எங்கிருந்தோ ஆசைகள். -25

25 ஊரடங்கும் நேரத்திலே... உனைப் பார்க்க ஆசைகொண்டேன்.. "அடிச்சாண்டி அந்தர் பல்டி..." காவ்யாவின் காதருகே வியந்தாள் பாவன...


25
ஊரடங்கும் நேரத்திலே...
உனைப் பார்க்க ஆசைகொண்டேன்..


"அடிச்சாண்டி அந்தர் பல்டி..." காவ்யாவின் காதருகே வியந்தாள் பாவனா..
காவ்யா எதையும் கண்டு கொள்ளாதவளாக தலைவலி மாத்திரையை விழுங்கிக் கொண்டிருந்தாள்.. இளங்கோ அவசரமாக அங்கே வந்தான்...
"இவ்வளவு வேகமா எந்த டிரெயினைப் பிடிக்க ஓடி வர்றீங்க இளங்கோ..? சேல்ஸ் செக்சனில பிரச்னையா..?" என்று கேட்டாள் பாவனா...
"அதெல்லாம் இல்ல பாவனா.. முதலாளி வந்திருக்காரு.." பரபரத்தான் இளங்கோ...
"என்னது.. முதலாளி வந்திருக்காரா..?"
கந்தசாமி வாசல்பக்கமாக ஓடினார்.. ஏகாம்பரம் கம்யூட்டரை முறைப்பதை விட்டுவிட்டு.. காதலியைப் போல கட்டியணைத்து வேலை செய்ய ஆரம்பித்தார்.. பாவனா ரகளையை மறந்தவளாக ஃபைல்களை அவசரமாக இழுத்து அவள் முன்னால் பரப்பிக் கொண்டாள்..
'இந்த அரிபரியெல்லாம் எங்கப்பன்கிட்ட கடையிருந்தப்ப இல்லயே...'
தேவராஜனுக்கு பற்றிக் கொண்டு வந்தது... அவன் முதலாளியின் மகனாக.. சின்ன முதலாளியாக இருந்திருக்கிறான்.. அவன் வந்து போகும் போதெல்லாம் அந்தக் கடையில் வேலை பார்ப்பவர்கள் இயல்பாகத்தான் இருப்பார்கள்.. இதுபோன்ற பரபரப்பை.. இதற்கு முன் அவன் கண்டதில்லை...
"காவ்யா.. உங்களை முதலாளி வரச்சொல்றாரு..."
"நீங்க சொல்றதுக்கு முன்னாலேயே அவ கிளம்பிட்டா இளங்கோ... ம்ஹீம்.. இனி முதலாளி சென்னைப் பக்கம் போகிற வரைக்கும் இவ சீட் அங்கேதான் இருக்கும்..." பெருமூச்சு விட்டாள் பாவனா...
தேவராஜனுக்கு பக்கென்று ஆகிவிட்டது.. இதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை..
'காவ்யா எதுக்காக அந்தப் பயலோட சீட்டுக்குப் பக்கத்து சீட்டில உக்காரனும்..' அவன் ஏகத்துக்கும் கவலைப்பட்டான்...
அவன் கவலையை கண்டு கொள்ளாமல் காவ்யா விரைந்து விட்டாள்.. அவள்தான் அவனையே கண்டு கொள்ள மாட்டாளே.. அவன் கவலையையா கண்டு கொள்வாள்..?
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று பரிதவித்தான் தேவராஜன்.. யாரும் அவனுடைய இருப்பைக் கவனிப்பதாகத் தெரியவில்லை...
"இந்தக் கணக்கை சரிபார்த்தீங்களா ஏகாம்பரம் சார்..?" என்று கேட்டபடி நிமிர்ந்து பார்த்த பாவனாதான் அவனுடைய இருப்பைக் கவனித்து விட்டு புருவங்களை உயர்த்தினாள்..
"தேவா சார்.. இன்னுமா நீங்க போகலை..?"
இந்தக் கேள்வியைக் கேட்ட பின்பு எந்த ரோசமுள்ள மனிதனும் அந்த இடத்தில் நிற்காமல் உடனடியாக இடத்தைக் காலி செய்திருப்பான்...
தேவராஜன் அப்படியில்லை.. அவன் காரியவாதி.. ரோசத்தைப் பார்த்தால்.. காவ்யா எதற்காக முதலாளியின் சீட்டுக்கு பக்கத்துசீட்டில் இடம் மாறினாள் என்று எப்படி அவன் தெரிந்து கொள்வான்..?
அதனால் அவனுக்கு உதவாத அந்த ரோசத்தை தள்ளி வைத்துவிட்டு பாவனாவிடம் வழிந்தான்...
"ஹி.. ஹி.. உங்களைப் பாத்தா போகத் தோணலைங்க..."
"இதைப் பார்றா.. இம்புட்டு நேரமும் தோணாதது.. இப்பத் தோணியிருக்கா..? ஏன்..? இம்புட்டு நேரமும் காவ்யா பக்கத்தில இருந்தாளே.. அதனாலயா..?"
"என்னங்க இப்படிச் சொல்லிட்டிங்க.. நான் இந்தக் கடைக்கு வர்றதே உங்களைப் பார்க்கனும்னுதாங்க.."
"அப்படியா..? இத அப்படியே காவ்யா காதில போட்டு வைக்கவா..?"
"ஐயையோ..."
"என்னாச்சு..? கட்டெறும்பு கடிச்சிருச்சா..?"
"அதெல்லாம் எதுக்குங்க.. இதெல்லாம் நம்மளுக்குள்ள இருக்கிற ரகசியம்ங்க..."
"ரகசியத்துக்கும் எனக்கும் ரொம்பத்துரமாச்சே தேவா சார்..."
"அது கிடக்குது கழுதை.. விட்டுத் தள்ளுங்க.. ஆமா.. காவ்யா எதுக்காக சீட் மாறினாங்க..?"
"அதானே பாத்தேன்.. சோழியன் குடுமி சும்மா ஆடாதே... உங்களுக்கு காவ்யா எதுக்காக இடம் மாறினான்னு தெரியனும்.. அதுக்காகத்தானே இந்த பிட்டு..?"
"அப்படியெல்லாம் இல்லீங்க.."
"இதை நான் நம்பனுமாக்கும்..? போனாப் போகுது.. பிழைச்சுப் போங்க.. காவ்யா சீட்மாறலை.. முதலாளிதான் சீட் மாத்தினார்.."
விவரம் அறியும் மும்முரத்தில் தேவராஜன் நடப்பு நிலைமையை மறந்தவனாக...
"எங்கப்பா எதுக்காக இப்படிச் செஞ்சாரு..?" என்று கேட்டு வைத்துவிட்டான்...
பாவனா ஒரு மார்க்கமாக அவனைப் பார்க்க.. ஏகாம்பரமோ...
"ஐயோ.. பாவம்.." என்றார்..
'இந்த ஆளு எதுக்காக என்னப் பாத்து பாவப்படறான்..' தேவராஜன் புரியாமல் பாவனாவைப் பார்த்தான்.. அவளோ...
"உங்கப்பா இப்படிச் செய்யலை தேவா சார்.. முதலாளிதான் இப்படி மாத்தியிருக்காரு.. ஐ மீன்.. இப்ப.. இந்தக் கடையோட முதலாளியாய் இருக்கிற அர்ஜீன் சார்தான் இந்த மாற்றத்தைப் பண்ணியிருக்காரு...", என்று அனுதாபத்துடன் விளக்கினாள்...
தேவராஜனுக்கு முகத்தை எங்கே போய் வைத்துக் கொள்வது என்று தெரியவில்லை.. இப்படியா மறதி வரும் என்று தன்னைத்தானே அவன் நொந்து கொண்டான்...
'இந்தப் பாவனா சும்மாவே கிண்டல் பண்ணிச் சிரிச்சு வைப்பா.. இப்ப இத வேற சொல்லி வைச்சிருக்கேனா.. இன்னும் எத்தனை காலத்துக்கு இதை வைச்சே ஓட்டப் போறாளோ.. தெரியலையே...'
தேவராஜனின் முகமாற்றத்தைக் கவனித்தபடி தனக்குள் சிரித்துக் கொண்ட பாவனாவை விட்டுத் தொலைவில் ஓடிவிட அவன் மனம் துடித்ததுதான்.. ஆனால் அப்படி அவன் ஓடிவிட்டால்.. காவ்யாவைப் பற்றிய புதுவிவரங்களை அவன் அறிவதெப்படி..?
அதனால் எதுவும் நிகழாததைப் போல முகத்தை வைத்துக் கொண்டு
"ஏன் மாத்தினாரு..?" என்று கேட்டு வைத்தான்..
"ஏன்னா.. இப்ப காவ்யாதான அவருக்கு செக்ரட்டரி.. அதனால அவ சீட்.. அவரோட சீட்டுக்கு பக்கத்தில இருக்கிறதுதான் பெட்டர்ன்னு அவர் ஃபீல் பண்றார்..." என்றாள் பாவனா..
'பட்டரா..?' என்று கேட்கத்தான் வாயெடுத்தான் தேவராஜன்.. அவன் அதிகபட்ச படிப்பாக ஐந்தாம் வகுப்புவரை படித்தவன்.. கான்வெண்டில் படித்த துரியோதனனுக்கு.. இப்படிப்பட்ட மகன் வாய்த்து விட்டான்.. பள்ளிக்கூடம் அனுப்பி வைத்தால்.. கையைக் கிழித்துக் கொள்வேன் என்று துரியோதனை மிரட்டி வைத்திருந்த வீராதி வீரன் அவன்.. அதனால் மகனைப் படிக்க வைக்க முடியாத குறையை மகளைப் படிக்க வைத்து நிவர்த்தி செய்து கொண்டார் துரியோதனன்...
அப்படிப்பட்ட தேவராஜனிடம் பெட்டர் என்று சொன்னால் அவன் என்ன நினைப்பான்..? அது என்னவோ திண்பண்டம் போல என்றுதானே நினைத்து வைப்பான்..?
நல்ல வேளையாக.. அவன் நினைத்து வைத்ததை பாவனாவிடம் கேட்டு அவன் நோகடித்து விடவில்லை.. மாறாக எல்லாம் தெரிந்தவனைப் போல...
"ஏன் அப்படி நினைக்கிறாரு..." என்று தான் கேட்டு வைத்தான்...
"இன்னைக்கு என்ன.. இத்தனை 'ஏன்'களைக் கேட்கறிங்க தேவாசார்..? அர்ஜீன் சார் வெளிநாட்டில் படிச்சவர்.. சென்னையில் பிஸினெஸ் பண்றவர்.. அவருக்கு மதுரையைப் பற்றி என்ன தெரியும்..? இந்தக் கடையைப் பத்தித்தான் என்ன தெரியும்..? ஸோ.. இரண்டையும் தெரிந்த காவ்யாவை செக்ரட்டரியாக்கி அவளிடம் பவரைக் கொடுத்திருக்கார்..."
"பவரா..?"
"ஊம்.. பவர்தான்.. அர்ஜீன்சார் இல்லாத நேரங்களில் கடையோட பொறுப்பு இப்ப காவ்யா கைக்கு வந்திருச்சு..."
தேவராஜனுக்கு இது புதிய செய்தி.. ஏற்கனெவே அவன் கடையின் தற்போதய நிலவரங்களைப் பற்றிய செய்திகளைச் சேகரித்துத்தான் வைத்திருந்தான்...
அந்தச் செய்திகளே அவனுக்கு தலைவலியை வர வைத்திருந்தன.. இப்போது கேட்ட இந்தச் செய்தி அவனுக்கு நெஞ்சுவலியையே வரவைத்து விட்டது..
'அவன் இல்லாதப்ப கடையோட பொறுப்பு காவ்யா கையிலயா..? இதுக்கு என்ன அர்த்தம்...?'
அவனுக்குத் தெரிந்த அர்த்தம் ஒன்றே ஒன்றுதான்.. அது காவ்யாவுக்கு அர்ஜீன் ரூட் விடுகிறான் என்பது...
'பயபுள்ள... இதுக்குன்னே மதுரைக்கு வந்திருக்காண்டா...'
அவன் கைகளைப் பிசைந்தான்... அதை சுவராஸ்யமாக வேடிக்கை பார்த்தாள் பாவனா... அவளது பார்வையை உணர்ந்தவன் கைகளைப் பிசைவதை நிறுத்திவிட்டு..
"ஹி... ஹி..." என்று வழிந்தான்..
"இந்தச் சிரிப்பை காவ்யா இருக்கிறப்ப எங்கே ஒளித்து வைத்திருந்தீங்க தேவா சார்..?"
"ஹிஹி.. ஹி..ஹி..."
"போதும் சார்.. ஆபிஸைக் கூட்டித் துடைக்கிற சிந்தாமணி இப்பத்தான் வேலையை முடிச்சிட்டு...
வீட்iப் பார்த்து போயிருக்கா.. அவளத் திரும்பி வர வைச்சிராதீங்க..."
"ஏங்க அப்படிச் சொல்றீங்க..."
"நீங்க இந்த ஏங்கு ஏங்கி வழிஞ்சுவைச்சா.. ஆபிஸே ஈரமாகிறாதா..? அதைக் கழுவித்துடைக்க அவ வந்துதானே ஆகனும்..?"
"நீங்க ரொம்பக் குறும்பு..."
"ம்ஹீம்.. இதெல்லாம் லேடிஸ் சொல்ல வேண்டிய டயலாக்.. ஆமாம்.. எதுக்காக இப்ப நம்பியாரைப் போலக் கையைப் பிசைஞ்சீங்க..?"
"சும்மாதான்..."
"சும்மா இதையெல்லாம் பண்ணாம.. உங்க வீட்டுக்குப் போயி சமத்துப் பிள்ளையா.. உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட மாவைப் பிசைஞ்சு தரலாமே.. என்ன ஏகாம்பரம் சார்.. நான் சொன்ன ஐடியா எப்படியிருக்கு..?"
"சூப்பரா இருக்கு பாவனா.."
அவர்கள் இருவரும் அவனைப் பார்த்துக் கேலி செய்வதை தேவராஜன் உணர்ந்தான்.. இந்தக் காவ்யாக் கழுதையை மடக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு என்ற நினைவுடன் பல்லைக் கடித்தவன் திகைத்தான்...
அவனுக்கு எதிரே அமர்ந்து அவ்வளவு நேரமும் அவனைக் கேலி பேசி சிரித்துக் கொண்டிருந்த பாவனாவும்.. ஏகாம்பரமும்.. மிக மரியாதையான முகபாவனையுடன் எழுந்து நின்றார்கள்...
'என்னடா இது.. இம்புட்டு நேரமும் கூட்டுக் களவாணிக மாதிரி கூட்டுப் போட்டுக்கிட்டு என் காலை வாரிச்சுக.. இப்ப என்னடான்னா இம்புட்டு மரியாதையா எழுந்திருச்சு நிக்குதுக.. ஒருவேள மனசு திருந்திருச்சுகளோ.. என்னதான் இருந்தாலும்...
நமக்கு சம்பளம் கொடுத்த முதலாளியின் மகன்னு நினைச்சிருச்சுகளோ...'
அவன் மெய்சிலிர்த்து விட்டான்..
"எனக்கெதுக்கு இம்புட்டு மரியாதை பாவனா... பரவாயில்ல.. நீங்க கேலி பேசினத நான் மனசில வைச்சுக்க மாட்டேன்.. உக்காருங்க.. உக்காருங்க.." என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தபோது...
"ஹீ ஆர் யு..?" என்ற குரல் அவன் முதுகுக்குப் பின்னால் கேட்டது..
திடிரென்று கேட்ட ஆங்கில வார்த்தையில் அவன் திடுக்கிட்டு விட்டான்.. பாவனாவின் முன்னால் பதிலுக்கு ஏதாவது ஒரு ஆங்கில வார்த்தையைச் சொல்லியே ஆக வேண்டும் என்ற இக்கட்டில் மாட்டிக் கொண்டவன்.. அவனுக்குத் தெரிந்த ஒரே ஆங்கில வாக்கியமான..
"ஹீ இஸ் திஸ் பிளாக்ஷீப்...?" என்று பதிலுக்குக் கேட்டபடி பாவனாவை பெருமையுடன் பார்த்தான்...
பாவனா தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக முகத்தைச் சுளித்தாள்..
"முதல்ல திரும்பிப் பாருங்க தேவா சார்..."
அவளின் குரலில் இருந்த சலிப்பை உணர்ந்தவன்..
'ஏன் இப்படிச் சொல்றா..?' என்று எண்ணமிட்டபடி திரும்பிப் பார்த்தான்..
அங்கே மிடுக்காக.. கண்களில் கண்டிப்புடன் அர்ஜீன் நின்றுகொண்டிருந்தான்...
"யார் நீங்கன்னு கேட்டேன்..." அவன் குரல் அழுத்தமாக ஒலித்தது...
'ஓ.. இவன் அதைத்தான் கேட்டானா..?' தேவராஜன் அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு...
"ஏன்..? நான் யாருன்னு தெரிஞ்சா.. இந்தக் கடையை என் பெயருக்கு எழுதிக் கொடுக்கப் போறயா..?" என்று எரிச்சலுடன் கேட்டான்...
"ஸ்ஸ்.. தேவா சார்.. இவர்தான் கடையோட முதலாளி.." பாவனா இப்போது வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டாள்...
'அப்போ நான் யாரு...' என்று எண்ணமிட்டபடி.. நீதானா அந்த முதலாளி என்ற ஒர் கோபப்பார்வையை பார்த்தான் தேவராஜன்...
"பாவனா.. யார் இவர்..?" அர்ஜீன் முகம் சுளித்தான்...
"துரியோதனன் சாரோட சன் சார்.." பாவனா அவசரமாக பதில் சொன்னாள்...
'என்னமோ.. இவன் தான் முதலாளிங்கிறாப்புல தோரணை காட்டினானே.. இப்பத் தெரிஞ்சுக்கட்டும்.. நான் யாருன்னு.. இன்னைக்கு இவன் இந்தக் கடைக்கு முதலாளின்னா.. நான் நேத்தைய முதலாளி.. இவனுக்கே இவ்வளவு தெனாவெட்டு இருந்தா.. எனக்கு எவ்வளவு இருக்கும்...'
கெத்தாக பார்வையிட்டவனை புருவங்கள் சுருங்கப் பார்த்த அர்ஜீன் அடுத்து கேட்ட கேள்வியில் தேவராஜனுக்கு தூக்கிவாரிப் போட்டது...
"இவருக்கு இங்கேயென்ன வேலை...?"
ஒரே கேள்விதான்.. அந்த ஒரு கேள்வியில் பாவனாவின் முன்னால் தனது பிம்பம் தரைமட்டமாகி சரிவதை உணர்ந்தான் தேவராஜன்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -25
எங்கிருந்தோ ஆசைகள். -25
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-25.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-25.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy