எங்கிருந்தோ ஆசைகள். -29

29 என் அசைவுகளை கணக்கெடுக்கும்.. உன்மீது ஆசைகொண்டேன்... அர்ஜீனின் இதழ்களில் கள்ளச் சிரிப்பு விரிந்திருந்தது.. அது நேரம் வரை.. அ...


29
என் அசைவுகளை கணக்கெடுக்கும்..
உன்மீது ஆசைகொண்டேன்...


அர்ஜீனின் இதழ்களில் கள்ளச் சிரிப்பு விரிந்திருந்தது.. அது நேரம் வரை.. அந்தத் தோழிகள் பேசிய ரகசியப் பேச்சுக்களை மறைந்திருந்து கேட்டவனுக்குள் ரகசிய சந்தோசம் உற்பத்தியானது...
அவன் ஒட்டுக் கேட்க வேண்டும் என்று நினைக்க வில்லை.. சாப்பிடத்தான் எழுந்தான்.. அதற்குள் ஒரு முக்கியமான போன் அழைப்பு வந்துவிட்டது.. மதுரைக் கடையில் இறக்குமதியாகியிருந்த கம்யூட்டர்களைப் பற்றிய விவரங்களை மறுமுனை கேட்டது.. கம்யூட்டர்கள் இறக்குமதியான போது அர்ஜீன் வெளிநாட்டில் இருந்தான்.. அதனால் சற்று நேரத்தில் அழைத்துச் சொல்வதாகக் கூறிவிட்டு போனை அணைத்தான்.. அதுபற்றிய விவரங்களைக் கேட்பதற்காகத்தான் காவ்யாவைத் தேடிப் போனான்..
கடையின் பின் பகுதியில் கதவு இருக்கும்.. அதைத்திறந்தால் அலுவலகப் பகுதி ஆரம்பமாகும்.. அந்தக் கதவைத் திறந்த அர்ஜீனின் காதுகளில் 'பாவம்டி அந்த தேவராஜன்..' என்று பாவனா பரிதாபப்பட்டது விழுந்து விட்டது.. அதற்கு காவ்யா என்ன பதிலைச் சொல்லப் போகிறாள் என்று அறிந்து கொண்டே ஆக வேண்டும் என்று தோன்றிவிட... அர்ஜீன் அப்படியே நின்று விட்டான்.. அதற்கு காவ்யா சொன்ன பதிலில் அவன் மனதின் ஓரமாக ஓட்டிக் கொண்டிருந்த சந்தேகம் கலந்த கோபம் பறந்தே போய் விட்டது..
காவ்யா வாய்க்கு வாய் மதுரை என்று சொன்னதில் அவளுடைய ஊரின் மீது அவளுக்கு இருந்த அபிமானத்தை அவன் புரிந்து வைத்திருந்தான்.. அந்த ஒன்றினாலேயே அவளுடன் தேவராஜன் பேசிக் கொண்டிருந்ததில் அவன் கோபப்பட்டு விட்டான்.. என்னதான் இருந்தாலும் தேவராஜன் மதுரைக்காரனாயிற்றே என்ற எண்ணம் அவனுக்கு...
அந்தக் கோபத்தில் அவன் காவ்யாவைத் திட்டி வைக்க... அவளோ போர் முரசைக் கொட்டி.. வேலையை விட்டு விடுகிறேன் என்று கிளம்பி விட்டாள்...
ஒருவழியாய் சமாதானம் ஆனாலும்... காவ்யாவின் மனதில் அவனைப் பற்றிச் சிறுதுளியளவு கூட எண்ணமில்லையா என்ற தாபம் அவனுக்குள் இருந்தது...
அந்தத் தாபத்தை தீர்த்து வைப்பதைப் போல... காவ்யா பாவனாவிடம் அவனைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போக.. அர்ஜீனின் காதுகளில் தேன் வந்து பாய்ந்தது...
அவனது ஒவ்வொரு அசைவையும்.. அங்குலம்.. அங்குலமாக அவள் ரசித்திருப்பதை பாவனா புரிந்து கொண்டதைப் போலவே அவனும் புரிந்து கொண்டான்.. அந்தப் புரிதலில் அவனுக்குள் உற்சாக ஊற்றெடுத்தது.. உதடுகளைக் குவித்து மெலிதான சீழ்க்கையொலியுடன் திரும்பி வந்தவனை.. கடையின் வேலையாள்கள் விசித்திரமாகப் பார்த்தார்கள்...
"என்னடா இளங்கோ.. புது முதலாளி வெளிநாட்டில படிச்சவர்ன்னாங்க.. இவரென்னடான்னா விசிலடிச்சான் குஞ்சா இருக்காரு..."
"ஒரு வேளை... இதையும் சேர்த்து படிச்சிட்டு வந்தாரோ என்னவோ..."
"விசிலடிக்ககூட வெளிநாட்டில் சொல்லிக் கொடுப்பாங்களா..?"
"ஏன்..? அத நம்ம நாட்டுக்குத்தான் சொந்தம்ன்னு பட்டாப் போட்டுக் கொடுத்திருக்காங்களா...?"
அவனது 'விசில்' வேலையாள்களின் மத்தியில் வழக்கைக் கிளப்பி விட்டிருக்கிறது என்பதைக் கவனிக்காமல் அறைக்குள் போய் விட்டான் அர்ஜீன்...
பாவனாவிடம் பேச வேண்டிய கடைசி நிமிட ரகசியக் கிசுகிசுக்களைக் கிசுகிசுத்து விட்டு அறைக்கு திரும்பி வந்த காவ்யா புருவங்களை உயர்த்தினாள்..
'இவன் இன்னும் சாப்பிடப் போகலையா...?'
மனதில் நினைத்ததை அவனிடம் கேட்கவில்லை...
'அது என்ன தேவைக்கு..? இவன் உச்சாணிக் கொம்பில ஏறிக்கிறதுக்கா..? இவன் பசிக்கு இவன் தானே சாப்பிட்டாகனும்..? வயிறு பசிச்சா சாப்பிட்டுட்டுப் போறான்..'
அலட்சியப் படுத்த முயன்றாலும்... ஏன் இன்னும் சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கிறான் என்ற கவலை அவளுக்குள் எழுந்தது...
'எப்பப் பார்த்தாலும் ஆலவட்டம் போட்டுக்கிட்டே இருக்கிறது.. ஊரைச் சுத்தற மகராசனுக்கு நேராநேரத்தில வயித்துக்குள்ள எதையாச்சும் போட்டுக்கனும்கிற நினைப்பு இருக்க வேணாமா..?' மனதுக்குள் திட்டித் தீர்த்தாள்...
அவளின் மன உணர்வுகள்.. முகத்தில் பிரதிபலிக்கிறதா என்று அவதானிப்பவனைப் போல.. சுழல் நாற்காலியில் சுழன்றபடி அவளையே கவனித்துக் கொண்டிருந்தான் அர்ஜீன்..
அதை காவ்யாவும் உணர்ந்துதான் இருந்தாள்.. இவனுக்கு இதைவிட்டால் வேறு வேலை இல்லையா.. என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டபடி கோபப் படுவதைப் போல முகத்தை வைத்துக் கொண்டாள்...
அவள் கம்யுட்டரின் திரையைக் கவனிப்பதும்.. கையிலிருந்த பேப்பர்களைக் கவனிப்பதுமாக.. வேலையை ஆரம்பிக்க அவளின் விழிகள் சுழல்வதை ரசித்தான் அவன்..
குனிந்த அவள் முகத்தில்.. நெற்றியிலிருந்து விலகிவந்த முடிக்கற்றை விழுந்தது.. அதைக் கோதிசரி செய்தபடி நிமிர்ந்து பார்த்தவள் அவன் பார்வையைச் சந்தித்தாள்...
'ஆரம்பிச்சுட்டானா...'
அவன் பார்வையை உணர்ந்தவளின் கன்னம் சிவந்தது.. மனதுக்குள் தோன்றிய படபடப்பையும்.. பரபரப்பையும் மறைக்க முயன்றபடி.. உதடுகளைக் கடித்தாள் காவ்யா...
அவளது பரபரப்பை அவன் உணர்ந்துதான் இருந்தான்... லேசான சிரிப்போடு.. அவளை பார்வையிடுவதை தொடர்ந்தான்..
'இவன் இதுக்குத்தான் மதுரைக்கு வர்றான்...'
எரிச்சல்பட முயன்றாள் காவ்யா.. ஆனால்.. என்னதான் அவள் எரிச்சலை வெற்றிலை பாக்கு வைத்து வா... வா.. என்று வருந்தி அழைத்தாலும்.. அது வர மாட்டேனென்று அடம் பிடித்தது...
'பார்வையொன்றே போதுமா...'
மனதுக்குள் அவள் கேட்டுக் கொண்டாள்.. இப்படிச் சாப்பிடப் போகாமல் அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருப்பவனுக்கு என்னதான் தேவை என்ற கேள்வி அவள் மனதில் முளைத்தது...
அர்ஜீனின் செல்போனின் மணியொலித்தது.. அவன் அதை எடுத்தான்.. காதுக்கு கொடுத்தான்.. ஆள்காட்டி விரலால் காதோரமாக கோடிழுத்தபடி அவளைப் பார்த்தான்.. அவன் எதிர்பார்த்ததைப் போலவே அவளின் விழிகள் உயர்ந்தன... அவனது ஆள்காட்டி விரல் கோடிழுப்பதை மனதுக்குள் பதிவு செய்தபடி.. எதுவும் அறியாதவளைப் போல அவள் குனிந்து வேலையைத் தொடர்ந்தாள்...
'சைட் அடிக்கிறா..' அவன் முகத்தில் கள்ளச்சிரிப்பு மலர்ந்தது.. போனை அணைத்து விட்டு...
"காவ்யா..." என்று கூப்பிட்டான்...
அவள் நிமிர்ந்து பார்த்தாள்.. என்னவென்று கேட்கிறாளா பார் என்ற எண்ணம் கோபமில்லாமல் அவன் மனதில் எழுந்தது...
அவனுக்குத்தான் அவளின் இந்த தெனாவெட்டைப் பிடித்து வைக்குமே...
'திமிர்...' அவன் அதையும் ரசித்தான்...
"நான் பாரின் போயிருந்தப்ப இம்போர்ட் ஆன கம்யூட்டர்ஸ் எத்தனை..? அதைப் பத்தின ஃபுல் பர்டிகுலர்ஸீம் எனக்கு வேணுமே..."
அவளிடம் அவன் பேசிக் கொண்டிருந்தபோதே திரும்பவும் செல்போன் அலறியது.. எடுத்து நம்பரைப் பார்த்தவன்...
"அதுக்குள்ளே கூப்பிட்டுட்டான்.. விவரம் சொல்ல கொஞ்சமாவது டைம் கொடுக்க வேணாமா..?" என்று சலித்துக் கொண்டபடி போனை உயிர்ப்பித்தான்...
"வெயிட் மிஸ்டர் கனகலிங்கம்.. என் செகரட்டரி சாப்பிடப் போயிருந்தாங்க.. இப்பத்தான் வந்திருக்காங்க.. நீங்க கேட்ட பர்டிகுலர்ஸை கொஞ்ச நேரத்தில் கொடுத்து விடுகிறேன்... அவசரப் படாதீங்க..." என்று கண்டிப்பான தொனியில் பேசினான்...
'இதுக்காகத்தான் சாப்பிடப் போகாம உக்காந்திருக்கானா...' காவ்யா அவசரமாக எழுந்தாள்...
"இதோ சார்..."
அவள் நீட்டிய ஃபைலை வாங்கிய அர்ஜீன்.. செல்போனில் அந்தக் கனகலிங்கத்தை அழைத்து விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தான்...
அவன் சொல்லி முடித்ததும்.. ஃபைலை வாங்கிக் கொண்ட காவ்யா மனம் தாளாமல்...
"அப்பவே என்னைக் கூப்பிட்டிருக்கலாமே.." என்று சொல்லி விட்டாள்...
"எப்பவே..?" அவன் புருவங்களை தோரணையாக உயர்த்தினான்..
'இதுக்கொண்ணும் குறைச்சலில்ல...' எரிச்சல் படுவதைப் போல அவள் அதை ரசித்தாள்...
"நான் சாப்பிடப் போனப்பவே கூப்பிட்டிருக்கலாம்.."
'அதற்காகத்தான் வந்தேன்...' மனதில் நினைத்தபடி லேசாக சிரித்தான் அர்ஜீன்...
'வயித்தில பசியை வைச்சுக்கிட்டு சிரிப்பென்ன வேண்டிக் கிடக்கு...' காவ்யா முறைத்தாள்...
அர்ஜீன் அதையெல்லாம் கண்டு கொள்வதாக இல்லை... அவன் மனதில் சந்தோசம் பரவியிருந்தது.. அவளை அழைக்கப் போனவன்.. அதை மறந்து.. அவள் பேசுவதைக் கேட்டு விட்டு திரும்பி வந்த கதையை இவள் அறிவாளா என்ற ரகசியப் புன்னகை அவன் முகத்தில் ஒட்டியிருந்தது..
"சாப்பிட்டு வரட்டுமேன்னு நினைச்சேன்..."
"நீங்க இன்னும் சாப்பிடலையே..."
அவள் பட்டென்று சொல்லி விட்டாள்.. அவளையும் அறியாமல் அவள் மனதிலிருந்த அக்கறையும்.. ஆதங்கமும் வெளிப்பட்டு விட்டதில் அர்ஜீனின் கண்களில் மின்னல் வந்தது...
'கண்டு புடிச்சிட்டானே...' காவ்யாவின் முகத்தில் ரத்தம் பாய்ந்தது..
'சும்மாவே இவனைப் பிடிக்க முடியாது.. இதில இதுவும் சேர்ந்துக்கிட்டா சொல்லவே வேணாம்.. இவன் ஆட்டத்தை அடக்க முடியாதே..' எதிர்பார்ப்புடன் நினைத்துக் கொண்டாள்..
"இவ்வளவு அக்கறையிருக்கிறவங்க.. கொண்டு வந்த சாப்பாட்டைக் கொடுத்திருக்கலாமே.." அவன் வம்புக்கு இளுத்தான்...
"நீங்க அதிலேயே குறியாய் இருங்க.. அது எங்க அம்மா எனக்குன்னு ஆக்கிக் கொடுத்த சோறு..."
"அதைப் பங்கு போட்டுக்கிட்டா ஆகாதா..?"
"ஆகாது..."
"யாருக்கு...?"
"எங்க அம்மாவுக்கு..."
இதைக் கேட்டதும்.. அர்ஜீன் டேபிளில் சரிந்து அவள் முகத்தை ஊன்றிப் பார்த்தான்.. அவன் கண்களில் ரகசிய மின்னல் வந்திருந்தது...
'இவன் என்னத்தையோ எக்குத்தப்பாச் சொல்லப் போறான்...' எதிர்பார்ப்பில் காவ்யாவின் மனம் சிக்கிக் கொண்டது...
அதற்கு முன்னால் அது போல அர்ஜீன் டேபிளில் சரிந்து அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்த தருணங்களில் எல்லாம் அவன் பேசிய பேச்சுக்கள் புதிர் கலந்த புரியாத ஒர்விதமான உணர்வை உணர்த்தின என்பதை அவள் நினைத்துப் பார்த்தாள்...
அதுபோல இப்போதும் அவன் வாய்மொழி எந்த வார்த்தைகளை உதிர்க்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் சிக்கியிருந்தவளை அவன் ஏமாற்றி விடவில்லை...
"அப்ப.. உனக்கு ஆகும்ன்னு சொல்லு..."
அவன் விழிகளில் தெரிந்த ரகசிய சங்கேத மொழியைப் படிக்க முயன்று தோற்றவளாய் முகம் திருப்பிக் கொண்டாள் காவ்யா.. அவளது மனதுக்குள்
இனம் புரியாத இன்ப உணர்வுகள் எழுந்து நின்றன...
"இந்த வித்தாரப் பேச்சொல்லாம் இங்கே செல்லுபடியாகாது..."
"ஏன்னா.. இது மதுரை.. ஆம் ஐ கரெக்ட்..?"
அவன் பலமாகச் சிரித்து விட்டு எழுந்தான்.. டேபிளைச் சுற்றி அவளருகில் வந்தான்.. காவ்யாவின் விரல்கள் நடுங்கின.. அவனது அருகாமையை உணர்ந்தவளுக்குள் பீதி கிளம்பியது.. பயத்துடன் அறைவாசலை அவள் பார்த்தாள்..
'யாராச்சும் வந்துட்டா என்ன நினைப்பாங்க...'
அவள் பதட்டத்துடன் நகர முற்பட்டாள்.. அவள் கால்களில் இரும்புக் குண்டைக் கட்டியிருந்ததைப் போல அவளால் நகர முடியவில்லை... அதை உணர்ந்து கொண்ட அவனது சிரிப்பு மேலும் விரிந்தது.. அவள் காதோரமாக அவன் மூச்சுக்காற்றுப் பட்டது.. அவள் மீது பட்டுவிடாமல் தள்ளி நின்றபடி..
"நான் பட்டினி கிடந்தா உன்னாலே தாங்கிக்க முடியலையில்ல..?" என்று அவன் கேட்டான்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -29
எங்கிருந்தோ ஆசைகள். -29
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-29.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-29.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy