எங்கிருந்தோ ஆசைகள்..-19

19 சொல்லில் அடங்கா ஆசைகளை... சொல்லிவிடவே ஆசை கொண்டேன்... "காவ்யா..."  அவன் மனதை உணர்த்தி விடுபவனைப் போல உணர்ச்சி பொ...


19
சொல்லில் அடங்கா ஆசைகளை...
சொல்லிவிடவே ஆசை கொண்டேன்...


"காவ்யா..." 
அவன் மனதை உணர்த்தி விடுபவனைப் போல உணர்ச்சி பொங்க அழைத்தபடி.. அவளருகே ஒர் எட்டு வைத்தான் அர்ஜீன்...
சட்டென்று அவள் பின்வாங்கியதில் முகம் சுளித்தான் அவன்.. ஒரு இனிய கனவு கலைந்ததைப் போல இருந்தது அவனுக்கு...
"சார்..."
இளங்கோ உள்ளே வந்துவிட.. அர்ஜீன் காவ்யாவைப் பார்த்தான்...
"இந்த ஃபைல்களையெல்லாம் நான் பார்த்தாச்சு.. எடுத்துக்கறிங்களா.. டேபிள் கிளீனாகனும்.. அப்புறம்.. சேலரி கொடுக்கனுமில்ல.. அதுக்கான லிஸ்டை ரெடி பண்ணிட்டிங்களா..?"
இளங்கோவின் முன்னால் மறுத்துப் பேசமாட்டாள் என்ற அவனின் கணக்கீடை அவள் புரிந்து கொண்டாள்.. வேறு வழியில்லாமல் ஃபைல்களை எடுத்துக் கொண்டாள்.. அவள் இடத்தில் அமர்ந்து கம்யூட்டரை உயர்ப்பித்து அவன் கேட்ட லிஸ்டை பிரிண்ட் எடுத்துக் கொடுத்தாள்...
சம்பளப் பட்டுவாடா நடந்து கொண்டிருந்தது.. காவ்யாவுக்கு உதவி செய்ய பாவனாவும் வந்திருந்தாள்.. அடிப்பார்வையில் அர்ஜீனைப் பார்த்தபடி பணத்தை எண்ணிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்...
"ஆள் பார்க்க.. மீசை வைச்ச ஜேம்ஸ்பாண்டு போலவே இருக்காண்டி..." என்று அவள் சொல்லிவைக்க..
'அப்படியா இருக்கிறான்..?' என்று நிமிர்ந்து பார்த்தாள் காவ்யா...
கந்தசாமியிடம் பேசிக் கொண்டிருந்தவனின் முகத்தில் தெரிந்த கம்பீரத்தில் அவள் மனம் கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு பாய யத்தனிக்க... அவசரமாக விழியைத் திருப்பி கொண்டவள்...
"பேசாம வேலையைப் பாருடி... அவன் எந்தப் பாண்டாய் இருந்தா நமக்கென்ன..?" என்று வெடுவெடுத்தாள்...
"உனக்கென்னன்னு சொல்லு.. நமக்கென்னன்னு என்னையும் கூட்டுச் சேர்க்காதே..." கறாராய் சொல்லி விட்டாள் பாவனா..
தோழிகள் இருவரும் ரகசியக் குரலில் பேசிச் சிரிப்பதை கவனிக்காததைப் போல கவனித்துக் கொண்டிருந்தான் அர்ஜீன்...
அந்த ரகசிய சிரிப்பில் காவ்யாவின் முகம் பூவாக மலர்வதைக் கண்டவனுக்கு.. இவள் எப்போதும் இதைப் போலவே சிரித்த முகமாய் இருந்தால் என்ன என்று தோன்றியது...
அந்த நேரம் பார்த்து அங்கே வந்த ஏகாம்பரம்...
"என்ன.. தோழிப் பொண்ணுக.. ரெண்டு பேரும் ஒன்னாச் சேர்ந்துட்டிங்களா..? யாருக்கு பட்டப் பேரை வைச்சுக்கிட்டு இருக்கீங்க..?" என்று கேட்டு வைத்தார்..
"பட்டப் பெயரா..? யு மீன் நிக் நேம்.." புருவங்களை உயர்த்தினான் அர்ஜீன்...
"சார் என்ன கேட்கறிங்க..?" ஏகாம்பரம் பேந்தப் பேந்த விழித்தார்..
"நீங்க சம்பளம் வாங்கியாச்சான்னு கேட்கிறார்.. இங்கே வாங்க.. சம்பளத்தைக் கொடுக்கிறோம்..." அழுத்தமான குரலில் அவரை அழைத்தாள் காவ்யா...
சம்பள ஆசையில் அருகே போனவருக்கு சம்பளமும் கிடைத்தது.. தாழ்ந்த குரலில் சத்தமில்லாமல் அவர்கள் நடத்திய மண்டகப்படியும் கிடைத்தது...
"இன்னைக்கு மட்டும்தான் இங்கே டூட்டி.. நாளைக்கு உங்க சீட்டுக்கு பக்கத்திலேதான் வந்து சேருவேன்.. அதை நினைப்புல வைச்சுக்கங்க.." எச்சரித்து அனுப்பிவைத்தாள் பாவனா...
சுழல் நாற்காலியில் சுழன்றபடி.. அந்தப் பெண்களை ஜாடையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜீன்.. அவர்களும் அவனை ஜாடையாகப் பார்த்து வைத்தார்கள்.. பாவனாவிடம் ரகசியம் பேசும் போது காவ்யாவின் கண்களில் தெரிந்த சிரிப்பில் அவன் சொக்கிப் போனான்.. ஏதோ வேலையாக பாவனா வெளியே போனபோது...
"அந்தப் பேச்சை என்னிடம் பேசினால் குறைந்தா போயிடுவ..?" என்று காவ்யாவிடம் கேட்டான்..
"எந்தப் பேச்சை..?" அவள் புருவம் சுருக்கினாள்...
"அதான்.. நீங்க ரெண்டு பேரும் சீக்ரெட்டாப் பேசி... சீக்ரெட்டா சிரிச்சுக்கிட்டிங்களே.. அதைத்தான் சொல்றேன்.. அப்படி என்ன பேசிச் சிரித்தீங்க...?"
"அதெல்லாம் பிரண்ட்ஸீக்குள்ள ஆயிரம் இருக்கும்.."
"அந்த ஆயிரத்தில ஒன்னையாவது என்னிடம் பேசலாமே..."
அர்ஜீன் விடாமல் கேட்டதில் காவ்யாவின் விழிகள் உயர்ந்து அவன் விழிகளைச் சந்தித்தன.. அதற்காகவே காத்திருந்ததைப் போல அர்ஜீனின் விழிகள் காவ்யாவின் பார்வையைக் கவ்விக் கொண்டதில் அவளுக்குள் ஏதோ செய்தது.. பிரிக்க முடியாமல் கலந்து விட்ட பார்வையினை மீட்க முடியாமல் அவள் தவித்தாள்.. ஆர்வமாக அவளைப் பார்த்தவனின் பார்வையில் தெரிந்த அந்த ஏதோ ஒன்றில் அவள் மனம் சிக்கி சின்னா பின்னமானது..
"காவ்யா..."
பாவனா வந்து விட்டதில் அவர்களின் பின்னிக் கிடந்த பார்வைகள் விலகிப் பிரிந்தன.. அர்ஜீன் இயல்பாக சுழல் நாற்காலியில் சுழன்று திரும்பி விட்டான்.. அவனைப் போல காவ்யாவினால் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்பி விடமுடியவில்லை.. கன்னச் சிகப்புடன் இயல்பு நிலைக்குத் திரும்ப அவள் மிகவும் சிரமப்பட்டாள்...
"என்னடி..." சன்னக்குரலில் வினவிய பாவனாவிற்கு எதுவோ புரிந்ததைப் போல இருந்தது...
"ஒன்னுமில்லையே..." மறுப்பாக முணுமுணுத்த காவ்யாவின் பலவீனக் குரலே... எதுவோ இருக்கிறது என்று அறிவித்து வைத்தது....
காவ்யாவை உற்றுப் பார்த்தாள் பாவனா.. நேர் கொண்ட பார்வையுடன் பேசும் காவ்யாவின் பார்வை அவள் பார்வையைச் சந்திக்கப் பயந்து தடுமாறி நிலம் பார்த்தது...
பெண்மையை பெண்மையே அறியும்.. கள்ளியை கள்ளியே அறிவாள்.. பாவனாவும் காவ்யாவை கண்டு கொண்டாள்...
"இதைப் பாருடா.. மூச்சுக்கு முந்நூறு தடவை சண்டை போட்டுக்கிட்டு அவனை சைட்டும் அடிக்கறியா..? உன்னை என்னவோன்னு நினைச்சேன்.. ஆனா நீ என்னையே தூக்கிச் சாப்பிடறதைப் போல பின்னிப் பெடலெடுக்கிற.. ஆத்தாடி.. இந்த சைவப்பட்சினி வேசம் போடுகிறதுகளை மட்டும் நம்பவே கூடாதுடிம்மா..."
அர்ஜீன் வெளியே போன சமயத்தில் பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டாள் பாவனா...
"அடச்சீ.. அடங்கு.. நானாவது.. அவனைச் சைட் அடிக்கிறதாவது.. இப்பத்தான் வேலையை விட்டுட்டுப் போறேன்னு கிளம்பினேன்..."
"அவன் விடமாட்டேன்னு சொல்லியிருப்பானே..."
"எப்படிடீ கண்டுபிடிச்ச..?"
"ஊம்..? வெத்தலையில் மை போட்டு ஜோஸியம் பார்த்தேன்... போவியா... இதைக் கண்டுபிடிக்க கோடாங்கியைக் கூப்பிட்டுக்கிட்டு வரனுமா..? தானாத் தெரியாதா..?"
"உனக்குத் தெரிஞ்சதையெல்லாம் இங்கே அளந்து விடாதே.. அதுக்கு நான் ஆளில்ல..."
"உன் ஆளுக்குத்தான் நீ ஆளா...?"
"என் ஆளா..? அடச்சீ.. வாயைக் கழுவு..."
"ஐ.. யாருகிட்ட இந்த வேசம் போடற..?"
"உனக்குப் பைத்தியம்தான் பிடிச்சிருக்கு.."
"நானா பைத்தியம்..? நீதான் பைத்தியம்.. அதுவும் வெறும் பைத்தியமில்லை.. காதல் பைத்தியம்.."
"பாவனா.. வேணாம்..."
காவ்யாவின் எச்சரிக்கையை லட்சியம் செய்யாமல் பாவனா மெல்லிய குரலில் பாடினாள்...
"அடி போடி.. பைத்தியக்காரி..
             நான் அறியாதவளா..?
    சின்னஞ்சிறுசா..?"
"உன்னைப் போயி சின்னஞ்சிறுசுன்னு கைப்புள்ள கூடச் சொல்லாது.."
அவர்கள் வழக்கடித்துக் கொண்டிருந்த போது அர்ஜீன் வந்து விட்டான்.. அவர்களின் பேச்சு.. ரகசியத் தொனிக்கு மாறிவிட.. அதை பொறாமையுடன் உற்றுக் கவனித்தான்...
மாலையில் காவ்யாவை அழைத்துக் கொண்டு போக கண்ணதாசன் வந்தான்...
"என்னடி.. உன் அண்ணன் வந்திருக்காரு.. உன் வண்டி என்னவாச்சு.." பாவனா விசாரித்தாள்...
"உங்க பிரண்டுக்கு பேங்குக்கு போய் வர பயமாம்.. அதான் ஸ்கூல் கேர்ள் போல அண்ணனைத் துணைக்குக் கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்காங்க..." குற்றம் சாட்டும் பாவனையில் சொன்னான் அர்ஜீன்...
"ஸ்கூல் கேர்ளா..?"
நிமிர்ந்து பார்த்த காவ்யாவின் விழிகள் கேட்ட கேள்விக்கு.. ஆமாம் என்ற பதிலை அர்ஜீனின் விழிகள் சொல்லின... முதல் நாள் சந்திப்பின் போதே அவளைப் பள்ளிக்குச் செல்லும் சிறுமியென்று அவன் அழைத்தது அந்த நேரம் பார்த்து அவள் நினைவுக்கு வந்து தொலைத்தது...
"வேலையிருக்கா காவ்யா.. வெயிட் பண்ணட்டுமா..?"
உயர் பதவியில் இருக்கும் கண்ணதாசன் இதமாக கேட்டபோது.. காவ்யாவின் மனம் வலித்தது.. அத்தனை நாள்களாக அவனிடம் பாராமுகம் காட்டி விட்டோமே என்ற குற்ற உணர்வில் மனம் நைந்து போனாள் காவ்யா...
"இல்லேண்ணே.. கிளம்பிரலாம்..."
அவள் எழுந்து நின்றாள்... கண்ணதாசன் அர்ஜீனைப் பார்த்து லேசாக தலையை அசைத்தாள்.. பதிலுக்கு அவனும் தலையை அசைத்தான்.. காவ்யா கண்ணதாசனைத் தொடர்ந்து போய் விட்டாள்...
"உங்க பிரண்டுக்கு அண்ணன்னா ரொம்பப் பிடிக்குமோ..?"
திடிரென்று வந்த கேள்வியில் பாவனா ஆச்சரியப் பட்டுப் போனாள்... அவளிடம் அர்ஜீன் பேசுவானென்று அவள் நினைத்ததே இல்லை.. அவள் விழி விரிந்த அதே நேரத்தில் அவளது அறிவு அவளிடம்
'ரொம்பத்தான் ஆடாதே... இவன் உன்கிட்டப் பேசினாலும்.. உன்னைப் பத்தி விசாரிக்கல.. காவ்யாப் பத்தி விசாரிக்கிறான்..' என்று அறிவுறுத்தியது...
'இருக்கட்டுமே..' அவள் அறிவின் அறிவுறுத்தலைக் கண்டு கொள்ளாமல் அர்ஜீனைப் பார்த்தாள்...
"அப்படியெல்லாம் ஒன்னுமில்லை சார்.. எல்லா அண்ணன்.. தங்கைகளைப் போலத்தான் இவங்களும் இருப்பாங்க..."
"எனக்கென்னவோ அப்படித் தோணலையே..."
"ஆஞ்சுவலா சார்.. அவளுக்கும்.. அவ அண்ணனுக்கும் ஆகவே ஆகாது.. எலியும்.. பூனையும் போல அடிச்சுக்குவாங்க..."
"ஐ ஸீ... ஏன் அப்படி..?" 
அர்ஜீன் சந்தோசமாகி விட்டான்.. அது ஏனென்று பாவனாவிற்கு புரியவில்லை...
"இவ படிக்க முடியாத மேல்படிப்பை இவளோட அண்ணன் படிச்சிட்டார்.. அந்தக் குத்தத்தைத் தவிர வேற எந்தக் குத்தமும் அவர் செய்யலை சார்..."
"உங்க பிரண்டுக்கு இவ்வளவு போதாதா..? அவங்க சும்மாவே ஆளுகளை காய்ச்சு.. காய்ச்சுன்னு காய்ச்சி எடுத்திருவாங்க.. இதில ரீசன் ஒன்னு கிடைச்சுட்டா கேட்கவா வேணும்...?"
அர்ஜீன் ரசித்துச் சொன்ன விதத்தில் பாவனாவின் மனதில் சன்னமான பொறாமை இழையோடியது.. மறுநாள் காலையில் காவ்யாவைப் பார்த்தபோது...
"உண்மையிலேயே அவனுக்கு உன் மேல் நோக்கமிருக்குன்னுதான் எனக்குத் தோணுது காவ்யா..", என்று சொன்னாள்...
"அவனென்ன பெரிய இவனா..? அவனுக்கு நோக்கமிருந்தாப் போதுமா..? உடனே எங்க அப்பாவும்.. அம்மாவும்.. அண்ணனும் இவனைக் கூப்பிட்டு.. வெத்தல பாக்க கையில கொடுத்து நிச்சயம் பண்ணிருவாங்களா..?", காவ்யா படபடத்தாள்...
"ஏய்ய்.. இவ்வளவு அழகான பணக்காரன் உன்னை சைட்டடிக்குறான்.. அது உனக்கு கசக்குதா..?"
"ஆமாம்.. கசக்குது.. அவன் பணக்காரனா இருந்தா அவன் மட்டுக்கு.. எனக்கென்ன வந்தது.."
கோபத்துடன் அர்ஜீனனின் அறைக்குள் போன காவ்யாவுக்கு அடுத்த சண்டை காத்திருந்தது...
"உனக்கு உன் அண்ணனை அவ்வளவாப் பிடிக்காதாமே.." என்று ஆரம்பித்தான் அர்ஜீன்...
"யார் சொன்னது..?" சண்டைக் கோழியாய் அவள் முறைத்தாள்...
"உன் பிரண்டுதான் சொன்னாங்க..."
"இன்னும் என்னவெல்லாம் சொன்னா..?"
"உன்னால அதிகம் படிக்க முடியலையாமே..."
"அதுதான் ஊருக்கே தெரிஞ்சசங்கதியாச்சே... இதை அவகிட்ட கேட்டுத்தான் துப்பறியனுமா..? நான் டிகிரி முடிச்சிருக்கேன் சார்.. உங்க ஓட்டைக்கடையில் ஒன்னுக்குமத்த செக்கரட்டரி உத்தியோகம் பார்க்க இந்தப் படிப்பு போதும்.."
"ஓட்டைக் கடையா..?"
அடுத்த சண்டை அவர்களுக்குள் மூண்டு எழுந்தது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்..-19
எங்கிருந்தோ ஆசைகள்..-19
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-19.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-19.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy