எங்கிருந்தோ ஆசைகள். -34

34 ஓரிடத்தில் நிற்காத உன்மனதில்... நான்மட்டும் உட்கார ஆசைகொண்டேன் .. தங்கையை விட்டுவிட்டு கண்ணதாசன் அவன் அலுவலகத்திற்கு ஓடோடி விட...


34
ஓரிடத்தில் நிற்காத உன்மனதில்...
நான்மட்டும் உட்கார ஆசைகொண்டேன்..

தங்கையை விட்டுவிட்டு கண்ணதாசன் அவன் அலுவலகத்திற்கு ஓடோடி விட்டான்...
"ம்ஹீம்.. கடைஞ்ச மோரில கூட நெய்யெடுத்திரலாம் போல.. உன் அண்ணன் மனசிலதான் இடம் பிடிக்க முடியாது போல..." பாவனா அலுத்துக் கொண்டாள்...
"இப்ப இதான் முக்கியம்.. கிளம்புடி..."
"இந்த ஜாதியை யாருடி கண்டு புடிச்சது..?"
"நிச்சயமா நான் கண்டு பிடிக்கலை..."
"ஆமாம்.. அர்ஜீன் என்ன ஜாதி..?"
காவ்யாவின் முகம் மாறிவிட்டது.. அவள் அடிமனதில் எதை நினைத்துப் பயந்து கொண்டிருக்கிறாளோ.. அதையே பாவனாவும் கேட்டுவிட்டதில் அவள் மௌனம் சாதித்தாள்..
"பேச மாட்டியே..." அலுத்துக் கொண்ட பாவனா.. உடை மாற்றிக் கொள்வதற்காக உள்ளே போனாள்...
அவள் வரும்வரை பார்த்துக் கொண்டிருக்கலாமே என்று காவ்யா டி.வியை உயிர்ப்பித்தாள்...
"காதலுக்கு ஜாதியில்லை...
             மதமுமில்லையே...
    கண்கள் பேசும் வார்த்தைகளில்..
             பேதமில்லையே...
    வேதமெல்லாம் காதலையே..
             மறுப்பதில்லையே.
    அது வேதம் சொன்ன முனிவரையும்..
             விடுவதில்லையே..."
கருப்பு வெள்ளைத் திரைப்படக் காட்சியில் கதாநாயகி பாடிக் கொண்டிருந்தாள்...
'ம்ஹீம்.. இதையெல்லாம் எழுதறதுக்கும்.. படிக்கிறதுக்கும் நல்லாத்தான் இருக்கும்.. யதார்த்தத்தில் இதையெல்லாம் நினைச்சுப் பார்க்க முடியுதா..?' காவ்யா டிவியின் சேனலை மாற்றினாள்...
"ஏன்..? பாட்டு நல்லாத்தானே இருந்தது..?"
அவள் காதுகளில் விழுந்த கேள்வியில் உள்ளம் துள்ள நிமிர்ந்து பார்த்தாள்.. அங்கே அவளை விழுங்கி விடுவதைப் போலப் பார்த்தபடி அர்ஜீன் நின்று கொண்டிருந்தான்...
காவ்யாவின் அதீத அழகில் அவனுக்குள் எழுந்த மயக்கத்தை அவன் விழிகள் பிரதிபலித்தன.. அவன் கண்களில் தெரிந்த தாகத்தில் காவ்யா தடுமாறிப் போனாள்.. அந்த தடுமாற்றத்தை அவதானித்தபடி அவன் நிதானமாக நடந்து வந்து அவளருகில் அமர்ந்தான்.. அதை எதிர்பார்த்திராத காவ்யா அவசரமாக எழுந்து கொள்ளப் போனாள்...
அது நீண்ட சோபா.. அதன் ஒரு கோடியில் காவ்யா உட்கார்ந்திருந்தாள்.. மறுகோடியில்தான் அவன் உட்கார்ந்தான்.. அதற்கே பதறிப் போய் எழுந்து கொள்ளப் போனவளை...
"ம்ப்ச்.. இப்ப எதுக்கு எழுந்துக்கற..?" என்று முகச்சுளிப்புடன் தடுத்தான்...
"பாவனா கூப்பிடறா..."
"எனக்குக் கேட்கலையே..."
"எனக்குக் கேட்டுச்சே..."
அவர்கள் வழக்கடித்துக் கொண்டிருந்த போது பாவனா வந்து விட்டாள்..
"என்னடி..?" என்றபடி இருவரையும் மாறிமாறிப் பார்த்தாள்...
"நீங்க இவங்களைக் கூப்பிட்டிங்களா..?" அர்ஜீன் விசாரித்தான்...
காவ்யா அவசரமாக சைகை காட்ட முயன்றதை அவன் பார்த்துவிட... அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. பாவனாவோ அவளின் சைகையை கவனிக்காதவளாக..
"இல்லையே..." என்று சொல்லிவிட்டாள்...
அர்ஜீனின் பார்வை காவ்யாவை ஊடுறிவியது.. ஆரம்பமே இப்படி அமைய வேண்டுமா என்று காவ்யா நொந்து போனாள்...
"என்னவாம்..?" பாவனா அவள் காதருகே கேட்டாள்..
"டக்குன்னு என் பக்கத்தில உட்கார்ந்திட்டான்டி.. நான் எழுந்திருச்சா.. ஏன்னு கேக்கறான்..? அதான் நீ கூப்பிட்டேன்னு சமாளிச்சுக்கிட்டு இருந்தேன்.. நீ வந்து காரியத்தை கெடுத்துட்ட..."
"ஏண்டி.. இதுவே நீள சோபா.. இந்தக் கோடியில நீயிருந்தா.. அந்தக் கோடியில அவன் உட்காரக் கூடாதுன்னு ஏதும் சட்டமிருக்கா...?"
"ஐயையே.. பக்கத்திலே உட்கார்றதா..?"
"உன்னைத் திருத்தவே முடியாதுடி.. இப்படிச் செஞ்சா.. அவன் முறைக்காம என்ன பண்ணுவான்..? உனக்கும் அவனுக்கும் இடையில ஒரு மீட்டர் தூரம் இருக்குடி..."
தாழ்ந்த குரலில் அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது பாவனாவின் அம்மாவும்.. அப்பாவும் வந்து விட்டார்கள்.. அதிகாலையின் தூக்கம் கெட்டுவிட்ட வருத்தம்.. அவர்கள் முகத்தில் தெரிந்தது...
"வாங்க.. வாங்க.. வணக்கம்.." பாவனாவின் அப்பா சுந்தரம் வரவேற்றார்...
"ரிலாக்ஸ் சார்.. நான் வந்து ரொம்ப நேரமாச்சு.." இலகுவாகச் சொன்னான் அர்ஜீன்..
"ஏர்லி மார்னிங் எழுந்துக்க முடியலை.." சங்கடத்துடன் சொன்னார் சுந்தரம்..
"நானும் அப்படித்தான்.. இன்றைக்கு அழகர் கோவிலுக்கு போகனும்கிறதால சீக்கிரமா கிளம்பிட்டேன்.." அர்ஜீன் சமாதானமாகப் பேசினான்...
பாவனாவின் அம்மா காபியுடன் வந்தாள்...
"சாருக்கு காபி பிடிக்குமான்னு கேட்டுக்கிட்டியா ஷோபா..?" என்று கடிந்து கொண்டார் சுந்தரம்...
"பாவனாகிட்டக் கேட்டேங்க.. எங்க பாஸ் காபிதான் குடிப்பார்ன்னு அவதான் சொன்னா..." ஷோபா புன்னகையுடன் காபி கப்பை நீட்டினாள்...
அந்தச் சூழலில் காவ்யாவுக்கு பொறாமை வந்தது.. அவள் வீட்டில் இதுபோல இயல்பாக அர்ஜீனை வரவேற்று உபசரிப்பார்களா என்ற ஏக்கம் அவளுக்குள் எழுந்தது..
ஷோபா சுந்தரத்தின் பக்கத்தில் உட்கார்ந்து அர்ஜீனிடம் இயல்பாக பேச ஆரம்பித்ததில் காவ்யாவுக்குள் ஒர்விதமான தனிமையுணர்வு எழுந்தது...
ஷோபா பட்டப் படிப்பை படித்திருந்தாள்.. சரவணன் மத்திய அரசாங்கத்தில் ஆபிசராக வேலை பார்த்தார்.. பல ஊர்களுக்கு மாறுதல் ஆகி.. அங்கேயெல்லாம் வசித்து வந்ததில் ஏற்பட்டிருந்த வெளியுலக அனுபவத்தை ஷோபாவின் முகம் பிரதிபலித்தது.. பாவனா அவர்களுக்கு ஒரே மகள் என்பதில் அவர்கள் காட்டிய செல்லம் கலந்த அக்கறையை அர்ஜீன் உணர்ந்து கொண்டதில் காவ்யா சஞ்சலம் கொண்டாள்..
அவள் வீட்டில் இப்படியில்லை.. ஷோபாவைப் போல அன்னபூரணி படித்திருக்கவில்லை.. எழுதப்படிக்கத் தெரியும் அவ்வளவுதான்.. வீட்டிற்குள் அந்நியர்களை அவள் அனுமதித்ததில்லை.. அப்படியே யாராவது சிவதாணுவைத் தேடியோ... அல்லது கண்ணதாசனைத் தேடியோ.. வீட்டிற்கு வந்தாலும்.. அவர்கள் முன்னாடி அவள் வரமாட்டாள்.. தவிர்க்க முடியாமல் காபி கொண்டு போக நேர்ந்தாலும் ஏதும் பேசாமல் காபியை மட்டும் குடுத்து விட்டு வந்து விடுவாள்.. ஷோபா உட்கார்ந்து பேசுவதைப் போல பேசமாட்டாள்...
சிவதாணு ஸ்டேட்கவர்ண்ட்மென்டில் வேலை செய்தார்.. கண்ணதாசனோ.. அதே கவர்ண்ட்மென்டில் மிக உயர்ந்த பதவியை வசித்துக் கொண்டிருந்தான்.. இருந்தும் அவள் வீட்டில் ஒரு கிராமியச் சூழலே நிலவியது.. பாவனாவின் வீட்டில் இருப்பதைப் போன்ற.. நகர்புறத்து நாகரிகத்தின் சூழல் நிலவியதில்லை..
காவ்யாவின் முகத்தையே பார்த்தபடி பேசிக் கொண்டிருந்த அர்ஜீன் சட்டென்று எழுந்து விட்டான்...
"என்ன அவசரம்..?" என்ற சுந்தரத்தின் கேள்விக்கு..
"மத்தவங்களை பிக் அப் பண்ணிக்கனுமே.." என்று காரணம் சொன்னான்...
வேனுக்குள் ஏறிய போது.. பாவனா பெற்றவர்களிடம் விடை பெறுகிறேன் வேர்வழியென்று பின்தங்கிவிட..  காவ்யாமட்டும் வேனுக்குள் ஏறினாள்.. டிரைவர் பாவனாவைப் பார்த்தபடி நின்றுவிட.. அர்ஜீன் காவ்யாவின் காதோரமாக முணுமுணுத்தான்...
"பாவனா உனக்குத்தான் பிரண்ட்.. எனக்கில்லை.."
இப்படி சந்தடி சாக்கில் ரகசியம் பேசுவான் என்பதை நினைத்தும் பார்த்திராத காவ்யா இமை படபடக்க அவனைப் பார்த்தாள்.. அவன் இமை மூடித் திறந்தான்...
"உனக்காகத்தான் நான் உட்கார்ந்து பேசினேன்..."
அதற்குள் பாவனா வேனுக்குள் ஏறிவிட.. அர்ஜீன் அருகில் இருந்த சீட்டில் அமர்ந்து விட்டான்...
அவனைப் பார்க்கும்படி உட்கார விரும்பிய காவ்யாவிடம்
"நகர்ந்துக்கடி.. எனக்கு ஜன்னலோர சீட் வேணும்.." என்று வசதி பண்ணிக் கொடுத்தாள் பாவனா...
அர்ஜீன் திரும்பிய வாக்கில் அமர்ந்து அவளை விழுங்கி விடும்படி பார்க்க ஆரம்பித்தபோது வேன் கிளம்பியது.. அதற்குப் பின்னால்.. கடையில் வேலை பார்த்த மற்றவர்களின் வீட்டின் முன்னால் வேன் நின்றதையோ.. அவர்கள் வேனுக்குள் ஏறி.. வணக்கம் சொல்லி விட்டு அமர்ந்ததையோ அர்ஜீன் கவனிக்கவே இல்லை.. அவன் கவனித்ததெல்லாம் காவ்யாவை மட்டும்தான்..
காவ்யாவுக்கு வானத்தில் பறப்பதைப் போல இருந்தது.. இதுபோன்ற ஒர் அனுபவத்தை அதற்கு முன்னால் அவள் உணர்ந்ததில்லை.. கடையிலும் அவன் அருகில்தான் உட்காருகிறாள்.. இருந்த போதும்.. அது வேறு.. இது வேறாக இருந்தது...
அது வேலை செய்த இடம்.. எப்போதும் ஒர் பொய் முகமூடியின் பின்னாலே காவ்யா ஒளிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் அங்கு இருந்தது.. எந்த நொடியிலும் கடையில் வேலை செய்பவர்கள் அர்ஜீனைத் தேடி வந்து விடுவார்கள் என்பதால்.. சின்னச் சிரிப்பைக் கூடச் சிந்தி.. தன்னைக் காட்டிக் கொடுத்து விடாமல் காவ்யா கண்ணியம் காக்க வேண்டியிருந்தது...
அப்போது.. அந்தத் தளைகளெல்லாம் இல்லாமல் சுதந்திர வானில் சிறகடிப்பதைப் போல அவள் உணர்ந்தாள்.. அவளுக்கு முன்னால் அமர்ந்திருந்த அந்த அர்ஜீனனாகப் பட்டவன்.. யாரைப் பற்றியும் கவலைப்-படாமல் அவளைப் பார்வையிலேயே கவர்ந்து கொண்டிருந்ததில்.. அவளுடைய பெண்மை கர்வம் கொண்டது...
"என் மனது ஒன்றுதான்...
             உன்மீது ஞாபகம்...
    வான்நிலவு ஒன்றுதான்..
             வான்மீது சத்தியம்..."
வேனில் பொருத்தப்பட்டிருந்த எப்.எம் இசைத்தது.. அது கூறிய பொருளில் அர்ஜீனின் மனது புரிய.. காவ்யா.. காந்தத்தைக் கண்ட இரும்பாகிப் போனாள்.. அவனின் பார்வையின் ஈர்ப்புக்கு அவள் பார்வை இழுபட்டது...
லேசாக இமை உயர்த்தி அவனைப் பார்ப்பதும்.. அவன் பார்வையைச் சந்தித்த உடனேயே வெட்கி வேனின் தரை பார்ப்பதுமாக அவள் புதியதோர் உலகத்தில் புகுந்திருந்தாள்...
ஊடே பாவனா பேசிய பேச்சுக்கள் ஏதும் அவள் செவிகளில் ஏறவில்லை...
'என்னடா இது.. இவ பதில் பேசாம இருக்கா...'
காரணம் கேட்பதற்காக திரும்பிய பாவனாவின் கண்களில் அந்தப் பார்வை நாடகம் தட்டுப்பட்டுவிட.. அவள் வாயை மூடிக்கொண்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்...
"பார்வை ஒன்றே போதுமே...
             பல்லாயிரம் சொல் வேண்டுமா..?
    பேசாத கண்ணும் பேசுமா..?
             பெண் வேண்டுமா..
    பார்வை போதுமா..?
             பார்வை ஒன்றே போதுமே.."
பாடல் மாறியதும் பாவனா திரும்பிப் பார்த்தாள்.. பார்வையிலேயே அர்ஜீனும்.. காவ்யாவும் ஒருவரையொருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்க...
"ம்ஹீம்.. பொருத்தமான பாட்டுத்தாண்டி.." என்று காவ்யாவிடம் சொல்லி வைத்தாள்..
மோன நிலை போன்றதொரு மாய வலைக்குள் சிக்கியிருந்த காவ்யா...
"என்.. என்.. என்னது..? என்னடி சொன்ன..?" என்று தடுமாறினாள்..
"உன் பக்கத்திலே.. காதோடுதான் நான் பேசுவேன்னு ஒட்டிக்கிட்டு உக்காந்திருக்கேன்.. என்னவோ.. ஏழுகடல்.. ஏழுமலைக்கு அந்தப்பக்கமா இருக்கிறவ பேசினது உன் காதில விழுகாத மாதிரியில்ல ஆக்ட் கொடுக்கிற..? ஏண்டி.. நான் என்ன சொன்னேன்னு உண்மையிலேயே உனக்குத் தெரியாதா..?" பாவனா சண்டைக்கு வந்தாள்...
"என்ன சொன்ன..?" காவ்யா திருதிருத்தாள்..
"கிழிஞ்சது போ.. வெறும் பார்வைக்கே இந்த மயக்கம்ன்னா.. போகப்போக என்னாகுமோ..." என்று பாவனா சொல்லி வாய் மூடுவதற்குள்...
"போகப் போகத் தெரியும்..
             இந்த பூவின் வாசம் புரியும்..."
என்று பாடல் மாறி ஒலித்தது..
"எப்.எம் மில ஆள் பிடிச்சிருக்கியா..?" பாவனா சந்கேப்பட..
"அடச்சீ.. வாயை மூடு.." என்று கடிந்து கொண்டாள் காவ்யா...
அவர்களின் பேச்சை ரசித்த புன்முறுவலுடன் அர்ஜீன் காவ்யாவைப் பார்க்க வாகாக திரும்பி அமர்ந்து கொண்டான்..
"வியு பார்த்து உட்காருகிறாண்டி.." என்றாள் பாவனா..
எது எப்படியோ.. காவ்யா.. அவளைச் சுற்றிப் போட்டிருந்த வேலிகளைத் தகர்த்து.. அன்று மட்டும் வெளிவந்திருந்தாள் என்பதை மட்டும் பாவனாவால் புரிந்து கொள்ள முடிந்தது...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -34
எங்கிருந்தோ ஆசைகள். -34
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-34.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-34.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy