எங்கிருந்தோ ஆசைகள்...-31

31 என் ஒரு கோடி ஆசைகளை.. நீ உணர ஆசைகொண்டேன்.. பச்சைப் பசேலென்ற மலையடிவாரம்.. அதில் கம்பீரமான அழகோடு.. அந்தக் கள்ளழகரைப் போலவே.....


31
என் ஒரு கோடி ஆசைகளை..
நீ உணர ஆசைகொண்டேன்..


பச்சைப் பசேலென்ற மலையடிவாரம்.. அதில் கம்பீரமான அழகோடு.. அந்தக் கள்ளழகரைப் போலவே.. காண்பவர்களின் மனதைக் கொள்ளையடிக்கும் விதமாக வான்முட்ட எழுந்து நிற்கும் கோபுரத்தோடு.. காட்சி தரும் அழகர் கோவில்.. அதன் முன்னாலிருந்த அகன்ற பெரும் மைதானத்தில் அந்த சொகுசு வேன் பிரேக்கடித்து நின்றது..
"கோவில் வந்திருச்சு.." டிரைவர் குரல் கொடுத்தான்..
முன்னாலிருந்த சீட்டில் அமர்ந்து.. முன்பக்கம் பார்க்காமல்.. பின்பக்கமாக பார்த்தவண்ணம்.. பயணம் செய்த அர்ஜீனை பார்க்காததைப் போல கள்ளப்பார்வை பார்த்துக் கொண்டிருந்த காவ்யாவின் முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டு.. உலக நினைவுக்கு அவளை இழுத்துக் கொண்டு வந்தாள் பாவனா..
'சுரீர்' என்ற அடியின் வலி உறைக்க.. முதுகைத் தடவியபடி தோழியை முறைத்தாள் காவ்யா...
"ஏண்டி குரங்கே.. சும்மா கூப்பிட மாட்டியா...? அடிச்சுத்தான் கூப்பிடுவியோ..."
"வேற வழி..? வேன் கோவில் வாசலுக்கு வந்து நின்னு ஆறு நிமிசமாகிருச்சு.. மகாராணி இறங்கனும்கிற நினைப்பே இல்லாம கனவில மிதந்துக்கிட்டு இருக்கீங்க.. அப்புறம் அடிச்சு எழுப்பாம என்ன செய்வாங்களாம்..?"
பாவனா சொன்னதைக் கேட்டதும் காவ்யாவுக்கு வெட்கமாகி விட்டது.. அவள் சுற்று முற்றும் பார்த்தாள்.. அவர்கள் மூவரையும் தவிர.. மற்றவர்கள் வேனை விட்டு கீழே இறங்கியிருந்தார்கள்....
"நாம மட்டும்தான் இருக்கோமா..?" அவள் முகத்தில் அசடு வழிந்தது...
"வழியறதைத் துடை.. உன்னாலே நானும் வேனுக்குள்ள மாட்டிக்கிட்டேன்.. ஜன்னலோர சீட்டுக்கு ஆசைப்பட்டுத் தொலைச்சது தப்பாப் போயிருச்சு.. இப்படி ஓரச்சீட்டில உட்கார்ந்துக்கிட்டு என்னை இறங்க விடாம வழி மறிப்பேன்னு கனவா கண்டேன்..?"
அவள் முகத்தில் வெடித்த எள்ளையும்.. கொள்ளையும் கண்ட காவ்யா.. எழுந்து கொள்ள மனமில்லாமல் எழுந்தாள்.. அப்போதும் அர்ஜீன் எழுந்து கொள்ளாமல் சீட்டிலேயே அமர்ந்திருந்தான்..
"என்னடி.. இவன் இறங்காம உட்கார்ந்திருக்கான்..?" காவ்யா பாவனாவின் காதோரமாக கிசுகிசுத்தாள்..
"என்கிட்டக் கேட்டா..? எனக்கென்ன தெரியும்..? உனக்கு வாயிருக்குதானே.. ஊமையில்லையே.. அவன் கிட்டேயே கேளு.. அதுக்கு முதல்ல எனக்கு வழியை விட்டுட்டு.. அப்புறமா கேளு.. நான் வேனை விட்டு இறங்கனும்..."
"நானும்தான் இறங்கனும்..."
"அந்த நினைப்புக்கூட உன் மனசில இருக்கா...?"
"ஏண்டி கோவிச்சுக்கற...?"
"ஏன்னு உனக்குத் தெரியாதாக்கும்..? அந்த மனுசன்தான் முதலாளியாப் போயிட்டான்.. அவன் பக்கத்தில் சரிசமமாய் யாரும் உட்காரலை... தனியாய் உட்கார்ந்திருக்கிறவன்.. இறங்கினாலும்.. இறங்கலைன்னாலும் மத்தவங்களுக்கு பாதிப்பில்லை..நீ அப்படியா..? என்கூட இணை போட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கிற.. என்னடா.. நாம எழுந்திருச்சாத்தான.. இவளும் எழுந்திருப்பான்னு ஒரு அறிவு வேணாம்...?"
பாவனா படபடத்தாள்.. அவளும்தான் என்ன செய்வாள்..? அவளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே அந்த நினைவில்லாமல் நொடிக்கொரு தரம் இமையைத் தாழ்த்தி தரையைப் பார்ப்பதும்.. அடுத்த நொடியே இமையை உயர்த்தி அவனைப் பார்ப்பதுமாக காவ்யா அழும்பு பண்ணிக் கொண்டே வந்தால் அவளுக்கு பொறாமைக்கனல் பொங்கி வழியாதா..?
'இவளை இந்தப் பார்வை பார்க்கிறான்.. பக்கத்தில உட்கார்ந்திருக்கிற என்பக்கம் அரைக்காவாசியாவது பார்வையை வீசறானா..?'
என்னவோ.. ராமன் சீதையைப் பார்ப்பதைப் போல.. ஒருத்திக்கு ஒருவனாய் காவ்யாவை மட்டும் அர்ஜீன் பார்வையிட்டுக் கொண்டே வந்ததில் பாவனா கடுப்பாகிப் போனாள்..
'லைலா மஜ்னு கெட்டாங்க.. இந்த லட்சணத்தில இவளைக் கேட்டா.. இது காதல் இல்லேம்பா.. அதை நான் ஊம் கொட்டிக் கேட்டுக்கனும்.. கள்ளழகா.. நீயே இந்த நியாயத்தைக் கேளு...'
அழகர் இதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்கிறவராக இல்லை.. காதலில் இதெல்லாம் சகஜம்ப்பா என்று சொல்லாமல் சொல்கிறவரைப் போல புன்னகையுடன் கோவில் கோபுரத்தில் காட்சிதந்தார்..
'ம்ஹீம்.. நீயே கள்ளன்.. உன்கிட்டே வந்து நான் கேணச்சியைப் போலக் கம்ப்ளெயிண்ட் பண்ணுகிறேன் பாரு.. நீ இந்தக் கள்ளிக்குத்தானே சப்போர்ட் பண்ணுவ..' பாவனா மனதுக்குள் கள்ளழகருடன் செல்லச் சண்டை போட்டாள்...
வேனுக்குள் அமர்ந்திருந்த அர்ஜீனையும்.. காவ்யாவையும் தரையிறங்க வைப்பதற்குள் அவளுக்கு போதும்.. போதுமென்று ஆகிவிட்டது.. அவர்களுக்கு முன்னாலேயே தரையிறங்கியிருந்தவர்கள்.. பொறுமையாக காத்திருந்தார்கள்...
வெளிநாட்டுக் காரை வைத்திருக்கும் முதலாளி.. அந்தக் காரில் பயணம் செய்யாமல்... அவர்களுடன் சரிசமமாக வேனில் பயணம் செய்த ஆனந்த அதிர்ச்சியிலிருந்து.. அவர்கள் மீளவில்லை...
அர்ஜீனின் கடையில் விற்பனைப் பிரிவில் வேலை செய்து கொண்டிருக்கும் இளங்கோவுக்கு திருமணம்... அதற்காகத்தான் அவர்கள் வந்திருந்தார்கள்.. பாவனாவிடம் அவன் பத்திரிக்கையை நீட்டியபோது.. அவள் சிடுசிடுப்புடன் பத்திரிக்கையை வாங்கிக் கொண்டாள்...
"இவன் இப்போ எதுக்காகடி கல்யாணத்துக்கு அவசரப் படறான்..?" என்று அவன் போன பின்பு காவ்யாவிடம் கோபப்பட்டாள்..
காவ்யா அவளை விசித்திரமாகப் பார்த்தாள்...
"அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கென்னடி..?"
"ம்ப்ச்.. இந்தக் கடையில வேலை பார்க்கிற பேச்சலர்ஸில.. இவன் ஒருத்தன்தான் கொஞ்சமாவது பாக்கறமாதிரி இருக்கான்..."
"அதுக்கு..?"
"இவனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா.. யாரை நான் சைட் அடிக்கிறது..?"
"அடிப்பாவி..."
இப்படிப்பட்ட நியாயத்தை காவ்யா எங்கேயும் கேட்டதில்லை..
"அடிப்பாவியா..? ஏண்டி கேக்க மாட்ட.. நீ மட்டும் ஹீரோவ சைட் அடிக்கலாம்.. நான் இளங்கோவ சைட் அடிக்கக் கூடாதாக்கும்..?"
"அபாண்டமாய் பேசாதே பாவனா.. நான் யாரையும் சைட் அடிக்கலை..."
தந்நெஞ்சறிய பொய் சொன்னாள் காவ்யா.. அவள் நெஞ்சம் 'பொய்' என்று கூவியது...
பாவனா.. அப்படிக் கூவாமலே.. உன்னை எனக்குத் தெரியாதா என்ற ரீதியில் நம்பாத பார்வையினைப் பார்த்து வைத்தாள்...
"நிஜமாத்தான் பாவனா.. இருந்திருந்தும் இந்த அலட்டல் கேஸ் கிட்டயா நான் மயங்குவேன்..?"
"அப்படியா..?"
"இது பேச்சும்.. சிரிப்பும்.. மனசுக்குள்ள என்னவோ மன்மதன்னு நினைப்பு..."
"நீ ரதின்னு நினைச்சுக்கற போல..."
"போடி நீ வேற.. எனக்கொன்னும் ரதியாக வேணாம்.. இஸ்ஸெல்லாம் ஒரு ஆளு.. இஸ்ஸைப் போய் நான் சைட் அடிக்கிறேன்.. ஏண்டி எரிச்சலைக் கிளப்பற...?"
இப்படிக் கேட்ட காவ்யாவின் முகத்தில் எரிச்சலின் சாயல் துளிக்கூட இல்லை.. மாறாக.. ஒர்விதமான கிறக்கம் பரவிப் படர்ந்திருந்தது...
"என்னைப் பாத்தா உனக்கு எப்படித் தெரியுது..? கேணச்சியைப் போலத் தெரியுதா..? 'இஸ்ஸீ.. இஸ்ஸீ'ன்னு சொல்லிக்கிட்டே நீதான் இஸ்ஸைப் போல.. ஒரு மார்க்கமா முழிக்கற.. நீ ஹீரோவை சைட் அடிக்கலை..! உன் மனசில காதல் இல்லை..! ம்ஹீம்.. நம்பிட்டேன்.."
"இப்பல்லாம் நீ என்னை நம்பறதே இல்ல பாவனா.."
"இப்பத்தான்  நீ டோட்டலா மாறிப் போயிருக்கியே.."
"என்னவோ போ.. நீ எதையெதையோ சொல்லுவ.. அதுக்கு நான் ஆளில்ல.. ஆமாம்.. உனக்கு அந்த இளங்கோவப் பிடிச்சிருந்தா அவன்கிட்டச் சொல்லியிருக்க வேண்டியதுதான...?"
"எதை..?"
"உன் மனசில இருக்கிற காதலை.."
இப்படிச் சொன்னவளை வெட்டவா.. இல்லை குத்தவா.. என்பதைப் போல பார்த்தாள் பாவனா...
'ஏன் இப்படிப் பார்க்கிறா..?' காவ்யாவுக்குப் புரியவில்லை...
"என் சம்பளத்தில முக்கால்வாசிகூட வாங்க மாட்டான்.. பிளஸ் ஒன்னைக்கூடத் தாண்டத் துப்பில்லாதவன்.. இவன்கிட்டப் போயி நான் காதல் சொல்லறதா..? ஏண்டி உனக்கிந்த கொலைவெறி..? ஆனானப் பட்ட ஹீரோகிட்டயே காதல் சொல்லாத ஆளு நீ.. என்னைப் போயி இவன்கூட கோர்த்து விடப் பாக்கறியே.. நான் உனக்கு என்ன கெடுதல்டி பண்ணினேன்..?"
"பாவனா..? !" காவ்யா அயர்ந்து விட்டாள்..
"இந்தப் பக்கம் லொக்கு.. லொக்கு ஏகாம்பரம்.. வாசல்பக்கம் கிழட்டுக் கந்தசாமின்னு.. பாலைவனம் போல இருக்கிற ஆபிசில இவன் கொஞ்சம் இளம் வயசா.. கொஞ்சூணடு லட்சணமா.. பாலைவனச் சோலை போல இருந்தான்.. சரிதான்னு.. நினைச்சா நீ காதல் வரைக்கும் போய் நிக்கிற...?"
பாவனாவின் வியாக்கினத்தில் காவ்யா கையெடுத்து கும்பிட்டு விட்டாள்..
"அம்மா.. தாயே.. இனி உன் விசயத்தில நான் வாயைத் திறக்கவே மாட்டேன்டி.. இப்பக் கேட்டதே ஆயுசு முழுக்க என் காதுல ஒலிச்சுக்கிட்டே இருக்குடி..."
"அஃது.. அந்த பயம் இருக்கட்டும்.. என் விசயத்தில எந்தக் கணக்கையும் போடாத.."
"இனிப் போடுவேனா..? யாரு நீ..? கணக்கில அடங்காத ஆளில்ல..."
"இளங்கோ போனா என்னடி..? அடுத்த ரேங்கில கவிக்கோ இருக்கானில்ல.."
"கவிக்கோவா..?"
"ம்ம்ம்.. நம்ம தங்க ராசுவத்தான் சொல்றேன்.."
"அவன் எப்படி கவிக்கோவா ஆனான்...?"
"அதுவா காவ்யா.. அவன் ஒருநாள் என்னைப்பத்தி கவிதை எழுதி காகிதத்தை நீட்டிப்புட்டாண்டி..."
"நிஜமாவா சொல்ற..? அவன் கவிதை எழுதினானா..?"
"காகிதத்தில எழுதியிருந்தான்.. அவ்வளவுதான்.. அதை கவிதைன்னு அவன்தான் சொல்லிக்கிட்டான்.."
"பார்றா.. அப்படி என்னதான் எழுதியிருந்தாண்டி..?"
"அன்பே...! 
உன் பேரு பாவனா..!
 உன்னோடு வாழாம 
நான் சாவேனா..?"
"என்னடி இது..?"
"கவித.. இன்னும் கேளு.. 
நம்ம ஊரில ஓடுது 
வைகை.. 
நீ என்னோட கை மேல
 உன் கையை வை.."
"அடிச்சுப் பல்லைக் கழட்டியிருக்கனும்டி..."
"அது எதுக்கு..? என்னதான் இருந்தாலும் காவ்யா.. அவனோட அறிவுக்கு இது அதிகமான முயற்சிதானே..? இதைப் பாராட்ட வேணாமா..?"
"எப்படித்தான் இப்படி இருக்கியோ..."
"என்னமோ இருக்கேன்.. அதைவிடு.. அடுத்த வரியைக் கேளு... மதுரையில வரப்போகுது 
மீனாட்சி கல்யாணம்.. 
எப்போ நமக்கு கல்யாணம்...?"
"ஸ்ஸ்ஸ்.. ஆத்தாடி..."
"இப்பவே கண்ணைக் கட்டினா எப்புடி..? கவிதையில இன்னும் ஒருவரிதான இருக்கு..?"
"முடியலடி பாவனா.. சோதிக்காதே..."
"சோதனையைச் சந்திச்சவளே சும்மாயிருக்கேன்.. ஊம் போட்டு கேட்டவளுக்கு ஏண்டி உணக்கையா கோவம் வருது..?"
"அப்ப.. விட மாட்ட..?"
"மாட்டேன்.. யான் பெற்ற துன்பம்.. பெறுக இந்தக் காவ்யாவும்..."
"சொல்லித் தொலை.."
"ஒன்னும் ஒன்னும் ரெண்டு.."
"என்னடி.. கணக்கைச் சொல்றான்..?"
"இல்லைடி.. கவித சொல்றான்.. 
ஒன்னும் ஒன்னும் ரெண்டு.. 
ஆனா நாம ரெண்டு பேரும் ஒன்னு.. 
எப்புடி..? பிய்ச்சு உதறிட்டானில்ல..?"
"உனக்கு அவன்தாண்டி லாயக்கு..."
"ஊஹீம்.. ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூதான் சக்கரை.. உன் ஹீரோ கிடைக்காத பாவனாவுக்கு.. தங்கராசோட மொக்கைதான் கவிதை.."
"ஏய்ய்.." காவ்யாவுக்கு கோபம் வந்துவிட்டது..
அந்தக் கோபம் பாவனாவின் எக்குத்தப்பான ரசனைக்கான வந்ததல்ல.. அர்ஜீனின் மீது அவளுக்கிருந்த மோகத்தை வெளிப்படையாக அவள் சொன்னதினால் வந்தது என்பதில் காவ்யாவுக்குள் கலவரம் மூண்டது...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்...-31
எங்கிருந்தோ ஆசைகள்...-31
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-31.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-31.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy