எங்கிருந்தோ ஆசைகள்.. -20

20 அடித்தாலும்... பிடித்தாலும் - உன்.. அருகிலிருக்க ஆசை கொண்டேன்.. துரியோதனனின் கடையொன்றும் காவ்யா சொன்னதைப் போல... ஓட்டை உடைசல...


20
அடித்தாலும்... பிடித்தாலும் - உன்..
அருகிலிருக்க ஆசை கொண்டேன்..


துரியோதனனின் கடையொன்றும் காவ்யா சொன்னதைப் போல... ஓட்டை உடைசலாய் இருக்க வில்லை... அது கம்யூட்டர்களை விற்பனை செய்யும் கடை.. முழுவதுமாக ஏஸி செய்யப்பட்டு.. ஒவ்வொரு அங்குலத்திலும் நவீனத்தை பிரதிபலித்த கடை.. அந்தக் கடையைத்தான் ஓட்டை.. உடைசலான கடையென்று காவ்யா சொன்னாள்...
'இந்தக் கடை ஓட்டைக் கடையா..?'
அர்ஜீனுக்குள் சுர்ரென்று கோபம் மூண்டது... அந்தக் கடையை வாங்க எத்தனை கோடி பணம் கொடுத்தானென்று அவனுக்குத்தானே தெரியும்..?
"நீ சொன்ன இரண்டு மேட்டரில ஒன்று மட்டும் தான் உண்மை..", முகச்சுளிப்புடன் சொன்னான் அவன்...
"எந்த உண்மையைக் கண்டுட்டிங்க..? எந்தப் பொய்யைக் கண்டு புடிச்சிட்டிங்க..?"
"இந்தக் கடை ஓட்டைக் கடையில்லை.. இந்த ஸ்ட்ரீட்டிலேயே அழகா டெகரேட் பண்ணியிருக்கிற கடை இது ஒன்னுதான்.. மத்ததெல்லாம் மதுரையைப் போல அரதப் பழசு.."
"ஓஹோ.. பழமையின் பெருமையைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்..? வைகை ஆத்தில வெள்ளம் கரை புரண்டு ஓடினாலும்.. எங்க மதுரை அசராது...
இது கோவில் நகரம்.. எங்கிட்டுப் பாத்தாலும் தெய்வங்கள் குடியிருக்கும் ஊரு.. எங்க ஊரு சித்திரைத் திருவிழாவைப் பாத்திருக்கீங்களா...? பாத்திருந்தா எங்க
பழமையோட பெருமையைத் தெரிஞ்சிருக்கும்.. எங்கே..? அதையெல்லாம் பார்க்காம வெறும் வாய் பந்தலிலேயே ஆளை மிரட்டனும்னு நினைக்கிறவங்ககிட்ட எங்க ஊரு பெருமையைப் பத்தி என்னத்தப் பேசறது..? ஒத்தரூபாய்க்கு இட்லி வாங்கினா.. அதுக்கு தொட்டுக்க ஏழு சட்னி கொடுக்கிற ஊரு இந்த ஊரு.. இதெல்லாம் பழமையானதுதான்னா.. அந்தப் பழமையே எங்களுக்குப் போதும்.. புதுமை வேண்டவே வேண்டாம்..."
"அதை மட்டும் சொல்லலை.. நீ சொன்ன ஸ்டேட் மென்டில இரண்டாவதாய் சொன்னது முக்காலும் உண்மைன்னு சொல்றேன்..."
"நீங்க பெரிய உண்மை விளம்பிதான்.. அப்படிக் கண்டுபுடிச்ச உண்மையை புட்டுப்புட்டு வையுங்க.. பார்ப்போம்..."
"அதுதான்.. நீ ஒன்னுக்குமத்த செக்கரட்டரியாய் வேலை பார்க்கிறேங்கிற உண்மை..."
அர்ஜீன்.. நிறுத்தி நிதானமாக.. ரசித்துச் சொல்லிய விதத்தில் காவ்யாவின் முகம் சிவந்து விட்டது...
'இது கோபச் சிவப்பு...' மனதுக்குள் கோபத்துடன் நினைத்துக் கொண்டான் அர்ஜீன்...
"அந்த ஒன்னுக்குமத்த செக்கரட்டரி வேலையைப் பார்த்தே தீரனும்னு இங்கே யாரும் தவ்விக்கிட்டு இல்லை.. இப்பவே வேலையை விட்டுப் போறதானாலும்.. நான் ரெடியாத்தான் இருக்கேன்..."
'நீ அதுக்கு மட்டும்தான குதித்துக்கிட்டு நிற்ப..' அர்ஜீனுக்குள் எரிச்சல் வந்தது...
"என்ன.. இதைச் சொல்லியே என்னை பிளாக் மெயில் பண்ணப் பார்க்கறியா..?"
"நான் எதையும் பார்க்கலை..."
"என்னைப் பார்க்கலியா..?"
அர்ஜின் சட்டென்று கேட்டு விட்டதில் காவ்யாவின் முகம் குங்குமமானது...
'இது வெட்கச்சிகப்பு..' அர்ஜீனின் மனதில் தென்றலடித்தது.. அதுவரை நுகராத மல்லிகையின் வாசனையை அப்போது தான் அவனது நாசி உணர்ந்து நுகர ஆரம்பித்தது..
'மதுரை மல்லிகைக்கு மணம் அதிகம்தான்..' என்று நினைத்தவன்..
'மல்லிகைக்கு மட்டுமா அழகு அதிகம்.. இவளுக்கும் தான்..' என்று சேர்த்து நினைத்துக் கொண்டான்...
"தேவையில்லாம பேச வேணாம் சார்.." காவ்யாவின் மூக்கின் நுனி சிவந்து விட்டது..
'இவ லேடி ஹிட்லரோ...?'
எல்லோருக்கும் பட்டப் பெயரை வைக்கும் அவளுக்கே ஒரு பட்டப்பெயரை மனதுக்குள் வைத்து விட்ட நினைவில் அர்ஜீன் லேசாக சிரித்து வைத்தான்...
'இவனுக்கென்ன கிரிடமா சூட்டியிருக்கேன்.. இப்புடிச் சிரிச்சு மகிழ்ந்து போறானே...'
அவனை அவள் பார்வையிடுவதைக் கணித்து.. அதை நேரடியாக அவன் சொல்லியும் வைத்ததில் கடுப்பாகி விட்டிருந்தாள் காவ்யா...
அவனை இரண்டில் ஒன்று பார்த்து விடவேண்டும் என்ற வெறி அவளுக்குள் மூண்டு விட்டிருந்தது..
'இவன் என்னத்தைச் செய்து கிழிச்சுருவான்... மிஞ்சிப் போனால் வேலையை விட்டுப் போ என்பான்.. அவ்வளவுதானே... போடா நீயுமாச்சு... உன் வேலையுமாச்சுன்னு டாட்டா காட்டிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதானே...'
அவள் நேரடியாக முறைத்ததில் அவன் சிரிப்பு மறைந்து புருவங்கள் மேலே ஏறின...
'இப்போ எதைச் சொல்லப் போறா..? லேடி ஹிட்லர்ன்னு நான் மனதுக்குள்ளதானே நினைச்சேன்..?'
"இது மதுரை சார்..."
'இதையே எத்தனைதரம் சொல்லுவா..?'
"நான் மதுரைக்காரி..."
'ஆஹா.. அருமையான டயலாக்.. இது வரைக்கும் நானும் மதுரைதாண்டா என்கிற டயலாக்கை கேட்டுக் கேட்டு அலுத்தே போயிருந்தது.. இது புதுசா இருக்கே..'
அவளே அவனுக்குப் புதிதாகத்தான் இருந்தாள்.. அவள் கோபப்பட்டாலும் அவனுக்கு அவளைப் பிடித்திருந்தது.. வெட்கப்பட்டால் அதைவிட அதிகமாக பிடித்திருந்தது.. அதை அறியாதவளாக அவனுடன் மல்லுக்கு நின்று கொண்டிருந்தாள் காவ்யா...
"இந்த ஓரக்கண்ணால பார்க்கிறது.. கள்ளச்சிரிப்பு சிரிக்கிறது.. இதெல்லாம் என்கிட்ட வேணாம்..."
'வேறு யாரிடமும் வைத்துக் கொள்ள எனக்கு விருப்பமில்லை.. அதுக்கு இப்ப என்னாங்கிற..?'
அவள் பேசிய பேச்சுக்கெல்லாம் அவன் அசைந்து கொடுக்காமல் அவளையே ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்ததில் அவளின் படபடப்பு அதிகமானது...
"எங்க ஊரில் தானாச் சிரிச்சுக்கிட்டு இருக்கிறவங்களுக்கு வேற பேரை வைச்சுருவாங்க..."
"என்னன்னு வைப்பாங்க..? பைத்தியம்ன்னா..?"
அவன் நிதானத்தைக் கைவிடாமல் கேட்டதில் அவளுக்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியவில்லை.. கோபத்தை வெளிக்காட்டும் வகை தெரியாமல் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தாள்..
"பார்த்து.. சேர் உடைஞ்சிரப் போகுது.." அவன் அக்கறைப்பட்டான்...
"அப்படி உடைஞ்சிட்டா அதுக்கான பணத்தை என் சம்பளத்தில கழிச்சுக்கங்க.." அவளுக்கு அதற்கும் கோபம் வந்தது...
"எதற்கு இத்தனை கோபம்..?" அவன் விசாரித்தான்..
"என் அண்ணனுக்கும் எனக்கும் ஆயிரம் இருக்கும்.. அது என் சொந்த விசயம்.. அண்ணன் தங்கை பாசத்தைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்..?" அவள் படபடத்தாள்..
"தெரியாதுதான்.." உடனடியாக அவன் அதை ஒப்புக்கொண்டான்..
"ஆனா.. அக்கா.. தம்பி பாசத்தைப்பத்தி எனக்குத் தெரியும்.. உடனே உனக்கு அது தெரியாதுன்னு நான் சொல்லிக்காட்டினா நல்லா இருக்குமா..?"
"ஓ.. சாரைப் பத்திச் சொன்னதுமே ரோசம் பொத்துக்கிட்டு வந்துருச்சோ..? இதைப் போலத்தானே எனக்கும் இருக்கும்..?"
"நீ ரோசப்படு.. யாரு வேண்டாம்ன்னு சொன்னது..?"
"அட..! அதைக்கூட நீங்க சொல்லிருவீங்களோ.."
"இப்ப 'அட'ன்னு யாரைச் சொன்ன..? என்னைத்தானே..."
அவன் மடக்கியதில்.. 'ஆமாண்டா.. அப்படித்-தாண்டா.. உன்னைத்தாண்டா.. அடேய்ன்னு சொன்னேன்டா..' என்று சொல்லும் ஆசை அவளுக்குள் மிகுதியானது..
அதைச் சொல்ல முடியாத கோபத்துடன் கம்யூட்டரின் கீபோர்டை அவள் படபடவென்று தட்டலானாள்... அந்த வேகத்தில் கம்யூட்டரும் ஆடியது..
"இதை உடைச்சிட்டா.. இதுக்கான பணத்தைக் கழிக்க நீ ஆறுமாதவாது வேலை செய்ய வேண்டியிருக்கும்.." என்றான் அர்ஜீன்..
அவள் எரிப்பதைப் போல அவனைப் பார்த்தாள்...
"அப்படி மட்டும் நினப்பு வைச்சுராதீங்க சார்.. ஒரு நொடியில இதுக்கான பணத்தை என் அண்ணன் கட்டிரும்..", என்று பார்வையால் அவனைச் சுட்டாள்...
'திரும்பவும் அண்ணனா..?' அவன் புருவங்கள் சுருங்கின..
"இப்ப எதுக்குத் தேவையில்லாம உன் அண்ணனைப் பேச்சில இழுக்கிற..?"
"எனக்கு என் அண்ணனின் பேச்சுத்தான் எப்பவும் தேவை.. நானாவது என் அண்ணனுக்கு கூடப் பொறந்தவ.. அது பேச்சை இழுக்கறேன்.. அதுக்கு நீங்க யாரு..? சம்பந்தமேயில்லாம நீங்க எதுக்காக என் அண்ணனின் பேச்சை இழுத்தீங்க...?"
"உன் அண்ணன்தான் சம்பந்தமேயில்லாம என் ஆபிஸ் அட்மினிஸ்ட்ரேசனில் மூக்கை நுழைத்தார்..."
"அதுக்கு..? என் வீட்டு விவகாரங்களில் நீங்க மூக்கை நுழைப்பீங்களா..?"
"உன் வீட்டு விவகாரத்தில் நான் மூக்கை நுழைத்தேனா..? இது என்ன புதுப்பழி..?"
"நீங்கதானே கேட்டிங்க.."
"என்ன கேட்டேன்..?"
"உனக்கு உன் அண்ணனை அவ்வளவாப் பிடிக்காதாமேன்னு நீங்க கேட்கலை..?"
"ஆமாம் கேட்டேன்.. அதுக்கென்ன இப்ப..? உன்னைப் பத்தித்தானே கேட்டேன்..? உன் வீட்டைப் பற்றிக் கேட்கலையே..."
இவன் புரிந்துதான் பேசுகிறானா என்றிருந்தது காவ்யாவிற்கு.. அவளுடைய அண்ணனைப் பற்றி அவளின் தோழியிடம் விசாரித்திருக்கிறான்.. இது வீட்டைப் பற்றிக் கேட்பதாகாதா..?
"நான் வேற.. என் வீடு வேறயா..?"
"கமான் காவ்யா.. நீயென்ன குழந்தையா..? ஓட்டுப் போட்டு ஒரு கவர்ண்மென்டையே எலக்ட் பண்ணி செலக்ட் பண்ற வயது வந்தாச்சு.. இப்பப் போயி நீ தனி மனுஷி இல்லைங்கறியே..."
"திரும்பத்திரும்ப என்னைச் சொல்ல வைக்கறிங்க சார்.. இது மதுரை.. இங்கே வந்து தனி மனித சுதந்திரத்தைப் பத்திப் பேசாதீங்க.. நிலாவைக் காட்டி அம்மா சோருட்டினப்போ.. குடும்பத்தைப்பத்தியும்.. அதோட பிணைப்பைப் பத்தியும் சேத்துத்தான் ஊட்டி வளர்த்திருக்கு.. நாங்கள்ளாம்.. அம்மா.. அப்பா.. அண்ணன்.. தங்கை.. அப்பத்தா.. அம்மத்தா.. தாத்தா.. பாட்டன்னு கூடி வாழற ஆளுக.. அதனால நீ ஓட்டுப் போடற.. அதனால ஓட்டுறவே இல்லாம வாழப்பாருன்னு அறிவுரை சொல்ற வேலையெல்லாம் இங்கே வேணாம்.. நாங்க ஆயிரம் பேருக்கு அறிவுரை சொல்ற ஆளுக.. யாருகிட்ட உபதேசம் பண்ண வர்றீங்க..? ஊருக்கே உபதேசம் பண்ற ஊரில பிறந்து வளந்தவகிட்டயா..? அப்புறம்.. இப்புடி ரேஸில ஓடற குதிரையைக் கூப்பிடாறப்புல.. கமான்.. கமான்னு கூப்புட்டு வைக்காதீங்க.. ஒரு நிமிசம்.. நாம மனுஷியா.. இல்ல.. குதிரையான்னு சந்தேகம் வந்து தொலைக்குது..."
நீளமாகப் பேசினவளின் முன்னால் தண்ணீர் பாட்டிலை நகர்த்திவைத்தான் அர்ஜீன்.. கேள்வியாகப் பார்த்தவளிடம்..
"மைக் பிடிக்காத அரசியல்வாதியைப் போல பேசி ஓய்ந்துட்ட.. தொண்டை உலர்ந்திருக்கும்.. தண்ணியைக் குடிச்சு அதை நனைச்சுக்க..." என்று அமர்த்தலாகப் பேசினான்...
என்ன சொன்னாலும் இவன் காதில் ஏறவே ஏறாதா என்று எரிச்சல் பட்டுப் போனாள் காவ்யா.. உண்மையிலேயே அவனுடன் பேசிப்பேசி அவள் ஓய்ந்துதான் போயிருந்தாள்.. தண்ணீர் குடித்தால் தேவலாம் போலத்தான் அவளுக்கு இருந்தது.. அதற்காக அவன் கொடுக்கும் தண்ணீரைக் குடித்து வைத்தால் அவன் சொல்வதைப் போல மைக் பிடிக்காத அரசியல்வாதியைப் போல அவள் ஆகிவிட மாட்டாளா..?
"அந்தத் தண்ணியை நீங்க குடிங்க.."
"வொய்..? இது ஆர்டினரி வாட்டர்தான் காவ்யா.. ஐ மீன்.. வேற எதுவுமில்லை.. அதாவது.. நான் என்ன சொல்ல வர்றேன்னா..."
"எங்களுக்கும் புரியுது.. எங்க ஊருப் பக்கமும் குடிமகன்கள் நிறையப் பேரு இருக்காங்க.. அதனால விளக்கம் சொல்லாம.. தண்ணியைக் குடிச்சிட்டு.. வேலை ஏதாச்சும் இருந்தாப் பார்க்கறிங்களா..?"
அவளின் அதீத தைரியத்தில் அவன் ஈர்க்கப்பட்டான்.. கொஞ்சம்கூட அவளுடைய முதலாளி என்று யோசிக்காமல் வெடுக் வெடுக்கென்று அவள் பதில் பேசிய அஞ்சாமையில் அவன் ஆகர்ஷிக்கப்பட்டான்.. அவளின் அந்த அலட்சியம் கலந்த கோபமே அவனை அவளிடத்தில் இரும்பைக் கவரும் காந்தத்தைப் போல ஈர்த்தது...
"நீதான் எனக்கு வேலை குடேன்.."
'இவனுக்கு நான் வேலை கொடுக்கிறதா..? இவன் முதலாளிங்கிற பகுமானத்த காட்டறானாக்கும்...'
அவள் முகம் மாறிப் போனாள்.. சிடுசிடுத்த முகத்துடன் அவனைப் பார்த்து..
"என்னசார்.. சொல்லிக் காட்டறிங்களா..?" என்று கேட்டாள்..
எதற்கு முடிவிருந்தாலும்.. அவளுக்கும்.. இவனுக்குமான சண்டைக் கொரு முடிவே இருக்காது என்று அந்த நொடியில் அர்ஜீனுக்குத் தோன்றி வைத்தது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,32,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,116,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,12,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சிறுகதைகள்,1,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,31,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,21,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.. -20
எங்கிருந்தோ ஆசைகள்.. -20
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-20.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-20.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy