எங்கிருந்தோ ஆசைகள். -26

26 என் நிழல் தேடி நீவரவே... ஏக்கத்துடன் ஆசைகொண்டேன்.. அர்ஜீன் கோபத்துடன் இருந்தான்.. அவனுக்கு வெளிநாட்டில் வேலை இருந்தது.. அதை ...


26
என் நிழல் தேடி நீவரவே...
ஏக்கத்துடன் ஆசைகொண்டேன்..


அர்ஜீன் கோபத்துடன் இருந்தான்.. அவனுக்கு வெளிநாட்டில் வேலை இருந்தது.. அதை முடித்து விட்டு முதல்நாள்தான் அவன் சென்னைக்குத் திரும்பினான்.. வந்தவுடனே பார்க்க வேண்டிய அவசர வேலைகளை பார்த்து வைத்து விட்டு.. உடனே பிளைட் பிடித்து மதுரைக்கு வந்து இறங்கியிருந்தான்...
யாருக்காக...? காவ்யாவுக்காக...!
இங்கே வந்து பார்த்தால்.. அவன் வருவதைக் கூடக் கவனிக்காமல் அவள் யாரோ ஒருவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறாள் என்றால் அவனுக்கு எப்படியிருக்கும்..?
'யார் அவன்..?'
அர்ஜீன் பல்லைக் கடித்தபடி இளங்கோவை அழைத்து.. அவன் வந்திருக்கும் தகவலை காவ்யாவிடம் சொல்லச் சொல்லி அனுப்பி வைத்தான்.. அடுத்த சில நிமிடங்களிலேயே அவளும் வந்து விட்டாள்.. வந்தவளின் முகத்தில் வேலைக்கான பரபரப்பு மட்டுமே இருந்தது.. அவன் வந்திருக்கிறானே என்ற ஒர் மலர்ச்சி இல்லை...
'இவளுக்கு நான் இருந்தாலும்.. இல்லாவிட்டாலும் ஒன்றுதானா..?'
அர்ஜீனின் மனதில் அவளைக் காணப் போகும் உற்சாகம் இருந்தது.. அந்த உற்சாகம் அவளுக்கு இல்லையா..?
அவன் ஏமாற்றமாக உணர்ந்தான்.. அவன் மனதில் ஒர்விதமான வெறுமை பரவியது.. அவனுக்குள் பொசுபொசுவென்ற சொல்லத்தெரியாத கோபம் மூண்டது..
"உன் சீட்டில் இல்லாம எங்கே போன..?" அதட்டினான்.
அவன் இல்லாத நாள்களின் வரவு செலவுக்கான ஸ்டேட் மென்டை அடுக்கிக் கொண்டிருந்த காவ்யா வியப்புடன் நிமிர்ந்து பார்த்தாள்.. அவன் எதற்காக கோபப்படுகிறான் என்று அவளுக்குப் புரியவில்லை...
"என் சீட்டில்தான் இருந்தேன் சார்..."
"பொய் சொல்லாதே.. நான் வரும்போது நீ உன் சீட்டில் இல்லை... இளங்கோ வந்து சொல்லவும்தான் கிளம்பிவந்த..."
அவன் பேசிய வார்த்தைகளில் காவ்யாவுக்கு கோபம் வந்துவிட்டது.. அவன் வந்திருக்கிறான் என்பதில் மனதில் ஓரமாக துளிர்த்திருந்த சந்தோசம் காணாமல் போனது...
"பொய் சொல்றேனா..? நானா..? என்ன தேவைக்கு நான் உங்ககிட்ட பொய் சொல்லனும்..? அப்படியே தேவையிருந்தாலும் நான் பொய் சொல்ல மாட்டேன்.. எனக்கு அந்தப் பழக்கமில்ல..." என்று படபடத்தாள்..
"இதுதானே உன்சீட்..? நான் வரும் போது இந்தச் சீட்டில் நீ உட்கார்ந்திருந்தயா...?" அவன் குற்றவாளியை விசாரிப்பதைப் போல உறுமினான்...
"நீங்க இருக்கும் போதுதான் இது என் சீட்.. நீங்க ஊரில் இல்லாதப்ப.. நான் வழக்கம்போல பாவனாவின் பக்கத்திலே உட்கார்ந்து வேலை செய்ய நீங்கதான் பெர்மிசன் கொடுத்திருக்கீங்க.. மறந்து போய் பேச வேணாம்..."
"நான்தான் வந்துட்டேனில்ல..?"
"எனக்கு அது தெரியுமா..? இன்னைக்கு நீங்க வரப் போறீங்கன்னு வெத்தலயில மையைத் தடவி ஜோஸியமா பாத்து வைச்சிருந்தேன்..? திடிர்ன்னு வருவீங்க.. இரண்டு நாளைக்கு கடையை ஆட்டி வைப்பீங்க.. அப்புறமா காணாமல் போயிருவீங்க.. நீங்க எப்ப வருவீங்க... எப்ப போவீங்கன்னு யாருக்குத் தெரியும்..?"
"ஓ.. அது தெரியாததினாலதான் காலையிலேயே வேலை செய்யாம எவன் கூடவோ அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்கியா...?"
"என்னது..? எவன்கூடவோ அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்கேனா..? வார்த்தையை அளந்து பேசுங்க சார்... வாயிருக்குங்கிறதுக்காக.. வார்த்தைகளைக் கொட்டக் கூடாது..."
"யார் அவன்..?"
"எவன்..?"
"உன் கூடப் பேசிக்கிட்டு இருந்தவன்..."
"எவன்கூடவும் நான் பேசலை..."
"பொய் சொல்லாதே.."
"திரும்பவும் இதே வார்த்தைகளச் சொல்லாதீங்க... நீங்க உங்க மனசில என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க..? முதலாளின்னா என்ன வேணும்னாலும் பேசிக்கலாமா..?"
காவ்யாவின் முகம் சிவந்துவிட்டது.. அவள் கோபத்தில் மூச்சிரைக்க நின்று கொண்டிருக்க.. அர்ஜீன் இறுகின முகத்துடன் அறையை விட்டு வெளியே போனான்..
கடையின் பின் பகுதியிலிருந்த அலுவலகப் பகுதிக்குப் போனவன் தேவராஜனின் முதுகுக்குப் பின்னால் நின்று யாரென்று ஆங்கிலத்தில் கேட்டான்.. அவன் துரியோதனனின் மகனென்று தெரிந்தவுடன் அர்ஜீனின் மனதிலிருந்த கோபம் இன்னும் அதிகமாகியது...
"இவருக்கு இங்கேயென்ன வேலை..?"
அவன் முகச்சுளிப்பிற்கு பாவனாவிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.. ஏகாம்பரம் சும்மாவே முதலாளிகளின் முன்னிலையில் வாயைத் திறக்க மாட்டார்.. அர்ஜீனின் முன்னால் கேட்கவே வேண்டாம்.. செதுக்கி வைத்த சிலையைப் போல அசையாமல் நின்று விட்டார்..
அவர்களிடமிருந்து உதவிக்கரம் நீளாது என்று நிச்சயமானவுடன் தேவராஜன் சமாளிக்க முயன்றான்...
"இந்தப் பக்கமா வந்தேன்..."
"வந்தா..?"
"கடையைப் பாத்ததும் கடந்து போக கால் வரல..."
"ஏன் வரலை..?"
"என்ன இப்புடிக் கேட்டுப் புட்டிங்க.. இன்னைக்குத் தான இது உங்க கடை.. இதுக்கு முதல்ல இது எங்ககடை.."
"முதலில் இருந்ததைப் பத்தியெல்லாம் பேச வேண்டாம்.. இந்த செகண்டில் இது என்னுடைய கடை.. புரியுதா..?"
அர்ஜீன் கோபத்துடன் அதட்டியதில் தேவராஜனின் மனதிலிருந்த வன்மம் விழித்துக் கொண்டது.. உயரமாக.. கம்பீரமாக.. ஆண்மையின் அழகோடு.. பெண்களைக் கவரும் தோற்றத்துடன் இருந்தவனை பொறாமைக் கனலுடன் அவன் பார்த்தான்.. அவனுக்குள் தோற்றுவிட்ட வன்மத்தீ கொழுந்துவிட்டு எரிந்தது...
'இன்னைக்கு கடை.. நாளைக்கு காவ்யாவா..?'
"இப்ப என்னாச்சுன்னு இந்தப் பேச்சு பேசறிங்க..? என்னவோ நீங்க எங்க அப்பாவோட நண்பன் மகன்னு சொன்னாரு.. இதுதான் நட்புக்கு நீங்க கொடுக்கிற மரியாதையா..?"
"ஹலோ.. என்டாடியும்.. உங்க அப்பாவும் தான் பிரண்ட்ஸ்.. நானும்.. நீங்களும் பிரண்ட்ஸில்லை..."
"அதுக்கு..?"
"இந்தப் பக்கம் வந்தால்.. கடைக்கு வரனும்கிற கட்டாயம் ஏதும் இல்லை.. எனக்கு வேலை முக்கியம்.. அதை கெடுக்கிறதைப் போல யார் நடந்துக்கிட்டாலும் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன்... அன்டர்ஸ்டாண்ட்.."
"சும்மா இங்கிலீஷில் பீலா விடாதீங்க சார்.. எங்க கடையாச்சேன்னு பாசத்தோட பார்க்க வந்தா எகிறிக் குதிக்கறிங்க..."
"இப்ப இது உங்க கடையில்லை.. இளங்கோ.. இளங்கோ..."
அர்ஜீன் போட்ட சப்தத்தில் இளங்கோ அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தான்.. கோப முகத்துடன் நின்றிருந்த அர்ஜீனின் முகம் பார்த்தான்...
"இவர் மிஸ்டர் துரியோதனின் சன்னாம்..."
"ஆமாம் சார்.. தேவராஜன்னு பெயர்..."
"எனக்கு அது தேவையில்லை.. இவர் எதுக்காக நம்ம வேலையில டிஸ்டர்ப் பண்றார்..?"
இளங்கோ பதில் சொல்ல முடியாமல் மென்று விழுங்கியபடி தேவராஜனின் அருகில் வந்து மெல்லிய குரலில் கெஞ்சினான்...
"தயவு செஞ்சு கிளம்புங்க சார்..."
இளங்கோ சொல்வதற்கு முன்னாலேயே தேவராஜன் கிளம்புவதாகத்தான் இருந்தான்.. அர்ஜீனின் கோபத்தோடு மோத அவன் தயாராக இல்லை.. அவனுக்கு இது போன்ற நேரடித்தாக்குதல்களில் என்றுமே விருப்பமோ... பழக்கமோ இருந்ததில்லை.. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் முதுகில் குத்துவதும்.. பின்னாலிருந்து தாக்குவதும்தான்.. திரை மறைவு வேலைகளில் அவன் கை தேர்ந்தவன்... இது போன்ற முகம் பார்த்துச் சண்டை போடும் வேலைகளில் கை தேர்ந்தவனல்ல...
"எதுக்காக கெஞ்சறிங்க இளங்கோ... நான் போய்க்கிட்டுத்தான் இருக்கேன்.. மரியாதை தெரியாதவன் கிட்ட நின்னுபேசனும்னு எனக்கு மட்டும் ஆசையா..?"
தேவராஜன் போய்விட்டான்.. அர்ஜீன் அதிக அளவில் கோபப்படுகிறான் என்று பாவனாவிற்குத் தோண்றியது.. என்னதான் இருந்தாலும் ஒரு காலத்தில் தேவராஜனுக்குத்தானே அந்தக்கடை சொந்தமாக இருந்தது..? அந்தச் சொந்தத்தில் பார்க்க வந்தவனிடம் அர்ஜீன் அந்த அளவுக்கு கடுமை காட்டியிருக்க வேண்டாம் என்று நினைத்தாள் அவள்...
யாருடைய நினைவைப் பற்றியும் கவலைப் படாமல் கடுகடுத்த முகத்துடன் அறைக்குத் திரும்பினான் அர்ஜீன்...
அங்கே கையில் ஒரு பேப்பரோடு நின்றிருந்தாள் காவ்யா... அவன் டேபிளில் ஃபைல்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன... அர்ஜீன் பல்லைக் கடித்தபடி அவளைப் பார்த்து...
"என்ன.. ரெஸிக்னேசன் லெட்டரா..?" என்று ஒரு மாதிரியான குரலில் வினவினான்...
"ஆமாம்..." இறுக்கமான முகத்துடன் சொன்னாள் காவ்யா...
"விட்டுட்டுப் போக காரணம் தேடிக்கிட்டே இருப்பியா..?" புதிர் போடும் குரலில் கேட்டான் அர்ஜீன்...
காவ்யா அதைக் கவனிக்கவில்லை... அவள் மனம் முழுதும் அர்ஜீன் பேசிய பேச்சுக்கள்தான் நிறைந்திருந்தன...
"கண்ணில விளக்கெண்ணையை விட்டுக்கிட்டு காரணத்தை தேடி ஏன் நான் அலையனும்..? அதான் லட்டுலட்டா நீங்க காரணங்கள அள்ளித் தருகிறீங்கள்ல.." என்றபடி ராஜினாமாக் கடிதத்தை நீட்டினாள் காவ்யா...
அவள் கண்களுக்குள் ஊடுறிவிப் பார்த்தபடி ராஜினாமாக் கடிதத்தை வாங்கிய அர்ஜீன்... அதைச் சுக்கல் சுக்கலாக கிழித்து குப்பைக் கூடைக்குள் வீசினான்...
"போ.. போய் வேலையைப் பாரு.." என்று எரிச்சலோடு சொன்னான்...
காவ்யா அசையவில்லை.. அர்ஜீனை முறைத்தபடி அங்கேயே நின்றாள்.. அர்ஜீன் புருவங்களை உயர்த்தினான்...
"இன்னும் என்ன..?"
"நான் வேலையை விடறேன்..." காவ்யாவின் உதடுகள் துடித்தன...
"விடுவதிலேயே குறியாக இரு.."எரிந்து விழுந்தான் அர்ஜீன்...
"நீங்க மனசில நினைக்கறதையெல்லாம் பேசுவீங்க.. நான் அதைக் கேட்டுக்கிட்டிருக்கனுமா..? வேணாம் சாமி.. இந்த வேலையும் வேணாம்.. உங்க பேச்சும் வேணாம்.." காவ்யா குமுறினாள்...
"நான் வேணாமா..?" ஆழ்ந்த குரலில் கேட்டான் அர்ஜீன்...
அந்தக் குரல் காவ்யாவின் இதயத்தில் இறங்கியது... அவள் அதிர்ந்தாள்.. இதுபோன்ற அதிர்வை இதற்கு முன்னால் அவள் உணர்ந்ததில்லை.. மனதின் அதிர்வை விழிகளில் பிரதிபலித்தவளாய் அர்ஜீனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.. அவர்களின் பார்வைகள் கலந்தன.. ஒரு ஆக்டோபஸைப் போல அர்ஜீனின் பார்வை அவளை ஆக்ரமிப்பதை உணர்ந்தாள் காவ்யா...
அவள் மனம் அலை பாய்ந்தது... அவளால் அவனின் அந்தப் பார்வையினை நேர் கொண்டு பார்க்க முடியவில்லை.. ஆழ்கடலில் துரும்பாக அவளின் மனம் தத்தளித்தது...
'எனக்கென்னவோ அந்தக் கடைக்கு நீ வேலைக்குப் போறது சரியில்லன்னு தோணுதும்மா...'
அவள் காதோரமாக கண்ணதாசனின் வார்த்தைகள் ஒலித்தன.. அவள் உலுக்கி விடப் பட்டவளைப் போலத் தன்னுணர்விற்கு மீண்டாள்...
இதுதானா...? இதனால்தானா..? இது இப்படியாகும் என்று கண்ணதாசன் அறிந்து வைத்திருந்ததால்தான் அப்படிச் சொன்னானா..?
சட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டாள் காவ்யா... அர்ஜீனின் முகத்தில் கோப அலைகள் பரவின..
'இப்ப எதுக்காக முகத்தைத் திருப்பிக்கிறா...?'
"நான் வேலையை வேணாம்ன்னு சொன்னேன்..." எச்சரிக்கையுடன் அவன் முகம் பார்க்காமல் பேசினாள் காவ்யா...
"அப்ப நான் வேணும்.. அப்படித்தானே..?" கோபம் விலகியவனாக கேட்டான் அர்ஜீன்...
காவ்யாவின் பார்வை அவளையும் மீறி.. அவன் பார்வையைச் சந்தித்தது.. காத்திருந்த அந்தக் காதலனனின் பார்வை அதைக் கவ்விக் கொண்டது...
'இவன் கில்லாடி...' லேசாக இதழ் வளைத்தாள் காவ்யா....
"இப்ப வேலையைப் பத்தித்தான் பேசறோம் சார்... வேற பேச்சு என்னத்துக்கு..?"
"பேசினா.. நீ பதிலைச் சொல்லு..."
"சில பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது சார்.."
"ஏன்..?"
"சொன்னா நீங்க தாங்க மாட்டிங்க.. இப்ப நான் வேலையை விட்டுப் போறேன்... அதைப்பத்தி மட்டும் பேசுங்க..."
அர்ஜீன் சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து சுழன்றான்.. அவனின் அலட்சியமான அந்தத் தோரணையில் அவள் மனதைப் பறிகொடுத்தாலும்.. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் முகம் திருப்பிக் கொண்டாள்...
"உன் வேலையைப் பத்தின என் முடிவைச் சொல்லிட்டேன்.. போ.. போய்.. வேலையைப் பாரு..."
லேசான முகச்சுளிப்புடன் அவன் சொல்லியும் அசையாமல் நின்றாள் காவ்யா...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -26
எங்கிருந்தோ ஆசைகள். -26
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-26.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-26.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy