எங்கிருந்தோ ஆசைகள்.. -35

35 விட்டுச் செல்லும் நினைவின்றி... நீ தொடர்ந்து வர ஆசைகொண்டேன்... இளங்கோவின் திருமணம் நடந்து கொண்டிருந்தது.. ஐயர் மந்திரங்களை ஓ...


35
விட்டுச் செல்லும் நினைவின்றி...
நீ தொடர்ந்து வர ஆசைகொண்டேன்...


இளங்கோவின் திருமணம் நடந்து கொண்டிருந்தது.. ஐயர் மந்திரங்களை ஓத.. மாப்பிள்ளை கோலத்தில் இருந்த இளங்கோ அதை ஒப்பித்துக் கொண்டிருந்தான்...
"இந்தப் பெண்னைக் கட்டறதுக்கா இவ்வளவு அலட்டிக்கிட்டான்..? பொண்ணு நல்லாவே இல்லைடி.. சுமார்தான்.." என்றாள் பாவனா...
"வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா..?" காவ்யா சுற்றுமுற்றும் பார்த்தாள்..
"என்னடி பாக்கிற..?"
"நீ பேசினதை பொண்ணு வீட்டுக்காரங்க யாராச்சும் கேட்டுட்டாங்களோன்னு பாக்கறேன்.."
"முன்னெச்சரிக்கை..?"
"பின்னே..? மகராசி.. உன் பக்கத்திலே நின்னுக்கிட்டிருக்கேனே.. நீதான் வாயைத் திறந்தாலே வில்லங்கமாய் பேசி வைக்கறியே.."
"வாயின்னு இருந்தா நாலு வார்த்தை பேசித்தான் ஆகனும்..."
"இப்படிப் பேசக்கூடாது..."
பாவனாவைக் கடிந்து கொண்டிருந்த காவ்யாவின் பக்கத்தில் வந்து நின்ற அர்ஜீன்..
"கோவில் அழகாயிருக்கு.." என்று சொன்னான்...
"அழகர் இருக்கிற கோவில்.. அழகாத்தான் இருக்கும்.." என்றாள் காவ்யா..
"உனக்கு இந்தக் கோவில்ன்னா பிரியம் போல இருக்கே..."
"ம்ம்ம்.. இங்கே இருப்பது கள்ளழகர்.. எங்கள் நாராயணப் பெருமாள்.. சித்திரைத் திருவிழாவில் இவர் மீனாட்சி கல்யாணத்தில சீர் செய்ய வருவார்..."
"அது எதுக்கு..?"
"நல்லாக் கேட்டிங்களே ஒரு கேள்வி.. இவர்தானே மீனாட்சிக்கு அண்ணன்..!"
"அப்படியா..?"
"என்ன அப்படியா..? கம்யூட்டரைக் கட்டிக்கிட்டு இருந்தா மட்டும் போதாது.. நாம இருக்கிற நாட்டில.. காக்கிற கடவுள்களைப் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சு வைச்சுக்கனும்.."
"இதுவரைக்கும் தெரியாம இருந்திட்டேன்.. இனிமே தெரிஞ்சுக்கிறேன் நீ சொல்லு.. இவர் மீனாட்சிக்கு அண்ணன்.. அப்புறம்..?"
"அப்புறமென்ன..? மீனாட்சி கல்யாணத்தில தங்கைக்கு சீர்செய்ய எங்க கள்ளழகர் கிளம்பி வருவாரு.. இவர் ஆத்தில இறங்கி வாரதைத்தான் அழகர் ஆத்தில இறங்கி வர்ற விழாவா நாங்க சிறப்பாக கொண்டாடறோம்."
"ஆத்திலன்னா..?"
"ஆறு சார்.. வைகை ஆறு..."
"ஓ.. பெண்டாஸ்டிக்..."
"அன்னைக்குப் பாத்தீங்கன்னா.. வைகையாத்தில கடுகு போடக்கூட இடமிருக்காது.. அவ்வளவு கூட்டமிருக்கும்.."
காவ்யா கண்கள் பிரகாசிக்க சொல்லிக் கொண்டிருந்த போது இளங்கோ மணமகளின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.. அட்சதையை போட்டு மணமக்களை ஆசிர்வதித்து விட்டு.. அவர்கள் இறங்கி கோவிலை நோக்கி நடந்தார்கள்.. பாவனா அந்த ஓரமும்.. அர்ஜீன் இந்த ஓரமுமாக நடந்துவர.. காவ்யா நடுவில் நடந்தாள்..
அழகரை வணங்கிவிட்டு.. அம்பாளைத் தரிசனம் செய்தார்கள்.. கண்மூடிப் பக்திப் பரவசத்துடன் நின்ற காவ்யாவைப் பார்த்தபோது..
'இவளுக்குள் இருக்கும் குணங்களெல்லாம் ஒட்டு மொத்த தமிழகப் பெண்களின் கலாச்சாரத்தின் வார்ப்பாக இருக்கிறது..' என்று நினைத்துக் கொண்டான் அர்ஜீன்...
கோவிலின் முன்புறமிருந்த மண்டபத்தில் பந்திப்பாய் விரிக்கப்பட்டிருந்தது.. தயங்காமல் அர்ஜீன் அதில் அமர்ந்ததில் இளங்கோவைப் பெற்றவர்களின் முகங்கள் மலர்ந்து விட்டன...
"அசத்தறாண்டி..." காவ்யாவின் மயக்கத்தை அவள் கண்கள் சொல்லின.. வழக்கமாக இதை பாவனாதான் சொல்லுவாள்.. அன்று காவ்யா அதைச் சொன்னதில் அவளுக்கு கோபம் வந்துவிட்டது..
"இதென்ன புதுசா..?" பாவனா அலட்சியமாக தோள் குலுக்கினாள்...
சாப்பிட்டு முடித்தவர்கள் மலையேற வேண்டும் என்று சொன்னார்கள்...
"அங்கே என்ன இருக்கு..?" அர்ஜீன் விசாரித்தான்...
"பழமுதிர்சோலை இருக்கு.." என்றாள் காவ்யா...
"பழமுதிர்சோலை..? முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாச்சே..."
"பரவாயில்லையே... இதைத் தெரிந்து வைச்சிருக்கீங்களே..."
காவ்யா போலி வியப்பைக் காட்ட.. அர்ஜீன் அவளுக்கு மட்டும் கேட்டும் படியாக..
"ஒரேயடியாய் கம்யூட்டரைக் கட்டிக்கிட்டு இருக்கலைன்னு இப்பவாவது ஒப்புக்கிறயா..?" என்று கேட்டான்...
அந்த ரகசியப் பேச்சில் காவ்யாவின் மனம் நனைந்தது... அவர்கள் வேனில் ஏறிக் கொண்டார்கள்.. வேன் மலைப் பாதையில் ஏற ஆரம்பித்தது...
"இங்கேதானே முருகன்.. வள்ளியைக் காதலித்துக் கல்யாணம் பண்ணிக் கொண்டார்..?" அர்ஜீன் கேட்டான்...
"இது மட்டும் நினைப்பில் இருக்குமே..." மற்றவர்கள் அறியாத வண்ணம் காவ்யா முணுமுணுத்தாள்...
"தெரிஞ்சாச் சரி..." அவள் பாணியிலேயே பதிலுக்கு முணுமுணுத்தான் அர்ஜீன்...
வள்ளி.. முருகனைத் தரிசனம் செய்து விட்டு.. மீண்டும் மலையேறினார்கள்.. தீர்த்தத் தொட்டியிலிருந்த தீர்த்தத்தை மற்றவர்கள் தங்கள் மீது தெளித்துக் கொண்டிருக்க.. அதையறியாத அர்ஜீன்.. அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்...
காவ்யா தண்ணீரைத் தெளித்துக் கொள்ளும்படி ஜாடை காட்டினாள்.. அவனுக்கு அது புரியவில்லை.. புருவங்களை அவன் உயர்த்திய போது.. வேறு வழி தெரியாதவளாய் அவன் மீது காவ்யாவே தண்ணீர் தெளித்து விட்டாள்...
"வாட் இஸ் திஸ்..?" அர்ஜீன் வினவினான்...
"இது தீர்த்தம்.. புண்ணியமானது.. இதைத் தலையில் தெளித்துக்கனும்..." காவ்யா விளக்கம் சொன்னாள்...
"எனக்குத் தெரியாதே.."
"அதான்.. நானே தெளிச்சு விட்டுட்டேன்..."
அவர்கள் படியிறங்கியபோது.. காவ்யா தடுமாறி விழப் போனாள்.. அர்ஜீன் சட்டென்று கை கொடுத்து அவளைத் தாங்கிக் கொண்டான்.. முதன் முதலாக அவனது ஸ்பரிசத்தை உணர்ந்தவளுக்கு படபடவென்று இருந்தது.. வலிமையான அவன் கரங்களின் ரோமங்களின் மீது அவள் பார்வை பதிந்தது.. வெட்கத்துடன் பார்வையை விலக்கிக் கொண்டு அவளும் விலகிக் கொண்டாள்...
'கடையில வேலை பாக்கிறவங்க பாத்திருப்பாங்களே...'
பதட்டத்துடன் காவ்யாவின் விழிகள் சுழன்ற போது..
"அவங்கள்ளாம் அப்பவே போயிட்டாங்க அம்மணி.. அதனால உங்க லவ் சீன்.. யார் கண்ணிலயும் பட்டுவிடல.. நிம்மதியா வந்து சேரு.." என்று கடுகடுத்தாள் பாவனா...
"லவ் சீனா...?" காவ்யா ஆட்சேபித்தாள்...
"இல்லைன்னு வேசம் போட்டேன்னு வை... மகளே.. உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன்.. பார்வையிலேயே பசைபோட்டு ஒட்டிக்கிறதை உன்கிட்டத்தாண்டி நான் பாத்தேன்.. இதில இவளுக்கு அவன்மேல லவ் வரலியாம்..."
"சேச்சே... எதையெதையோ பேசாதே..."
"இவ பண்ற அழும்பைத் தாங்க முடியலையே.. இப்படின்னு தெரிஞ்சிருந்தா.. இந்த இளங்கோப் பயபுள்ள கல்யாணத்துக்கு வாரதைப் பத்தி யோசிச்சுக்கூடப் பாத்திருக்க மாட்டேனே..."
"விடுடி.. விடுடி..."
பாவனா விடவில்லை.. அவளைப் போன்ற வயதுப் பெண்ணை பக்கத்தில் வைத்துக் கொண்டு.. அர்ஜீன் காவ்யாவைப் பார்க்கும் ரகசியப் பார்வை சரியில்லை என்று புகார் சொன்னாள்...
"அதையேண்டி என்கிட்டச் சொல்ற...? அவன் கிட்டயே சொல்லு..." என்று காவ்யா கழன்று கொண்டாள்..
"அவன்கிட்டச் சொல்லிட்டாலும்..." பாவனா அலுத்துக் கொண்டாள்...
"முடியலைன்னா விட்டுத்தள்ளு.. எனக்கென்னவோ நீ அபாண்டமாய் பேசறேன்னு தோணுது பாவனா..."
"அபாண்டமாய் பேசறேனா..? நானா..? ஏண்டி.. அவன் உன்கிட்ட கடலை போடுவான்.. நீ அதைக் கண்டும் காணாம குளிர் காய்வ.. நான் மட்டும் உங்க ரெண்டு பேரையும் வேடிக்கை பாத்து வயிறெரியனுமா..?"
"தோ பாரு.. பாவனா.. அவன் என்னைப் பாத்தானா இல்லையான்னு எனக்குத் தெரியாது..."
"அடிப்பாவி..! உனக்கா தெரியாது..?"
"ஆமாம்.. எனக்குத்தான் தெரியாது.. அவன் பாத்தா நான் என்ன பண்ணுவேன்.. பதிலுக்கு நான் அவனைப் பாத்திருந்தா.. நீ ஏன்னு கேக்கறதில ஒரு நியாயம் இருக்கு..."
"நியாயத்தைப் பத்தியெல்லாம் நீ பேசாதே.. பதிலுக்கு நீ பாக்கவே இல்லையா..."
"இல்லைங்கறேனில்ல.."
காவ்யா முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்து.. பாவனாவை லபோதிபோவென்று அலற வைத்தாள்.. ஒரு வழியாக அவர்கள் அனைவரும் வேனுக்குள் அடைந்த போது.. பிற்பகலைத் தாண்டியிருந்தது.. எல்லோரையும் அவரவர் வீடுகளில் இறக்கி விட்ட வேன்.. கடைசியாக பாவனாவின் வீட்டை நோக்கி விரைந்தது...
காவ்யாவின் மனதில் மிட்டாயைத் தொலைத்து விட்ட சிறுமியின் ஏக்கம் எழுந்தது... காலையிலிருந்து அர்ஜீனின் கண் பார்வைக்குள் சுற்றிக் கொண்டிருந்தவள்.. அந்தப் பார்வை வட்டத்தை விட்டு விலகி வீட்டுக்குப் போக வேண்டும் என்பதில் அவளுக்குள் சோர்வு வந்தது...
கைவிரல்களைக் கோர்த்துப் பிரித்தபடி சோர்வுடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான் அர்ஜீன்.. அழகான ஓவியம் போல இருந்தாள்... அவளின் விரல்களை நீவி விட வேண்டும் போல மனதில் தோன்ற.. பாவனாவின் நினைவில் அதை அடக்கிக் கொண்டான்...
பாவனாதான் வேன் பாதை மாறிப் போவதை முதலில் கண்டு பிடித்தாள்..
"எங்க வீட்டுக்குப் போகிறவழி இது இல்லை சார்.."
"உங்க வீட்டுக்குப் போகலை..." நிதானமாகச் சொன்னான் அர்ஜீன்...
"வாட்...?" பாவனா புருவங்களை சுருக்க.. காவ்யா கேள்வியுடன் நிமிர்ந்து பார்த்தாள்...
"ஒரு கப் காப்பி சாப்பிட்டுட்டு போகலாம்..."
பாவனா அதை ஆட்சேபிக்கவில்லை.. காவ்யாதான் மறுத்தாள்...
"எனக்கு வீட்டுக்குப் போகனும் பாவனா.."
"காப்பி சாப்பிடலாம்ன்னு நான்தான் சொன்னேன்.. பாவனா சொல்லலை..."
"எனக்கு காப்பி வேணாம்..."
"எனக்கு வேணும்.."
"அப்ப நீங்க மட்டும் காப்பி சாப்பிடப் போங்க.. எங்களையும் சேர்த்து ஏன் கூப்பிடறிங்க..?"
"எங்களையும்ன்னு பாவனாவையும் கூட்டுச் சேர்க்காதே.. ஆல்ரெடி.. அவங்க காபி சாப்பிட வர ஒப்புக்கிட்டாங்க.. உனக்கு வேணாம்ன்னா நீ வேனில் இரு.. நாங்க காப்பி சாப்பிட்டுட்டு வர்றோம்..."
அவளைப் புறக்கணித்த அந்த வார்த்தைகளில் தனக்கான தனி இடம் பறிபோவதைப் போல உணர்ந்தாள் காவ்யா.. ரோசத்துடன் முகம் திருப்பிக் கொண்டவள் காபி சாப்பிட இறங்கவேயில்லை...
"வாடி.." பாவனா வற்புறுத்தினாள்...
"விடுங்க பாவனா.. வேண்டாம்ன்னா இங்கேயே இருக்கட்டும்.. இதுக்கெல்லாம் நாம ஒன்றும் பண்ண முடியாது.. நீங்க வாங்க.. டிரைவர்..! நீங்களும் வாங்க.. டிபன் காபி சாப்பிட்டுட்டு வரலாம்..."
காவ்யாவை அம்போவென்று விட்டு விட்டு.. அவர்கள் மூவரும் இறங்கிச் சென்று விட்டார்கள்.. காலையிலிருந்து விரித்திருந்த சிறகு அறுபட்டுப் போனதைப் போல உணர்ந்தாள் காவ்யா...
'நான் அவனுக்கு முக்கியமில்லையா..? நானில்லாம பாவனாவுடன் காபி டிபன் மொக்கப் போவானா..?' அவளால் தாள முடியவில்லை...
முன் சீட்டின் கம்பியின் மீது தலையைச் சாய்த்து கவிழ்ந்திருந்தவளின் தலைமுடியை விரல் கோதும் ஸ்பரிச உணர்வில் அதிர்ந்து நிமிர்ந்தாள் அவள்...
அவளுக்கு வெகு அருகில்.. முடி கோதியபடி நின்றிருந்தான் அர்ஜீன்.. காவ்யாவின் விழிகள் விரிந்தன..
'இவன் மட்டும் எப்படி தனியாய் வந்தான்..? பாவனாவும்.. டிரைவரும் எங்கே..?' அவள் கண்கள் துழாவின..
"முட்டாள்..! உன்னை விட்டுட்டு வேறொருத்தி கூடக் காப்பி சாப்பிட நான் போவேனா..? எனக்கு உன்கூடப் பேசனும் காவ்யா.. அதுக்கு தனிமை வேணும்.. அதான்.. அவங்க இரண்டு பேருடன் டிபன் சாப்பிடப் போவதைப் போல உள்ளே போனேன்.. தெரியாமல் கை பட்டதைப் போல சட்னியை சட்டை மேலே தீற்றிக்கிட்டேன்.. வாஷ் ரூம் போய் வாஷ் பண்ணிட்டு வந்துடறேன்னு சொல்லிட்டு.. நான் மட்டும் வந்திருக்கேன்..." அர்ஜீனின் கண்களில் காதல் வழிந்தது...
"ஆனா.. அது எதுக்கு..?" காவ்யா திணறிப் போனாள்..
"எதுக்கா..? ஐ லவ் யு.. அதுக்காகத்தான்..."
அர்ஜீனின் கரங்கள் முரட்டுத்தனத்துடன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டன. அவள் முகம் நோக்கிக் குனிந்தவன் அவள் இதழ்களில் முத்தமிட்டான்..

- இரண்டாம் பாகத்தில் தொடரும் -


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.. -35
எங்கிருந்தோ ஆசைகள்.. -35
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-35.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-35.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy