எங்கிருந்தோ ஆசைகள்.. -22

22 உன் மனதின் பெட்டகத்தில்... ஒளிந்து கொள்ள ஆசைகொண்டேன்... அது உரிமை கொண்ட பார்வை...! அப்படிப்பட்ட பார்வையினை ஒரு கணவன்தான் ப...


22
உன் மனதின் பெட்டகத்தில்...
ஒளிந்து கொள்ள ஆசைகொண்டேன்...


அது உரிமை கொண்ட பார்வை...!
அப்படிப்பட்ட பார்வையினை ஒரு கணவன்தான் பார்த்து வைப்பான்...
'என்னைப் பற்றி எப்படி நீ உன் அண்ணனிடம் சொல்லலாம்...?' என்று அர்ஜீனின் பார்வை காவ்யாவிடம் கேட்டதை கண்ணதாசன் கண்டுபிடித்து விட்டான்...
அது அவனுக்கு உவப்பானதாக இல்லை...
அவன் பண்பட்டவன்.. பெரியவர்கள் கூறியப் பழமொழிகள் வாழ்க்கையை உணர்த்துபவை என்பதை புரிந்து வைத்திருப்பவன்..
'எட்டாத பழத்திற்கு கொட்டாவி விடாதே...'
'உயர உயரப் பறந்தாலும்.. ஊர்க்குருவி பருந்தாகி விட முடியாது..'
'அகலக்கால் வைக்காதே...'
இதையெல்லாம் வாழ்ந்து பார்த்தவர்கள்.. பின்னால் தொடர்ந்து வரும் தலைமுறையினர்க்கு சொல்லிச் சென்றிருந்தார்கள்.. அவற்றில் உள்ள அர்த்தங்களை புரிந்து வைத்திருந்தவன்தான் கண்ணதாசன்.. அர்ஜீனின் பார்வை ஒரு முதலாளியின் பார்வையைப் போல இல்லாமல் ஒர் விதமான சொந்தத்துடன் காவ்யாவின் மீது படிந்ததை கண்ணதாசன் விரும்பவில்லை...
எட்டாக்கனிக்கு ஏன் ஆசைப்பட வேண்டும் என்பதுதான் அவனுடைய எண்ணமாக இருந்தது.. அர்ஜீன்தான் காவ்யாவை உரிமையோடு பார்த்தான்.. காவ்யா அப்படிப் பார்க்கவில்லை என்பதும் அவன் மனதில் பதிந்திருந்தது...
அவள் இயல்பாக பணக்கட்டுக்களை எடுத்து அர்ஜீனின் முன்னால் வைத்துக் கொண்டிருந்தாள்.. அர்ஜீனிடம் பணத்தை ஒப்படைத்து விட வேண்டுமென்ற பரபரப்பு மட்டுமே அவளிடம் அப்போது தென்பட்டது.. அர்ஜீனின் பார்வையை அவள் சந்திக்கவே இல்லை..
'இந்தக் கடையில காவ்யாவ வேலைக்கு அனுப்பக் கூடாது...'
அப்போதே முடிவெடுத்து விட்டான் கண்ணதாசன்.. மாலையில் அவளை அழைத்துக் கொண்டு போக அவன் சென்ற போது.. அர்ஜீனின் முகத்தில் தெரிந்த சன்னமான பொறாமையுணர்வு இவன் மனதில் சஞ்சலத்தை விதைத்தது..
'எந்தங்கச்சிய நான் கூப்பிட்டுக்கிட்டுப் போனா.. இவனுக்கென்ன வந்தது..? என்னவோ இவன் சொத்தை கொள்ளையடிச்சுக்கிட்டுப் போகிறவனப் பாக்கிறதைப் போல பாத்து வைக்கிறானே.. ஊஹீம்.. இவன் பார்வையே சரியில்ல...'
அர்ஜீனுக்காக தங்கையின் சுதந்திரத்தைப் பறித்து அவளை வீட்டோடு முடக்கவும் கண்ணதாசன் பிரியப்பட வில்லை.. அப்படி மட்டும் அவன் செய்து விட்டால்.. இப்போது ஒதுங்கிப் போகும் அவன் தங்கை.. ஆயுள் முழுவதும் அவனை அண்ணனென்றே ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கி வைத்துவிடுவாள் என்பதால் அவன் கவலையுடன் வேறு மார்க்கத்தைக் குறித்த சிந்தனையில் ஆழ்ந்தான்.. அவனுடைய அதிகார பலத்தைப் பயன்படுத்தி விசாரித்தபோது.. அவனுக்குப் பழக்கமான ஒருவர் நடத்தும் மில்லில் அலுவலகப் பிரிவில் வேலை ஒன்று காலியாக இருப்பது அவனுக்கு தெரிய வந்தது.. உடனடியாக அந்த மில் முதலாளிடம் பேசினான்...
"உங்க தங்கைங்களா சார்..? தாராளமா வரட்டும்.. நம்ம மில்லில் சாரோட தங்கச்சிக்கு வேலை கொடுக்கிறதில எனக்கும் ஒரு கௌரவம்..." என்று அவர் சொல்லிவிட்டார்..
அங்கே காவ்யா வேலைக்குப் போனால்... கண்ணதாசனின் தங்கையென்ற தனிக் கவனிப்பும்.. கூடுதல் மரியாதையும்... பாதுகாப்பும் கிடைக்கும் என்பதினால்தான் கண்ணதாசன் தங்கையிடம் அந்த வேலையைப் பற்றிப் பேசினான்.. அதை தங்கை வரவேற்பாள் என்றுதான் அவன் நினைத்தான்.. இப்படித் தயக்கம் காட்டவாள் என்று நினைத்துப் பார்க்கவில்லை.. அதைவிட அவளுக்கு ஆதரவாக அன்னபூரணி களம் இறங்குவாள் என்று கொஞ்சம் கூட அவன் நினைத்துப் பார்க்கவில்லை...
ஆளுக்கொரு யோசனையுடன் அண்ணனும்.. தங்கையும் சாப்பிட்டு விட்டு எழுந்து கொண்டனர்.. அதுவரை வேறு ஏதோ யோசனையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிவதாணு.. மகன் எழுந்து கொள்வதைக் கண்டதும் அவசரமாக..
"என்ன முடிவு பண்ணியிருக்கப்பா..?" என்று கேட்டார்...
காவ்யாவின் கல்யாணத்தைப் பற்றித்தான் அவர் கேட்கிறார் என்று நினைத்துவிட்ட கண்ணதாசன்..
"பார்க்கலாம்ப்பா.." என்றான்..
"என்னது..? பாக்கலாமுன்னா சொல்ற.. படிக்கலாமுன்னு சொல்லுப்பா.." மகனைத் திருத்தினார் சிவதாணு..
"படிக்கலாமா..?" புருவங்களை உயர்த்தினான் கண்ணதாசன்..
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. அதற்குள் சமையலறையிலிருந்து வெளியே வந்த அன்னபூரணி கணவரை அனல் பார்வை பார்த்தாள்...
"ஏம்ப்பா.. இவரு என்ன.. மக கல்யாணத்தப் பத்திக் கேக்கிறாருன்னா நினைச்சே..?" என்று மகனைப் பார்த்துக் கேட்டாள்..
"ஆமாம்மா.. அதப் பத்தித்தான் இப்ப நாம பேசிக்கிட்டு இருந்தோம்..?" என்றான் கண்ணதாசன்..
"நீ வேற.. அதெல்லாம் இந்த மனுசன் காதில ஏறாது.. எப்பப் பாரு.. திருக்குறளு.. திருக்குறளுதான்.. என்னமோ குறளோவியம் வரையப் போகிறவரப் போலத்தான் மனசுக்குள்ள நினப்பு.. இப்பவும் அதப்போலத்தான் எதையாச்சும் பேசி வைக்கப் போறாரு.. இப்படியாப்பட்ட மனுசனை வைச்சுக்கிட்டு எப்படித்தான் எம்பொண்ண கரைசேக்கப் போறேனோ.. அது அந்த ஆத்தா மகமாயிக்குத்தான் தெரியும்..."
"இல்லம்மா.. அப்பா நம்ம காவ்யா கல்யாணத்தப் பத்தித்தான் கேக்கிறாரு..."
"வீணா நம்பிக்கை வைக்காதேடா தம்பி.. இன்னுமா உங்கப்பாவப் பத்தி நீ புரிஞ்சுக்கல..?"
"எல்லாம் புரியும்மா.. ஆனா.. இம்புட்டு நேரமா.. அப்பா முன்னாலதானே நாம பேசிக்கிட்டு இருந்தோம்...? அப்படியிருக்கிறப்போ.. அப்பா அத விட்டுட்டு வேற பேச்சப் பேசுவாருன்னு எனக்கென்னவோ தோணலம்மா.."
"அப்படிங்கற..? இரு.. உன் ஆசையைக் கெடுப்பானேன்.. நீயே உங்கப்பா வாயாலே இவரு என்னதான் சொல்ல வந்தாருங்கிறதக் கேட்டுத் தெரிஞ்சுக்க.. ஏங்க.. இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க..?"
"என்ன பூரணி இப்புடிக் கேட்டுப்புட்ட..?"
"நான் கேக்கல.. உங்க மகன் கேக்கிறான்.. உங்க புத்தியத் தெரிஞ்சும் உங்ககிட்ட கேணச்சியப் போல கேள்வியக் கேட்டு வைக்க.. எனக்கென்ன கிறுக்கா புடிச்சிருக்கு..?"
"எதுக்குடி இம்புட்டுக் கோவம் கோவிச்சுக்கிறவ..? நான் என்னத்த சொல்லிப்புட்டேன்.. நம்ம கண்ணன் பெரிய ஆபிசரு..."
"அதுக்கு..?"
"அவன் தினமும் ஒரு திருக்குறளப் படிச்சுட்டுப் போயி ஆபிசில சொல்லி வைச்சா.. குறளு பரவும்ல்ல.."
சிவதாணு எடுத்துச் சொல்லச் சொல்ல.. அன்னபூரணி கேலிப் பார்வையுடன் மகனைப் பார்த்தாள்..
"கேட்டுக்கப்பா.. என்னவோ உங்க அப்பா.. பொறுப்பில பருப்பு கடையறவர்ன்னு சொன்னியே.. இதான் இவரோட பொறுப்பு.."
"அப்பா..."
தாளமாட்டாமல் பற்களை நறநறத்தான் கண்ணதாசன்.. தங்கையின் திருமணத்தைப் பற்றித் தாயார் அதீத கவலை கொள்வதற்கான அடிப்படைக் காரணம் என்னவென்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது...
'ம்ஹீம்.. இப்படியாப்பட்ட அப்பாவுக்கு வாழ்க்கைப் பட்டா.. என் அம்மாவுக்கு.. பெத்த மக வாழ்க்கையைப் பத்திக் கவலை வராம என்ன செய்யும்..?'
"என்னப்பா.." மகனிடம் ஆவலாக பேச ஆரம்பித்தார் சிவதாணு...
"திருக்குறள் உலகப் பொது மறைப்பா..."
"ஆஹா.. உனக்காவது அதோட அருமை புரிஞ்சிருக்கே.."
"உலத்துக்கே புரியும்.. அதனால..."
"அதனால..?"
"நீங்களும்.. நானும் பரப்பித்தான் அது பரவனும்னு இல்ல.. குறளை விட்டுப்புட்டு குடும்பத்தைக் கவனிங்க.."
"அதுக்குத்தான் நீ இருக்கியேப்பா..."
இலகுவாக சிவதாணு இல்லறப் பிரச்னைகளிலிருந்து கழன்று கொள்ள.. இப்படிப்பட்ட தகப்பனுக்காக வள்ளுவர் என்ன குறளை எழுதி வைத்திருக்கிறார்.. என்று யோசித்தபடியே மாடிக்குப் போனான் கண்ணதாசன்..
அங்கே பால்கனியில் நடைபழகிக் கொண்டிருந்தாள் காவ்யா... கண்ணதாசன் திரும்பிப் பார்த்தான்.. அன்னபூரணி கணவருக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்...
இப்போதைக்கு அன்னபூரணியின் கவனம் மாடிப் பக்கம் திரும்புவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்ற நிம்மதியோடு காவ்யாவை நோக்கிப் போனான் கண்ணதாசன்..
"காவ்யா..."
சில்லென்ற.. இரவு நேரத்தின் இதமான காற்றில் உலாவிக் கொண்டிருந்த காவ்யா நின்றாள்...
"அண்ணே..."
அவளருகில் வந்த கண்ணதாசனின் பார்வை அவளைத் துளைத்தது.. அது ஏனென்று புரியாமல் அப்பாவியாக விழித்து வைத்தாள் காவ்யா.. அதைக் கண்ட கண்ணதாசனின் முகம் கனிந்தது...
"நீ சின்னப்பொண்ணு காவ்யா.."
"நான் மட்டும் கிழவின்னா என்னச் சொல்லிக்கறேன்..?"
"அதுக்காக இல்லம்மா.. உனக்கு நல்லது கெட்டது தெரியாது.."
"அப்படின்னு நீ நினைச்சுக்கிட்டு இருக்க..."
"எனக்கென்னவோ அந்தக் கடைக்கு நீ வேலைக்கு போறது சரியில்லன்னு தோணுதும்மா..."
"ஏண்ணே..?"
இந்தக் கேள்விக்கு கண்ணதாசன் என்ன பதிலைச் சொல்லுவான்..? உன்னை உன் புது முதலாளி பார்க்கும் பார்வை சரியில்லை என்றா சொல்ல முடியும்..? அப்படிச் சொன்னால்.. விகல்பமில்லாத காவ்யாவின் மனதில் விகல்பத்தை விட்டதாக ஆகி விடாதா..?
"என்னவோ தெரியலம்மா.. என் மனதுக்கு திருப்தியா இல்ல..."
"பிடிச்ச வரைக்கும்தான் நானும் வேலைக்குப் போவேன்.. உனக்கு என் குணம் தெரியுமில்ல..? வீணா மனசைப் போட்டு உழட்டிக்காதண்ணே.. இங்கேன்னா பாவனா இருக்கா.. பழகின மக்க.. மனுசங்க.. இருக்காங்க.. புதுசா ஒரு இடத்தில வேலைக்குப் போனா.. எல்லா மனுசங்களும் புதுசாத்தான் இருப்பாங்க.. யாரு குணம் எப்படியிருக்கும்ன்னு யாரு கண்டது..? பாத்துத்தான பேசிப் பழகியாகனும்..?"
'ஓ... இதனால்தான் தங்கச்சி அப்படித் தயங்கினாளா..?' கண்ணதாசனின் மனம் நிம்மதியானது..
"பாவனா  மாதிரி ஒருத்தியத் தேடிப் பிடிக்க முடியாதுண்ணே... எப்புடியும் ஒருநாளைக்கு என்னக் கல்யாணம் கட்டிக் கொடுத்துப்புடுவீங்க.. அதர்கப்புறம் நான் என் கூடப் பழகின அத்தனை சிநேகிதத்தையும் மறந்துதான் ஆகனும்.. அதுவரைக்கு-மாவது கிடைச்சிருக்கிற இந்த சிநேகிதத்தைப் பிரியாம இருக்கேனே..."
காவ்யாவின் வார்த்தைகளில் இருந்த உண்மையில் மனம் நெகிழ்ந்தான் கண்ணதாசன்.. அவனுடன் ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரிவரை ஒன்றாகப் படித்த ஐந்து சிநேகிதர்கள் இருந்தார்கள்.. அவனுடன் சேர்ந்து அறுவராக  ஆனவர்கள் அடிக்கடி ஒன்று கூடிப் பேசுவார்கள்.. சினிமாவுக்கு போவார்கள்.. வெளியூர்களுக்கு சுற்றுலுhவாக போய் வருவார்கள்.. அவற்றுக்கெல்லாம் அவன் வீட்டில் அனுமதி கேட்க வேண்டியதே இல்லை.. இன்ன இடத்திற்கு போய் வருகிறேன் என்ற செய்தியைச் சொன்னால் போதும்..
காவ்யாவுக்கு அப்படியில்லை.. அவள் வேலையிலிருந்து திரும்பி வர.. சில நிமிடங்கள் தாமதமாக ஆனாலும்.. அவள் அதற்கான விளக்கத்தைச் சொல்லியாக வேண்டும்.. பிறந்த வீட்டிலேயே இந்த நிலைமை எனும் போது.. புகுந்த வீட்டில் அவள் நிலைமை இன்னும் அதிகமான நெருக்கடியில்தானே இருக்கும்..?
அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவள் நட்புக்களைத் தேடிப் போய் பேசிப் பழக முடியுமா..?
நட்பு என்பது கடவுள் கொடுத்த வரம்..! என்ன ஒன்று... அந்தவரம் ஆண்களுக்கு மட்டுமே சொந்தமானதாக ஆகிவிட்டது.. பெண்களுக்கு அது நிலைத்து நிற்பது என்பது கனவுதான்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.. -22
எங்கிருந்தோ ஆசைகள்.. -22
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-22.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-22.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy