கேட்டதில்லை...
"என்ன பேசாமல் இருக்கிற.. உன் விருப்பமில்லாம அதை உனக்குக் கொடுத்திருக்கக் கூடாதுதான்.. உனக்கு அது பிடிக்கலைன்னு தெரிஞ்சு போச்சு.. இதுக்குப் பின்னாலேயும் என் முத்தம் உன்கிட்ட இருந்தா சரியா இருக்காது.. ஸோ.. நீ என் முத்தத்தை திருப்பிக் கொடு.."
"விளையாடறிங்களா..?"
"நோ.. நோ.. பி சீரியஸ் காவ்யா.. நான் பக்கா பிஸினெஸ் மேன்.. அக்கவுண்ட்ஸ் மேட்டரில் நான் கறாரா இருப்பேன்னு உனக்கே தெரியும்தானே.. அக்கவுண்ட்ஸில் செட்டில்மென்ட் கரெக்டா இருக்கனும்.. இப்ப நான் ஒன்னை உனக்குக் கொடுத்திருக்கேன். உனக்கு அது தேவையில்ல.. உன் விருப்பத்தைக் கேட்காம அதை நான் உனக்குக் கொடுத்திட்டேன்னு சொல்ற.. அதுக்கு மேலேயும் அது உன்கிட்ட இருக்கக் கூடாது.. இட்ஸ் நாட் குட்.. ஸோ.. ப்ளீஸ்.. அந்த முத்தத்தைத் திருப்பிக் கொடுத்துரு..."
"வேணாம்.. இந்தப் பேச்சை இதோட நிறுத்திக்கங்க.. வீணா என்ன கொலைவெறிக்கு ஆளாக்காதீங்க..."
கையிலிருந்த பேனாவை கத்தியை ஆட்டுவதைப் போல ஆட்டி அவனை எச்சரித்தாள் காவ்யா.. அவன் அதை  ரசித்து...
"ஹா... ஹா..." என்று சிரித்தான்...
"எங்க வீட்டில நான் வேனில் போனது தெரியாது..."
"அதான் தெரியுமே.. உன் வீட்டுக்கு வரவிடாம பாவனா வீட்டுக்கு வரவைச்சவதான நீ..."
"அண்ணனுக்கு அதுதான் தெரிஞ்சு போச்சு..."
"ஓ.. அப்ப உனக்கு நான் கடனாக் கொடுத்திருக்கிற முத்தத்தைப் பத்தித் தெரியாதா..?"
"என் அண்ணனுக்கு மொத்தத்தான் தெரியும்.. அந்தக் கொடுமையில உங்களை இழுத்துவிட வேணாம்ன்னு பாக்கறேன்.. அதணால..."
"ஸோ..?"
"அடக்கி வாசிங்க வாத்தியாரே..."
அவன் கடன் கொடுத்ததை சொல்லிக் காட்டி.. அதைத் திருப்பிக் கேட்ட கலாட்டாவில்.. அவள் மனதிலிருந்த கோபம் மறைந்து விட்டது.. கள்ளப் புன்னகையுடன் அவள் வேலையில் ஆழ்ந்தாள்...
எதையோ கேட்க வாயெடுத்த அர்ஜீன்.. ஏகாம்பரத்தைக் கண்டதும் வாய் மூடிக் கொண்டான்.. கைகட்டி.. வாய் பொத்தாத குறையாக அவர் பணிவோடு நின்று கணக்குப் புள்ளி விவரங்களை சொல்லி விட்டு நடையைக் கட்டியதும் அவளைத் திரும்பிப் பார்த்தான்...
அப்போதுதான் இமைகளை உயர்த்திய அவளும் அவனைப் பார்த்தாள்...
அர்ஜீனும் நோக்கி.. காவ்யாவும் நோக்கிக் கொண்டிருந்த போது.. அவர்களை நோக்கியபடி பாவனா அறைக்குள் வந்தாள்...
'இவ கண்டு பிடிச்சுருவாளே...'
காவ்யா அவசரமாய் பார்வையை விலக்கிக் கொண்டாள்.. அர்ஜீன் லேசான புன்னகையுடன்...
"வாங்க பாவனா.." என்றான்..
அவனிடம் கையொப்பம் வாங்க வேண்டிய கடிதங்களில் கையொப்பம் வாங்கிவிட்டு.. காவ்யாவை நோக்கி மர்மப் புன்னகையொன்றை வீசிவிட்டு பாவனாவும் போய்விட்டாள்...
'அப்பாடா.. இனிப் பேசலாம்...'
அர்ஜீன் காவ்யாவின் பக்கம் திரும்ப முனைந்த போது...
"சார்.." என்று கந்தசாமி வந்து சேர்ந்தார்...
அவரை அனுப்பி வைத்ததும்.. தங்கராஜ் வந்து சேர்ந்தான்.. அவனையும் அனுப்பிவிட்டு அர்ஜீன் திரும்பிய போது.. காவ்யா மதிய உணவுக்காக அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தாள்...
'இவளுக்கு நான் முக்கியமில்லை.. நேரத்துக்கு கொட்டிக்கனும் அதுதான் முக்கியம்..'
எரிச்சலுடன் எழுந்தவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது.. எனவே அவனும் கொட்டிக் கொள்ளச் சென்றான்.. மதிய உணவுக்குப் பின்னால் காவ்யா திரும்பி வந்த போது அர்ஜீன் அறையில் இல்லை.. அவன் திரும்ப வந்தபோது காவ்யா அறையில் இல்லை.. பாவனாவிடம் முக்கிய விவரமொன்றைக் கேட்பதற்காக போயிருந்தாள்..
'என்னடா இது..'
அர்ஜீனுக்கு எரிச்சல் வந்து விட்டது...
தெரியாத்தனமாய் மதுரையில் பிறந்து வளர்ந்த ஒருத்தியைக் காதலித்து விட்டக் கொடுமைக்காக அவன் இத்தனை லோல் பட வேண்டுமா...?
'நான் பெரிசா என்னத்தைக் கேட்டுட்டேன்..? நான் சொன்ன ஐ லவ் யுவுக்கு பதிலாய் ஒரு ஐ லவ் யுவைக் கேட்டேன்.. ஒரு காதலனாகப் பட்டவனுக்கு இதற்குக் கூட உரிமையில்லையா..?' மனதுக்குள் பொருமினான்...
கொஞ்சம்கூட.. முதல்நாளின் நினைவுகளின் சாயல் இல்லாதவளாக எப்படி அவளால் நடமாட முடிகின்றது அவனுக்கு புரியவில்லை.. இதுதான் காதலா.. இதுதான் காதலா.. என்று கேட்கும் திரைப்படக் கவிஞர்கள்.. மட்டும் காவ்யா படுத்தும் பாட்டைப் பற்றிக் கேள்விப் பட்டால்.. இதுதான் இவளின் காதலா என்று பின்னங்கால் பிடறியில் பட ஓடிப் போயிருப்பார்கள் என்ற முடிவுக்கு அவன் வந்தபோது.. அவள் அன்றைய வேலை முடிந்தது என்று வீட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -40
எங்கிருந்தோ ஆசைகள். -40
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-40.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-40.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy