எங்கிருந்தோ ஆசைகள்.. -23

23 சிறகை விரித்து உன்இதயத்திலே.. சிறகடிக்க ஆசைகொண்டேன்... சோபாவில் சரிந்து.. டீப்பாயின் மீது கால்களைத் தூக்கிப் போட்டு.. டிவியை...


23
சிறகை விரித்து உன்இதயத்திலே..
சிறகடிக்க ஆசைகொண்டேன்...


சோபாவில் சரிந்து.. டீப்பாயின் மீது கால்களைத் தூக்கிப் போட்டு.. டிவியையும் ஓடவிட்டு.. அதைப் பார்க்காமல் விட்டத்தில் தெரிந்த பல்லியை வெறித்துக் கொண்டிருந்தான் தேவராஜன்...
அவன் கையிலிருந்த ரிமோட்டைப் பார்வையிட்ட தேன்மொழி.. சின்னத்திரையில் என்னநிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது என்று பார்த்தாள்.. அங்கே புள்ளிமான் ஒன்று ஓடிக் கொண்டிருக்க.. அதைத் தொடர்ந்து புலி ஓடிக் கொண்டிருந்தது...
தேன்மொழியால் அதைப் பார்க்க முடியவில்லை.. அவளுக்கு வேறு சேனலில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டியிருந்தது.. சேனல் மாற்ற வேண்டுமானால்.. டிவியின் ரிமோட் அவள் கைக்கு வர வேண்டும்.. ஆனால் அதை தேவராஜனிடமிருந்து கைப்பற்ற வேண்டுமே...
அதற்கான ஒரே வழிமுறையாக.. உள் பக்கமாக திரும்பி...
"யம்மாவ்..." என்று சப்தமிட்டாள் தேன்மொழி...
"என்னடி..? எதுக்கு இப்படிச் சத்தத்தைப் போட்டு ஊரைக் கூட்டறவ..? அம்மா எங்கே போயிட்டேன்..? ஆட்டுக்குட்டி பின்னாலயா போயிட்டேன்...?" மகளைக் கடிந்தபடி வந்து சேர்ந்தாள் செல்வி...
"ஆட்டுக்குட்டியை விட்டுப்புட்டு அண்ணனைப் பாரு..."
தேன்மொழி கை காட்ட.. மகனைப் பார்த்த செல்வி திகைத்து விழித்தாள்.. டிவியைப் போட்டு விட்டு.. அதைப் பார்க்காமல் மகன் எதற்காக விட்டத்தில் ஓடும் பல்லியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற விவரம் அவளுக்குப் பிடிபடவில்லை...
"இவன் ஏண்டி.. ஆடு திருடின கள்ளனப் போல ஒரு மார்க்கமா முழிச்சுக்கிட்டு இருக்கான்..?" மகளிடமே விளக்கம் கேட்டாள்...
"அதையேன் கேக்கிற.. இது கொஞ்ச நாளா இப்படித்தான் இருக்குது.. எப்புடியோ இருந்துட்டுப் போகட்டும்ன்னு பாத்தா.. அதுக்கும் விட மாட்டேன்னு அடம் பிடிக்குது.." கடுப்புடன் சொன்னாள் தேன்மொழி...
"டிவியப் போட்டா.. அதைப் பாக்கனும்.. அத விட்டுப்புட்டு இவன் என்னத்துக்காக விட்டத்தில ஓடற பல்லியப் பாக்கறான்..?"
"ஊம்..? எல்லாத்தையும் எங்கிட்டயே கேளு.. ஏன்..? உன் மகன்கிட்ட இதயெல்லாம் கேக்க மாட்டியா..?"
"கேட்டாலும் அவன் சொல்லிட்டுத்தான் வேற சோலியப் பாப்பான்.."
"அதுக்கு..? நான்தான் உனக்குக் கிடைச்சேனா..?"
"நீதானடி அம்மான்னு அழச்சு.. அண்ணனப் பாருன்னு பிராது கொடுத்த..?"
"பிராது கொடுத்தவுன்ன நீ தீர்ப்பச் சொல்லிப்-புட்டியாக்கும்..?"
"உனக்கு இப்ப என்னதாண்டி வேணும்..?"
"உம்மகன்.. பல்லிய விரட்டட்டும்.. நான் வேணாம்ன்னு சொல்லல..."
"அடிப்பாவி.. அவன் உனக்கு அண்ணன்டி..."
"யாரு இல்லேன்னு சொன்னது..? அந்த நொண்ணன்.. டிவி ரிமோட்ட இந்தப் பக்கமா தள்ளிட்டு.. பல்லி விரட்ட நடத்தட்டும்..."
"என்னமோ மஞ்சு விரட்ட நடத்தட்டும்ங்கிறதப் போலயில்ல சொல்லி வைக்கிறவ..? எல்லாம் என் நேரம்டி.."
தலையில் அடித்துக் கொண்ட சொல்வி.. அதே கோபத்துடன் தேவராஜனின் முதுகிலும் அடித்து வைத்தாள்.. அந்த அடியில் சுரணை வரப் பெற்ற தேவராஜன்.. டிவியின் திரையைப் பார்த்து விட்டு...
"டிஸ்கவரி சேனலை யாரு போட்டு விட்டது..?" என்று சப்தம் போட்டான்...
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்ட தாய்.. மகள் இருவருக்கும் பற்றிக் கொண்டு வந்தது...
"எனக்கு நல்லா வந்திரும் வாயில.. ஏண்டா.. நீதான ரிமோட்ட கையில வைச்சிருக்க..? அத நீ போடாம.. வேற யாரு போடுவா..?" அதட்டினாள் செல்வி...
"ஒரு வேள.. விட்டத்தில ஓடற பல்லி வந்து போட்டிருக்குமோ..." தாயிடம் சந்தேகம் கேட்டாள் தேன்மொழி..
"ரிமோட்ட இங்க குடுடா..."
வெற்றிகரமாக அதைக் கைப்பற்றி.. மகளிடம் ஒப்படைத்தாள் செல்வி.. கோட்டையைப் பிடித்துக் கொடியை நாட்டி விட்ட சந்தோசத்துடன் சேனலை மாற்றினாள் தேன்மொழி...
தேவராஜன் எழுந்து கொண்டான்.. வண்டிச் சாவியை கையில் எடுத்தான்...
"எங்கேடா போற..?" என்று கேட்டாள் செல்வி..
"போறப்பயே எங்கேன்னு கேட்டு வைய்யி.. விளங்கிடும்..." எரிந்து விழுந்தான் தேவராஜன்...
"இவரு இந்த மதுரைச் சீமையை கட்டி ஆளப் போறாரு.. எங்கேன்னு கேட்டா வேல கெட்டுப் போயிரும்.." நொடித்துக் கொண்ட செல்வி...
"இந்தாப் பாரு.. வெளியே போனா.. எந்த வில்லங்கத்தயும் இழுக்காம வீட்டுக்கு வந்து சேரு.. அத விட்டுப்புட்டு.. எந்தக் களவாணிப்பய கூடாவாது சகவாசம் வைச்சுக்கிட்டு திரும்பவும் தொழில் பண்றேன்னு ஆரம்பிச்சேன்னு வைய்யி.. உங்கப்பா... மனுசனா இருக்க மாட்டாரு.. சொல்லிப்புட்டேன்.." என்று எச்சரித்தாள்...
"ஆமாம்.. இப்ப மட்டும் உன் புருசன் மனுசனாத்தான இருக்காராக்கும்..?" வெடுவெடுத்தான் தேவராஜன்...
"அவரு மனுசனா இருக்கப் போய்த்தான்.. நீ இழுத்து வைச்ச கடனை கடையை வித்து அடைச்சு முடிச்சாரு.. அதுக்கப்புறமும் நீ திருந்த மாட்டேங்கறியே..."
"அந்தக் கடையை யாரக் கேட்டு வித்தாரு..?"
"யாரைக் கேக்கனும்ப்பா..?"
"என்னக் கேட்டிருக்கனும்..?"
"உனக்குக் கடன் கொடுத்த மாமன் மச்சானுக.. உன்னக் கேக்கலியேடா தம்பி.. உன்ன விட்டுப்புட்டு.. உங்கப்பன் கழுத்தில இல்ல துண்டப் போட்டு இழுத்தாங்க..? ஆமா.. உனக்கு எதுக்குடா அந்தக் கடை மேல இம்புட்டு பாசம் கொப்புளிக்குது..? ஒருநா.. ஒரு பொழுது கூட.. அந்தக் கடையில உக்காந்து வியாபாரம் செய்திருக்க மாட்ட.. காலயில ஒருதரம்.. சாயந்திரம் ஒருதரம்ன்னு எட்டிப் பார்த்து.. வெட்டிப் பொழுதப் போக்கினதுக்கா இம்புட்டுப் பாசம்..?"
"யம்மாவ்.. நானே வயித்தெரிச்சலில இருக்கேன்.. நீவேற எரியற கொள்ளியில எண்ணய ஊத்தாத..."
"இதயெல்லாம் வக்கணயா பேசிரு.. அப்பன் சம்பாரிச்சு வைச்ச சொத்த மட்டும் கட்டிக் காப்பாத்தாம கோட்ட விட்டுரு..."
செல்வி சிடுசிடுத்துக் கொண்டிருக்க.. அதை லட்சியம் செய்யாமல் வெளியே வந்து.. வீட்டின் முன்புறமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த புல்லட்டைக் கிளப்பினான் தேவராஜன்...
அது என்னவோ.. புல்லட்டைத்தான் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.. ஊருக்குள் ஆயிரம் வண்டியிருந்தாலும்.. புல்லட்டின் மீது உட்கார்ந்து போனால்தான் தோரணயாயிருக்கிறது என்று அவன் நண்பர்களிடம் பெருமையடித்துக் கொள்வான்.. அந்த நண்பர்களும் அவன் வாங்கிக் கொடுக்கிற புரோட்டாவுக்கும்.. சால்னாவுக்கும் வேட்டு வந்து விடக் கூடாது என்ற பயத்தில் 'ஆமாம் சாமி' போட்டு வைப்பார்கள்..
அன்றும் அதைப் போல.. தோரணையுடன் இருக்கும் நினைவில்.. புல்லட்டில் ஆரோகணித்தான் தேவராஜன்.. அது நேராக காவ்யா வேலை பார்த்த கடையின் முன்னால் போய் நின்றது..
அவன் மனமறிந்து ஓடிச் சென்று இறக்கி விட்ட குதிரையைத் தட்டிக் கொடுப்பதைப் போல.. புல்லட்டையும் பிரியத்துடன் தட்டிக் கொடுத்து விட்டு கடைக்குள் பிரவேசித்தான் தேவராஜன்.. எதிர்ப்பட்ட கந்தசாமி.. வாயெல்லாம் பல்லாக...
"வாங்க... தம்பி..." என்று வரவேற்றார்...
"எப்புடி இருக்கிங்கண்ணே..." வரவழைத்துக் கொண்டே பாசத்துடன் விசாரித்தான் தேவராஜன்...
அதற்கு முன்னால் அவன் கந்தசாமியை 'அண்ணே' என்று விளித்ததில்லை.. அப்படிப்பட்டவனின் அன்பான அந்த அழைப்பில் நெக்குருகிப் போய் விட்டார் கந்தசாமி..
"நல்லா இருக்கேன் தம்பி.. ஐயா சௌக்கிய-முங்களா..?"
பதிலுக்கு துரியோதனனின் சௌகரியத்தைப் பற்றி கந்தசாமி விசாரித்து வைக்க.. நீயெல்லாம் நலம் விசாரிக்கும் அளவுக்கு நாங்கள் கீழே இறங்கி விட்டோமா என்று மனதுக்குள் கொதித்துப் போனாள் தேவராஜன்...
ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெள்ளந்திச் சிரிப்புடன்...
"அவருக்கென்னண்ணே.. நல்லாத்தான் இருக்காரு.. ஆனாலும் இந்தக் கடையோட ஞாபகம்தான் அவர விட்டு போக மாட்டேங்குது..." என்று பொய்யாக வருத்தப் பட்டான்...
"எத்தன வருசமா நடத்திக்கிட்டு வந்த கட... அவ்வளவு சீக்கிரமா மறந்துர முடியுமா தம்பி..?" கந்தசாமியும் சேர்ந்து வருத்தப்பட்டார்...
"ஆனாலும் பாருங்க.. வித்த கடப்பக்கம் அவரு எட்டிப்பாக்க முடியுமா..?" போலியாக இமை சிமிட்டினான் தேவராஜன்...
அவனுக்கு துக்கமாம்.. அதனால் கண் கலங்குகிறதாம்.. அதை மறைக்க.. ஐயா இமைகளைச் சிமிட்டி கண்ணீரை மறைக்கிறாராம்...
பவளக்கொடி நாடகத்தில் கூடக் காணக் கிடைக்காத இந்த அற்புதமான நடிப்பில் விழுந்து விட்டார் கந்தசாமி...
"முடியாதுதான் தம்பி.." என்று நாத்தழுதழுத்தார்...
"அதான்.. அவரு சார்பா.. தினமும் ஒருதரம் கடப் பக்கம் எட்டிப் பாத்துட்டு போகலாம்ன்னு வந்திருக்கேன்.." சோகமாக முகத்தை வைத்துக் கொண்டான் தேவராஜன்...
"இதுக்கு எதுக்கு தம்பி மனசு வருத்தப்படறிங்க..? இன்னைக்குத்தான் இது ஊரான் வீட்டுக்கட.. ஒரு காலத்தில இது உங்க கடதான தம்பி.. நீங்க நினச்சப்ப வரலாம்.. போகலாம்..", அவனைத் தேற்றினார் கந்தசாமி...
'யோவ்.. கடையை வித்து.. முழுசா மூணுமாசம்தான் ஆகுது.. அதுக்குள்ள இந்தக்கட.. ஒருகாலத்தில எங்க கடயா இருந்துச்சுன்னு நீ நாயம் பொளக்கிறயா..? கிழவா.. தனியா எங்கையில மாட்டினேன்னு வைய்யி.. அன்னைக்கு உனக்கு திருவிழாதாண்டி.. அன்னைக்கு பாப்ப.. இந்த தேவராஜனோட திருமுகத்த...'
மனதுக்குள் கந்தசாமியை திட்டியபடி.. வெளியே அவரைப் பார்த்து நன்றியுணர்வு பொங்க சிரித்து வைத்தான் தேவராஜன்...
"அப்புறம்.. கட எப்படியிருக்கு கந்தசாமி..?"
"முன்ன விட நல்லா யாவாரம் நடக்குது தம்பி..."
யதார்த்தமாக சொல்லி வைத்து விட்டு.. தேவராஜனின் பலத்த கண்டனப் பார்வைக்கு ஆளானார் கந்தசாமி...
'நான் அதயாய்யா.. கேட்டேன்.. காவ்யா எப்படியிருக்கான்னு கேட்டேன்.. கடவியாபாரம் ஓடினா எனக்கென்ன..? இல்ல குப்புறப் படுத்துக்கிட்டாத்தான் எனக்கென்ன..'
மனதுக்குள் அவன் அர்ச்சிப்பதை அறியாதவராக.. வெள்ளைச் சிரிப்புடன்.. தேவராஜனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் கந்தசாமி...
'சகிக்கலை.. இந்தக் கிழவன் முகத்தப் பாக்கவா இம்புட்டுத் தூரம் வந்தேன்..?'
"உள்ளார வாங்க.. தம்பி..."
'அப்பாடி.. ஒரு வழியா உள்ளே கூப்பிட்டுட்டான்..'
அதற்காகவே காத்திருந்த தேவராஜன்.. அரக்கப் பறக்க உள்ளே நுழைந்தான்...
'ம்ஹீம்.. எங்கப்பன் மட்டும் கடய விக்காம இருந்திருந்தா.. இந்தக் காவலாளிப்பய கூட நின்னு பேசியிருக்க மாட்டேன்.. இப்பப்பாரு.. இந்தக் கடக்குள்ள நுழைய இவன்தயவு தேவப்படுது.. இவனுக்கெல்லாம் குல்லாப் போட்டு.. ஜால்ராவத் தட்ட வேண்டியதா இருக்கு...'
பொருமியபடி உள்ளே நுழைந்தவன் புன்னகை மன்னனாகி.. என்னவோ.. தேர்தலில் நிற்கும் அரசியல்வாதி ஓட்டுக் கேட்டு வந்திருப்பதைப் போல.. எல்லோருக்கும் பொத்தாம் பொதுவாக கரம் குவித்தபடி..
"நல்லாயிருக்கியா இளங்கோ.. நல்லாயிருக்கியா குமாரு..." என்று நலம் விசாரிக்க ஆரம்பித்தான்...
அவர்களும் மகிழ்ந்து போய் அவனிடம் பதிலுக்கு நலம் விசாரித்தார்கள்.. அப்படியே நகர்ந்து போய்.. காவ்யாவின் முன்னால் நின்றான் தேவராஜன்..
'அப்பாடி.. ஒரு வழியா வந்து சேந்துட்டேன்..' அவனுக்கு மூச்சு வாங்கியது...
"எப்படியிருக்கீங்க காவ்யா..?" கண்களில் காதல் வழிய அவன் கேட்டதற்கு...
"அப்படியேதான் இருக்கேன்.." என்று வெடுக்கென்று பதிலைச் சொன்னாள் காவ்யா...
'ம்ஹீம்.. உலகத்தில எது மாறினாலும்.. இவ மட்டும் மாறவே மாட்டா...'


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.. -23
எங்கிருந்தோ ஆசைகள்.. -23
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-23.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-23.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy