எங்கிருந்தோ ஆசைகள். -38

38 எனை நினைக்கும் ஒர் சொல்லை... நீ சொல்ல ஆசைகொண்டேன்... சூடான இட்லிகளைப் பரிமாறி.. சட்னியை ஊற்றினாள் அன்னபூரணி.. குனிந்த தலை நி...


38
எனை நினைக்கும் ஒர் சொல்லை...
நீ சொல்ல ஆசைகொண்டேன்...


சூடான இட்லிகளைப் பரிமாறி.. சட்னியை ஊற்றினாள் அன்னபூரணி.. குனிந்த தலை நிமிராமல்.. சாப்பிட்டுக் கொண்டிருந்த தங்கையை உற்றுப் பார்த்தான் கண்ணதாசன்.. அவள் விழிகளில் தெரிந்த கலக்கத்தில் அவன் மனம் அழுந்தியது...
'இவ ஏன் இப்படியிருக்கா...?'
இதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளாவிட்டால் அவனால் நிம்மதியாக வேலையில் ஈடுபட முடியாது போலத் தோன்றிவிட.. கண்ணதாசன் சாப்பிடாமல் கிளம்பி விட்டான்...
"கண்ணா.." அன்னபூரணி குரல் கொடுத்தாள்...
"ஒரு சின்ன வேலைம்மா... முடிச்சுட்டு வந்து சாப்பிடறேன்..."
காரில் ஏறியவன்.. புயல் வேகத்தில் தங்கராஜின் வீட்டை அடைந்தான்.. தங்கராஜின் அண்ணன் கண்ணதாசனின் அலுவலகத்தில்தான் அட்டெண்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.. அண்ணனைப் பார்க்க தங்கராஜ் அலுவலகம் போகும் போது கண்ணதாசனையும் பார்த்திருக்கிறான்.. அந்த அறிமுகத்தில் அவன் கண்ணதாசனை வரவேற்றான்...
"வாங்க சார்.. வணக்கம் சார்..."
"கனகராஜ் எங்கே..? ஒரு முக்கியமான வேலைக்கு அவரை அனுப்பனும்..."
"அண்ணன் கடைக்கு போயிருக்கு சார்..."
"அப்படியா..? அப்பச்சரி.. நான் வேறு யாரையாவது அந்த வேலையைப் பார்க்கச் சொல்லி அனுப்பிக்கிறேன்.."
"சரிங்க சார்..."
"நேத்து உங்ககூட வேலை பாக்கிறவருக்கு கல்யாணமாமே.. என் தங்கச்சி சொல்லுச்சு..."
"ஆமா சார்.. அவன் பேரு இளங்கோ..."
"ஓஹோ.. நீங்களும் போயிருந்தீங்களா..?"
"நாங்க எல்லோரும் ஒன்னாத்தானே வேனில் போனோம்..? காவ்யா மேடம் சொல்லலைங்களா..?"
'இல்லையே..' அவன் பார்வை கூர்மையானது...
முதன்முறையாக அவன் தங்கை அவனிடம் உண்மையைச் சொல்லாமல் மறைத்திருக்கிறாள்.. அவள் கோபக்காரிதான்.. ஆனால் மனதில் எதையும் மறைத்து வைத்துப் பேசத் தெரியாதவள்...
'அவளா மறைத்தாள்..?'
கண்ணதாசனால் நம்ப முடியவில்லை.. அவன் பாவனாவின் வீட்டில்தானே காவ்யாவை விட்டுவிட்டு வந்தான்..? அதை தங்கராஜிடம் சொல்ல முடியாமல் பொத்தாம் பொதுவாக...
"சொல்லுச்சு.. சொல்லுச்சு.." என்று சமாளித்தான்...
"காவ்யா மேடம்.. பாவனா மேடத்தோட வீட்டுக்கு வந்துட்டாங்க.. அவங்கதான் சிநேகிதப் புள்ளைகளாச்சே.." என்றான் தங்கராஜ்...
'இது எனக்குத் தெரியாதா..' என்ற கடுப்புடன்
"ஆமாமாம்.." என்று ஆமாம்சாமி போட்டான் கண்ணதாசன்...
"கடையிலயும் ரெண்டு பேரும் சேர்ந்துதான் இருப்பாங்க..."
'நீ அதையேண்டா கவனிக்கிற...?'
"நேத்துக் கூடப் பாருங்க.. எங்க எல்லாரையும்.. அவரவர் வீட்டில வந்து வேனில் கூப்பிட்டுக்கிட்டுப் போனாங்க.. காவ்யா மேடமும்.. பாவனா மேடமும் மட்டும் நாங்க தனித்தனியா வரமாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க.. அதனால ரெண்டு பேரையும் ஒரே வீட்டில இருக்கச் சொல்லி முதலாளி சொல்லிட்டாரு.."
'என்னது...?!...' கண்ணதாசன் முகம் மாறினான்...
"உங்க முதலாளியும் உங்ககூடவே வேனில் வந்தாரா...?"
"ஆமாம் சார்.. எங்களுக்கெல்லாம் ஆச்சரியமான ஆச்சரியம்.. அம்மாம்பெரிய வெளிநாட்டுக்கார வைச்சிருக்க மகராசன்.. தனியா காரில வந்து போகாம.. எங்ககூட இணையா வேனில உக்காந்துக்கிட்டு வந்ததை நினைச்சுப் பாத்தா புல்லரிக்குது சார்..."
'மாடு மேயப் போகுது.. போர்த்தித் தொலை..' பல்லைக்கடித்த கண்ணதாசன்...
"பரவாயில்லையே..." என்று வெளியே சொல்லி வைத்தான்...
"அது மட்டுமா.. கல்யாணம் முடிஞ்சதும்.. அரக்கப் பறக்க கிளப்பிக்கிட்டு வராம.. எங்ககூட பழமுதிர் சோலையைச் சுத்திப்பார்த்து சாமி கும்பிட்டார்.. எங்களுக்கெல்லாம் இது கனவா.. இல்ல நனவான்னு இருந்துச்சு..."
அதற்கு மேல் கேட்கப் பிடிக்காதவனாக கண்ணதாசன் கிளம்பிவிட்டான்.. அவன் மனதில் புயலடித்துக் கொண்டிருந்தது.. நடந்திருக்கும் செயல் நல்லதிற்கானதல்ல என்று அவன் மனம் கூறியது.. 
அர்ஜீனைப் போன்ற ஒரு கோடிஸ்வரன்.. மதுரையிலிருக்கும் கடையைப் பார்க்க வருவதே பெரியவிசயம்.. அப்படியிருக்கையில்.. அவனோ கடையில் வேலை பார்க்கும் தொழிலாளியின் திருமணத்தில் கலந்து கொள்கிறான்.. அதையும் அவனின் வெளிநாட்டுக் காரில் செல்லாமல்.. தொழிலாளியோடு தொழிலாளியாக இணைந்து வேனில் அமர்ந்து செல்கிறான் என்றால்.. அதன் பிண்ணனியிலிருக்கும் அவனது நோக்கம் எதுவாக இருக்கக்கூடும் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா..?
வீட்டுக்கு அவன் திரும்பியபோது.. காவ்யா மாடிப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள்.. அவள் முகத்தையே ஊடுறிவிப் பார்த்தபடி கண்ணதாசன் படிகளில் ஏறினான்.. அண்ணனும்.. தங்கையும்.. மாடிப்படிகளின் மத்திய பகுதியில் சந்தித்துக் கொண்டனர்..
கண்ணதாசனின் பார்வையில் காவ்யாவின் முதுகுத்தண்டு ஜில்லிட்டது.. அதற்கு முன்னால்.. அது போன்றதொரு பார்வையை.. கண்ணதாசனிடம் அவள் கண்டதில்லை...
"அண்ணே...?"
"நேத்து அழகர் கோவிலுக்கு எப்படிப் போன..? பாவனா கூட ஆட்டோவில போறதா சொன்னியே.. அப்படியா போன...?"
கண்ணதாசனின் கேள்வியில் காவ்யா அதிர்ந்து விட்டாள்.. அவன் பார்வையைச் சந்திக்க முடியாமல் அவள் தலைகுனிந்தது..
"நேர் கொண்ட பார்வையும்.. நிமிர்ந்த நன்னடையுமாய் இருந்த என் தங்கச்சி எங்கேம்மா..? அவ எங்கே தொலைஞ்சு போனா..?"
"அண்ணே..."
"உன்னால என் முகத்தப் பாத்துப் பதில் சொல்ல முடியலையே.. ஏம்மா..?"
"அண்ணே..."
"நாம சின்ன வயசில படிச்ச பாட்டு உனக்கு ஞாபகத்தில இருக்கா காவ்யா..?"
எந்தப் பாட்டு என்று அவள் நினைவுக்கு வரவில்லை.. எதுவாக இருந்தாலும்... அது அவளைச் சுடும் பாடலாகத்தான் இருக்கப் போகிறது என்ற நிச்சயத்துடன் அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றாள்...
"உள்ளம் நிறைவிலோர்..
             கள்ளம் புருந்திடில்..
    உள்ளம் நிறைவாமோ..
             தெள்ளிய தேனிலும்..
    சிறிது நஞ்சையும்..
             சேர்த்த பின்..
    தேனாமோ...?"
கண்ணதாசன் அட்சர சுத்தமாக அந்தப் பாடலைப் பாடினான்..
இவ்வளவு தெளிவான ஞாபகசக்தியுடன் இவன் இருந்திருக்கக்கூடாது என்று காவ்யாவுக்குத் தோன்றியது.. இப்படிப் பாட்டாலேயே அவளைத் தாக்கினால்.. அவள் எங்கே ஓடி ஒளிவாள் என்ற எண்ணம் கொஞ்சமாவது அவனுக்கு இருக்க வேண்டாமா என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள் அவள்...
"உன் மனசில கள்ளம் புகுந்திருச்சு காவ்யா.. அதனாலதான் என் கண்ணைப் பார்த்துப் பேச உன்னால முடியலை.." குற்றம் காட்டினான் கண்ணதாசன்...
காவ்யாவுக்கு அழ வேண்டும் போல இருந்தது.. அவள் அழுது பழக்கமில்லாதவள்.. அவளுக்குப் போய் இப்படிப்பட்ட நிலைமையா வந்து சேர வேண்டும்..?
"எல்லாரும் போனாங்கண்ணே..." கெஞ்சும் குரலில் அவள் சொன்னாள்..
"எல்லாரும்ன்னா..?" அவன் புருவங்களை உயர்த்தினான்...
"எல்லாரும்ன்னா.. எல்லாரும்தாண்ணே..."
"கடையில வேலை பார்க்கிற எல்லாருமா.. இல்ல.. உன் முதலாளியும் கூடச் சேர்ந்த எல்லாருமா..?" சரியான கேள்வியைக் கேட்டான் கண்ணதாசன்...
"முதலாளியும்தான் கூடவந்தார்..." காவ்யா மென்று விழுங்கினாள்..
"இதையேன் நீ முன்னாடியே சொல்லலை..?" அவன் பார்வை அவளைச் சுட்டது...
"சொன்னா அம்மா விடாது..."
"நான் மட்டும் விடுவேனா..?"
"இது சின்ன விசயம்ன்னு நினைச்சேண்ணே..."
"அப்படி நினைக்கிறவ.. எதுக்காக சாமி முன்னாடி சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்த..?" கண்ணதாசன் மடக்கி விட்டான்..
"அண்ணே.." தப்பிக்கும் வழி தெரியாமல் கண் கலங்கிவிட்டாள் காவ்யா...
கண்ணதாசன் சங்கடத்துடன் அவளுக்கு வழி விட்டு விலகிநின்றான்.. அவசரமாக இறங்க முயன்றவளை...
"காவ்யா..." என்று தடுத்து நிறுத்தினான்...
அவள் ஏனென்று கேட்காமல் நின்றாள்...
"சுட்டெரிக்கும் சூரியனைத் தள்ளி நின்னு பார்த்தா.. தொட்டு விடலாம் போல அழகாத்தான் இருக்கும்... கிட்டப் போனாத்தான் தெரியும்... அதத் தொட்டா அழிஞ்சுருவோம்ன்னு..."
"அண்ணே..." அதிர்ந்து நோக்கினாள் காவ்யா...
'என்னவெல்லாம் பேசறான்..' அவள் மனம் குமுறியது...
"பெரிய பெரிய பேச்சையெல்லாம் பேசாதே.. நீ உன் பிரண்ட்ஸ்கூட ஊரச் சுத்தப் போனதில்லையா..? அதையே நான் செய்தா மட்டும் தப்பா..? உனக்கொரு நியாயம்.. எனக்கொரு நியாயமா..? ஏன்னா நீ ஆம்பளை.. நான் பொட்டப்புள்ள.. அப்படித்தான..? படிக்கிறதிலதான் நீ கொடுத்து வைச்சவன்னு நினைச்சேன்.. எல்லாத்திலயும் நீ கொடுத்துத்தான் வைச்சிருக்க.." பெரிந்து விட்டாள்..
பழைய காவ்யாவாக மாறி அவள் பொரிந்து தள்ளியதில் அவனுக்கும் சந்தோசம்தான்.. ஆனால்.. அவன் எதற்காகச் சொல்லுகிறான் என்பதை உணராமல் அவள் பெரிந்ததில்தான் அவனுக்கு வருத்தம் உண்டானது...
"இந்தக் கோபம் எதுக்காக காவ்யா..? பாவனாவோட ஊரைச் சுத்திட்டு வான்னுதான நான் அனுப்பி வைச்சேன்..?"
"இப்ப என்ன..? கடையில வேலை பாக்கிற எல்லாரும் ஒரே வேனில் போனோம்.. இது ஒரு குத்தமா..?"
"இல்லேன்னு நினைச்சா எங்ககிட்ட அதை நீ சொல்லியிருக்கலாமே..?"
"தப்புத்தான் சாமி.. தப்புத்தான்.. இனிமே நான் தும்மறதா இருந்தாக்கூட.. உன் கிட்டயும்.. அப்பாம்மா-கிட்டயும் சொல்லிட்டுத்தான் தும்முவேன்.. போதுமா சாமி..?"
காவ்யா விருவிருவென இறங்கிப் போய்விட்டாள்.. அவள் கோபத்தின் திரை மறைவில் தன்னை மறைத்துக் கொள்கிறாள் என்பதைக் கண்ணதாசனால் புரிந்து கொள்ள முடிந்தது...
'எல்லாம் அந்த அர்ஜீன் பயலால் வந்தது..' கண்ணதாசன் ஆத்திரத்துடன் நினைத்துக் கொண்டான்...
'அவனுக்கு கடலை போட வேற பெண்ணே கிடைக்கலியா..? அதான்.. நாடு.. நாடாச் சுத்தறானில்ல.. அங்கே போய் எவளையாவது வெள்ளைக்காரியாய் பார்த்துப் பிடிக்க வேண்டியதுதானே.. இவன் ஆடுகிற ஆட்டத்துக்கு அவள்தானே தோதா இருப்பா... அத விட்டுட்டு மதுரைப் பக்கம் எதுக்காக வந்து தொலைச்சான்..?'
அவனை என்ன செய்தால் தேவலாம் என்ற சிந்தனையோடு அலுவலகம் செல்லக் கிளம்பினான் கண்ணதாசன்...
அர்ஜீன் காத்திருந்தான்.. அவனுக்கு காவ்யாவின் வெட்கிச் சிவந்த முகத்தைப் பார்க்க வேண்டியிருந்தது.. அவன் தொட்டதும்.. துவண்டு.. குழைந்த அவளின் நினைவில் அவன் உடல் சூடேறியது...
'இன்னும் வராம என்னத்தக் கிழிக்கிறா...'
அவன் எரிச்சல்பட்டான்.. கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.. கடையின் வேலைநேரம் ஆரம்பித்திருக்க வில்லை...""
'ம்ஹீம்.. அவளுக்கு முன்னாலேயே வந்து உட்கார்ந்து விட்டு அவள் வரலைன்னு குற்றம் சொன்னா எப்படி..? நேரத்துக்குத்தானே அவ வருவா..?' அவன் மனம் கேட்டது..
'ஏன் இன்னைக்கு சீக்கிரமா வந்தா ஆகாதா..?' அவன் கோபப் பட்டான்..
அதிக நேரத்துக்கு அவனைக் கோபப்பட வைக்காமல் காவ்யா வந்து விட்டாள்.. கூடவே.. கண்ணதாசனிடம் மாட்டிக் கொண்டதால் உண்டான கோபமும் வந்திருந்தது...
அந்த எரிச்சலுடன் அர்ஜீனின் முகம் பார்க்காமல் சேரை இழுத்துப் போட்டாள்.. டேபிள் டிராயரை இழுத்து மூடினாள்.. சுவர் அலமாரியிலிருந்த ஃபைல்களை கத்தையாகத் தூக்கி தொம்மென்று சப்தம் எழுப்ப டேபிளின் மீது கடாசினாள்...
'யார் மேலயோ இருக்கிற கோபத்தை வேலை மேல காட்டறா...'
அந்தக் கோபம் அவன் மீதானது என்று அவனுக்குத் தோன்றிவிட்டது...
'அடேங்கப்பா.. ராணி மங்கம்மாவுக்கு தெனாவெட்டு ஜாஸ்திதான்.. சம்பளம் கொடுக்கிற முதலாளி இங்கே உட்கார்ந்திருக்கேன்.. இவ அதைக் கண்டுக்காம.. என் கடையைப் போட்டு உடைக்கிறா...'
அதற்கு மேலும் பொறுமை காத்தால்.. காவ்யா கம்யூட்டரையே உடைத்து விடுவாள் என்று தோன்றிவிட..
"ரிலாக்ஸ் காவ்யா..?" என்றான் அர்ஜீன்..
அவனைத் திரும்பிப் பார்த்த காவ்யாவின் விழிகளில் தெரிந்த ஆவேசத்தில் அர்ஜீனின் புருவங்கள் முடிச்சிட்டன...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,35,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,119,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,15,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சிறுகதைகள்,4,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,34,நிலாச் சோறு,19,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,24,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -38
எங்கிருந்தோ ஆசைகள். -38
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-38.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-38.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy