எங்கிருந்தோ ஆசைகள். -39

39 அலைபாயும் என் மனதை... நீயறிய ஆசைகொண்டேன்... "ரிலாக்ஸா.. ? எதை ரிலாக்ஸ் பண்ணனும்.. ? உங்களாலே.. இத்தனை நாளாய் என் அண்ணனின...

39
அலைபாயும் என் மனதை...
நீயறிய ஆசைகொண்டேன்...


"ரிலாக்ஸா..? எதை ரிலாக்ஸ் பண்ணனும்..? உங்களாலே.. இத்தனை நாளாய் என் அண்ணனின் முகம் பாத்துப் பேசுகிறவளுக்கு.. அவன் முகம் பார்க்க முடியாமப் போச்சு.. இதையா நான் ரிலாக்ஸ் பண்ணனும்..?"
'அண்ணனா..?' அர்ஜீனுக்கு புரியவில்லை...
இதில் காவ்யாவின் அண்ணன் எங்கு வந்தான்..? எதற்காக வந்தான்..? அர்ஜீனுக்கும்.. காவ்யாவுக்குமான காதல் உணர்வுகளுக்கு இடையில் தேவையில்லாமல் கண்ணதாசனைப் பற்றிய பேச்சு எதற்காக நுழைய வேண்டும் என்று அவன் நினைத்தான்...
"இதோ பார்.. வீட்டுப் பிராப்ளத்தை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விடனும்.. இது ஆபிஸ்... இங்கே வேலை மட்டும்தான் நினைவிலிருக்கனும்.. அண்டர்ஸ்டாண்ட்..?"
"எல்லா ஸ்டாண்டும் எங்களுக்கும் தெரியும்.. வீட்டுல வந்த பிரச்னையே உங்களாலதானே..."
"வாட்...? என்னால பிராப்ளம் வந்திருக்கா..? ஜோக்கடிக்காதே காவ்யா.. உனக்கு உன் அண்ணனின் முகம் பார்த்துப் பேச முடியலைன்னா அதுக்கு நான் பிணையா..? உன் அண்ணன் முகம் பார்க்கிற மாதிரி இல்லைன்னா அதுக்கு நானென்ன பண்ணுவேன்..?"
காவ்யாவுக்கு.. அவளின் அண்ணன் மீது இருக்கும் பாசத்தைப் பற்றித் தெரிந்திருந்தும் இடக்காக இதைச் சொன்னான் அர்ஜீன்.. காவ்யா பற்களை நறநறத்தாள்...
"என்னது..? என் அண்ணன் முகம் பாக்கிறதைப் போல இல்லயா..? ஆமாம் சாமி.. உங்க முகம்தான் அழகு முகம்.. பாக்கறதைப் போல இருக்கிற முகம்.. எங்க முகமெல்லாம் இப்படித்தான் இருக்கும்.. இந்த முகத்தைப் பாருங்கன்னு உங்ககிட்ட நாங்க வந்து நிக்கலை..."
"வெயிட்.. வெயிட்.. இப்ப உன் அண்ணன் முகத்தைப் பத்தித்தானே பேச்சு..? இதில நாங்கன்னு ஏன் கூட்டணி போடற..? உன் முகத்தைப் பத்தி நான் ஏதாவது சொன்னேனா...?"
"அடேங்கப்பா.. அழகு மன்மதராஜா விளக்கம் சொல்ல வந்திட்டாரு... ஏன்... சொல்லித்தான் பாருங்களேன்..."
"நான் சொல்லவே இல்லைன்னு சொல்றேன்.. அதுக்கப்புறமும் சொல்லித்தான் பாருங்களேன்னு எதுக்காக ராகம் பாடற..?"
"வேணாம்.. விட்டுருங்க..."
"அதெல்லாம் விடமுடியாது.. விடறதுக்கா உன்னைத் தொட்டு அணைச்சேன்..?" அர்ஜீன் கண்சிமிட்டினான்..
முதல்நாள் மாலையின் தொடுகையினால் அவன் எடுத்துக்கொள்ளும் உரிமையை காவ்யாவினால் புரிந்து கொள்ள முடிந்தது...
அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு அவனின் அந்த உரிமையான பேச்சைக் கண்டு கொள்வேனா என்று பிடிவாதம் பிடித்தாள்...
"என் அண்ணன் வேற.. நான் வேற இல்ல.. என் அண்ணனைச் சொன்னா.. என்னைச் சொன்னது மாதிரிதான்.." காவ்யா சண்டைக்கு வந்தாள்...
'விட மாட்டாளே..
அர்ஜீனுக்கு ஆயாசமாக இருந்தது.. அவனுக்கு அவளின் சண்டையைப் பிடிக்கும் தான்.. ஆனால்.. அவளுடைய அண்ணனுக்காக வரிந்து கட்டிக்கொண்டு.. அர்ஜீனிடமே அவள் சண்டைக்கு வந்ததை அவன் ரசிக்கவில்லை..
"நீங்க இரண்டு பேரும் ஒன்னாவே இருங்க.. அதை என் கடைக்குள்ள மட்டும் கொண்டு வராதீங்க..." கண்டிப்புடன் சொன்னான்..
"யாரும் கொண்டு வரலை.. நீங்கதான் ரிலாக்ஸ்.. ரிலாக்ஸீன்னு பீட்டர் விட்டிங்க..."
"ஆமாமாம்.. நீ பெரிய எலிஸபெத் மகாராணி பாரு.. உன்கிட்ட பீட்டரில் பிளந்து கட்டினேன்.. ரிலாக்ஸீன்னு ஒத்தைச் சொல்லைச் சொல்லிட்டேன்.. உடனே சங்கத் தமிழ் மதுரைக்காரி சிலிர்த்துக்கிட்டு சண்டைக்கு வந்துட்ட.. இங்கே நீதான் வேலை பார்க்கிற.. உன் அண்ணன் வேலை பார்க்கலை..."
"அதுக்கு என்ன தலைவிதி..? அதுவே பெரிய ஆபிசர்.. இந்த வேலைக்கு வரனும்னுதான் அது தவ்வுதாக்கும்..?"
"தெரியுதில்ல.. அப்புறமும் எதுக்காக உன் அண்ணனின் பேச்சை இங்கே வந்து பேசற..?"
"நானாப் பேசல.. நீங்க பேச வைச்சிருக்கீங்க..."
"இது என்ன புதுப்பழி..?"
அர்ஜீன் மெலிதான கோபத்துடன் கேட்டான்... அவன் மனதிலிருந்த உல்லாசம் வடிந்து கொண்டிருந்தது.. முதல்நாளின் முத்தத்துக்கு பின்னாலும்.. அவனிடம் அடங்க மறுத்த அந்த அல்லிராணியை எப்படி அடக்கித் தன்வசப்படுத்துவது என்று புரியாமல் அவன் பல்லைக் கடித்தான்..
"பழியெல்லாம் என் மேலதான வந்திருக்கு..? உங்களுக்கென்ன நீங்க ஆம்பளை சிங்கம்.." காவ்யாவின் கண்கள் கலங்கிவிட்டன..
"ஏய்ய்.." அர்ஜீன் கோபத்தை மறந்தவனாக எழுந்து விட்டான்...
"ஆறுதல் சொல்லுகிறேன் பேர்வழின்னு யாரும் பக்கத்தில வரவேணாம்.." 
அவள் சுதாரித்துக் கொண்டவளாய் இமைகளைச் சிமிட்டி கண்ணீரை அடக்கினாள்...
அவளின் சுதாரிப்பில் அவனுக்குச் சிரிப்பு வந்தது..
"இதில மட்டும் அலர்ட்டா இரு... ஏன்..? நான் ஆறுதல் சொல்ல உன் பக்கத்தில் வரக்கூடாதா..?" உல்லாசமாக கேட்டான்...
'இவனும்.. இவன் உல்லாசமும்..' காவ்யாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது...
"ஒரு ஆறுதல் கழுதையையும் நீங்க சொல்ல வேணாம்..." அதே எரிச்சலுடன் சொன்னாள் காவ்யா...
"கழுதைன்னு யாரைச் சொல்ற..? என்னையா..?" அவன் கோபம் போலக் கேட்டான்...
"இப்பத்தானே உங்களை ஆம்பளை சிங்கம்ன்னு சொன்னேன்..? வம்பிழுக்கறிங்களா..?" அவள் முறைத்தாள்..
கோபத்திலும் அவனைக் கொண்டாடும் அவள் மனதில் அவள்மீதான அவனின் காதல் அதிகமானது.. அவளின் ஒப்புதலுக்காக அவன் காத்திருந்தான்... அவன் மனதைச் சொல்லிய பின்பும்.. அந்த நினைவே இல்லாதவளைப் போல அவள் நடந்து கொண்ட முறையில் அவனுக்க கோபம் வந்தது...
"இதையெல்லாம் சொல்லத் தெரியுது.. நான் கேட்கிறதைச் சொல்லத் தெரியல..." தாபத்துடன் அவளைப் பார்த்தான் அவன்...
"எதைச் சொல்லச் சொல்றிங்க..?" புரியாதவளைப் போல கேட்டபடி ஃபைலைப் புரட்ட ஆரம்பித்தாள் காவ்யா..
"நீ வேலையில கெட்டின்னு தெரியும்.. அதுக்காக நான் பேசிக்கிட்டு இருக்கிறப்ப நீ ஃபைலை புரட்டனும்னு அவசியமில்லை.. என் கேள்விக்கு பதிலைச் சொல்லிட்டு அப்புறமா வேலையை ஆரம்பிக்கலாம்..."
"நீங்க என்ன வாத்தியாரா..? நானென்ன கத்துக்க வந்திருக்கிற ஸ்கூல் புள்ளயா...? நீங்க கேள்வி கேட்டா நான் பதிலைச் சொல்லித்தான் ஆகனுமா...?"
"ஆமாம்ன்னுதான் வைத்துக்கயேன்.. இதுவும் பாடம்தான்.. நான் உனக்குக் கற்றுக் கொடுக்கிற டீச்சர் தான்.. நீயும் என் ஸ்டூடன்ட்தான்.. என்ன ஒன்னு.. உனக்கு பேஸிக்கே தெரியலை.. பிரி.கே.ஜி யைக்கூட தாண்டாதவளா இருக்கே.. உனக்கு பேஸிக்கில இருந்து எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்தாகனும்.. அதுதான் எனக்குப் பிரச்னையா இருக்கு.. ஒன்றைச் சொல்லிக் கொடுத்தா அதைக் கப்புன்னு பிடிச்சுக்கிட்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டாமா..?"
அவன் கண்களில் தெரிந்த சங்கேத பாஷையில் அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. அவன் சொல்ல வருவது எதையென்று அவளுக்குப் புரிந்து விட்டது.. முதல்நாள் மாலையில் அவன் முத்தமிட்டதை நினைவு படுத்துகிறான்.. காதல் பாடத்தில் அவளுக்கு அரிச்சுவடி கூடத் தெரியாதாம்.. ஐயாதான் அதைக் கற்பிக்கும் ஆசிரியராம்...
'போடா.. டேய்ய்..' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்...
"நாங்க அப்படித்தான்... அதனால சொல்லிக் கொடுக்கிற வேலய விட்டுப்புட்டு.. வேற வேலையிருந்தா பாருங்க..." 
வெடுக்கென்று சொல்லிவிட்டு.. கம்யூட்டரின் மேல் முகத்தைப் பதித்துக் கொண்டாள்...
அந்த அளவுக்கு ஆழமாக அவள் கம்யூட்டரின் திரையில் கண்களைப் பதித்திருக்கிறாளாம்.. அவளுக்கு வேலை இருக்கிறதாம்.. அதை அவள் பார்க்க வேண்டுமாம்.. அர்ஜீனைப் பார்க்க முடியாதாம்...
'இதுதான் மேட்டரா...' அவன் உதட்டைச் சுழித்தபடி அவளை ஊன்றிப் பார்த்தான்...
"இப்படிச் சொன்னா எப்படி..? ஆரம்பித்த வேலையை அந்தரத்தில விட முடியுமா..? அந்தரம்ன்னா என்ன அர்த்தன்னு உனக்குத் தெரியும்தான..?"
"இது சங்கத்தமிழ் வளர்த்த மதுரை.. நாங்க அந்தரத்துக்கும் அர்த்தம் சொல்லுவோம்.. அதுக்கு மேலேயும் அர்த்தம் சொல்லுவோம்..."
"அதுக்கு மேலேன்னா எதைச் சொல்ற..? அந்தரங்கத்தைச் சொல்கிறயா..?"
காவ்யா அவனை மேல்பார்வை பார்த்தான்.. அதற்காகவே காத்திருந்தவன் புருவங்களை சங்கேதமாக உயர்த்தினான்...
'உன் புத்தி இப்படித்தான போகும்..' அவள் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்...
"உன் அந்தரங்க மனசில என்ன எண்ணம் ஓடுது காவ்யா...?" அவன் ஆழ்ந்த குரலில் வினவினான்...
அதைச் சொல்லிவிட்டால் எல்லாம் தீர்ந்து விடுமா என்ற நினைவுடன் மனம் வலிக்க மௌனம் சாதித்தாள் காவ்யா.. கண்ணதாசனின் குற்றம் சாட்டும் பார்வை அவள் நினைவுக்கு வந்தது..
'உள்ளம் நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்..
             உள்ளம் நிறைவாமோ...'
என்ற அவனின் குரல் அவள் காதுகளில் ஒலித்தது..
"பேசுடி.." ஆயாசத்துடன் அவன் சொன்னான்...
"வாடி.. போடின்னு பேசறதெல்லாம் இங்கே வேணாம்..." 
அவன் முகம் பார்க்காமல் கடினமான குரலில் அவள் சொன்னாள்...
"இங்கே வேண்டாம்ன்னா.. எங்கே பேசலாம்..? சென்னையில ஆயிரம் இடமிருக்கு.. மதுரையைப் பத்தி நீதான் சொல்லனும்.. சொல்லு எங்கே போகலாம்..?" 
அவளின் குரல் மாறுபாட்டை கண்டு கொள்ளாதவனைப் போல அவன் கேட்டான்...
'இவனென்ன லூஸா...?'
"ஸ்ஸ்ஸ்.." என்று அலுப்புப் பெருமூச்சை விட்டாள் காவ்யா...
"என்ன ஆச்சு..? தலை வலிக்குதா..? காபி கொண்டு வரச்சொல்லட்டுமா..?" அக்கறையுடன் விசாரித்தான் அர்ஜீன்...
'இவனா லூசு..? இவன் இருக்கிற எல்லாத்தையும் லூஸாக்கிட்டுத்தான் வேற வேலையைப் பார்ப்பான்...'
அவள் கோபத்துடன் கையிலிருந்த ஃபைலை டொம்மென்று சப்தம் எழும்ப டேபிளின் மீது வைத்தாள்..
"பார்த்து.. கையில பட்டிறப் போகுது..."
"பட்டா படட்டும்.. இது என் கை..."
"ஊஹீம்.. நேத்து சாயங்காலத்துக்குப் பின்னால அது என் கை..."
'ஓ.. நீ அப்படி வருகிறயா..?'
காவ்யா ஒரு முடிவுடன் அவனைப் பார்த்தாள்... அவன் கண்களில் கேள்வி வந்தது.. புருவங்கள் சுருங்க.. அவளையே பார்த்தான்.. அந்தப் பார்வையில் என்ன கண்டாளோ காவ்யா உதட்டைக் கடித்தபடி பார்வையை விலக்கிக் கொண்டாள்..
"நேத்து நடந்ததை என் வீட்டில் சொல்லியிருந்தா என்ன ஆகியிருக்கும் தெரியுமா..?" அவன் முகம் பார்க்காமல் கேட்டாள்...
"என்ன ஆகியிருக்கும்...?" அவன் அலட்டிக் கொள்ளவில்லை...
"வெட்டரிவாளும்.. வீச்சுக் கம்புமா.. இந்நேரத்துக்கு உங்க கடையை எங்க வீட்டாளுக சுத்தி வளைச்சிருப்பாங்க.."
"அது எதுக்கு..?"
"வீடு கட்டத்தான்.."
"ஓ.. மதுரையில எனக்கு வீடு கட்டித் தருவாங்களா..? வீணாய் சிரமப் படுத்திக்க வேணாம்ன்னு சொல்லு.. நான் நினைச்சா.. இந்த நிமிசமே ஒரு வீட்டை வாங்கிருவேன்.."
"கொழுப்பு...?"
"யெஸ்..."
"அடக்கி வாசிங்க.. இல்லைன்னா எங்க ஊரு ஆளுக அடக்கிருவாங்க..."
"ஏன் அடக்கலை...?"
"புரியலை.."
"ஏன் நீ உன் வீட்டில் நடந்ததைச் சொல்லலை..?"
அமர்த்தலாக அவன் கேட்ட கேள்வியில் அவள் தடுமாறிப் போனாள்...
ஏன் அவள் நடந்த நிகழ்வை வீட்டில் சொல்லவில்லை..? சொல்லியிருக்கலாமே.. இப்படி கள்ளன் போல அவன் வேனுக்குள் வந்தான்.. என்னைத் தொட்டான்.. முத்தம் கொடுத்தான்.. ஐ லவ் யு என்று காதில் சொன்னான்.. கட்டிப் பிடித்தான் என்று ஆதியோடு அந்தமாக அத்தனையையும் பிட்டுப் பிட்டு வைத்திருக்கலாமே... ஏன் அவள் அதைச் செய்யவில்லை..?
'உன் மனசுல கள்ளம் புகுந்துருச்சு காவ்யா...'
கண்ணதாசன் சொன்ன வார்த்தைகள் காற்றோடு கலந்து வந்து அவள் காதுகளுக்குள் புகுந்தன...
அவன் சொன்னதையே வேறு வடிவில் சொன்னான் அர்ஜீன்...
"ஏன்னு நான் சொல்லவா..?" அர்ஜீன் நிதானமாகக் கேட்டபோது..
'வேணாம்... சொல்லாதே... என் அண்ணன் பேசினதையே என்னால தாங்கிக்க முடியல.. நீயும் கூட்டுச் சேராதே...' மனதுக்குள் புலம்பினாள் காவ்யா...
"உன் மனதில் காதல் புகுந்து விட்டது..." அழுத்தமான குரலில் அவன் இதைச் சொன்னபோது.. அவளாக அவளில்லை...
"போதும்.." பொறுக்க முடியாமல் அவள் சீறினாள்..
"காவ்யா.." புருவங்கள் இடுங்க.. அவன் அதட்டினான்...
"யார் சார் நீங்க..? எங்கிருந்தோ வந்தீங்க.. கடையை வாங்கினவரு கடை வேலயப் பாக்காம.. காதல் செய்யற வேலயில எதுக்காக இறங்கறிங்க..?"
அவளின் படபடப்பை அவன் சுருங்கிய புருவங்களுடன் ஊன்றிப்

பார்த்த வண்ணம் உட்கார்ந்திருந்தான்


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,31,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,115,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,12,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,30,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,20,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -39
எங்கிருந்தோ ஆசைகள். -39
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-39.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-39.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy