எங்கிருந்தோ ஆசைகள் -27

27 பாடி வரும் பறவைகளில் - நீயென் பாடல் தேட ஆசைகொண்டேன்... "உன் சீட்டுக்குப் போன்னு சொன்னேன்..." அழுத்தத்துடன் சொன்னான...


27
பாடி வரும் பறவைகளில் -
நீயென் பாடல் தேட ஆசைகொண்டேன்...


"உன் சீட்டுக்குப் போன்னு சொன்னேன்..." அழுத்தத்துடன் சொன்னான் அர்ஜீன்...
"முடியாது.. நீங்க பேசின வார்த்தைகளுக்கு எனக்கு நியாயம் கிடைச்சாகனும்..." உறுதியுடன் சொல்லி விட்டாள் காவ்யா..
"நான் வந்தப்ப துரியோதனனின் சன்.. உன்னிடம் பேசிக்கிட்டு இருந்தானா.. இல்லையா..?"
"யாரைச் சொல்றீங்க..? தேவராஜனையா..?"
"ஓ.. அவன் பெயரைச் சொன்னால்தான் விடுவ போல இருக்கே... யெஸ்.. அந்த தேவராஜன்தான்... அவன் தானே துரியோதனனின் சன்...?"
"ஏன்.. உங்களுக்கு அது தெரியாதா..?"
"தெரியாது.. என்ன இப்ப..?"
"ஆச்சரியமாயிருக்கு.. கடையை விற்றவன் அவன் வாங்கினவர் நீங்க.. உங்களுக்கு அவனைப் பத்தித் தெரியாதாம்.. இதை எங்கேயும் கேட்டதில்ல..."
"இங்கே கேட்டுட்ட இல்ல.. அத்தோடு விட்டுவிடு.. அவன்கூட உனக்கென்ன பேச்சு..? இந்தக் கேள்விக்கு பதிலைச் சொல்லு..."
"அவன்கூட நான் பேசினேனா..? நீங்க கண்டீங்களா..?"
"காணப் போய்த்தான் சொல்றேன்..."
"என்னத்தைக் கண்டிங்க..? கண்ணில கண்டதை-யெல்லாம் உண்மைன்னு நினைச்சுக்கிறதுதான் சென்னைக்காரங்க பழக்கமோ..?"
"கண்ணில கண்டதை இல்லைன்னு சாதிக்கிறதுதான் மதுரைக்காரங்க பழக்கமோ..?"
"அவன் பேசிக்கிட்டு இருந்தான்.. அவ்வளவுதான்.. என்கூடப் பேசலை.. நானும் அவன் கூடப் பேசலை..."
"இதை நான் நம்பனுமா..?"
"நம்பாட்டிப் போங்க.. நீங்க நம்பினாத்தான் என் வீட்டில குழம்பு கொதிக்குமா...?"
"இந்த டயலாக்கையும் விடவே மாட்டியே..."
"எங்கே.. விடனும்னு நான் நினைச்சாலும்.. நீங்க விடமாட்டேங்கறிங்களே.. தெரியாமத்தான் கேட்கிறேன்.. அப்படியே அவன்கூட நான் பேசினாலும் உங்களுக்கென்ன வந்தது...?"
காவ்யாவின் கேள்வியில் ரௌத்ரமானான் அர்ஜீன்.. அவன் முகத்தில் கோபச் சிவப்புத் தோன்றியது.. கண்கள் இடுங்க அவளை உற்றுப் பார்த்தான்...
"ஓஹோ.. வேலை நேரத்தில் நீ அவன்கூட வெட்டி அரட்டை அடிப்ப.. அதை நான் கேட்கக் கூடாதா..?"
"அது வெட்டி அரட்டைன்னு உங்களுக்குத் தெரியுமா..?"
"இது வேறயா..? பின்னே..? அது வேண்டப்பட்ட அரட்டையா..?"
"ஆமாம்.. கடையோட பழைய முதலாளி அவன்..."
காவ்யா இப்படிச் சொன்னதை அர்ஜீன் ரசிக்க வில்லை.. தாடையைத் தடவியபடி முகம் சுருங்க.. அவளை அவன் முறைத்தான்...
"அப்ப.. பழைய முதலாளியைத்தான் நீ மதிப்ப..."
"எல்லோரையும் தான் மதிக்கனும்..."
"ஐ டோன்ட் லைக் திஸ் டைப் ஆஃப் ஆர்குயுமென்ட்ஸ்.."
"இது சங்கத்தமிழ் வளர்த்த மதுரை சார்.. நீங்க சொல்கிறதை தமிழிலேயே சொல்லுங்க..."
"பார்க்கலாம்..."
"அவனிடம் பழைய கணக்கு வழக்கப்பத்தின விவரமொன்னு வேண்டியிருந்தது.. அதான் கேட்டுக்கிட்டு இருந்தேன்.. அது ஒரு குத்தமா..?"
காவ்யா அப்பாவியாய் இமை கொட்ட.. அர்ஜீன் பல்லைக் கடித்தான்...
"இதுக்கெல்லாம் விரட்டினா என்னால இங்க வேலை செய்ய முடியாது சார்..."
"பிளாக்மெயில் பண்றியா..?" ஆழ்ந்த குரலில் கேட்டான் அவன்...
அந்தக் குரலில் காவ்யா பேச்சிழந்தாலும்.. சமாளித்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தாள்...
"நீங்களும் இதைப் பிடிச்சுக்கிட்டே தொங்க வேணாம் சார்.."
"தொங்குகிறதா..? என்ன ஒரு லாங்வேஜோ.." அலுத்துக் கொண்டான் அவன்...
"எங்களுக்கு இப்படித்தான் பேசவரும்..." காவ்யா நொடித்தாள்...
"எங்களுக்குன்னா..? யார் யாருக்கு..? உனக்கும்.. அவனுக்குமா...?" அர்ஜீன் புருவங்களை உயர்த்தினான்..
'இவன் இதை விடவே மாட்டானா..?' காவ்யாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது...
"உங்க ஆசையைக் கெடுப்பானேன்.. ஆமாம்ன்னு தான் வைச்சுக்கங்களேன்.. அவரும் மதுரைக்காரரு.. நானும் மதுரைக்காரி.. ஆயிரம்தான் இருந்தாலும்.. என் பேச்ச அவரு புரிஞ்சுக்குவாரு.. அவரு பேசறத நான் புரிஞ்சுக்குவேன்.. உங்கள மாதிரி என்ன லாங்வேஜோன்னு அலுத்துக்க மாட்டோம்ல்ல..." இமை கொட்டினாள்...
அவள் தேவராஜனை அவர் என்று சொன்னதை அர்ஜீன் ரசிக்கவில்லை.. இமை கொட்டியவளை இமைக்காமல் பார்த்தான் அர்ஜீன்... அவளின் முகம் சிவந்து விட்டது.. உதடுகளைக் கடித்துக் கொண்டு வேறு திக்கில் பார்த்தாள்...
"உங்க ஊர் பெருமை இருக்கட்டும்.. அவனைப் பார்த்தா நல்லவனாத் தெரியல..." அர்ஜீன் எச்சரித்தான்...
'இதை நீ சொல்லித்தான் தெரிஞ்சுக்கனுமாக்கும்..'
"என்னைச் சீண்டி விடறேன் பேர்வழின்னு அவன் கூடச் சிரிச்சுப் பேச ஆரம்பிச்சுராதே..."
'ஆஹா.. இப்படியொரு வழி இருக்கில்ல...?'
"என்னை டென்சனாக்க அவனை யூஸ் பண்ணினேன்னு வை..."
'என்ன ஆகும்ன்னு எனக்கே தெரியும்.. நான் வைகையாத்துத் தண்ணியக் குடிச்சு வளர்ந்தவ.. என் கிட்டயேவா..?'
"அவன் வேலையை காட்டிருவான்..."
'நான் அவன் கை காலை முறிச்சுருவேன்..'
"ஸோ.. இந்த கேமை இத்தோட முடிச்சுக்கிட்டு வேலையைப் பார்க்கலாமா..?"
"என் ராஜினாமா..?"
"குப்பைக் கூடைக்குப் போயாச்சு..."
"யாரைக் கேட்டுக் கிழிச்சீங்க...?"
"நீ யாரைக் கேட்டு எழுதின..?"
அவள் முறைத்தபடி ஃபைல்களைத் தூக்கிக் கொண்டு போனாள்.. டொம்மென்ற சப்தத்துடன் அவள் டேபிளில் வைத்தாள்... வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்..
அர்ஜீன் தேவராஜனைப் பற்றிய யோசனையுடன் ஒரு பென்சிலை எடுத்தக் கடித்தபடி காவ்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.. ஊடும் பாடும் அவனைப் பார்த்து வைத்த காவ்யா அவன் பார்வையினால் சங்கடத்துக்கு ஆளானாள்...
'ஒரு மனுஷிய இப்படியே பாத்துக்கிட்டு இருந்தா அவ எப்படி வேலை செய்வாங்கிற நினைப்பு வேணாம்..? இந்த ஆளுக்கென்ன.. பருகு.. பருகுன்னு பார்த்துட்டுப் போவாரு.. அவஸ்தைப் படறது யாரு..? நான் தானே...'
அவனைப் பார்க்காதே என்று மனதை அதட்டியபடி வேலை செய்து கொண்டிருந்தவள்.. மதிய உணவு இடைவேளை வந்தது.. 'அப்பாடா...' என்ற ஆசுவாசப் பெருமூச்சைவிட்டாள்...
"சார்.. நான் சாப்பிட்டுட்டு வர்றேன்..."
அவன் முகம் பார்க்காமல் வெளியேற முனைந்த போது...
"இவ்வளவு செல்பிஷ் கேர்ளா நீ..?" என்று கேட்டான் அவன்...
"அவ்வளவு சுயநலமா இருந்து எதை அள்ளிக் கிட்டோமாம்.." என்றாள் காவ்யா...
"நீயாச் சாப்பிடப் போறியே.. ஒரு வார்த்தையாவது நீங்களும் சாப்பிட வாங்கன்னு கூப்பிடுகிறயா..?" சரஸத்துடன் வினவினான் அவன்...
காவ்யா உஷாராகி விட்டாள்.. அவன் விடும் மலரம்புகளைப் புரிந்து கொள்ளாமலிருக்க அவளொன்றும் முட்டாள் இல்லையே....
"நல்லாயிருக்கு சார் உங்க நியாயம்.. எனக்குப் பசிச்சா நான்தான் சாப்பிடனும்.. அப்பத்தான் எனக்குப் பசியடங்கும்.. எனக்குப் பதிலா நீங்க சாப்பிட்டா.. எனக்குப் பசி அடங்கிருமா..?" என்று கழுத்தை வெட்டினாள்...
"ஆக.. உன் டப்பாவில் இருக்கிற சாப்பாட்டை என் கண்ணிலயே காட்ட மாட்ட..?" அவன் உல்லாசமாகக் கேட்டான்...
"அது என்ன தேவைக்கு..? உங்களுக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு காத்திருக்கு.. என் சாப்பாட்டு மேல எதுக்காக கண் போடறிங்க..?" விளையாட்டைப் போலக் கேட்டுவிட்டு வேகமாக அங்கிருந்து அகன்று விட்டாள் காவ்யா..
பிடிகொடுக்காமல் அவள் நழுவுவது அர்ஜீனுக்குப் புரிந்தது... அவன் ஏதோ யோசனையுடன் சுழல் நாற்காலியில் சுழன்று விட்டு.. சாப்பிடுவதற்காக எழுந்தான்...
"பாவம்டி அந்த தேவராஜன்.. காய்ச்சு.. காய்ச்சுன்னு இவன் காய்ச்சிட்டான் இந்த அளவுக்கு அவனை ஹர்ட் பண்ணியிருக்க வேண்டாம்ன்னு தோணுது..."
சாப்பிடும் போது பாவனா பரிதாபப் பட்டாள்... காவ்யா பதில் சொல்லவில்லை.. எதற்காக தேவராஜனை அந்த அளவுக்கு அர்ஜீன் காய்ச்சினான் என்ற
உண்மையை அறிந்திருந்ததால் மௌனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்..
"ஆயிரம் தான் இருந்தாலும் இந்தக் கடை இதுக்கு முன்னாலே தேவராஜன் பேமிலிக்குத்தான சொந்தமாயிருந்தது...?"
"அதுக்கு என்ன செய்யனும்கிற பாவனா..? அந்த தேவராஜனுக்கே கடையை திருப்பி எழுதிக் கொடுத்துடனும்கிறியா..?"
"நீயேண்டி கோபப் படற..?"
"கோபப்படாம கொஞ்சவா சொல்ற..? அந்த தேவராஜனும்.. அவன் மூஞ்சியும்.. அவன் எதுக்குடி.. வித்தகடை மேலே உரிமை கொண்டாடிக்கிட்டு இங்கே வர்றான்...?"
"பாவம்டி காவ்யா..."
"அவனுக்குப் பாவம் பார்த்தேன்னு வை.. அவன் உன்னைப் பாவம்ன்னு ஆக்கிருவான்.. தேவாங்குக்குப் போய் பாவப்படுவியா..?"
"சீச்சீ.. என்ன பேசற நீ..."
"நீ விவரமானவன்னு நினைச்சேன்.. உன் விவரம் இவ்வளவு தானா..?"
"காவ்யா... அவன் ஜெள்ளு மன்னன்.. எனக்கு அது தெரியும்..."
"தெரிஞ்சுமா அவனுக்கு சப்போர்ட் பண்ற..?"
"நான் சொல்ல வந்ததே வேற காவ்யா.. அவனே ஒரு காமெடி பீஸ்.. அவனைப் போயி அப்படிக் கதிகலங்க வைக்கனுமா..? "
"விடேண்டி.. அவனைக் கதிகலங்க வைச்சா என்ன குறைஞ்சு போச்சு..? அவன் என்ன கடைமேல இருக்கிற பாசத்திலயா இந்தப் பக்கம் ரோந்து சுத்தறான்..?" பல்லைக் கடித்தாள் காவ்யா..
"உன்மேல இருக்கிற பாசத்திலன்னு சொல்கிறயா..?" எடுத்துக் கொடுத்தாள் பாவனா...
"அவன் கூடல்லாம் என்னை இணை கூட்டிப் பேசின.. உன்னைச் சும்மா விட மாட்டேன்.. அவன் ஆளும்.. மூஞ்சியும்.. முகரையும்.. இவனுக்கு இந்தக் கடைமேலே பாசம் பொங்கி வழியுதாக்கும்..? இவன் மட்டும் உருப்படியா இருந்திருந்தா இவனோட அப்பா இந்தக் கடையை வித்திருக்க மாட்டார்..."
"அது என்னவோ உண்மைதான்.. அவனை விடு.. நீ நம்ம ஆபிஸ் ஹீரோகிட்ட வா..."
"நம்ம ஆபிஸ் ஹீரோவா..? யாருடி அது...?"
தெரியாததைப் போல கேட்டாள் காவ்யா.. அவள் மனதுக்குத் தெரியும்.. அது அர்ஜீன்தான் என்பது...
"ஹை.. ஹை.. இப்படிச் சொன்னா நாங்க நம்பிருவோமாக்கும்.. அது யாருன்னு உனக்குத் தெரியாதா..?"
"தெரியாது..."
"இந்த மதுரையே அவர் வரவாலே மஞ்சள் நிலா மாலை நேரத்துக்கு மாறியிருக்கு.. நீ என்னவோ.. எதுவும் தெரியாதது போல நடிக்கற..."
"நான் எதுக்காக நடிக்கனும்..?"
"அதானே தெரியல.. இத்தனைக்கும் அந்த ஹீரோ பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கிற வரம் வாங்கியிருக்கிற மகராசி நீ.. உனக்கு அந்த ஹீரோவைப் பத்தித் தெரியாதா..?"
"யாரைச் சொல்ற...? புது முதலாளியையா சொல்ற..?"
வரவழைத்துக் கொண்ட ஆச்சரியத்துடன் கேட்டாள் காவ்யா.. அவள் கண்களில் தெரிந்த கள்ளத்தனத்தை ரசித்துச் சிரித்தாள் பாவனா.. கள்ளியும்.. கள்ளியும்.. கலந்துரையாட ஆரம்பித்தார்கள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள் -27
எங்கிருந்தோ ஆசைகள் -27
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-27.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-27.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy