அம்மம்மா.. கேளடி தோழி...! -125

125 நில்லென்று நீசொன்னால் நின்றுவிடுவேன்.. செல்லென்று நீசொன்னால் செத்து விடுவேன்.. ' இவ கிட்ட இது ஒன்னு இருக்கு... ' பால...

125
நில்லென்று நீசொன்னால் நின்றுவிடுவேன்..
செல்லென்று நீசொன்னால் செத்து விடுவேன்..

'இவ கிட்ட இது ஒன்னு இருக்கு...'
பாலமுரளிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை... அது எப்படி.. ஏதேனும் வாக்குவாதம் வந்தால் உடனே அவளுக்கு காய்ச்சல் வந்து விடுகிறது என்று அவன் குழம்பிப் போனான்...
'காய்ச்சலை இவ மடியில கட்டிக்கிட்டு இருக்காளா..'
அவளைத் திரும்பிக்கூட பார்க்கக் கூடாதென்ற வைராக்கியம் மறந்து போக... அவளருகில் அமர்ந்து நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.. அனலாகக் கொதித்துக் கொண்டிருந்தது...
'டாக்டரிடம் கூப்பிட்டுக்கிட்டுப் போகனும்....'
அவனுக்கு காய்ச்சலைப் பற்றிக்கூட அவ்வளவு பயமில்லை.. காய்ச்சல் முற்றிப் போய் ஜன்னி வந்து தொலைத்து விட்டால் என்னசெய்வது என்றுதான் அதிகமாக கவலைப்பட்டுப் போனான்...
'ஜன்னி வந்தா... எதைப் பேசனும்.. எதைப் பேசக் கூடாதுங்கிற தன்னுணர்வு இல்லாம மனசில இருக்கிற எல்லாத்தையும் கொட்டிக் கவிழ்ப்பாளே...'
இது தேனூத்து இல்லை.. சென்னை.. மேகலாவின் உதவி இங்கே அவனுக்கு கிடைக்காது... ராஜேஸ்வரியிடம் சொல்லலாமென்றால்... அவள் மகளின் நிலையைப் பார்த்தால் பதறிப் போய் விடுவாள்.. அந்தநேரம் பார்த்து ராதிகா எதையாவது புலம்பி வைத்தால்... வேறு வினையே வேண்டாம்... ராதிகா பாலமுரளியைத் தள்ளி வைக்கிறாளோ இல்லையோ... ராஜேஸ்வரி காலம் காலத்துக்கும் அவனை மருமகன் என்ற உறவிலிருந்து தள்ளி வைத்து விடுவாள்...
இப்போதுதான் முகம் கொடுத்துப் பேச ஆரம்பித்திருக்கிற மாமியாருடன் முகம் முறித்துக் கொள்வதா என்று பாலமுரளிக்கு யோசனையாக இருந்தது..
"வள்ளி..." வெளியே எட்டிப் பார்த்து குரல் கொடுத்தான்...
"இன்னாங்கய்யா..."அடுத்த நொடியே பிரசன்னமானாள் வள்ளியம்மாள்...
"ராதிகாவுக்கு காய்ச்சல் வந்திருக்கு..."
"அடக்கடவுளே.. மதியானம் வரச் சொல்றப்ப நல்லாத்தானே கீந்தாங்க.. இப்ப இன்னா கருமத்துக்கு காய்ச்சல் கண்டிருக்கு...?"
"தெரியலை... டாக்டரிடம் காண்பிக்கனும்..."
"வெறும் வயித்தோடயா இட்டுக்கிட்டுப் போவிங்க..செத்த பொறுங்கய்யா... சூடா... கஞ்சி வைச்சு கொண்டாரேன்.. அத்தைக் குடிச்ச பின்னாலே... இட்டுக்கிட்டு போங்க..."
வள்ளியம்மாள் அவசரமாக ஓடினாள்... சில நிமிடங்களில் சூடான கஞ்சியுடன் வந்து ராதிகாவின் அருகே அமர்ந்தாள்...
"நான் கிள்ளுக்கீரையா..?" ராதிகா உடம்பை முறுக்கினாள்...
'போச்சுடா...தலையில கைவைத்துக் கொண்டான் பாலமுரளி...
அவன் நினைத்ததைப் போலவே ஜன்னி வந்து தொலைத்து விட்டதே...
"அம்மா இன்னாவோ சொல்றாங்க.. அது இன்னான்னு தான் தெரியல..."வள்ளியம்மாள் புரியாமல் விழித்தாள்...
பாலமுரளியோ வந்து விட்ட 'இன்னா'வை எப்படி எதிர்கொள்வது என்று தலைகாய்ந்து கொண்டிருந்தான்...
"அது ஒன்னுமில்லை வள்ளி... தோட்டத்தில கீரையைப் பார்த்தாளா... அவளுக்கு கீரைன்னா ரொம்ப இஷ்டம்... அதனாலே அதைப் பத்தியே பேசறா..." பாலமுரளி சமாளித்தான்...
"நா இன்னாத்தை சொல்லுவேன்... அம்மா மனசுல கீரை மேல இம்புட்டு இஷ்டம் கீதா..இம்மாங்காலமா... இது எனக்குத் தெரியாம பூடுச்சே..." வள்ளியம்மாள் வருத்தப்பட ஆரம்பித்தாள்..
'இவவேற.. நேரம் காலம் தெரியாம எதையாவது பேசிவைப்பா...பாலமுரளிக்கு எரிச்சல் வந்தது...
"தெரிந்திருந்தா என்ன பண்ணியிருப்ப..?"
"மதியமே கீரைக் குழம்பு... கீரைக் கடைசல்.. கீரைப் பொரியல்ன்னு.. கீரையா ஆக்கி வைச்சிருக்க மாட்டேனா..?"
'ம்ஹீம்.. செட்டிநாட்டு கைப் பக்குவத்தை மூட்டை கட்டி வைச்சுட்டு.. என்னை துரத்தி விட இவ பிளான் பண்ணிட்டா...'
வாய்க்கு ருசியாக சமைத்துப் போடும் வள்ளியம்மாள்.. இனிக் கீரையை மட்டுமே சமைத்துப் போட்டு விடும் உத்தேசத்திற்கு மாறி விடுவாளோ என்ற பயத்துக்கு ஆளானான் முரளி...
அதற்குள்... ராதிகா கஞ்சியைக் குடித்து விட்டிருந்தாள்... சோர்வுடன் அவள் கட்டிலில் சரிந்து மீண்டும் தலையை தலையணையில் உருட்ட ஆரம்பித்த போது.. பாலமுரளியின் செல்போன் ஒலித்தது.. மேகலா பேசினாள்...
"முரளி.. எங்கேடா இருக்க...?"
மேகலா இப்படிக் கேட்கவும்.. அவளுக்கும் ஏதாவது வந்து விட்டதோ என்று பதறிப் போய் விட்டான் பாலமுரளி..
"உங்களுக்கும் உடம்பு முடியலையாம்மா.. சதீஷ் பக்கத்தில் இருக்கானா..இருந்தா அவனிடம் போனைக் குடுங்க..."
அவன் பரபரப்பாய் கேட்க...
"ராதிகாவுக்கு என்னடா ஆச்சு..?" என்று அதட்டினாள் மேகலா...
"அம்மா..." கையும் களவுமாக மாட்டினான் முரளி...
"என்ன..காய்ச்சலா...?"
"ம்ம்ம்..."
"நினைச்சேன்.. நீ அவளைத் தேடிப் போகும் போதே நினைச்சேன்... ஏண்டா இப்படியிருக்கிற..இப்படித்தான் திருநெல்வேலிக்கு விருந்துக்கு கூப்பிட்டுக்கிட்டுப் போறேன் பேர்வழின்னு அவளை கூப்பிட்டுக்கிட்டு போன.. போன இடத்தில சும்மா இருந்தியா..?"
"மலையுச்சியில இருந்து அவளைத் தள்ளியா விட்டேன்..நீங்க ஒரு ஆள் போதும்மா.. வேற சாட்சியே வேணாம்..."
"அப்புறம் எப்படிடா.. அங்கேயும் அவளுக்கு காய்ச்சல் வந்துச்சு...?"
"அவளுக்கு காய்ச்சல் வரனும்னு எனக்கு மட்டும் நேர்த்திக் கடனாம்மா..என்னவோ மந்திரிச்சு அவளுக்கு காய்ச்சலை வரவைச்சதைப் போல நீங்க பேசறது கொஞ்சம் கூட சரியில்லம்மா..."
"நீ மந்திரிச்சு ஏண்டா விடனும்..உனக்குத்தான் கோபம் வந்தா கண்ணு மண்ணு தெரிஞ்சு தொலைக்காதே.. திருநெல்வேலியில அவளை அடிச்சு வைச்சதானே..."
"நீங்களா எதையாவது சொல்லக் கூடாது..."
"நானாச் சொல்லலைடா மகனே..."
"ராதிகா சொன்னாளா...?"
"பூனைக்குட்டி வெளியே வந்திருச்சா..அவ என்னைக்குடா உனக்கு எதிரா ஒத்தச் சொல்லு.. சொல்லியிருக்கா..உன் அக்காதான் சொன்னா..."
"த்ச்சு.. இன்னைக்கு அதுபோலல்லாம் எதுவுமில்லம்மா..."
"பின்னே.. அவளுக்கு எப்படித்தான் காய்ச்சல் வந்துச்சு..இன்னைக்குத்தானே அவளுக்கு பரிட்சை ஆரம்பிக்குது..அவ பரிட்சை எழுதினாளா இல்லையா..?"
"ம்ம்.. அதெல்லாம் காலையிலேயே எழுதப் போயிட்டா..."
"பரிட்சை எழுதற இடத்திலே காய்ச்சல் வந்துருச்சா..?"
"இல்லம்மா.. மதியம் நான் கூப்பிடப் போனப்ப கூட நல்லாத்தான் இருந்தா..?"
"நேரா அவ வீட்டுக்குத்தானே போனீங்க...?"
"ஊஹீம்.. நம்ம பண்ணை வீட்டுக்கு கூப்பிட்டு வந்துட்டேன்..."
"அதான் அவளுக்கு காய்ச்சல் வந்திருச்சு.. ஏண்டா அவளைப் போட்டு பிடுங்கி எடுக்கிற..?"
"என்னம்மா.. நீங்களே இப்படிப் பேசிவைக்கறிங்க..?"
"எனக்கு உன்குணம் தெரியாதாடா மகனே..நீ எதுவும் சொல்லாம அவ காய்ச்சலில் விழுந்திருக்க மாட்டா.. இதுக்குத்தான் வேலை மெனக்கெட்டு.. ஊருக்கு கிளம்பிப் போனயா...பொண்டாட்டி மேல ஆசையா நம் மகன் போறான்னு நினைச்சேன்.. நீ கன்னத்தில ரெண்டு பூசை கொடுக்க இல்ல போயிருக்க..."
என்னவோ.. பக்கத்திலிருந்து பார்த்ததைப் போல மேகலா பேசிவைக்க.. முரளிக்கு தலைவேதனையாக இருந்தது.. எவ்வளவு தொலை தூரத்தில் இருந்தாலும்.. மேகலாவின் சிந்தனையெல்லாம் மருமகளிடமே மையம் கொண்டிருப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது...
'இவ மேல இவ்வளவு அக்கறையா..?'
அவனுக்கு பொறாமையாக இருந்தது.. முரளிக்கு என்று வந்தால் மேகலா பெற்ற மகளைக்கூட எதிர்த்து நிற்பாள் ..அப்படிப்பட்டவள்.. நேற்றுவந்த மருமகளுக்காக.. முரளியை எதிர்த்து நிற்கிறாளே...
"காய்ச்சல் மட்டும்தானா.. ஜன்னியும் சேர்ந்து வந்திருச்சா..?"
முரளி.. வள்ளியம்மாள் எங்கேயென்று எட்டிப் பார்த்தான்.. முரளி போனில் பேச ஆரம்பித்தபோதே.. அவள் நாகரிகம் கருதி.. அறையை விட்டு வெளியேறியிருந்தாள்...
"காய்ச்சல் மட்டும் தாம்மா..." அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே...
"சம்பந்தமில்லையா..எனக்கும்.. உங்களுக்கும் சம்பந்தமில்லையா..?" என்று ராதிகா பிதற்றி வைத்தாள்..
"அவ என்னடா சொல்றா.." மேகலா கவலையுடன் கேட்டாள்...
தாயின் காதுகள் இந்த வயதிலும்.. இவ்வளவு கூர்மையுடன் செயல்படுவதில் முரளிக்கு மகிழ்ச்சிக்குப் பதில் எரிச்சல் வந்தது...
"பரிட்சை ஞாபகத்தில உளறிவைக்கிறாம்மா..?"
"அதைத்தான் உளறிவைக்கிறாளா... இல்ல.. வேற ஏதாவது இருக்கா..?" மேகலா சந்தேகத்துடன் கேட்டாள்..
"அம்மா.. நீங்க போனை வைச்சாத்தான் நான் அவளை டாக்டர் கிட்ட கூப்பிட்டுக்கிட்டுப் போக முடியும்.."
"பார்த்துக்கடா முரளி.. அவ்வளவுதான் சொல்வேன்.. அவ வீட்டுக்குத் தெரியுமா..?"
"தெரியாது..."
"அதானே பார்த்தேன்.. தெரிஞ்சிருந்தா.. ராஜேஸ்வரி உன்னை விட்டுட்டு எனக்கில்ல போனைப் போட்டு காய்ச்சி எடுத்திருப்பா..?"
"ஏம்மா.. காய்ச்சல் வந்தா.. அது ஒரு குத்தமா..?"
"காய்ச்சலை வரவைச்சா.. அது குத்தம்தான்..."
இவ்வளவு தெளிவான நீதிபதி மாமியாரின் ஆதரவு இருந்தால் இவள் ஏன் ஆட்டம் போட மாட்டாள் என்ற கோபம் பாலமுரளிக்குள் கனன்றது.. மேகலா ஆயிரம் 'பத்திரம்'களை சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள்.. பாலமுரளி ராதிகாவை எழுப்பினான்.. அவள் லேசாக கண்திறந்து.. 'யார்.. நீ..என்பதைப் போலப் பார்த்தாள்...
'இது வேறா..பாலமுரளி நொந்தே போனான்...
கம்பெடுத்து அடிப்பதற்குப் பதிலாக இவள் காய்ச்சலாலேயே அடித்து வைக்கிறாள் என்ற நினைவு அவனுக்குள் எழுந்தது...
"எழுந்திருடி... டாக்டரிடம் போகலாம்..."என்று அவளை எழுப்பி உட்கார வைக்க முயன்றான்..
"அவருக்கும்.. எனக்கும் சம்பந்தமில்லையாமே.." அவள் அவனிடமே நியாயம் கேட்டாள்...
பாலமுரளிக்குள் கவலை சூழ்ந்தது...
'இவளுக்கு என்னைத் தெரியலையே...'
"ராது.. நான்தாண்டி உன் புருசன்..."
"அவர்தான் விட்டுட்டுப் போயிட்டாரே..."
"அடிப்பாவி... நான் எங்கேடி போனேன்..?"
"தேனூத்துக்கு போயிட்டாரே..."
"அதெல்லாம் போகலை.. நீயில்லாம போனா.. என்னைப் பெத்த அம்மா.. வீட்டு வாசப்படி ஏறவிட மாட்டாங்களே.. அப்படியில்ல நீ மாமியாரைக் கைக்குள்ள போட்டு வச்சிருக்க..."
பாலமுரளியின் பேச்சு.. ராதிகாவின் காதுகளில் ஏறியதாகவே தெரியவில்லை... அவள் தன் போக்கில்..
"அவருக்கும்.. எனக்கும் சம்பந்தமில்லையாமில்ல.." என்றே புலம்பிக் கொண்டிருந்தாள்..
பாலமுரளியால் தாங்க முடியவில்லை.. அவளை எழுப்ப முயன்றால்.. அவள் நிற்காமல் விழுந்து வைக்க.. வேறு வழியில்லாமல் கைகளில் ஏந்திக் கொண்டான்...
'என்னைக்கு இவளைப் பார்த்து தொலைச்சேனோ.. அப்பயிருந்து இவளைக் கையில தூக்கித் தொலைக்கிறதே எனக்கு பிழைப்பாப் போச்சு.. கல்யாணமானா எல்லோரும் பிள்ளையைத் தூக்கி சுமப்பாங்க.. நான் பொண்டாட்டியைத் தூக்கிக்கிட்டு அலைகிறேன்...'
பூமாலையாய் துவண்டு கிடந்தவளைப் பார்த்தபோது.. அவனுக்குள் கழிவிரக்கம் பொங்கியது..
'உன் மனசில என்னதாண்டி இருக்கு..? அன்னைக்கும் சரி.. இன்னைக்கும் சரி.. என் அடிதாங்காம உனக்கு காய்ச்சல் வரல.. என் சொல் தாங்காமத்தான் உனக்கு காய்ச்சல் வந்து தொலைக்குது.. எனக்கும்.. உனக்கும் சம்பந்தமில்லைன்னு சொன்னதுக்காக.. இந்த அளவுக்கு துயரப்படறியே.. இப்படிப்பட்டவ ஏண்டி அவன்கூட உட்கார்ந்து பேசின.?..'
படிகளில் இறங்கி வந்த முரளியைக் கண்டதும்.. பதட்டத்துடன் ஓடி வந்தாள் வள்ளியம்மாள்...
"அம்மாவுக்கு இன்னாங்கய்யா ஆச்சு.. வெறும் காய்ச்சல்தானே...?"
"இவளுக்கு பூஞ்சை உடம்பு வள்ளி... லேசாத் தலைவலி வந்தாக்கூட தாங்கிக்க மாட்டா... காய்ச்சல் வந்ததில நிற்க முடியாம தள்ளாடறா.. நீ கொஞ்சம் ஹாஸ்பிடல் வரைக்கும் கூட வரனுமே..."
"இன்னங்கய்யா இப்படிக் கேட்கறிங்க.. அம்மாவுக்கு இம்மாந்தூரத்துக்கு காச்ச கண்டிருக்கப்ப நான் கூட வராம வூட்டிலயா குந்தியிருப்பேன்..?"
வள்ளியம்மாள் காரின் பின்சீட்டில் அமர்ந்து ராதிகாவைத் தாங்கிக் கொள்ள.. முரளி.. காரைக் கிளப்பினான்...
"வூட்டைப் பார்த்துக்கய்யா.." கணவனுக்கு கட்டளையிட்டாள் வள்ளியம்மாள்...
"தா.. அத்தை நீ சொல்ல வேணாம்மே.. எனக்குத் தெரியும்.. நீ முதல்ல.. பத்திரமா அம்மாவோட பூட்டு வா.." கேட்டைச் சாத்தினான் பொன்னுச்சாமி..
ராதிகாவை பரிசோதித்த டாக்டரம்மாள் ஊசி மருந்தை எடுத்தபடி பாலமுரளியை யோசனையாகப் பார்த்தாள்...
"எப்போதிருந்து பீவர் இருக்கு...?"
"மதியத்திலிருந்து மேடம்..."
"காலையில நார்மலாத்தான் இருந்தாங்களா..?"
"எக்ஸாம் எழுத போனாளே..."
"ஈஸீட்.. அப்புறம் எப்படி பீவர் வந்தது..."
டாக்டரம்மாளின் விழிகளில் சந்தேகம் எட்டிப் பார்க்க...
'இங்கேயுமா...என்று நொந்து போனான் பாலமுரளி..
கத்தியின்றி.. ரத்தமின்றி காய்ச்சலினாலேயே யுத்தம் புரிகின்ற மனைவியை நிராயுதபாணியாக ஒர்பார்வை பார்த்துக் கொண்டான்...
"தெரியலை மேடம்..."
"பிட்ஸ் வேற வந்திருக்கு..?"
"அதுவும் தெரியலை மேடம்..."
"அவருக்கும் எனக்கும் சம்பந்தமில்லையாமேன்னே கேட்கிறாங்களே... யார் அந்த அவர்..?"
எவர் அந்த அவர் என்று சொல்ல முடியாமல் பரிதாபமாக ஒர்பார்வையை பாலமுரளி பார்த்து வைக்க.. போனால் போகிறது என்று விட்டுவிட்டாள் அந்த டாக்டரம்மாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -125
அம்மம்மா.. கேளடி தோழி...! -125
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-125.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-125.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy