அம்மம்மா.. கேளடி தோழி.. -123

123 சலசலக்கும் நீரைப் போல.. சலசலக்கும் என் மனதைப் பார்... ' மாறுகின்ற காலம் வரை காத்திருக்க யாரால் முடியும்.. ? அந்த நாள் வரு...


123
சலசலக்கும் நீரைப் போல..
சலசலக்கும் என் மனதைப் பார்...

'மாறுகின்ற காலம் வரை காத்திருக்க யாரால் முடியும்..? அந்த நாள் வரும் போது நான் இருப்பேனோ.. இல்லை.. தொலைந்திருப்பேனோ...'
மனதில் துக்கம் கொண்டாள் ராதிகா.. அவளுக்கு அழ வேண்டும் போல இருந்தது... அழ முடியாமல்... ஓடும் நீரையே வெறித்துப் பார்த்தாள்...
இந்த நீர்மேல் கோலம் போட்டால் அது நிலைத்திருக்குமா..? அது போல்தான் ராதிகாவும் காதலும் ஆகிவிட்டதா...?
"சிலர் சிரிப்பார்... சிலர் அழுவார்...
        நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்..."
பாடல் முடிந்து விட்டது... அதன் பாரம் மட்டும் ராதிகாவின் மனதை விட்டு அகலாமல் பாறாங்கல்லாய் ஏறி அமர்ந்து கொண்டது..
'இப்ப சங்கரை கல்யாணப் புரோக்கர் என்கிறார்... முதலில் ஹேமாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போற தியாகி யாருன்னு கேட்டார்... மத்தவங்க பேசினாக்கூட கண்டுக்காம போயிடலாம்.. இவர் இப்படிப் பேசலாமா..?' ராதிகாவின் மனம் வலித்தது...
"வேண்டாம் அத்தான்.. நீங்க இப்படிப் பேசாதீங்க.."
"அப்படித்தாண்டி பேசுவேன்.. அதுக்கு இப்ப என்னாங்கிற.. அவனோட பிரண்டுக்கு ஹேமாவை கல்யாணம் பேசினா.. பேசிட்டுப் போகட்டுமே.. அதுக்கெதுக்கு உன்னைத் தேடி வந்தான்...?"
"அவன் என்னைத் தேடி வரலை.. ஹேமாவைத் தேடி வந்தான்..."
"இது ஒரு சாக்கு.. அதுக்கு எதுக்கு காலேஜீக்கு வரனும்..? உன் பிரண்டுக்குன்னு வீடு இல்லையா...?"
"இந்த விசயம் அவ வீட்டுக்குத் தெரியாது..."
"இதைப் பாருடா... வீட்டுக்குத் தெரியாம அவளே மாப்பிள்ளைத் தேடிக்கிட்டாளா..? ஓடுகாலி... எப்ப ஓடப் போறாளாம்..?"
திரும்பவும் இமைக்காமல் முரளியின் முகத்தையே ராதிகா பார்க்க வேண்டியதாகி விட்டது... அவளது பார்வைக்கான தன் அதிருப்தியாக...
"த்ச்சு.." என்றான் பாலமுரளி...
"இப்படிப் பேச.. எப்படித்தான் உங்களுக்கு மனம் வருதோ..."
"அது என் மனசுடி... வரும்..."
"ஹேமாவுக்கே அவளைப் பெண் கேட்பது தெரியாதுங்கிறப்போ... அவ வீட்டுக்கு எப்படித் தெரியுமாம்..? இது தெரியாம நீங்க வார்த்தையை விடறிங்களே..."
"அவளுக்கே தெரியாதா...? ம்ம்.. இன்னும் என்னவெல்லாம் கதை சொல்லப் போறியோ... உன் மேல் ஆசைப்பட்டுட்ட கொடுமைக்காக... நான் இப்படியெல்லாம் பார்த்துக்கிட்டும்... கேட்டுக்கிட்டும் எதையும் பதிலுக்கு பேச முடியாம கல்லுக்குண்டைப் போல உட்கார்ந்திருக்க வேண்டியதாப் போச்சே..."
"இதை நான் சொல்லனும்..."
"இதை நீ சொல்ற..? விதிடி..."
"சங்கரோட பிரண்டுக்கு பெண் தேடினாங்களாம்... உடனே சங்கர் ஹேமாவைப் பத்திச் சொன்னானாம்..."
"அதுக்கு அவனே அவளைக் கட்டியிருக்கலாமே..."
"அவனுக்குத்தான் அவமேல அண்ணனைப் போல பாசமாமே..."
"உன் பிரண்டில்லையா..? பாசமலரைத்தான் வளர்ப்பான்.."
"நமக்கெதுக்கு அது..?."
"அப்படி நீ விட்டுத் தொலைச்சா வினையே வந்திருக்காதேடி.." பாலமுரளி பார்வையால் அவளைச் சுட்டான்...
'நானாங்க வினையைத் தேடிப் போனேன்..? அதுவா வந்து தொலைக்குதே...' ஏக்கப்பட்டுப் போனாள் ராதிகா...
"இதில தலை கொடுக்கனும்னு நான் நினைக்கலைங்க.. ஹேமாவுக்கே இதைப் பற்றித் தெரியாதே.. சங்கர் அவனோட பிரண்டிடம் ஹேமாவைப் பற்றிச் சொன்னதும்.. அவர் இவளைப் பார்க்கனும்னு சொன்னாராம்..."
"அந்தக் கருமத்துக்குத்தான் அவன் வந்தானா....? வந்து தொலைச்சவன் அவளைக் கூப்பிட்டுக்கிட்டுப் போக வேண்டியது தானே... அதை விட்டுட்டு.. உன்னிடம் ஏண்டி வாய் வளர்த்தான்..? நீயா பொண்ணு...?"
'இல்லைதான்.. ஆனா.. பெண்ணுக்கு பிரண்டாச்சே..' சொல்ல முடியாமல் மௌனித்தாள் ராதிகா...
"காலக் கொடுமைடி.. எவளையோ பொண்ணு பார்க்க வந்தவன்.. அவளை காலேஜீக்குள்ள ஓட்டி விட்டுட்டு.. உன்கூட மரத்தடி நிழலில் உட்கார்ந்து கதை பேசறான்... அதை கண்கொண்டு பார்த்துக்கிட்டு.. நானும் உட்கார்ந்திருக்கேன்.. த்ச்சு..."
"ஹேமா ஹால் டிக்கெட்டை மறந்து வைச்சுட்டு வந்திட்டாங்க.. அதை எடுக்க அவ போனா.. அவ வருகிறவரைக்கும் நாங்க பேசிக்கிட்டு இருந்தோம்..."
"எதைப்பத்தி..."
"அவ கல்யாணத்தைப் பத்தி..."
"அதை அவதானே பேசனும்... நீ எதுக்காக பேசின..? சரி.. அவதான் ஹால் டிக்கெட்டை எடுக்கப் போனான்னு கதை சொல்ற... போனவ உடனே திரும்பி வராம.. ஒரு மணி நேரம் கழிச்சு ஏன் திரும்பி வந்தா..?"
"எக்ஸாம் ஹாலில் அவ ஹால் டிக்கெட் இல்லையாம்... வழியில எங்கேயாவது விழுந்திருக்குமோன்னு தேடினாளாம்..."
"வழியில கிடைச்சதா..?"
"அங்கேயும் கிடைக்கலையாம்..."
"கிடைக்காதே.. அவ ஜில்லா கேடியில்ல.. எப்படியெல்லாம் திட்டம் போட்டு.. உனக்கும் சங்கருக்கும் நேரத்தை உண்டாக்கிக் கொடுக்கிறா..."
"அபாண்டமா பேசாதீங்க..."
"எந்த மண்பாண்டமாவும் பேசலை.. உள்ளதைததான் சொல்றேன்... கடைசியில் அவ ஹால் டிக்கெட் அவகையில தான் இருந்திருக்கனுமே..."
"அதுதான் இல்லை..."
"வேற எங்கே இருந்துச்சாம்.. அவ நோட்டுக்குள்ளயா..?"
"ஊஹீம்.. திரும்பவும் எக்ஸாம் ஹாலுக்கே போயிருக்கா.. மேஜைமேலே மட்டும் பார்க்காம.. தரையெல்லாம்.. தேடியிருக்கா.. எக்ஸாம் ஹால் மூலையிலே அவ ஹால் டிக்கெட் கிடந்துச்சாம்..."
"இதைப் பாருடா.. அவதான் மூலையிலே இருக்க வேண்டியவன்னா... அவ ஹால் டிக்கெட்டும் மூலையிலே கிடந்திருக்கு.. அப்புறம்..?"
பாலமுரளி கோபம் கலந்த கிண்டலுடன் கதை கேட்க.. பதிலுக்கு அவனை முறைக்க முடியாமல் தலையைப் பிடித்துக் கொண்டாள் ராதிகா...
ஹேமாவின் அமைதி கலந்த சுபாவம் நினைவுக்கு வந்து அவளை இம்சித்தது...
எத்தனை அருமையானவள் அவள்..! ராதிகாவால் தானே அவள் இந்த அளவுக்கு பாலமுரளியின் வாயில் அரைபட நேர்கிறது...
"இதோ பாருங்க.. என்னை என்ன வேண்டும்னாலும் சொல்லுங்க.. என்கூட பழகின பாவத்துக்காக ஹேமாவை வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதீங்க.. அவ ரொம்ப நல்லவ..."
"அப்படிங்களா..? அடேங்கப்பா.. பிரண்டைச் சொன்னவுடன் ரோசம் பொத்துக்கிட்டு வருது.. கூடப் படிச்சவ மேல வைச்சிருக்க பாசத்தில கொஞ்சத்தையாவது கட்டினவன் மேல வைடி..."
"இப்ப யாரு ஆசை வைக்காம இருந்ததாம்.?.."
"நான் பாசத்தைச் சொன்னேன்.. ஆசையைச் சொல்லலை... எனக்கு உன்னையும் தெரியும்.. உன் ஆசையையும் தெரியும்.. என்மேல ஆசை வைச்சிருக்கவ.. என்னை நினைச்சுக்கிட்டு இருந்திருக்கனும்.. ஆனா.. உன் நினைப்பெல்லாம் அவன் மேலதானே இருந்துச்சு.. அன்னைக்கும் சரி... இன்னைக்கும் சரி.. நீ மாறவே இல்லைடி..."
"அவன் கூடப் பேசினதை வைத்து.. நீங்களா ஒரு முடிவுக்கு வராதீங்க... நாங்க பேசின விசயமே வேற.."
"எதைப் பத்திம்மா பேசினீங்க... கூடங்குளம் பிரச்னையைப் பத்திப் பேசினிங்களா..? இல்லை.. இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையைப் பத்திப் பேசினிங்களா..? எதைப் பத்தி பேசிக் கிழிச்சீங்க...?"
"எல்லாம் ஹேமா கல்யாண விசயமாத்தான் பேசினோம்..."
"ஓஹோ.. அதைப்பத்தி.. அவ இல்லாதப்ப.. நீங்களா பேசினீங்களாக்கும்..."
"ப்ளீஸ்... புரிஞ்சுக்கங்க.. சங்கரோட பிரண்ட் ஹேமாவை ஏற்கனெவே பார்த்து முடிச்சாச்சாம்..."
"அப்புறமும் எதுக்குடி அவன் வந்தான்..? அந்த பிரண்டுக்கு.. உன் பிரண்டைப் பிடிக்கலையா..?"
'இவன் வாயில் நல்ல வார்த்தையே வராதா..?'
எரிச்சலான எரிச்சல் வந்தது ராதிகாவிற்கு... அவன் பார்க்க.. சங்கருடன் உட்கார்ந்து பேசிவிட்ட கொடுமைக்காக இன்னும் எத்தனையெத்தனை பேச்சுக்களை பாலமுரளியிடம் கேட்க வேண்டுமோ என்று அவள் விசனப்பட்டுப் போனாள்...
"எல்லாம் பிடிச்சிருக்காம்..."
"அவனுக்குப் பிடிக்கலைன்னாலும்... இவன் பிடிக்க வைச்சிருவானே... நன்றிக்கடனை கழிக்க வேண்டாமா..?"
"ஹேமாவிடம் சங்கருக்கு என்ன நன்றிக்கடன் இருக்கப் போகுது..?"
"என்னடி.. இப்படிச் சொல்லிட்ட.. ஆயிரம்தான் இருந்தாலும்.. அவமாதிரி சங்கருக்கு யாரு தூது வருவாங்க...?"
"ம்ப்ச்.. சும்மாயிருங்க..."
'சும்மாயிருக்காம இவ கையைப் பிடிச்சா இழுத்தேன்..? எப்பவெல்லாம் எனக்கு அந்த நினைப்பு வருதோ.. அப்பவெல்லாம் அந்த நினைப்பை ஆணிவேராட பிடுங்கி எறிஞ்சுட்டு.. பேசறா பாரு பேச்சு...'
"சங்கரோட பிரண்டுக்கு ஹேமாவை பிடிச்சுப் போச்சாம்.. இந்த வாரம் முறைப்படி பெண் கேட்டுப் போறதா இருந்தாராம்.. அதுக்குள்ள இந்த செய்திக்கு இறக்கை முளைச்சுப் பறந்து.. உங்க அத்தை மகள் காதில் விழுந்து வைச்சிருச்சு..."
"என் அத்தை மகளா..? அது யாருடி..?"
பாலமுரளி புரியாமல் கேட்க.. ராதிகாவிற்கு அவனை முத்தமிட வேண்டும் போல ஆசை வந்து தொலைத்தது...
'இவனுக்கு... என்னைத் தவிர.. வேற யாரு நினைப்பும் இருக்காது...'
இப்படிப்பட்டவனுக்கு அவள் மனது புரியாமல் போய் விட்டதே என்ற துயரம் அவள் மனதில் மண்டியது...
"ஷோபா யாராம்..? உங்க சித்தி மகளா...?"
"நீ அவளைச் சொல்றயா..? நான் யாரோன்னு நினைச்சேன்.. இப்ப எதுக்குடி அவளை வம்புக்கு இழுக்கறே..?"
"அவதான் எங்க வம்புக்கு வருகிறா..."
ராதிகா யதார்த்தமாகச் சொல்லிவிட்டு.. பாலமுரளியின் கடும் கண்டனப் பார்வைக்கு ஆளானாள்..
அடுத்தடுத்து அவனுக்குப் பிடிக்காத வார்த்தைகளை உதிர்த்து விட்டுக் குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்பதே தனக்குப் பிழைப்பாகப் போய் விட்டது என்று மனம் நொந்து போனாள் ராதிகா...
"'உங்க..'? ...ம்ம்ம்..? நல்லாப் பேசறடி.. நீங்க மூணுபேரும் ஒன்னு.. நான் மட்டும் தனி.. அப்படித்தானே..?"
"ஐயோ.. அந்த அர்த்தத்தில் சொல்லலைங்க..."
"வேற எந்த அர்த்தத்தில் சொன்ன..?"
"வாய் தவறி வந்துருச்சுங்க.."
"அடியேய்... பெண்டாட்டி... சட்டியில இருக்கறது தாண்டி அகப்பையில வரும்.. உன் மனசில இருக்கறது தான் வாய் வார்த்தையில வரும்..."
"தெரியாம பேசிட்டேங்க..."
"தெரிஞ்சிருந்தா மறைச்சுப் பேசியிருப்ப.. அப்படித்தானே..?"
அப்படித்தானே.. அப்படித்தானே என்று அவன் ராதிகாவின் உயிரை எடுக்க.. எதைச் சொன்னால் அவன் மனம் இரங்கும் என்று புரியாதவளாக கிறுக்குப் பிடித்துப் போனாள் ராதிகா...
"அத்தான்... உங்க காலில் வேணும்னாலும் விழுகறேன்.. தயவுசெய்து இப்படிப் பேச்சிலேயே என்னைக் கொல்லாதீங்க..."
நிஜமாகவே ராதிகா கைகூப்பிவிட.. அவளையே பார்த்தபடி அசையாமல் அமர்ந்திருந்தான் பாலமுரளி.. அதன்பின்.. என்ன நினைத்தானோ...
"ம்ம்.. சொல்லு.. என் அத்தை மக.. உன் பிரண்டு கல்யாணத்தில என்ன செஞ்சு வைச்சா..?" என்று கேட்டான்...
"அந்த பிரண்டோட பேரண்ட்ஸீக்கு போனைப் போட்டு.. ஹேமாவைப் பற்றி.. இல்லாததையும்.. பொல்லாததையும்.. சொல்லியிருக்கா.." ராதிகா ஆதங்கப்பட..
"அவ அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டாளே..." என்று சொல்லி.. அவள் ஆத்திரத்தை தூண்டினான் பாலமுரளி...
"வேண்டாம் அத்தான்.. உங்களுக்கே அவளைப் பத்தி நல்லாத் தெரியும்... தெரிஞ்சும் அவளுக்கு ஏத்துக்கிட்டுப் பேசாதீங்க..."
"நீ மட்டும் ஹேமாவுக்கு ஏத்துக்கிட்டு பேசலாமா..?"
பாலமுரளியின் 'ஏட்டிக்குப் போட்டி..' ராதிகாவுக்குப் புரிந்தது... நீ ஹேமாவுக்கு ஆதரவாகப் பேசினால்.. நான் ஷோபாவிற்கு ஆதரவாகப் பேசுவேன் என்று அவன் கொடிபிடித்தான்...
நீ என்னவோ செய்து விட்டுப் போ என்று ராதிகாவும் அதை விட்டு விட்டாள்...
"அந்த மாப்பிள்ளையோட பேரண்ட்ஸ் யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க..."
"யோசிக்காம இருப்பாங்களா..? எல்லாருமே என்னைப் போல கேணயனாவா இருப்பாங்க...?"
பாலமுரளி மீண்டும் இடக்குப் பேச.. இவன் கேணயனா ?என்றிருந்தது ராதிகாவுக்கு...
இவன் ஆளப் பிறந்தவன்.. எவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்தாலும் தனித்து தெரிபவன்.. எதிர்ப்பவர் யாராக இருந்தாலும் துவம்சம் செய்து விடும் வல்லமை கொண்டவன்...
இவனைப் போல யாரிருக்கிறார்கள்..?
"போதுமே.. சமயம் கிடைச்சிருச்சுன்னு என் காலை வார வேண்டாம்... இந்த விவரத்தைச் சொல்லிட்டுப் போகத்தான் சங்கர் வந்தான்..."
"ஓஹோ.." பாலமுரளி மௌனமாக யோசித்தான்...
அவனது யோசனையைக் கண்டு ராதிகாவிற்கு கவலையாக இருந்தது...
'இதோட கேள்விகள் முடிஞ்சிருச்சா..? இல்லை.. இன்னும் ஏதாவது பாக்கியிருக்கா..?'
அவனுக்கு இருந்தது.. கண்கள் இடுங்க ராதிகாவை கூர்ந்து பார்த்தான்...
'என்ன கேட்கப் போகிறானோ..' ராதிகாவின் அடிவயிறு கலங்கியது...
"ஹேமாவோட வாழ்க்கையைப் பத்தி நீயும் சங்கரும் ஏதாவது ஒரு முடிவைப் பண்ணியிருப்பீங்களே.. என்ன முடிவு பண்ணியிருக்கீங்க..?"
"அத்தான்...!"
"தெரியும்டி.. உனக்கு அவ ஆருயிர் தோழி... அவளுக்கு வர இருக்கிற நல்ல வாழ்க்கை ஆட்டம் கண்டு போனா.. நீ அதைப் பார்த்துக்கிட்டு சும்மா இருப்பியா..? சீர் பண்ண கிளம்பிர மாட்டியா..?"
"அத்தான்..."
"அதானே அவன் திட்டம்..? அவ வாழ்வை சீராக்க நீயும்.. அவனும் சேர்ந்து அவனோட பிரண்டு வீட்டுக்கு ஜோடி போட்டுக்கிட்டுப் போய் பேசறதா இருக்கீங்க.. எப்படி...? சரியாய் சொல்லிட்டேனா...?"
அவன் மிகச் சரியாகச் சொல்லி விட்டான்... ராதிகா உதட்டைக் கடித்தாள்...
அந்த முடிவைத்தான் அவளும் சங்கரும் எடுத்திருந்தார்கள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி.. -123
அம்மம்மா.. கேளடி தோழி.. -123
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-123.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-123.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy